Wednesday, June 08, 2016

ஹதீஸ் மறுப்புக் கொள்கை வாதிகளின் வாதங்களும் பதில்களும். தொடர்

[06/06 10:21 pm]
 ஹதீஸ் மறுப்புக் கொள்கை வாதிகளின் வாதங்களும் பதில்களும்.

பகுதி 01

🔷மிகச் சில ஹதீஸ்கள் அறிவிப்பாளர் தொடர் சரியாக இருந்தாலும் அதன் கருத்து குர்ஆனுக்கு மாற்றமாக இருப்பதால்
நபி (ஸல்) அவர்கள் இதைக் கூறியிருக்க மாட்டார்கள் என்ற அடிப்படையில் இந்த ஹதீஸ்களை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று நாம் சொல்கிறோம்.🙌

🌹அறிவிப்பாளர் தொடர் சரியாக இருந்தாலும்  அதன் கருத்து குர்ஆனுக்கு முரண்படலாம் என்பது இவர்களது எண்ணம். 🌹

🔷அறிவிப்பாளர் வரிசை தான் இந்த உம்மத்தின் பெரிய சொத்து. அதன்மூலம்  தான் ஹதீஸ்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன. 🔷

 🍃குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை மறுக்க வேண்டும் என்று கூறுபவர்களிடம் சில கேள்விகள்.🌼

1.
குறித்த ஒரு ஹதீஸ் குர்ஆனுக்கு முரண்படுகிறது என்று தீர்மானிப்பது யார்?

2.
ஒருவர் முரணாக விளங்குவதை இன்னொருவர் முரணில்லாமல் விளங்கினால் அது பற்றி உங்கள் நிலைப்பாடு என்ன?

3.
இந்தக் கொள்கையின் படி ஹதீஸ்களைத் தரம் பிரிக்க முடியுமென்றால் இப்படியொரு விதி இருக்குமானால் அறிவிப்பாளர் வரிசை எதற்கு?

அது பற்றிய ஆய்வுகள் ஏன்?

 ஸஹீஹான ஹதீஸ்கள், பலவீனமான ஹதீஸ்கள் என்று பிரிக்காமல் குர்ஆனுக்கு முரண்படும்  ஹதீஸ்கள்,  முரண்படாத ஹதீஸ்கள் என்று அறிஞர்கள் பிரித்திருக்கலாமே. ??

4
 முஃதஸிலாக்களும் ஷீயாக்களும் அறிமுகப் படுத்திய
இந்த ஹதீஸ் மறுப்புக் கொள்கையை இஸ்லாத்தோடு சம்பந்தப்படுத்துவது நியாயமானதா?

🚫சகோதரர்களே. இது ஒரு நவீன  வழிகெட்ட கொள்கை. 🚫

💡நமக்கு முன்வந்த அறிஞர்கள் மேலோட்டமாக முரண்பாடு போன்று விளங்கும் ஹதீஸ்களை தொகுத்து அதற்கு சரியான தீர்வுகளையும் முன்வைத்திருக்கிறார்கள். 💡

⭕உ+ம் இப்னு குதைபா, இமாம் ஷாபிஈ, இமாம் தஹாவி இமாம் இப்னு தைமிய்யா ஆகியோரின் கிதாபுகளைக் குறிப்பிடலாம். ⭕

🌼இது தொடர் ஒன்றுக்கான பதில்.
மூன்றாவது தொடருக்கான பதில் பகுதி 02 இல் எதிர் பாருங்கள்.🌼

அல்லாஹு அஃலம்

ஷுஐப் உமரி

 ஹதீஸ் மறுப்புக் கொள்கை வாதிகளின் வாதங்களும் பதில்களும்.

பகுதி 02

👉"என் பெயரில் (ஏதேனும் ஒரு) செய்தியை நீங்கள் கேள்விப்படும் போது அச்செய்தியை உங்களது உள்ளங்கள் ஒத்துக் கொள்ளுமானால்,✔இன்னும் உங்கள் தோல்களும் முடிகளும் (அதாவது உங்கள் உணர்வுகள்) அச்செய்திக்குப் பணியுமானால்,✔இன்னும் அச்செய்தி உங்களு(டைய வாழ்க்கை)க்கு நெருக்கமாக இருப்பதாக நீங்கள் கருதினால் ✔அதை(க் கூறுவதில்) நானே உங்களில் மிகத் தகுதி வாய்ந்தவன்.✅

என் பெயரில் (ஏதேனும் ஒரு) செய்தியை நீங்கள் கேள்விப்படும் போது அச்செய்தியை உங்கள் உள்ளம் வெறுக்குமானால்,❌ இன்னும் உங்களது தோல்களும் முடிகளும் (அதற்குக் கட்டுப்படாமல் அதை விட்டு) விரண்டு ஓடுமானால் ❌இன்னும் அச்செய்தி உங்களு(டைய வாழ்க்கை)க்கு (சாத்தியப்படுவதை விட்டும்) தூரமாக இருப்பதாக நீங்கள் கருதினால்❌ உங்களில் நானே அதை விட்டும் மிக தூரமானவன்"🙌

📚(அஹ்மத்-15478)

🚥🚥🚥

இந்த செய்தியின் அறிவிப்பாளர் வரிசையில் ஒரு குறை இருக்கிறது.

🍃அதாவது இதை அறிவிக்கும் அப்துல் மலிக் என்பவர்  இதை நபியவர்கள் சொன்னதாகவும், உபை இப்னு கஃப் சொன்னதாகவும் மாறி மாறி அறிவித்துள்ளார். இவற்றில் இறுதியானதே சரியான அறிவிப்பு என்று இமாம் புகாரி கூறியுள்ளார். 🍃
📖التاريخ الكبير 1348

💡எனவே இது நபியவர்கள் சொன்ன ஹதீஸ் அல்ல. ஹதீஸ் மறுப்பக் கொள்கைக்கு இதை ஆதாரமாகக் கொள்ள முடியாது💡

🌷ஒரு வாதத்திற்கு நபியவர்கள் சொன்னதாக வைத்துக் கொண்டாலும் ஹதீஸ் மறுப்புக் கொள்கையின் படி இதை நிராகரிக்க வேண்டும்.
ஏனென்றால் இதுவும் வெளிப்படையில் குர்ஆனுக்கு முரண்படுகிறது.🌷

1.
 நபியவர்கள் ஸஹாபாக்களைப் பார்த்துத் தான் இவ்வாறு கூறியதாக இடம்பெற்றுள்ளது. நபிகளார் வஹியைத்தான் கூறுகிறார் என்று அல்குர்ஆன் கூறும் போது உங்கள் உள்ளங்கள் ஒத்துக் கொண்டால் ஏற்றுக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் மறுத்து விடுங்கள் என்று எப்படி நபியவர்கள் கூறியிருக்க முடியும்.?

2.
இந்த செய்தியின் படி உள்ளச்சத்தை உண்டாக்கக் கூடியவாறு வரக்கூடிய இட்டுக்கட்டப்பட்ட செய்திகளையும் ஆதாரமாகக் கொள்வீர்களா?

குறித்த ஒரு ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசை பலமாக இருந்தாலும் உங்கள் உள்ளங்களுக்கு சரியென்று தென்படாத பட்சத்தில் அதை  நபியவர்கள் கூறியிருக்க வாய்ப்பில்லை என்ற ஹதீஸ் மறுப்புக் கொள்கையின் படி,

 அறிவிப்பாளர் வரிசை மிக பலவீனமானதாக இருந்து, அல்லது இட்டுக்கட்டப்பட்டதாக இருந்து அது உங்கள் உள்ளங்களுக்கு நல்லதென்று தென்பட்டால் அதை நபியவர்கள் கூறியிருக்க வாய்ப்புண்டு என்று கொள்வீர்களா? அவற்றை அமுல்படுத்துவீர்களா?


3.
அல்லாஹ்வும் அவனது தூதரும் ஒன்றைக் கட்டளையிட்டு விட்டால் அதில் சுயவிருப்பம் கொள்ளக் கூடாது என்றும் குர்ஆன் (33/36) (4/65)  கூறுகிறது. இந்த செய்தி அந்த வசனங்களுக்கு  முரண்படுவதாகத் தென்படவில்லையா?

4.
தனக்குப் பிடிக்காதவற்றை மறுப்பவன் இறை நம்பிக்கையாளனாக இருக்க முடியாது என்று அல்குர்ஆன்  ( 18/28 , 45/23 , 28/50) கூறுகின்றதே. இது முரண்பாடாகத் தென்படவில்லையா?

5.
இந்த செய்தியை ஆதாரமாகக் கொண்டால் இதற்குத் தகுதியானவர் யார்? இதை சரிகண்டவர்கள் கூட இந்த விடயம் ஸஹாபாக்களுக்கும் ஹதீஸ்கலை அறிஞர்களுக்குமே பொருந்தும் என்று கூறுகிறார்கள்.

இன்று ஹதீஸ் மறுப்புக் கொள்கையில் உள்ள யாருக்கு இந்த தகுதி இருக்கிறது?

6.
இறுதியாக

ஹதீஸ் மறுப்புக் கொள்கைக்கு இதை ஆதாரமாகக் கொள்ள முடியாது. அந்தக் கொள்கையே இந்த செய்தியை மறுக்கத் தூண்டுகிறது. யாரோ ஒரு நவீன அறிஞர் மறுக்கிறார் என்பதற்காக நாமும் மறுக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. மனிதன் என்ற வகையில் தவறுகள் நிகழ வாய்ப்புண்டு. 1400 வருடங்களாக யாருமே மறுக்காதவற்றை இப்போது ஒருவர், ஒரு குழு எப்படி மறுக்கத் துணிவது வேடிக்கையாக இல்லையா?

உங்களுக்கு முரணாக தென்படுபவை மற்றவருக்கு சரியானதாக தென்படலாம்.

நமக்குப் புரியவில்லை என்பதற்காக ஹதீஸ்களை மறுப்பது ஒரு வழிகெட்ட கொள்கை. அவர்களுக்கு அதில் முன்மாதிரி இல்லை.

மற்ற வாதங்களுக்கான பதில் அடுத்த பகுதியில் இன்ஷா அல்லாஹ்....

ஏற்கனவே முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் இன்னும் வரவில்லை.

அல்லாஹு அஃலம்

ஷுஐப் உமரி
[06/06 10:21 pm]


🔬ஹதீஸ் மறுப்புக் கொள்கை வாதிகளின் வாதங்களும் பதில்களும்.🔬

பகுதி 03

💡ஹதீஸ் மறுப்புக் கொள்கைவாதிகள் தமது நவீன  கொள்கைக்கு சான்றாக உமர் (ரழி) அவர்கள் பாத்திமா பின்து கைஸ் என்பவர் பற்றி சொன்னதை முன்வைத்து, உமர் (ரழி) அவர்களும் இதே கொள்கையில் தான் இருந்திருக்கிறார் என்று வாதிடுகின்றனர்.💎
🙌அல்லாஹ் அவரைப் பாதுகாத்து விட்டான்.🙌

👉உமர் (ரலி) அவர்கள் "ஒரு பெண்ணின் சொல்லுக்காக நாம் அல்லாஹ்வின் 📖வேதத்தையும் நபியின் வழிமுறையையும் கைவிட மாட்டோம். ஃபாத்திமா பின் கைஸ் (உண்மையிலேயே) நினைவில் வைத்துள்ளாரா? அல்லது மறந்து விட்டாரா என்று நமக்குத் தெரியவில்லை.✏

⭕இது உமர் ரழி அவர்கள் சொன்னதாக பதியப்பட்டது.⭕
இதில் இரண்டு விடயங்களை கவனிக்க வேண்டும்.

1.
🌼 இதில் நபியவர்களோ, பாத்திமாவோ குர்ஆனுக்கு முரணாகக் கூறியுள்ளார்கள்,  எனவே அதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று உமர் (ரழி) கூறவில்லை. 🌼

✏பாத்திமா பின்து கைஸ் நபியவர்கள் என்ன சொன்னார்கள் என்பதை சரியாக ஞாபகம் வைத்திருக்கிறாரா இல்லையா என்று, அவரது ஞாபகத் தன்மை பற்றியுள்ள சந்தேகத்தை கூறி மறுக்கிறாரே தவிர, குர்ஆனுக்கு முரண் என்று மறுக்கவில்லை.🍃

🌷ஒரு செய்தியை அதன் அறிவிப்பாளரின் நம்பகத்தன்மையை வைத்துத்தான் தரம் பிரிக்க வேண்டும் என்பதையே இது உணர்த்துகிறது.🌷

🚫🌟அறிவிப்பாளர் நம்பிக்கையானவாராக இருப்பினும் சில போது அவர் சரியாக மனனமிட்டது உறுதி செய்யப்படாதவிடத்து, அவரது குறித்த செய்தி குர்ஆனுக்கும் மாற்றமாக உள்ளது என்பதை  சில போது மேலதிகமாக அறிஞர்கள் முன்வைப்பார்கள்🌟 ஒருவேளை அவர் மனனமிட்டது சரியென்று உறுதிப்படுத்தப்பட்டால் குர்ஆனுக்கு முரண் என்று மறுப்பதில்லை.🚥

2.
🌷🌼🌼🌼🌼🌼🌷

எல்லாவற்றுக்கும் மேலாக பாத்திமா பின்து கைஸ் பற்றி சொன்னதாக வரும் எல்லா அறிவிப்புகளை ஒன்று சேர்த்திருந்தாலே இது விளங்கியிருக்கும். 🌼

✏✏✏✏✏✏🌼

உமர் ரழி அவர்கள் என்ன சொன்னார்கள்?

⭕ (அங்கிருந்த) அஸ்வத்  அவர்கள் ஒரு கையளவு சிறு கற்களை அள்ளி அவர் மீது எரிந்து விட்டு பின்வருமாறு கூறினார்கள். 👊உமக்குக் கேடு தான். இது போன்ற செய்திகளை அறிவிக்கின்றீர்களே?
இரண்டு சாட்சிகளைக் கொண்டு வந்தால் (ஏற்கலாம்) இல்லாவிட்டால் ஒரு பெண்ணின் கூற்றுக்காக அல்லாஹ்வின் வேதத்தை விட முடியாது என்று தான் கூறினார்கள். ⭕
 النسائي 5721، الدارقطني 5/47، البيهقي 7/707

💎ஒரு வேளை அவர் பற்றிய அந்த சந்தேகம் இரு சாட்சிகள் மூலம் நீங்கியிருந்தால் உமர் (ரழி) அவர்கள் அதை ஏற்றிருப்பார்கள்.💎

💎செய்தியின் முழு விபரமும் உங்களுக்கு கிடைக்கவில்லையா? அல்லது ஹதீஸ் மறுப்புக் கொள்கைக்கு முரணாக இருப்பதால் ஸஹாபியின் கூற்று என்று கண்டு கொள்ளவில்லையா?💎

🌟ஒரு ஹதீஸை  சரியாக விளங்குவதற்கு அதன் அறிவிப்புகளை முழுமையாக  தொகுத்து ஆராய வேண்டும். 🌟

🚫இந்த அடிப்படையைக் கூட தெரியாதவர்கள் குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள் என்று தலைப்பிட்டு பேசத் துணிவது  வேடிக்கையே. 🚫

அடுத்த வாதத்திற்கான பதில் அடுத்த பகுதியில் இன்ஷா அல்லாஹ்.....

அல்லாஹு அஃலம்

ஷுஐப் உமரி
[06/06 10:21 pm] 💐 🕋 Shuaib Umari 🕋💐: 🔬ஹதீஸ் மறுப்புக் கொள்கை வாதிகளின் வாதங்களும் பதில்களும்.🔬

பகுதி 04

💡ஹதீஸ் மறுப்புக் கொள்கைவாதிகள் தமது நவீன  கொள்கைக்கு சான்றாக ஆயிஷா (ரழி) சொன்னதை முன்வைத்து, ஆயிஷா (ரழி) அவர்களும் இதே கொள்கையில் தான் இருந்திருக்கிறார் என்று வாதிடுகின்றனர்.💎
🙌அல்லாஹ் அவரைப் பாதுகாத்து விட்டான்.🙌

🔬ஆயிஷா  (ரழி) என்ன சொன்னார்கள்?🔬

🔮அல்லாஹ் உமர் (ரலி) அவர்களுக்கு அருள் புரிவானாக. அல்லாஹ்வின் மீதாணையாக (எவரோ) ஒருவர் அழுவதின் காரணமாக இறை நம்பிக்கையாளரை அல்லாஹ் வேதனை செய்வான் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறவில்லை.✅

👉மாறாக குடும்பத்தார் சப்தமிட்டு அழுவதன் காரணத்தினால் இறை மறுப்பாளர்களுக்கு அல்லாஹ் வேதனையை அதிகப்படுத்துகிறான் என்றே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று சொல்லிவிட்டு,

 அல்லாஹ்வே சிரிக்கவும் வைக்கிறான். அழவும் வைக்கிறான் 📖(53 : 43) ஓர் ஆத்மாவின் பாவச் சுமையை மற்றோர் ஆத்மா சுமக்காது 📖(35 : 18) (என்று குர்ஆன் கூறுகிறது) குர்ஆனே உங்களுக்குப் போதும் என்றார்கள்"🔮

🚥🚧🚧🚧🚥
நிற்க....

1.
🌼 இதில் ஆயிஷா (ரழி) அவர்கள் எடுத்த எடுப்பில் "உமர் (ரழி) குர்ஆனுக்கு முரணாகக் அறிவிக்கிறார்,  எனவே அதை ஏற்றுக் கொள்ள முடியாது" என்று கூறவில்லை. 🌼

2.
✏ நபியவர்கள் இவ்வாறு தான்  சொன்னார்கள் என்பதை உறுதிப்படுத்தி விட்டு, அதற்கு மேலதிக சான்றாக அவர் சொன்னது குர்ஆனுக்கும் முரண்படுகிறது என்று மறுக்கிறாரே தவிர, நேரடியாக அது குர்ஆனுக்கு முரண் என்று மறுக்கவில்லை.🍃


🚫🌟அறிவிப்பாளர் நம்பிக்கையானவாராக இருப்பினும் சில போது அவர் சரியாக மனனமிட்டது உறுதி செய்யப்படாதவிடத்து, அவரது குறித்த செய்தி குர்ஆனுக்கும் மாற்றமாக உள்ளது என்பதை  சில போது மேலதிகமாக அறிஞர்கள் முன்வைப்பார்கள்🌟 ஒருவேளை அவர் மனனமிட்டது சரியென்று உறுதிப்படுத்தப்பட்டால்
ஒ குர்ஆனுக்கு முரண் என்று மறுப்பதில்லை.🚥

3.
முந்திய பகுதியில்  கூறியது போன்று இந்த செய்தியின் அனைத்து அறிவிப்புகளையும் ஒன்று சேர்த்திருந்தால் நன்கு   விளங்கியிருக்கும்.

ஏனெனில் ஸஹீஹான சில அறிவிப்புகளில் "உமர் (ரழி) அவர்கள் பொய் சொல்ல மாட்டார்", "மறந்திருப்பார்".என்றும் ஆயிஷா (ரழி) கூறினார்கள் என்றெல்லாம் இடம்பெற்றுள்ளது.

மனிதன் என்ற வகையில் தவறு நடந்திருக்கலாம். அதனால் தான்
"உமர் (ரழி) அவர்கள் மறந்திருப்பார்" என்று ஆயிஷா (ரழி) அவர்கள் கூறிவிட்டு அந்த  வசனத்தையும் ஓதிக் காட்டினார்கள்.

குர்ஆனுக்கு முரண் என்று மறுக்கும் விதி இருந்திருந்தால் நபியவர்கள் இப்படித்தான் சொன்னார்கள்  என்று ஆயிஷா (ரழி) கூற வேண்டிய அவசியமே
இல்லை. நேரடியாகவே முரண்பாட்டைக் கூறியிருக்கலாம்.

இந்த செய்தி ஹதீஸ் மறுப்புக் கொள்கைக்கு ஆதாரமாக மாட்டாது.


📤📤📤📤📤📤📤📤📤📤

இதே விடயம்  ஆயிஷா (ரழி) அவர்களின் மற்றைய செய்திக்கும் பொருந்தும்.

அதில் ஆயிஷா ரழி என்ன சொல்கிறார்கள்.?

அபுல்காசிமிற்கு (நபி (ஸல்) அவர்களுக்கு) இந்தக் 📖குர்ஆனை அருளியவன் மீது சத்தியமாக இப்படி நபி (ஸல்) அவர்கள் சொல்லவில்லை❌

👉 மாறாக அறியாமைக் கால 👩‍👩‍👧‍👦மக்கள் சகுணம் என்பது பெண் கால்நடை, வீடு ஆகியவற்றில் உண்டு எனக் கூறி வந்தார்கள் என்று தான் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று சொல்லி விட்டு➡

➡📌இந்தப் பூமியிலோ, உங்களிடமோ எந்தத் துன்பம் நிகழ்ந்தாலும் அதை நாம் உருவாக்குவதற்கு முன்பே பதிவேட்டில் இல்லாமல் இருக்காது. இது அல்லாஹ்வுக்கு எளிதானது 📌📖(57 : :22) என்ற வசனத்தை ஓதினார்கள்"

 🚥🚥🚥
இதிலும் நபியவர்கள் இவ்வாறு தான் சொன்னார்கள் என்பதை உறுதிப்படுத்தி விட்டு, மேலதிக சான்றாக குர்ஆனுக்கும் முரணாக உள்ளது என்று கூறினார்களே அல்லாமல்,  இவர்கள் கூறுவது போன்று குர்ஆனுக்கு முரண் என்ற ஒரு காரணத்தை மாத்திரம் முன்வைத்து ஒரேயடியாக மறுக்கவில்லை.

💡💡💡💡💡அல்குர்ஆனும்நபிகளாரின் ஹதீஸ்களும் வஹீ என்றும் அவ்விரண்டும் முரண்பட சாத்தியமில்லை என்றும் கூறிவிட்டு, தாங்களே உருவாக்கிய நவீன ஹதீஸ் மறுப்புக் கொள்கைக்கு நேர்வழியில் நடந்த ஸஹாபாக்களைப் பலிக்கடாவாக்கப் பார்க்கின்றனர்.

அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டப் போதுமானவன்.

குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள் என்று தலைப்பிட்டுப் பேசும் சகோதரர் ஸஹாபாக்கள் விடயத்தில் முன்வைத்த வாதங்களுக்கு நாம் பதிலளித்திருந்தோம். ஹதீஸ் மறுப்புக் கொள்கைக்கு அவற்றில் ஆதாரம் இல்லை என்றும் தெளிவாக நிரூபித்தோம்.

 அவற்றுக்கு அவர் பதில் அளிக்காமல், இமாம்கள் விடயத்திற்கு தாவியிருக்கிறார். எங்கே போய் முடியப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

அல்லாஹு அஃலம்

 ஷுஐப் உமரி
[06/06 10:21 pm] 💐 🕋 Shuaib Umari 🕋💐: 🔬ஹதீஸ் மறுப்புக் கொள்கை வாதிகளின் வாதங்களும் பதில்களும்.🔬

பகுதி 05

🔬ஹதீஸ் மறுப்புக் கொள்கைவாதிகள் தமது நூதனக் கோட்பாட்டை நிலைநிறுத்த
ஸஹாபாக்கள் சார்பாகவும் , ஹதீஸ் கலை மேதாவிகள் , இமாம்கள் சார்பாகவும்  எடுத்தெழுதியுள்ள சம்பவங்களையும் , கூற்றுக்களையும் அவதானிக்கும் போது இரண்டு விதமாக அடையாளப்படுத்த முடிகின்றது.🔬

🌟1- தொடர்பற்றது

🌟2-தனக்கே எதிரானது

🌻இமாம் ஷாஃபி அவர்களின் கூற்று🌻

💡ஒரு ஹதீஸ் சரியாவதற்கான நிபந்தனைகள் முழுமையாகி விட்டால் அதை குர்ஆனுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது கட்டாயமா? இது குறித்து இமாம் ஷாஃபி அவர்கள் கட்டாயமில்லை. ஏனென்றால் அந்த ஹதீஸ் குர்ஆனிற்கு முரண்படாமல் இருந்தால் தான் அதன் நிபந்தனைகள் முழுமையடையும் என்று கூறியுள்ளார்கள். நூல் : அல்மஹ்சூல் பாகம் : 4 பக்கம் : 438💡

🚥🚥🚧🚧🚥🚥
நிற்க.....

இமாம் ஷாஃபி அவர்களின் கூற்றை சகோதரர் தவறாக மொழி பெயர்த்துள்ளார் ..

🍥சரியான மொழி பெயர்ப்பு 🍥

🍊கட்டாயமில்லை!! ஏனனில் அது குர்ஆனுக்கு முரண்படாத நிலையிலேயே தான் அதன் நிபந்தனைகள் பூரணம் பெறும்.🍊


🍏அதாவது நிபந்தனைகள் அறிவிப்பாளர் ரீதியாக குறைகாண முடியாத வகையில் அமைந்து விட்டாலேயே அது குர் ஆனுக்கு முரண் பாடில்லாத வகையில் தான் அமைந்திருக்கும்.🍏


💎அறிவிப்பாளர் வரிசை சரியாக இருந்தாலும் குர்ஆனுடன் உரசியே அதை ஏற்க வேண்டும் என்பது கட்டாயமாக இருந்திருந்தால் இமாம் ஷாஃபி அவர்களின் பதில் " கட்டாயம்" என்றே அமைந்திருக்க வேண்டும்.💎
⭕ ஆனால் அவ்வாறு குர் ஆனோடு உரசிப்பார்க்க வேண்டிய தேவையே) لا يجب ) கிடையாது என்றுதான் கூறுகின்றார்கள். குறை காண முடியாத அறிவிப்பாளர் வரிசையுடன் கூடிய செய்தி குர்ஆனுடன் முரண்படவே செய்யாது என்பதே அடிப்படையாகும். இவ்வாறு இருக்கும் போது குர் ஆனுடன் ஹதீஸை உரச வேண்டிய தேவை கிடையாது அதன் காரணமாகவே அவசியம் இல்லை என இமாம் ஷா`ஃபி அவர்கள் பதிலளித்துள்ளார்கள்.⭕


💡இமாம் ஷா`ஃபி அவர்கள் உண்மையில் எதை நாடுகிறார்கள் என்ற வாதத்திற்கே முற்றுப்புள்ளி வைத்து விடுகின்ற இன்னுமொரு விடையம் இங்கே உள்ளது . அதைக்கவனிக்கும் யாரும் இமாம் ஷாஃபி அவர்கள் எமது நிலைப்பாட்டிலேயே இருந்துள்ளார்கள் என்பதைக்கன கச்சிதமாகப் புரியலாம்.💡

🌷பொதுவாக ஹனபி மத்ஹபில் கடும் போக்குக்கொண்ட ஒரு சிலரும் , மு`ஃதஸிலாகள் , ராபிழாக்களுமே உங்கள் நிலைப்பாட்டில் இருந்துள்ளார்கள்.🌹

ஷாஃபி மத்ஹபில் முரண்படாது என்பதுதான் பொதுவான கருத்தாகும் . ஹனபி மத்ஹபில் ஒரு சிலர் முரண் படும் என்ற நிலைப்பாட்டில் இருந்துள்ளனர்.🌷

🌼அதாவது இமாம் ஷாஃபி அவர்களின் இக்கூற்றைப்பதிவு செய்யும் ஆசிரியர் அதைப்பதிவு செய்து விட்டுப் பின் வருமாறு கூறுகின்றார்கள்:

🔬ஈஸா இப்னு அப்பானிடம்( குர் ஆனுடன்) ஒப்பிடுவது கடமையாகும். " என்னைத்தொட்டும் ஒரு சைதி கிடைத்தால் அதைக்குர் ஆனுடன் ஒப்பிடுங்கள் , நேர்பட்டால் ஏற்றுக்கொள்ளுங்கள் , இல்லை என்றால் தட்டி விடுங்கள் " என்ற ஒரு செய்தியை ஆதாரமாக வைத்து (கட்டாயம் என்கிறார்).🔬

(அல் மஹ்ஸூல்4/438)

🌷இமாம் ஷாஃபி அவர்களிடம் கட்டாயமில்லை , ஆனால் ஈஸா இப்னு அப்பானிடம் கடமையாகும் என்று இமாம் ஷாஃபியின் கூற்றைப் பதிவு செய்யும் அபூ அப்தில்லா அர்ராஸி அவர்களே கூறுகிறார்கள்.🌷


🌹குர் ஆனுடன் ஒப்பிட்டே ஏற்க வேண்டும் என்ற பலமற்ற ஒரு செய்தியை ஆதாரமாகக்காட்டி ஈஸா இப்னு அப்பான் கடமை என்கிறார். ஆனால் அதே நேரம் அதற்கு முரண்பட்டு இமாம் ஷா``ஃபி அவர்களோ அவ்வாறு கடமை இல்லை எனக்கூறியுள்ளார்கள்.🌹

💎இது போக குர் ஆனுடன் ஹதீஸ் முரண் பட்டால் தட்ட வேண்டும் என்ற ஒரு செய்தியை இமாம் ஷாஃபிக்கு முரண்பட்டு ஈஸா கூறியுள்ளார் என்பதிலிருந்தே இமாம் ஷாஃபியின் நிலைப்பாடு என்ன என்பது புரியவில்லையா???💎


🌟ஆதாரபூர்வமான செய்திகள் குர் ஆனுடன் முரண்படாது என்ற கருத்தையே இமாம் ஷாஃபி அவர்கள் கொண்டிருந்தார்கள் என்பது வரலாற்றில் மிகப்பிரபல்யமான விடையமாகும் .🌟

✏ஆதார பூர்வமான செய்தி என்று வந்து விட்டால் அதன் இயல்பே குர் ஆனுக்கு முரண்படாது, அது எவ்வழியிலும் குர் ஆனுடன் ஒத்துதான் காணப்படும் , ஒரு போதும் வித்தியாசப்படாது என்பதுதான் இமாம் ஷாஃபி அவர்களின் நிலைப்பாடாகும்✏

இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்களின் இக்கூற்று ஹதீஸ் மறுப்புக் கொள்கையில் தான் அவரும் இருந்தார் என்பதற்கு எந்த வகையிலும் பொருந்தாது.

இது பற்றி அவருடைய கூற்றுக்களை அடுத்த பகுதியில் இன்ஷா அல்லாஹ் பதிகின்றேன்.

குறிப்பு : இத்தகவல்கள் ஹாதில் ஹக் அப்பாஸி அவர்களின் வலைப் பக்கத்திலிருந்து பெறப்பட்டவை. ஜஸாஹுல்லாஹு கைரா

அல்லாஹு அஃலம்

 ஷுஐப் உமரி
[06/06 10:21 pm] 💐 🕋 Shuaib Umari 🕋💐: 🔬ஹதீஸ் மறுப்புக் கொள்கை வாதிகளின் வாதங்களும் பதில்களும்.🔬

பகுதி 06

🌻ஹதீஸ் மறுப்புக் கொள்கைவாதிகள் இமாம் ஷாபிஈ அவர்களும் அவர்களது தவறான கொள்கையில் தான் இருந்திருக்கிறார் என்று கூறுகிறார்கள்.🌻

🌟இமாம் ஷாஃபி அவர்களின் கூற்றுக்களை பாருங்கள் :🌟


1- قلت: لا تخالف سنة لرسول الله كتاب الله بحال(الرسالة ، باب الاستحسان ،ج1،ص546) (.

அல்லாஹ்வின் தூதரின் ஸுன்னா ஒரு போதும் அல்லாஹ்வின் வேதத்திற்கு முரண்படவே செய்யாது.


2- لا يختلف حكمُ الله ثم حكمُ رسوله، بل هو لازم بكلِّ حال.

(كتاب الرسالة ص105)

அல்லாஹ்வின் சட்டமும் , நபிகளாரின் சட்டமும் முரண்படாது , மாறாக எல்லா நிலைகளிலும் ( நடை முறைப்படுத்துவது) கட்டாயமாகும்



3 - இமாம் ஷாஃபி அவர்களிடம் பின் வருமாறு வினவப்பட்டது:

1- சில ஹதீஸ்கள் குர் ஆனில் உள்ளதைப்போன்றே உள்ளன

2- சில ஹதீஸ்களில் உள்ள விடையங்கள் குர் ஆனில் பொதுவாக உள்ளன

3- சில ஹதீஸ்கள் குர் ஆனில் உள்ளதை விட அதிகமாகப்பேசுகின்றன

4- சில ஹதீஸ்களில் வரும் சைதிகள் குர் ஆனில் இல்லை

5- சில சைதிகள் முரண் பட்ட வகையில் இருக்கும் ஆனால் நாஸிக் மன்ஸூக் என்ற நிலையில் இருக்கும்

6-இன்னும் சில ஹதீஸ்கள் முரண் பட்டிருக்கும் ஆனால் அதில் நாஸிக் மன்ஸூக் என்ற எதுவும் இருக்காது  இவ்வாறு அமைந்தால் என்ன செய்வது

(இக்கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் பதில் அளிக்கும் ஷாஃபி அவர்கள் 6 வது கேள்விக்குப்பின் வருமாறு பதில் தருகின்றார்கள்)

அதன் முழு விவகாரமும் ஸஹீஹானதும், முறையானதுமாகும். அதில் எவ்வித முரண்பாடுமில்லை!!

(தேவையானதை மட்டும் மொழி பெயர்த்துள்ளேன்)
(كتاب الرسالة ص 215 ).


4- فالفرض على خلقه أن يكونوا عالمين بأنه لا يقول فيما أنزل الله عليه إلا بما أنزل عليه وأنه لا يخالف كتاب الله وأنه بين عن الله عز وعلا معنى ما أراد الله (1،55جماع العلم)

அல்லாஹ் இறக்கியதைத்தவிர வேறு எதையும் அவர் கூற மாட்டார் என்றும், மேலும் அல்லாஹ்வின் வேதத்திற்கு அவர் முரண் படமாட்டார் என்றும் ,அல்லாஹ் நாடும் விளக்கத்தையே அவன் புறத்திலிருந்து அவர் விளக்குகின்றார் என்றும் உறுதியாக அறிவது எல்லோர் மீது பர்ழ் ஆகும்.


5-(جماع العلم 1،55) قال الشافعي: ولا تكون سنة أبدا تخالف القرآن والله تعالى الموفق.

ஒரு காலமும் ஸுன்னா அல்குர் ஆனுக்கு முரண்படவே மாட்டாது

💡இவ்வளவு தெளிவாக இமாம் ஷாஃபி அவர்கள் பேசியிருந்தும் உங்கள் நிலைப்பாட்டில்தான் அவர் இருந்தார் என நீங்கள் வாதாடுவது மிக அபத்தமான ஒன்றாகும்.💡


💎ஒருவர் கூறாததை நாம் அவர் மீது சுமத்தாட்டுவது தர்மமாகாது , ஆய்வுக்குரிய அமானிதமாகவும் அது இருக்காது, ஒருவர் எவ்வாறான நிலைப்பாட்டில் இருந்தார் என்பதை அவரது பல கூற்றுக்களை அறிந்த பின்பே முடிவுக்கு வர வேண்டும் என்பது நீங்கள் அறியாத ஒன்றல்ல !

🌟 இமாம் ஷாஃபி அவர்கள் உங்கள் நிலைப்பாட்டில் இருந்த ஒரு அறிஞர் என நீங்கள் கூறியுள்ளது ஆச்சர்யப்பட வேண்டிய ஒரு விடயம்.🌟

ஒற்றை நபர்கள் அறிவிக்கும் செய்திகளில்(கபருல் வாஹித்) ஊகம் வர நிறைய வாய்ப்புள்ளது, அதன் நம்பகத்தன்மையில் வலுவற்ற நிலை உள்ளது , ஆகையால் குர் ஆனுடன் மோத விட வேண்டும் என்ற விசமக்கருத்து முளைத்த போது அதை எதிர்த்துப் போராடியவர்களில் இமாம் ஷாஃபி அவர்கள் மிகப்பெரிய முன்னோடியாக இருந்துள்ளார்கள் என்பதை உங்களால் ஒரு காலமும் மறுக்க முடியாது.🌻

🌻இனியும் இமாம் ஷாஃபி அவர்களை உங்கள் நிலையோடு இணைக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்.🌻


🌹நான் மேலே எடுத்துக்காட்டிய கூற்றுக்கள் காணப்படும் இடங்களை நீங்கள் வாசித்தால் இமாம் ஷாஃபி அவர்களின் நிலைப்பாட்டை இன்னும் தெளிவாகப்புரியலாம் .🌹


🌼ஆதார பூர்வமான செய்தி என்று வந்து விட்டால் அதன் இயல்பே குர் ஆனுக்கு முரண்படாது, அது எவ்வழியிலும் குர் ஆனுடன் ஒத்துதான் காணப்படும் , ஒரு போதும் வித்தியாசப்படாது என்பதுதான் இமாம் ஷாஃபி அவர்களின் நிலைப்பாடாகும்🌼

குறிப்பு : இத்தகவல்கள் ஹாதில் ஹக் அப்பாஸி அவர்களின் வலைப் பக்கத்திலிருந்து பெறப்பட்டவை. ஜஸாஹுல்லாஹு கைரா

அல்லாஹு அஃலம்

 ஷுஐப் உமரி
[06/06 10:21 pm] 💐 🕋 Shuaib Umari 🕋💐: 🔬ஹதீஸ் மறுப்புக் கொள்கை வாதிகளின் வாதங்களும் பதில்களும்.🔬

பகுதி 07

🌟இமாம் குர்துபீ குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை மறுக்க வேண்டும் என்று கூறினாரா?🌟

😆சொல்கின்ற பொய்யை பொருந்தச் சொல்லக்கூடாதா? 😆

✏அனுமதியின்றி மற்றவருடைய வீட்டில் நுழைய வேண்டாம் என்ற
வசனத்தின் விளக்கவுரையில் "அனுமதியின்றி எட்டிப் பார்த்தவரின் கண்களை பிடுங்க வீட்டாருக்கு அதிகாரம் இருக்கிறது" என்ற ஹதீஸை கூறிவிட்டு,💎

" இது விடயத்தில் கருத்து முரண்பாடு இருக்கிறது.🚥

⛳சில அறிஞர்கள் " குறித்த ஹதீஸ் இன்னொரு வசனத்தின் மூலம் மாற்றப்பட்டு விட்டது, எனவே கண்ணைப் பிடுங்குபவர் அதற்கு பொறுப்பாக வேண்டும். இந்த செய்தி குர்ஆனுக்கு முரண்படுவதால் அதை அமல் செய்யக்கூடாது " என்று கூறுகிறார்கள்.✏

⛳வேறு சில அறிஞர்கள் " அதற்குப் பொறுப்பாக தேவையுமில்லை. பழிவாங்கவும் தேவையில்லை."  என்று கூறுகிறார்கள்." ✏

🚥என்று இமாம் குர்துபீ கூறிவிட்டு இதுதான் சரியானது என்று இரண்டாவது கருத்தை சரிகாண்கிறார்.🌷

🚥🚥🚥🚥
இமாம் குர்துபீ சில அறிஞர்கள் இவ்வாறு சொன்னதைப் பதிவு  செய்ததை அவரே சொன்னதாகக் கூறுவது அவர் மீது அவதூறு சொல்வதாக இல்லையா?✏

💎எல்லாவற்றுக்கும் மேலாக அவர் அதை ஏற்காமல் மற்றைய அறிஞர்களின் கருத்தையே சரி காண்பது ஹதீஸ் மறுப்புக் கொள்கையை அவர் ஆதரிக்கவில்லை என்பதை தெளிவாக உணர்த்துகிறதல்லவா?🔬

💎இந்த ஹதீஸ் மறுப்புக் கொள்கையின் விபரீதத்தை நேர்வழிக்குத் திரும்பிய மௌலவிஅப்பாஸ் அலி இவ்வாறு கூறுகிறார் :

இவர்களின் ஹதீஸ் மறுப்புக்கொள்கையை ஆதரித்தால் ஒட்டுமொத்த ஹதீஸ்களையும் மறுத்தாக வேண்டிய நிலை தான் வரும். இதன் இறுதி முடிவு ஹதீஸ்கள் பாதுகாக்கப்படவில்லை. எனவே குர்ஆன் மட்டுமே மார்க்க ஆதாரம் என்று கூறுவதேயாகும் இதற்கான அத்தனை வாசல்களையும் தற்போது திறந்துவிட்டுள்ளனர்.


⛳அடுத்து இமாம் ஜுர்ஜானி! ! உடைய கருத்து.

الحديث الصحيح ما سلم لفظه من ركاكة ومعناه من مخالفة آية
♻ஆதாரப்பூர்வமான ஹதீஸ் எதுவென்றால் அதிலே மட்டரகமான வார்த்தைகள் இருக்காது. அதன் அர்த்தம் குர்ஆன் வசனத்திற்கு முரண்படாமல் இருக்கும்.

📘நூல் : அத்தஃரீஃபாத் பாகம் : 1 பக்கம் : 113

🌼நாம் ஏற்கெனவே கூறியது போன்று இந்தக் கொள்கை ஷீயாக்களுடையதும், பகுத்தறிவுவாத  முஃதஸிலாக்களினதும்  கொள்கை தான் என்பதை அவர்களே மிக பலமாக நிறுவுகிறார்கள். 🌼

👍இந்த ஜுர்ஜானி என்பவர் யார்?

✏இவர் "வரை விலக்கணக்கங்கள்" என்று ஒரு கிதாப் எழுதியிருக்கிறார். அதில் தான் ஸஹீஹான ஹதீஸுக்கு இவ்விளக்கத்தை கூறுகிறார். ✏

🌷முதலாவது
 இவர் ஹதீஸ்கலை அறிஞர் அல்ல. இவர் ஒரு அரபு மொழி மேதையாகவும் அஷ்அரிய்யா கொள்கை சார்ந்தவராகவும் எதிலும் தமது பகுத்தறிவுக்கு முதன்மை வழங்கக் கூடிய ஒரு தத்துவவாதியாகவும் இருந்தார்.🌟

🌼இதனால்தான் தனது புத்தகத்தின் முன்னுரையில் " ஒவ்வொரு துறையிலும் உள்ள கலைச் சொற்களுக்கு அவர்களுடைய புத்தகங்களில் உள்ள வரைவிலக்கணங்களை ஒன்று சேர்த்துள்ளேன்" என்று கூறுகிறார்.🌼

✏இது இவருடைய கருத்தல்ல என்பதும் தெளிவாகிறது.

📘இதல்லாத வேறு சில கலைச்சொற்களுக்கும் பிழையான விளக்கத்தை எழுதியுள்ளார்.📘

✏இவர் கூறும் விளக்கத்தை ஏற்க முடியாது. துறை சார்ந்தவர்களே இதை விளக்க வேண்டும். ✏

🌼இரண்டாவதாக
அவர் கூறிய வரை விலக்கணத்தில் இஜ்மாவுக்கு முரண்படாமலும் இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். இதை இவர்கள் ஏற்றுக் கொள்வார்களா?

🔬தமது நவீன ஹதீஸ் மறுப்புக் கொள்கைக்கு முஃதஸிலாக்கள் அல்லது ஷீயாக்கள் சார்ந்தவரிடம் மட்டுமே மண்டியிட்டிருக்கிறார்கள்.🔬

அல்லாஹ் நம்மனைவரையும் இக் கொள்கையை விட்டும் பாதுகாப்பானாக.
அல்லாஹு அஃலம்

ஷுஐப் உமரி பேருவளை
[06/06 10:21 pm] 💐 🕋 Shuaib Umari 🕋💐: 🔬ஹதீஸ் மறுப்புக் கொள்கை வாதிகளின் வாதங்களும் பதில்களும்.🔬

பகுதி 08

🚫இமாம் ஸுயூத்தியின் மீது அபாண்டம்.🚫

✏இமாம் ஸுயூத்தியின் கூற்று என்று இதை சுட்டிக்காட்டுகிறார்கள்.✏

أن من جملة دلائل الوضع أن يكون مخالفا للعقل بحيث لا يقبل التأويل ويلتحق به ما يدفعه الحس والمشاهدة أو يكون منافيا لدلالة الكتاب القطعية

📘இட்டுக்கட்டப்பட்ட செய்தியை அறிந்து கொள்வதற்கான அடையாளங்களில் ஒன்று விளக்கம் கொடுக்க முடியாத வகையில் அறிவிற்கு அது மாற்றமாக இருப்பதாகும். அல்லது உறுதியான குர்ஆனுடைய கருத்திற்கு எதிராக அந்தச் செய்தி அமைந்திருக்கும். நடைமுறைக்கும் இயல்பான சூழ்நிலைக்கும் ஒத்து வராத செய்தியும் இந்த வகையில் அடங்கும்.

நூல் : தத்ரீபுர்ராவீ பாகம் : 1 பக்கம் : 276 📘

🔬முதலாவது
உண்மையில் இக்கூற்று இமாம் ஸுயூத்திக்குரியதல்ல, மாறாக அபூபக்ர் பின் தைய்யிப் என்பரின் கூற்றை எடுத்தெழுதியுள்ளார். 🔬

⛳இவரும் ஹதீஸ் துறை அறிஞர் அல்ல. இவர் அஷ்அரிய்யா கொள்கையைச் சார்ந்தவராகவும், எதிலும் பகுத்தறிவுக்கு முதன்மை வழங்கக் கூடிய தத்துவ ஞானிகளில் ஒருவராகவும் இருந்தார்.⛳

🔬இரண்டாவது
இஜ்மாவுக்கு முரண்படுவதும் இட்டுக்கட்டப்பட்ட செய்தியை அறிவதற்கான அடையாளம் என்கிறார். இதையும் ஏற்றுக் கொள்வார்களா இந்த மேதைகள்.!!!

மூன்றாவது
இந்தக் கூற்றை பதிவு செய்த எந்த ஹதீஸ் கலை அறிஞரும்  அறிவிப்பாளர் வரிசையில் இட்டுக்கட்டக்கூடியவர் இல்லாமல் இந்த விதியை மாத்திரம் வைத்து ஹதீஸ்களை மறுக்கவில்லை. இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானீ النكت 2/267 இல் கூறுவதை பார்க்கவும்.

🔬நான்காவது
இமாம் ஸுயூத்தி ஹதீஸைக் குர்ஆனுடன் மோத விட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தாரா? என்றால் இல்லை என்பதே உண்மை.💎

📘அதற்கு சான்றாக அவர் எழுதிய ஒரு புத்தகமே சாட்சியாகும். வரலாற்றில் குர்ஆனை மாத்திரம் ஆதாரமாகக் கொண்டு ஹதீஸை ஒதுக்கிய கூட்டத்திற்கு பதிலடி கொடுத்த ஒரு சிறந்த அறிஞராக பார்க்கப்படுபவரே இமாம் ஸுயூத்தியாவார்கள்.📘

" مفتاح الجنة في الاحتجاج بالسنة "
எனும் பிரபல்யமான நூல் இமாம் சுயூத்திக்குரியதாகும்.

🌷இதில் ஹதீஸை குர் ஆனுடன் மோத விட வேண்டும் எனக்கூறுவோருக்கு மறுப்பாகவும், அவர்கள் முன் வைக்கும் ஆதாரமற்ற செய்திகளை விளக்கமாகவும் எழுதியுள்ளார். சில போது தனது கருத்தை வலு வூட்ட தனது மத்ஹபின் முன்னோடியான இமாம் ஷாஃபியின் கூற்றையும் கொண்டு வருகின்றார்.🌷

அவரது நூலின் ஆரம்பத்திலேயே இவ்வாறு கூறுகின்றார்:

وَهُوَ أَن قَائِلا رَافِضِيًّا زنديقا أَكثر فِي كَلَامه أَن السّنة النَّبَوِيَّة وَالْأَحَادِيث المروية - زَادهَا الله علوا وشرفا - لَا يحْتَج بهَا، وَأَن الْحجَّة فِي الْقُرْآن خَاصَّة، وَأورد على ذَلِك حَدِيث: "مَا جَاءَكُم عَنى من حَدِيث فاعرضوه على الْقُرْآن، فَإِن وجدْتُم لَهُ أصلا فَخُذُوا بِهِ وَإِلَّا فَردُّوهُ" هَكَذَا سَمِعت هَذَا الْكَلَام بجملته مِنْهُ وسَمعه مِنْهُ خلائق غَيْرِي، فَمنهمْ من لَا يلقِي لذَلِك بَالا. وَمِنْهُم من لَا يعرف أصل هَذَا الْكَلَام وَلَا من أَيْن جَاءَ. فَأَرَدْت أَن أوضح للنَّاس أصل ذَلِك، وَأبين بُطْلَانه، وَأَنه من أعظم المهالك.
فاعلموا رحمكم الله أَن من أنكر كَون حَدِيث النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قولا كَانَ أَو فعلا بِشَرْطِهِ الْمَعْرُوف فِي الْأُصُول حجَّة، كفر وَخرج عَن دَائِرَة الْإِسْلَام وَحشر مَعَ الْيَهُود وَالنَّصَارَى، أَو مَعَ من شَاءَ الله من فرق الْكَفَرَة (مفتاح الجنة ج1،ص 27 ).

ஒரு முனாபிக்கான ராபிழி, (ஆதாரபூர்வமாக ) அறிவிக்கப்படும் நபிகளாரின் செய்திகளையும் தனியான ஆதாரமாகக் கொள்ளத் தேவையிலை, குர்ஆனிலேயே விசேடமாக ஆதாரம் கொள்ள வேண்டும், எனக்கூறி அதற்கு சான்றாக "என்னிடம் இருந்து ஒரு சைசெய்தி வந்தால் அதைக் குர்ஆனுடன் ஒப்பிடுங்கள், அதற்கான அடிப்படை குர்ஆனில் இருந்தால் எடுங்கள், இல்லை என்றால் தட்டி விடுங்கள்"..... இக்கூற்றின் அடிப்படையையும், அதன் பாத்திலான நிலையையும், அது மிகப்பெரிய அழிவுகளில் உள்ளது என்பதையும், விளக்க விரும்புகின்றேன். அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும் தெரிந்து கொள்ளுங்கள், நபியின் சொல்லோ, செயல , ஹதீஸ் கலையின் உஸூலில் அறியப்படும் நிபந்தனைகளுடன் வரும் செய்தி ஹதீஸ் என்பதையும், அது ஆதாரம் என்பதையும் யார் மறுக்கின்றானோ அவன் காபிராகும். அவன் இஸ்லாமிய வரையறையை விட்டும் வெளியேறிவிட்டான், யஹூதி, நஸாராக்களுடனேயே எழுப்பப்படுவான் (மிப்தாஹுல் ஜன்னா 1/27)

இமாம் சுயூத்தியின் நிலைப்பாட்டை இதிலிருந்து நாம் தெளிவாகப்புரியலாம்.

சகோதரர்களே! எந்த வழிகாட்டலும் இல்லாமல் இவர்களாகவே உருவாக்கிய இக் கொள்கைக்கு முன்னோர்களையும் பலிக்கடாவாக்கப் பார்க்கின்றனர்.

நம்மனைவரையும் இக் கொள்கையை விட்டும் அல்லாஹ் பாதுகாப்பானாக.

குறிப்பு: நான்காவது தகவல் ஹாதில் ஹக் அப்பாஸி அவர்களின் வலைப் பக்கத்திலிருந்து பெறப்பட்டது. ஜஸாஹுல்லாஹு கைரா

அல்லாஹு அஃலம்

ஷுஐப் உமரி
[06/06 10:21 pm] 💐 🕋 Shuaib Umari 🕋💐: 🔬ஹதீஸ் மறுப்புக் கொள்கை வாதிகளின் வாதங்களும் பதில்களும்.🔬

பகுதி 09

👉🗣இமாம் இப்னுல் கய்யுமின் கூற்று

ومنها مخالفة الحديث صريح القرآن

♻"இட்டுக்கட்டப்பட்ட செய்தியை அறிந்து கொள்வதற்கான அடையாளங்களில் ஒன்று ஹதீஸ் குர்ஆனுடைய தெளிவான கருத்திற்கு முரண்படுவதாகும்"✅

📚நூல் : அல்மனாருல் முனீஃப் பக்கம் : 80

🌟முதலாவதாக
இந்தக் கூற்றில் இமாம் இப்னுல் கையிம் "அறிவிப்பாளர் வரிசை சரியாக இருந்தாலும் குர்ஆனுக்கு முரண்பட்டால் மறுக்க வேண்டும்" என்று சொல்லவில்லை.🌟

💎" ஹதீஸ் குர்ஆனுடைய தெளிவான கருத்திற்கு முரண்படுவது" என்று கூறுகிறார்.💎

🌼 இக்கூற்று பலமான அறிவிப்பாளர் வரிசை கொண்ட ஹதீஸையும், பலவீனமான மற்றும் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸையும் உள்ளடக்கி விடுகிறது. இவ்விரண்டில் எதை நாடுகிறார் என்பதை அவர் கூறும் உதாரணத்தை வைத்து விளங்கிக் கொள்ளலாம்.🌼

🔬"இவ்வுலகம் ஏழாயிரம் வருடங்கள் கொண்டது. நாம் ஏழாவது ஆயிரத்தில் இருக்கிறோம்" என்ற இட்டுக்கட்டப்பட்ட செய்தியை உதாரணமாகக் கூறுகிறார். குர்ஆனுக்கு முரண் என்பதை துணை ஆதாரமாகக் தான் காண்கிறார் என்பதை இது எடுத்துக் காட்டுகிறது.🔬

✏அடுத்ததாக
இமாமவர்கள் எந்தவொரு ஹதீஸையும் குர்ஆனுக்கு முரண் என்று மறுக்கவில்லை.✏

🌼அதேபோன்று இவர்கள் முரண் என்று மறுத்தவைகள் அவருக்கு முரணாகத் தெரியவுமில்லை, அவர் மறுக்கவுமில்லை. 🌼

⛳இந்த ஹதீஸ் மறுப்புக் கொள்கை வாதிகள் தமது குறுகிய அறிவுக்கு விளங்காதவற்றை குர்ஆனுக்கு முரண் என்று மறுக்கத் துணிந்து விட்டார்கள்.⛳

نعوذ بالله منها

🌹இறுதியாக நேர்வழிக்கு திரும்பிய மௌலவி அப்பாஸ் அலி அவர்களின் android வடிவிலுள்ள புத்தகத்தில் இருந்து சில வரிகள்.....🌹

🌟குர்ஆனுக்கு முரண் என்று கூறி ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை மறுப்பது வழிகேடர்களின் வழிமுறை என்று இமாம் இப்னு தைமியா (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.🌟

🌼நபிவழியையும் ஹதீஸ்களையும் குர்ஆனுக்கு முரண்படுகிறது என்று கூறி மறுப்பது தர்க்க ரீதியிலும் சுய சிந்தனை ரீதியிலும் மார்க்கத்தை அனுகுபவர்களின் வழிமுறையாகும்.

அல்முசவ்வதா (பக்கம் 11)🌼

🌷இது முன்மாதிரி இல்லாத நூதனக் கோட்பாடு என்பது தெளிவாகிறது 🌷

அல்லாஹுஅஃலம்

ஷுஐப் உமரி பேருவளை

பதில்கள் தொடரும் இன்ஷா அல்லாஹ்

நேர்வழியை நோக்கிய பயணம்
[06/06 10:21 pm] 💐 🕋 Shuaib Umari 🕋💐: 🔬ஹதீஸ் மறுப்புக் கொள்கை வாதிகளின் வாதங்களும் பதில்களும்.🔬

பகுதி 10

இமாம் அபூபக்கர் சர்ஹஸீ அறிவிப்பாளர் வரிசை சரியாக இருந்தாலும் குர்ஆனுக்கு முரண்பட்டால் மறுக்க வேண்டும் என்று கூறினாரா?

இமாம் ஸர்ஹஸீ உடைய கூற்று  என்று பின்வரும் செய்தியை ஹதீஸ் மறுப்பார்கள் முன்வைக்கிறார்கள் :

♻ஹதீஸ் அல்லாஹ்வுடைய வேதத்திற்கு முரண்பட்டால் அது ஏற்றுக் கொள்ளப்படாது❌செயல்படுத்துவதற்கு அது ஆதாரமாகவும் ஆகாது❌

📚நூல் : உசூலுஸ் ஸர்ஹசீ பாகம் : 1 பக்கம் : 364

📚நூல் : கஷ்ஃபுல் அஸ்ரார் பாகம் : 4 பக்கம் : 492

📚நூல் : ஷரஹுத் தல்வீஹ் அலத் தவ்ளீஹ் பாகம் : 2 பக்கம் : 368

இவர் யார்?

இமாம் ஸர்ஹஸீ என்பவர் ஹனபி மத்ஹப் சார்ந்த ஒரு அறிஞர்.

ஹனபிகளின் நிலைப்பாடு என்ன?

ஹனபிகள் நம்பிக்கை சம்பந்தமாக ஒருவர் வழியாக அறிவிக்கப்படும் ஹதீஸ்களை ஏற்பதில்லை. இதற்கு خبر الواحد எனப்படும்.

இது பற்றிய பாடத்தில் தான் இதைக் கூறுகிறார். பொதுவாக ஹனபிகள் குர்ஆனையும், பலர் அறிவிக்கும் ஹதீஸ்களையும் அடிப்படையாக வைப்பார்கள். ஒருவர் அறிவிக்கின்ற செய்தி அவ்விரண்டுக்குமோ அல்லது ஒன்றுக்கோ முரண்படுவதாகத் தெரிந்தால் ஒருவர் அறிவிப்பதை மறுப்பார்கள்.

பலர் அறிவிப்பவற்றில் இந்த வழியை பேண மாட்டார்கள்.  ஹனபிகள் குர்ஆனுக்கு முரண் என்றும் பலர் அறிவிப்பதற்கு முரண் என்றும் மறுப்பது ஒருவர் அறிவிப்பதை மட்டும் தான்.
இவர்கள் கூறுவது போன்று எல்லா ஹதீஸ்களையும் குர்ஆனுக்கு முரண்படுகிறதா என்று துருவிப் பார்ப்பதில்லை.

ஹனபிகள் பெரும்பாலும் பகுத்தறிவுக்கு முதன்மை வழங்குவார்கள். (இவர்களைப் போன்று அல்ல,ஏனென்றால் இவர்கள் மறுத்த ஹதீஸ்களைக் கூட அவர்கள் மறுக்கவில்லை)
இதனால் அவர்களை அறிஞர்கள் أصحاب الرأي என்று அழைப்பார்கள்.

இமாம்களான ஷாபிஈ, புகாரி போன்றவர்கள் ஹனபிகளின் இக்கருத்தை மறுத்ததோடு தமது கிதாபுகளில் அவர்களுக்கெதிரான ஆதாரங்களைத் தொகுத்துள்ளார்கள்.

இமாம் ஸர்ஹஸீ சொன்னதாக மேலே கூறப்படும் செய்தியை இவர்கள் முழுமையாக வாசித்திருந்தால் கூட இவரையும் தமது நவீன கொள்கைக்குள் சேர்ந்திருக்க மாட்டார்கள். ஏற்கக் கூடாது என்பதற்கான காரணத்தை அதில் விளக்குகிறார்.

 ஒரு பந்தியை முழுமையாக வாசித்ததன் பின்பு தான் அதில் என்ன சொல்லப்படுகிறது என்பதை விளங்கலாம். இந்த சாதாரண அடிப்படையை கூட விளங்காதவர்கள் ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுவதை ஆராய்கிறார்களாம். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.

அதன் இறுதியில்
 على ما بينا أن تخصيص العام بخير الواحد لا يجوز ابتداء
 என்று இடம்பெற்றுள்ளது. இதன் கருத்து :
 ஒருவர் அறிவிப்பதைக் கொண்டு பொதுவான ஒன்றை குறிப்பாக்குவது கூடாது என்று நாம் தெளிவுபடுத்தியதற்கு இணங்க...
என்று இடம்பெற்றுள்ளது.

இந்த அறிஞர் கூறுவது ஒருவர் அறிவிக்கின்ற செய்தியைப் பற்றியே அல்லாமல் பொதுவாக குர்ஆனுக்கு முரண்பட்டால் ஹதீஸ் மறுக்கப்பட வேண்டும் என்ற கருத்தில் அல்ல என்பது அரபு தெரிந்தவர்களிடம் அந்த கிதாபை வாசித்து பார்த்தால் விளங்கும். அதுவும் அந்த பாடத்தை முழுமையாக வாசிக்க வேண்டும்.
அரைகுறையாக வாசிக்கும் பழக்கம் இருப்பதால்தான் இப்படி தமது புத்திக்கு எட்டாதவற்றை மறுக்க முனைகிறார்கள்.

 ஏற்கனவே இமாம் குர்துபீ உடைய வாசகத்திலும் நாம் இவர்களின் மோசடியை விளக்கியுள்ளோம்.

அல்லாஹ் நம்மனைவரையும் இக் கொள்கையை விட்டும் பாதுகாப்பானாக

அல்லாஹு அஃலம்

ஷுஐப் உமரி
[06/06 10:21 pm] 💐 🕋 Shuaib Umari 🕋💐: 🔬ஹதீஸ் மறுப்புக் கொள்கை வாதிகளின் வாதங்களும் பதில்களும்.🔬

பகுதி 11

👉🗣முஹம்மது பின் அப்தில்லாஹ்வின் கூற்றை இமாம் இப்னு ஹஸ்ம் அவர்கள் அல்இஹ்காம் என்ற தன்னுடைய 📕நூலில் பதிவு செய்துள்ளார் என்று பின்வரும் செய்தியை ஹதீஸ் மறுப்பாளர்கள் முன்வைத்துள்ளார்கள்.

💈முஹம்மது பின் அப்தில்லாஹ் என்பார் கூறுகிறார் : ஹதீஸ் 3⃣மூன்று வகையாகும்.

1⃣குர்ஆனிற்கு ஒத்து அமைகின்ற ஹதீஸ் (முதலாவது வகையாகும்). இதை ஏற்றுக் கொள்வது கட்டாயம்✅

2⃣குர்ஆனில் இருப்பதை விட கூடுதலான தகவலைத் தருகின்ற ஹதீஸ் (இரண்டாவது வகையாகும்). இதையும் குர்ஆனுடன் இணைத்து ஏற்றுக் கொள்வது கட்டாயம்✅

3⃣குர்ஆனுடைய கருத்திற்கு முரணாக👎 வரும் ஹதீஸ் (மூன்றாவது வகையாகும்). இது ஒதுக்கப்பட வேண்டியது❌

📚நூல் : அல்இஹ்காம் பாகம் : 2 பக்கம் : 209

🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥
அறிஞரின் முழுப் பெயரை இப்னு ஹஸ்ம் கூறியும், சொன்னால் மாட்டிக் கொள்வோம் என்ற காரணத்தால் தந்தையின் பெயரோடு மட்டும் சுருக்கிக் கொண்டார்கள் போல.

இவரின் முழுப் பெயர் முஹம்மது பின் அப்தில்லாஹ் பின் மஸர்ரா என்பதே.

இவர் யார்?

தற்போதைய ஸ்பெயினின் குர்துபாவைச் சேர்ந்த இவர் வழிகெட்ட சில கொள்கைகளை முன்வைத்தார். பின்னர் கிழக்குப் பக்கமாக சென்று முஃதஸிலாக்களிடம் கற்றார்.
மீண்டும் ஸ்பெயினுக்கு திரும்பி தனது கொள்கைகளை மறைக்க ஸூபியாக நடித்து தன்னை பின்பற்றும் கூட்டமொன்றையும் உருவாக்கினார்
دولة الإسلام في الأندلس 1/431

இப்னுல் பர்ழி அவர்கள் கூறுகிறார்கள்: கத்தாப் இப்னு மஸ்லமா எனக்குக்கூறினார்  "சிந்தீக் (வழி கெட்ட கொள்கையுடைய) முனாபிக் என குற்றம் சுமத்தப்பட்டவர் , அதனால் தப்பி ஓடினார் , மஷ்ரிகில் சில காலம் அலைந்தார் ,( இறைக்கோட்பாட்டில்) தர்க்க ரீதியாகவும் , பகுத்தறிவு ரீதியாகவும் , விவாதிப்போருடனும் , முஃதஸிலாக்களுடனுடனும் தொடர்பு பட்டிருந்தார் ,பிறகு உந்துலுஸுக்கு வந்து , நல்லவர் போல தன்னை வெளிக்காட்டிக்கொண்டார் , இதனால் மக்கள் ஏமாந்து போய் அவரிடம் சென்று வர ஆரம்பித்தனர் , பிறகு இவரது தவறான , மோசமான கொள்கை தெரிந்ததும் அறிவுடையோர் விலகிக்கொண்டனர் , கதரிய்யாக்களின் கொள்கையைப் பேசிக்கொண்டிருந்தார் , குர் ஆனில் அதிகமான இடங்களில் வலிந்து உள்ளதை மாற்றியமைக்கும் வேலையை செய்தார் , சூபிய்யாக்களின் ஞானத்தைப்பற்றியும் , சூபித்துவத்தைப்பற்றியும் இனிமையாகப் பேசுவார்.
تاريخ علماء الاندلس 2/41 ، تاريخ الإسلام 432 ،

இஸ்மாயீலிய்யா என்றால் ஷீயாப் பிரிவைச் சார்ந்தவராக இருந்தார்.
الإعلام للزركلي 6/223

இவரது ஊரைச் சேர்ந்த அப்துல்லாஹ் இப்னு முஹம்மத் என்பவர் இவருக்கு மறுப்பாக ஒரு புத்தகமே எழுதினார்.
تاريخ الإسلام 27/373

அதே ஊரைச் சேர்ந்த இமாம் இப்னு ஹஸ்மும் இவருடைய இக்கூற்றுக்கு மறுப்புத் தெரிவிக்கவே அவரது கூற்றைப் பதிவு செய்துள்ளார்.
அவரின் கூற்றுக்கு அடுத்த வரியிலேயே இமாம் அவர்களின் கூற்றை இங்கே கவனியுங்கள்

ஆதாரப்பூர்வமான ஹதீஸ் குர்ஆனுக்கு முரணாக இருப்பதற்கு அறவே வாய்ப்பில்லை. மார்க்கத்தின் அனைத்து ஹதீஸ்களும் ஒன்று குர்ஆனை விளக்கக்கூடியதாகவும் குர்ஆனுடன் இணையக்கூடியதாகவுமே உள்ளது. அல்லது குர்ஆனின் பொதுவான அடிப்படையிருந்து விதிவிலக்கலானதாக இருக்கும். மூன்றாவது வகையான ஹதீஸ்கள் வருவதற்கு வாய்ப்பே இல்லை.
அல்இஹ்காம் ஃபீ உசூல் அஹ்காம் (பாகம் 2 பக்கம் 81)

ஆதாரங்கள் ஒன்றுக்கொன்று முரண்படுவதாக ஒரு கூட்டம் வாதிடுவது பற்றிய பாடம்.

 விபரமில்லாத ஒருவருக்கு இரண்டு ஹதீஸ்கள் அல்லது இரண்டு வசனங்கள் அல்லது ஒரு வசனமும் ஹதீஸும் முரண்படுவது போன்று
தெரிந்தால் இந்த அனைத்து ஆதாரங்களையும் மறுத்துவிடாமல் ஏற்பது தான் ஒவ்வொரு முஸ்லிமின் மீது கடமையாகும். ஏனென்றால் ஏற்றுக்கொள்ளும் விசயத்தில் இந்த ஆதாரங்களில் ஒன்று மற்றொன்றை விட ஏற்றமானதில்லை.

ஒரு ஹதீசை புறக்கணித்து அது போன்ற இன்னொரு ஹதீசை ஏற்க வேண்டும் என்ற நிலையில்லை. வசனங்களில் ஒருவசனத்தை விடுத்து இன்னொரு வசனத்திற்கு கட்டுப்படுவதும் சரியல்ல. அனைத்தும் அல்லாஹ்விடமிருந்து வந்ததாகும். கட்டுப்படுவதிலும் ஏற்பதிலும் இவை அனைத்தும் சமமானதாகும். எந்த வேறுபாடும் கிடையாது.

அல்இஹ்காம் ஃபீ உசூல் அஹ்காம் (பாகம் 2 பக்கம் 21)

இதுக்குத்தான் ஒரு புத்தகத்தை வாசிக்கும் போது  முன்ன பின்ன பார்த்து வாசிக்க வேண்டும் என்று சொல்வார்கள். எங்கேயாவது குர்ஆனுக்கு முரண் என்று அரபி வார்த்தையைக் கண்டவுடனேயே அதை தப்புத் தப்பாக விளங்கி விழி பிதுங்கி நிற்க வேண்டியது தான்.

ஏற்கனவே நாம் சொன்னதுபோல் இவர்களின் அடிப்படை ஷீயா, முஃதஸிலா ஆகியவை தான்.

அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டப் போதுமானவன்

அல்லாஹு அஃலம்

 ஷுஐப் உமரி
[08/06 11:08 am] 💐 🕋 Shuaib Umari 🕋💐: 🔬ஹதீஸ் மறுப்புக் கொள்கை வாதிகளின் வாதங்களும் பதில்களும்.🔬

பகுதி 12

இமாம் இஸ்மாயீலீ அவர்கள், இப்ராஹீம் (அலை) அல்லாஹ்விடம் மறுமையில் தனது தந்தைக்காக பரிந்துரைப்பதாக வரும் ஹதீஸை குர்ஆனுக்கு முரண் என்று மறுத்ததாக, ஹதீஸ் மறுப்புக் கொள்கைவாதிகள் கூறுகின்றனர்.

🚥🚥🚥🚥🚥
சிலவேளை குறித்த ஒரு ஹதீஸும் ஒரு குர்ஆன் வசனமும் முரண்படுவதாக ஒருவருக்குத் தோன்றலாம். ஆனால் தனக்கு முரணாகத் தெரிவதாக கூறியதற்காக அவர் அதை மறுத்துவிட்டார் என்ற முடிவிற்கு ஒரேயடியாக வந்து விட முடியாது. அது பற்றிய அவரின் ஏனைய கருத்துக்களையும் பார்க்க வேண்டும். 🌹

🌹புகாரியில் இடம்பெற்றுள்ள இந்த ஹதீஸை இமாம் இஸ்மாயீலீ மறுப்பதாக கூறவில்லை. மாறாக
 هَذَا خَبَر فِي صِحَّته نَظَر
இந்த செய்தியின் நம்பகத்தன்மை பற்றி சற்று ஆராய வேண்டியுள்ளது என்று கூறிவிட்டு, குர்ஆனுக்கு முரண்படுவதாக உள்ள தனது சந்தேகத்தை கூறுகிறாரே தவிர மறுக்கவில்லை. இதனால்தான் இமாம் இப்னு ஹஜர் இமாம் இஸ்மாயீலீ மறுத்தார் என்று சொல்லாமல் பின்வருமாறு கூறுகிறார்.🌹

 وَقَدْ اِسْتَشْكَلَ الْإِسْمَاعِيلِيّ هَذَا الْحَدِيث
 இதில் استشكل என்பதற்கு  التبس என்று அரபி அகராதிகளில் காணலாம். இதற்கு ஆங்கிலத்தில் Confused என்று அர்த்தம். அதாவது இமாம் இஸ்மாயீலீ இந்த ஹதீஸ் குர்ஆனுக்கு முரண்படுகிறதோ என்று குழம்பிப் போயுள்ளார் என்று கருத்து கொள்ளலாம்.🌹

🌹இமாம் இஸ்மாயீலீ குர்ஆனுக்கு முரண் என்று மறுத்திருப்பதை இமாம் இப்னு ஹஜரும் ஏற்றுக் கொண்டுள்ளார் என்றவாறு தமது வாதத்தை முன்வைத்துள்ளனர்.🌹

🌹இப்னு ஹஜர் அஸ்கலானீ இவரது இக்கூற்றை பதிந்து விட்டு இப்ராஹீம் நபியுடைய விடயத்தை குர்ஆனுக்கு முரண்படாமல் எவ்வாறு விளங்க வேண்டும் என்பதை அழகாக விளக்குகிறார்.
எதையும் முழுமையாக வாசிப்பவர்களுக்குத் தான் இதெல்லாம் விளங்கும்.🌹

🌹இமாம் இஸ்மாயீலீ இந்த ஹதீஸை மறுக்கவில்லை என்பதற்கு ஸஹீஹுல் புகாரி உடைய ஹதீஸ்கள் பற்றிய அவரின் நிலைப்பாட்டிலிருந்து அறியலாம். 🌹

🌹"அபூ அப்தில்லாஹ் புகாரி கோர்வை செய்த கிதாபை நான் பார்த்தேன். அதன் பெயருக்கேற்றவாறு அதிகமான ஸஹீஹான ஸுன்னாக்களை ஒன்று சேர்த்தியதாக இருந்தது" என்கிறார்.🌹

🌹பின்னர் புகாரி இமாமை புகழ்ந்து விட்டு வேறு சிலர் அவரைப் போன்று ஹதீஸ்களை சேர்த்ததாகவும், என்றாலும் எவரும் புகாரி உடைய தரத்தை அடையவில்லை என்றும் கூறுகிறார்.🌹
مقدمة فتح الباري 1/11

🌹இஸ்மாயீலீயின் இந்தக் கூற்று புகாரி உடைய எந்த ஹதீஸையும் பலவீனமானதாகவோ குர்ஆனுக்கு முரணாகவோ காணவில்லை என்பதை உணர்த்துகின்றது.🌹

🌹 அதுமட்டுமல்லாமல் "இந்த கிதாபில் நான் பதிவு செய்தவை அனைத்தும் ஸஹீஹானவை தான். ஆனால், எல்லா ஸஹீஹானவைகளையும் நான் பதியவில்லை"  என்று இமாம் புகாரி கூறுவதை அறிவித்து விட்டு,🌹

🌹 "அவரிடம் ஸஹீஹானவற்றை அவர் பதிந்திருந்தால் ஒரு பாடத்திலேயே பல ஸஹாபாக்களின் ஹதீஸ்களை பதிய வேண்டி வந்திருக்கும். அதனால் அது மிகப் பெரிய புத்தகமாக மாறிவிடும்" என்று தானும் உறுதிப்படுத்துகிறார்.🌹

🌹மொத்தத்தில் இமாம் இஸ்மாயீலீ குர்ஆனுக்கு முரண் படுவதாகத் தனது சந்தேகத்தை தெரிவித்தாலும் அதை மறுக்கவில்லை என்பதற்கு புகாரி உடைய ஹதீஸ்கள் பற்றிய அவரது நிலைப்பாடே ஆதாரமாகும். ஹதீஸ் மறுப்புக் கொள்கையில் அவர் இருந்திருந்தால் அதை சுட்டிக் காட்டியிருப்பார்.🌹

🌹ஹதீஸ் மறுப்பாளர்களின் இந்த நூதனக் கோட்பாட்டை இமாம்கள் அங்கீகரிக்கவில்லை என்பது தெளிவான ஒரு விடயம். 🌹


🌹அல்லாஹ் நம் அனைவரையும் இந்தக் கொள்கையில் இருந்து பாதுகாப்பானாக.🌹

அல்லாஹு அஃலம்

ஷுஐப் உமரி


🌷ஹதீஸ் மறுப்புக் கொள்கை வாதிகளின் வாதங்களும் பதில்களும்.🌷

🌻பகுதி 13🌻

💆கஸ்அம் கோத்திரத்தைச் சார்ந்த பெண்ணின் ஹதீஸை இமாம் மாலிக் அவர்கள் குர்ஆனுக்கு முரண் என்று நிராகரிக்க, அதை இமாம் குர்துபீ அவர்கள் அங்கீகரித்தார்களா?💆

முதலாவது

இமாம் இப்னு ஹஜர் பத்ஹுல் பாரி 4/69 இல் "அந்த ஹதீஸ் ஹஜ் செய்யச் சக்தி பெறுதல் என்பது இன்னொருவர் மூலமும் நிகழலாம் என்பதற்கு ஆதாரமாகும்." என்று கூறிவிட்டு,

 மாலிக் மத்ஹப் சார்ந்த சிலர் இந்த ஹதீஸ் அந்த இயலாதவர் மீது ஹஜ்ஜை கட்டாயப்படுத்தவில்லை. என்றும் மாலிக் மத்ஹபினர் " ஒருவர் வஸிய்யத் செய்தால் அவருக்கு பதிலாக வேறொருவர் ஹஜ்ஜை நிறைவேற்றுவதை அனுமதிக்கிறார்கள்" என்றும் இன்னும் சிலர் "அது அந்தப் பெண்ணுக்கு மட்டும் குறிப்பான சட்டம்" என்று கூறுகிறார்கள் என்றும் கூறிவிட்டு இமாம் மாலிக் உடைய இக்கருத்தை பதிந்துள்ளார்.அத்தோடு நிற்காமல் ஒவ்வொன்றுக்கும் பதிலளித்துள்ளார்.

இரண்டாவது

இமாம் மாலிக்கின் நிலைப்பாடு என்ன?

முந்தைய பகுதியில் நாம் கூறியது போன்று ஒருவர் குறித்த ஒரு ஹதீஸ் குர்ஆனுக்கு முரணாக தனக்குத் தெரிவதாக கூறுவதை வைத்து அவர் மறுத்து விட்டார் என்ற முடிவிற்கு ஒரேயடியாக வர முடியாது. "குர்ஆனில் சக்தியுள்ளவருக்கு ஹஜ் கடமை எனும் போது இந்த ஹதீஸ் சக்தியற்றவரையும் குறிப்பதால் அப்பெண்ணுக்கு மாத்திரமே குறிப்பானது என்று இமாம் மாலிக்கும் அவரது சகாக்களும் கூறுகிறார்கள்." என்று  அதே மாலிக் மத்ஹபைச் சேர்ந்த இமாம் இப்னு அப்தில்பர் التمهيد 9/124 இலும்  குறிப்பிடுகிறார். எனவே இந்த ஹதீஸை குர்ஆனுக்கு முரண் என்று மறுக்காமல் அப்பெண்ணுக்கு மாத்திரம் குறிப்பாக சொல்லப்பட்டது என்று விளங்குவதே இமாம் மாலிக்கின் நிலைப்பாடாகும்.

மூன்றாவது

இமாம் குர்துபீ அங்கீகரித்தாரா?

"உறுப்புகள் துண்டிக்கப்பட்டவருக்கு பதிலாக இன்னொருவர் ஹஜ்ஜை நிறைவேற்றலாமா" என்பது பற்றி பேசும் போது இமாம் மாலிக் அவர்கள் அது குர்ஆனுக்கு முரண் என்றும் அவர் மரணித்ததன் பின்னர் வேறொருவர் நிறைவேற்றலாம் என்றும் கூறுகிறார். (இதில் அந்தப் பெண்ணின் ஹதீஸைக் குறிப்பிடவில்லை.)
تفسير القرطبي 4/150

இதை இமாம்  குர்துபீ பதிந்து விட்டு எமது உலமாக்கள் இந்த ஹதீஸ் சக்தியற்றவர் மீது ஹஜ்ஜை கடமையாக்கவில்லை அந்தப் பெண்ணின் ஆர்வத்தைக் கண்டு அவ்வாறு பதிலளித்தார்கள் என்று விளக்குகிறார்கள். என்று கூறிவிட்டு, இந்த ஹதீஸ் பற்றி இமாம் மாலிக்கின் நிலைப்பாடு பற்றி இமாம் இப்னு அப்தில் பர் கூறியதை பதிவு செய்துள்ளார்.
تفسير القرطبي 4/152

இதிலிருந்து இமாம் மாலிக் குறித்த ஹதீஸை குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி மறுத்ததாக அவர் மீது அபாண்டத்தை சுமத்துகிறார்கள் என்பதும்,

அதை இமாம் குர்துபீயும் அங்கீகரித்துள்ளார் என்று அவர் மீதும் பொய் சொல்கிறார்கள் என்பதும் தெளிவாகிறது.

🚦🚦🚦🚦🚦
ஏற்கனவே நாம் சொன்னதுபோல ஒரு பந்தியையோ, பக்கத்தையோ, பாடத்தையோ முழுமையாக வாசிக்காமல் "முரண்" என்ற சொல் இருப்பவற்றையெல்லாம் தங்களுக்கு சாதகம் என்று நினைக்கிறார்கள்.

இதெல்லாம் யார்கிட்ட போய் சொல்றது😩 பாவம் அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டப் போதுமானவன்.

இது தொடர் 10 பத்திற்குரிய பதில். மற்றவை தொடரும் இன்ஷா அல்லாஹ்......

அல்லாஹு அஃலம்

 ஷுஐப் உமரி பேருவளை

15/06/2016


🌷ஹதீஸ் மறுப்புக் கொள்கை வாதிகளின் வாதங்களும் பதில்களும்.🌷

🌻பகுதி 14🌻

இமாம் இப்னு தைமிய்யா குர்ஆனுக்கு முரண் என்று ஹதீஸை மறுத்தாரா?

ஹதீஸ் மறுப்பாளர்களின் வாதம்.

🌧வானம் மற்றும் 🏜பூமி 6⃣ஆறு நாட்களில் படைக்கப்பட்டதாக 📖திருக்குர்ஆன் சொல்லும் போது 7⃣ஏழு நாட்களில் படைக்கப்பட்டதாக இந்த 📕ஹதீஸ் கூறுகிறது. எனவே இது ஒரு குறை👎 இது அல்லாமல் அறிவிப்பாளர் தொடரிலும் குறை உள்ளது👎 என்பதே இப்னு தய்மியா அவர்களுடைய கூற்றின் சாராம்சம்📌

பதில்

இமாம் இப்னு தைமிய்யாவின் கூற்று அவர்களுக்கே எதிராக உள்ளது. குறித்த ஹதீஸை இவர்களைப் போன்று  குர்ஆனுக்கு முரண் என்று மாத்திரம் சொல்லி மறுக்கவில்லை. அதை அறிவிப்பவர்களில் ஒருவர் தவறிழைத்துள்ளார் என்பதையும் சேர்த்தே கூறுகிறார். இதை அவர்களும் ஏற்றுக் கொள்கிறார்கள்.

ஏதாவது ஒரு ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் குளறுபடி இருக்கும் போது சில வேளை அது குர்ஆனுக்கு முரணாக வாய்ப்புண்டு. அவ்வாறு இருந்தால் அறிஞர்கள் அதையும் துணையாக சேர்த்து கூறுவார்கள்.

இமாம் இப்னு தைமிய்யா இந்த ஹதீஸ் அறிவிப்பாளர் வரிசை சரியாக இருந்தாலும் அதில் علة இல்லத்  அதாவது மேலோட்டமாக பார்த்தால் புலப்படாத நுணுக்கமான குறை இருப்பதாக கூறிவிட்டு,
அது பற்றிய கலை எவ்வாறானதென்று கூறுவதோடு, இது பற்றி யஹ்யா இப்னு ஸஈத், இப்னுல் மதீனீ, புகாரி, அஹ்மத், அபூஹாதம், நஸாயீ, தாரகுத்னீ போன்றவர்கள் மிக அறிந்தவர்கள். அது பற்றிய கிதாபுகளும் உள்ளன. என்றும் கூறுகிறார்.
مجموع الفتاوى 18/19

ஹதீஸ் மறுப்பாளர்களில் இந்த இமாம்களின் அளவு இல்லாவிட்டாலும் ஓரளவாவது ஹதீஸ் துறையில் அனுபவமுள்ளவர்கள் இருக்கிறார்களா?

ஒரு ஹதீஸின் முழு அறிவிப்பாளர் வரிசைகளையும் திரட்டி ஆய்வு செய்தால் தான் நம்பகமானவர்கள் தவறு விட்டிருந்தால் விளங்கும். ஒன்றை முழுமையாக வாசிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கு இதெல்லாம் எட்டாக்கனி தான்.

அடுத்து இமாம் இப்னுல் கையிமும் இதில் தவறு நிகழ்ந்துள்ளதாக கூறும்போது, என்ன தவறு நடந்தது என்று சொல்வதை மறைத்து, ..... இடைவெளி விட்டு பதிந்துள்ளனர்.  அல்லாஹு அக்பர்  இது எவ்வளவு பெரிய இருட்டடிப்பு?

யார் பார்த்து விடப் போகிறார்கள் என்ற குருட்டு தைரியம் !!!

ولكن الغلط في رفعه وإنما هو من قول كعب الأحبار كذلك قال إمام اهل الحديث محمد بن إسماعيل البخاري في تاريخه الكبير وقاله غيره من علماء المسلمين.
المنار المنيف 1/85
இது தான் அந்த இடை வெளியில் உள்ளது
இது நபியவர்களுடைய கூற்று என்று தவறுதலாக இடம் பெற்றுள்ளது.  இது கஃபுல் அஹ்பார் என்பவருடைய கூற்று தான் என்று முஹத்திஸீன்களின் இமாமான புகாரி தனது தாரிகுல் கபீரிலும் வேறு இஸ்லாமிய அறிஞர்களும் கூறியுள்ளார்கள்.

இதற்குப் பின்னர் தான் குர்ஆனுக்கு முரண் என்று கூறுகிறார்.

ஏற்கெனவே அறிவிப்பாளர் ரீதியாக பலவீனம் அல்லது இட்டுக்கட்டப்பட்டது என்று முடிவு செய்யப்பட்டவை குர்ஆனுக்கும் முரண்படும் போது குர்ஆனுக்கு முரண் என்று அறிஞர்கள் கூறுகிறார்களே தவிர மேலெழுந்த வாரியாக குர்ஆனுக்கு முரண் என்று மறுக்கவில்லை.

இறுதியாக மௌலவி அப்பாஸ் அலி அவர்களின் புத்தகத்திலிருந்து சில வரிகள்.....

குர்ஆனுக்கு முரண் என்ற வாதத்திற்கு பின்னால் ஹதீஸ்களை நிராகரிக்கும் கருவியாக மனித சிந்தனை தான் இருக்குமேத் தவிர குர்ஆன் ஒருக்காலும் இருக்காது. எனவே குர்ஆனுடன் முரண்பட்டால் ஹதீஸ்களை மறுக்க வேண்டும் என்பது ஒரு விதியே இல்லை.

இது ஹதீஸ் மறுப்பாளர்களின் 10, 11 இற்கான பதில். மற்றவை தொடரும் இன்ஷா அல்லாஹ்.....

அல்லாஹு அஃலம்

ஷுஐப் உமரி பேருவளை

15/06/2016

🌷ஹதீஸ் மறுப்புக் கொள்கை வாதிகளின் வாதங்களும் பதில்களும்.🌷

🌻பகுதி 15🌻

இமாம் அல்பானி குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களைமறுக்க வேண்டும் என்ற நிலைப்பாடு உடையவரா?

ஹதீஸ் மறுப்புக் கொள்கையை சித்தாந்தமாகக் கொண்டிருக்கும் பித்அத்வாதிகள் தமது தாமாகவே வலிந்து கண்டுபிடித்த அந்தக் கொள்கையை அறிஞர்களும் நடைமுறைப்படுத்தியுள்ளார்கள் என்பதற்கு,

 அவர்களின் கிதாபுகளில் இருந்து முன்வைக்கும் போது, முழுமையாக வாசிக்காமல் குர்ஆனுக்கு முரண் என்ற வார்த்தையைக் கண்டவுடனேயே அதை மட்டும் முன்வைப்பதை முந்தைய பகுதிகளில் நாம் விளக்கியிருந்தோம்.

அதேபோன்று இமாம் அல்பானியுடைய இரண்டு கூற்றையும் கையாண்டிருக்கிறார்கள்.

ஒரு செய்தியின் அறிவிப்பாளர் வரிசையில் குளறுபடி ஏற்பட்டால் சில வேளை அது குர்ஆனுக்கு நேரடியாக முரண்பட்டதாக இருக்கும். அந்த முரண்பாடு எல்லோருக்கும் விளங்கக் கூடியதாகவும் ஏற்றுக் கொள்ளத் தக்கதாகவும் இருக்கும்.

அவ்வாறான செய்திகளை விமர்சிக்கும் அறிஞர்கள் இரண்டையும் சேர்த்தே கூறுவார்கள்.

1.
ஆதம் (அலை) அவர்கள் சம்பந்தமான செய்தி குர்ஆனுக்கு முரண்படுவதாக தனக்குத் தெரிகிறது என்று மட்டும் மறுக்கவில்லை.
ஏற்கனவே அதன் அறிவிப்பாளர் வரிசையில் உள்ள சில குறைகளையும் கூறி, சில அறிஞர்களுடைய நிலைப்பாட்டையும் விளக்கி விட்டுத்தான் இது குர்ஆனுக்கும் முரண்படுகிறது என்கிறார்.

1/103 இலிருந்து 1/114 பக்கங்கள் வரை இந்த செய்தி பற்றி விளக்குகிறார். முழுமையாக வாசிக்கும் பழக்கம் இருந்தால் புரியும் இன்ஷா அல்லாஹ்.

இமாம் அல்பானியின் கூற்றை பிழையாக மொழி பெயர்த்துமுள்ளார்கள்

ومما يؤيد ما ذهب إليه العلماء من وضع هذا الحديث وبطلانه أنه يخالف القرآن الكريم في موضعين منه....
அவர்களின் மொழிபெயர்ப்பு.

இந்த ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்டது பொய்யானது என்று அறிஞர்கள் முடிவு செய்ததற்குக் காரணம் இந்த ஹதீஸ் இரண்டு இடங்களில் சங்கை மிக்க 📖குர்ஆனுடன் முரண்படுகிறது. . .

சரியான மொழிபெயர்ப்பு.

இந்த ஹதீஸ் இரண்டு இடங்களில் சங்கை மிக்க 📖குர்ஆனுடன் முரண்படுவதும் இந்த ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்டது என்று அறிஞர்கள் முடிவு செய்ததை உறுதிப்படுத்தக் கூடியதாகும்.

2.
இமாம் அல்பானி உமர் (ரழி) அவர்களுடைய செய்தி குர்ஆனுக்கு முரண்படுவதை கூறும்போது "இரண்டாவது" என்று ஆரம்பிக்கிறார். இவர்கள்
"முதலாவது" என்ன என்பதையும் மறைத்ததோடு இரண்டாவது என்பதை மொழி பெயர்க்கவுமில்லை . இது பட்டப்பகலில் செய்யும் இலக்கியக் கொள்ளை.
1/117 இலிருந்து 1/126 பக்கங்களில் விளக்குகிறார்.

எனவே இது இமாம் அல்பானியும் ஆதரிக்காத நூதனக் கொள்கை என்பது தெளிவாகிறது.

இது பகுதி 12 இற்கான பதில்.

அல்லாஹு அஃலம்

ஷுஐப் உமரி பேருவளை


🌷ஹதீஸ் மறுப்புக் கொள்கை வாதிகளின் வாதங்களும் பதில்களும்.🌷

🌻பகுதி 16🌻

இமாம் புல்கீனி குர்ஆனுக்கு முரண் என்று ஹதீஸை மறுக்கவில்லை.


👉இவ்வாறே நமது ஆசிரியர் 👳புல்கீனீ அவர்களும் உனது இறைவன் யாருக்கும் அநீதியிழைக்க மாட்டான் என்ற அல்லாஹ்வின் கூற்றை ஆதாரமாக வைத்து இந்த அறிவிப்பை மறுத்துள்ளார்⚔

📚நூல் : ஃபத்ஹுல்பாரீ பாகம் : 13 பக்கம் : 437

அறிவிப்பை الرواية மறுப்பது என்பது வேறு الحديث மறுப்பது என்பது வேறு. ஹதீஸ் கலையில் சிறிது ஞானம் உள்ளவர்களுக்கும் இது புரியும்.

அறிவிப்பாளர்களில் ஒருவர் மாறி அறிவித்துள்ளார் مقلوب என்பதையே அறிஞர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

அவர்களின்மொழிபெயர்ப்பு

நரகத்திற்கு புதிய படைப்பை அல்லாஹ் படைப்பான் என்று வருகின்ற இந்த இடத்தில் (தவறுதலாக) மாற்றம் நிகழ்ந்து விட்டது என்று இமாம்களில் ஒரு கூட்டத்தினர் கூறியுள்ளார்கள்.

மாற்றம் அறிவிப்பாளர் மூலமே நடந்துள்ளது என்பதற்கு இமாம் இப்னு ஹஜர் அவர்கள் புகாரியில் உள்ள  வேறு சில அறிவிப்புகளை மேற்கோள் காட்டுகிறார்.
கொஞ்சம் முன்னப் பின்ன வாசித்தால் விளங்கும்.

இன்னும் வேடிக்கையாக உள்ள விடயம் என்னவென்றால் இமாம் புல்கீனி இந்த செய்தியை குர்ஆனுக்கு முரண்படாமல் எவ்வாறு விளங்க வேண்டும் என்பதையும் கூறியுள்ளார். அதை இமாம் இப்னு ஹஜர் அடுத்ததாகவே  பதிந்துள்ளார். ஆனால் இவர்கள் அதை மறைத்து விட்டார்கள்.

இமாம் புல்கீனி ஹதீஸ் மறுப்புக் கொள்கையில் உள்ளவரல்ல. தாம் கொண்ட கொள்கையை நிறுவுவதற்கு பலியாக்கப்படும் இமாம்களில் ஒருவர்.

இது பகுதி 13 இதற்குரிய பதில்

அல்லாஹு அஃலம்

ஷுஐப் உமரி பேருவளை


🌷ஹதீஸ் மறுப்புக் கொள்கை வாதிகளின் வாதங்களும் பதில்களும்.🌷

🌻பகுதி 17🌻

அவர்களின் வாதம்

ولهذا المعنى رد طائفة من العلماء حديث قطع الصلاة بمرور الكلب وغيره ، وقالوا: إنه مخالف للقرآن في قوله تعالى : { وَلا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَى } الأنعام:164،
كما ذكر ذلك الشافعي.

💥நாயும், மற்றவைகளும் கடந்து செல்வதினால் தொழுகை முறிந்துவிடும் என்ற கருத்தில் வரும் ஹதீஸை 👳அறிஞர்கள் மறுக்கிறார்கள்✅

❇ ஒருவன் மற்றவனின் சுமையைச் சுமக்க மாட்டான் 📖(6 : 164) என்ற இறைவனுடைய கூற்றுக்கு இந்த ஹதீஸ் முரண்படுகிறது⚔ என்றும் கூறுகிறார்கள். ஷாபிஈயும் இதைக் கூறியுள்ளார்.

📚நூல் : ஃபத்ஹுல் பாரீ லிஇப்னி ரஜப் பாகம் : 3 பக்கம் : 342

பதில்

இதில் ولهذا المعنى என்ற அரபுப் பதத்தை மொழி பெயர்க்கப்படவில்லை.

"இந்த கருத்தின் காரணமாக" என்பதே அதன் பொருளாகும்.

 இந்தக் கருத்து என்றால் என்ன?

  தொழுகையை துண்டித்து விடும்   يقطع الصلاة  என்ற வார்த்தை நன்மையைக் குறைக்கும் என்பதைக் குறிக்கின்றது என்பதற்கு சில அறிவிப்புகளை பதிந்துள்ளார். தொழுகையை முறிக்கும் என்ற கருத்தை விட தொழுகையின் நன்மையைக் குறைக்கும் என்பதே சரியான கருத்து என்பதை அந்த அறிவிப்புகள் மூலம் இமாமவர்கள் கூறியுள்ளார்கள்.

வேறு ஹதீஸ்கள் மூலம் இதை எவ்வாறு விளங்க வேண்டும் என்பதை நிறுவி விட்டுத் தான் குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறப்பட்டதை பதிந்துள்ளார்.

இவர்கள் கூறுவது போல் வெறுமனே குர்ஆனுக்கு முரண் என்பதால் மட்டும் மறுக்கவில்லை.

அந்தப் பந்தியை முழுமையாக வாசிக்கும் எவரும் இமாம் இப் ரஜப் மீது இப்படியொரு அபாண்டத்தை சுமத்துகிறார்கள் என்பதை விளங்கிக் கொள்வார்கள்.

மருண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல காண்பதையெல்லாம் முரணாக விளங்குபவர்களாகவே இந்த ஹதீஸ் மறுப்புக் கொள்கைவாதிகள் இருக்கின்றனர்.

இமாம்களின் மீது அவதூறு சொல்லித்தான் தங்களது கொள்கையை நிறுவ வேண்டிய நிலையில் இருக்கிறீர்கள்.

அல்லாஹ் நம் அனைவரையும் இந்தக்கொள்கையில் இருந்து காப்பாற்றவேண்டும்

இது பகுதி 13 இன் 2ஆவது வாதத்திற்கு பதில்

அல்லாஹு அஃலம்

ஷுஐப் உமரி பேருவளை



💍முன்னோர் வாழ்வில்💍தொடர்

💍முன்னோர் வாழ்வில்💍01

⭐🔷⭐🔷ஸஹீஹ்⭐🔷⭐🔷

🍀அபூ பக்ர்  (ரழி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்கும்போது அவரிடம் நாற்பதாயிரம் திர்ஹங்கள் இருந்தன.🍀

🌿மரணிக்கும் போது ஒரு தீனாரையோ திர்ஹத்தையோ விட்டுச் செல்லவில்லை.🌿

⭐🔷⭐🔷⭐🔷⭐🔷⭐🔷⭐
ஆதாரம் :
அபூதாவூத் தயாலஸீ -- ஸுஹ்த் 58,
அப்துல்லாஹ் இப்னு அஹ்மத் -- ஸுஹ்த் 136
இப்னு ஸஃத் -- தபகாத் 3/146
🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴

[13/05 3:41 pm] 💐 🕋 Shuaib Umari 🕋💐:


💍முன்னோர் வாழ்வில்💍02

⭐🔷⭐🔷ஸஹீஹ்⭐🔷⭐🔷

🍀அபூபக்ர் (ரழி ) அவர்கள், அதிகம் நோன்பு நோற்பவர் என்பதாலோ, அதிகம் தொழுபவர் என்பதாலோ மனிதர்களில் சிறந்தவராக இருக்கவில்லை.  உள்ளத்தில் இருந்த தூய எண்ணத்தினால் தான் அவர் சிறந்து விளங்கினார். என்று பக்ர் இப்னு அப்துல்லாஹ் என்ற அறிஞர் கூறுகிறார்.🍀

தயாலஸீ -- ஸுஹ்த் 59
அஹ்மத் -- பழாஇலுஸ் ஸஹாபா 118
🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴
[13/05 4:14 pm] 💐 🕋 Shuaib Umari 🕋💐:


💍முன்னோர் வாழ்வில்💍03

⭐🔷⭐🔷ஸஹீஹ்⭐🔷⭐🔷

🍀உமர்  (ரழி) அவர்கள் எனது மடியில் படுத்துக் கொண்டிருந்த போது "எனது தலையை தரையில் வை" என்றார்கள். எனது போர்வையை  சுருட்டி தலைக்கு கீழே வைக்க முற்பட்டபோது "தலையை தரையில் வை" என்று கூறி விட்டு " அல்லாஹ் என்னை மன்னிக்கா விட்டால் எனது நிலை என்னவாகுமோ? என்று கூறினார்கள்.
🔷🌾🔷🔷🔷🌾🔷🔷🔷🔷
தயாலஸீ -- ஸுஹ்த் 67
உமர் -- தாரீகுல் மதீனா 3/818

🌷ஷுஐப் உமரி 🌷
[14/05 8:39 am] 💐 🕋 Shuaib Umari 🕋💐:


💍முன்னோர் வாழ்வில்💍04

⭐🔷⭐🔷ஸஹீஹ்⭐🔷⭐🔷
                 🌏அச்சம்🌏

உமர்  (ரழி) அவர்கள் குத்தப்பட்டு காயமுற்ற நிலையில் "  என்னிடம் இந்தப் பூமி நிறைய தங்கம் இருந்தால், அதை அல்லாஹ்வின்  தண்டனைக்குப் பகரமாக அதைக் காணும் முன்பே அல்லாஹ்வுக்காக அர்ப்பணித்து விடுவேன்." என்றார்கள்.

இன்னொரு அறிவிப்பில் "பூமியில் உள்ள அனைத்தும் எனக்கு சொந்தமானதாக இருந்தால்" என இடம் பெற்றுள்ளது.

🔷🌾🔷🌾🔷🌾🔷🌾🔷
அபூதாவூத் -- ஸுஹ்த் 70,71
உமர் -- தாரீகுல் மதீனா  3/909
அபூநுஐம் -- ஹில்யா 1/52

🌷ஷுஐப் உமரி 🌷
[14/05 7:28 pm] 💐 🕋 Shuaib Umari 🕋💐:


💍முன்னோர் வாழ்வில்💍05

⭐🔷⭐🔷ஸஹீஹ்⭐🔷⭐🔷

அனஸ் இப்னு மாலிக்  (ரழி ) அவர்கள் கூறுகிறார்கள். நான் உமர் (ரழி) அவர்களுடன் ஒரு தோட்டத்திற்கு சென்றேன். ஒரு சுவர் எங்களைப் பிரித்த போது " முஃமின்களின் தலைவராகிய உமரே. அல்லாஹ்வைப் பயந்து நடந்து கொள். இல்லாவிட்டால் அவன் உன்னை தண்டிப்பான்."  என்று தனக்குள் சொன்னதை நான் கேட்டேன்.
 🔷🌾🔷🌾🔷🌾🔷🌾🔷

அபூதாவூத் -- ஸுஹ்த் 73
மாலிக் -- முவத்தா 2/992
அப்துல்லாஹ் இப்னு அஹ்மத் 144
இப்னு ஸஃத் -- தபகாத் 3/221
இப்னு அஸாகிர் -- தாரீகு திமிஷ்க் 13/112

🌷ஷுஐப் உமரி 🌷
[15/05 6:24 am] 💐 🕋 Shuaib Umari 🕋💐:


💍முன்னோர் வாழ்வில்💍06

⭐🔷⭐🔷ஸஹீஹ்⭐🔷⭐🔷

அனஸ் இப்னு மாலிக்  (ரழி ) அவர்கள் கூறுகிறார்கள்.
உமர் (ரழி) அவர்களிடம் களவெடுத்து மாட்டிக் கொண்ட ஒரு வாலிபர் கொண்டு வரப்பட்டார். அல்லாஹ்வின் மீது ஆணையாக! இதற்கு முன் களவெடுத்ததில்லை என்றார் அந்த வாலிபர். அப்போது உமர் (ரழி) அவர்கள் " அல்லாஹ்வின் மீது ஆணையாக நீ பொய் சொல்கிறாய். முதல் முறையாக தவறு செய்பவனை அல்லாஹ் ஒரு போதும் காட்டிக்கொடுக்க மாட்டான்." என்று கூறினார்கள்.
🔷🌾🔷🌾🔷🌾🔷🌾🔷

அபூதாவூத் -- ஸுஹ்த் 74

🌷ஷுஐப் உமரி 🌷
[15/05 8:52 am] 💐 🕋 Shuaib Umari 🕋💐:


💍முன்னோர் வாழ்வில்💍07

⭐🔷⭐🔷ஸஹீஹ்⭐🔷⭐🔷

அனஸ் இப்னு மாலிக்  (ரழி ) அவர்கள் கூறுகிறார்கள்.
உமர் (ரழி) அவர்கள் கலீபாவாக இருக்கும் போது அவரது இரு புஜங்களுக்கு மத்தியில் ஒன்றுக்கு மேல் ஒன்றாக நான்கு ஒட்டுக்கள் போடப்பட்டிருந்ததைக் கண்டேன்.
🔷🌾🔷🌾🔷🌾🔷🌾🔷

அபூதாவூத் -- ஸுஹ்த் 75
மாலிக் -- முவத்தா 918
இப்னுல் முபாரக் -- ஸுஹ்த் 208
இப்னு ஸஃத் -- தபகாத் 3/249
ஹன்னாத் -- ஸுஹ்த் 701
இப்னு அபீஷைபா 13/264,265
இப்னு அஸாகிர் -- தாரீக் 13/109

🌷ஷுஐப் உமரி 🌷
[15/05 3:26 pm] 💐 🕋 Shuaib Umari 🕋💐:


💍முன்னோர் வாழ்வில்💍08

⭐🔷⭐🔷ஸஹீஹ்⭐🔷⭐🔷

"இவ்வுலக வாழ்வை மறுமையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் முயலின் ஒரு பாய்ச்சலுக்கு ஒப்பானது"  என்று உமர் (ரழி) கூறினார்கள்.
🔷🌾🔷🌾🔷🌾🔷🌾🔷

அபூதாவூத் --- ஸுஹ்த் 76

🌷ஷுஐப் உமரி 🌷
[16/05 12:09 pm] 💐 🕋 Shuaib Umari 🕋💐:


💍முன்னோர் வாழ்வில்💍09

⭐🔷⭐🔷ஸஹீஹ்⭐🔷⭐🔷

🎀ஒரு மனிதனின் தொழுகையையும், நோன்பையும் வைத்து (மாத்திரம்) அவனை (நல்லவனென்று) எடைபோட வேண்டாம்.

🚥பேசினால் உண்மை பேசுகிறானா?
🚥நம்பினால் நாணயமாக நடக்கிறானா?
🚥ஏதாவதொன்றை செய்யும் போது பேணுதலாக நடந்து கொள்கின்றானா?
என்று பார்த்து முடிவு செய்யுங்கள். என்று உமர் (ரழி) கூறினார்கள்.🎀
🔷🌾🔷🌾🔷🌾🔷🌾🔷

அபூதாவூத் -- ஸுஹ்த் 80

🌷ஷுஐப் உமரி 🌷
[16/05 10:06 pm] 💐 🕋 Shuaib Umari 🕋💐:


💍முன்னோர் வாழ்வில்💍10

⭐🔷⭐🔷ஸஹீஹ்⭐🔷⭐🔷

அபூபக்ர்  ( ரழி) தனது குத்பாவில் பின்வருமாறு கூறினார்கள்.

🌼(எப்போது முடியும்  என்ற விடயம் பற்றிய) அறிவு உங்களுக்கு மறைக்கப்பட்ட ஒரு தவணையில் வாழ்கின்றீர்கள். முடியுமென்றால்  அல்லாஹ்வுக்குரிய அமல்களைச்  செய்வதிலேயே  அந்தத் தவணையை கழியுங்கள். அல்லாஹ்வின் உதவியால் தான் அ(ந்தப் பாக்கியத்)தை நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள்🌼

🌻சிலர் தங்களது தவணையை தமக்குப் பாதகமாக அமைத்துக் கொண்டார்கள். அதனால் அவர்களைப் போன்று நீங்களும் இருக்க வேண்டாம் என்று அல்லாஹ் தடுத்திருக்கிறான். 🌻

🍇"அல்லாஹ்வை மறந்தவர்களைப் போன்று நீங்கள் இருக்க வேண்டாம். அவர்களையே அவர்களுக்கு மறக்கடித்து விட்டான்." ( ஹஷ்ர்/19)🍎

🌾உங்களுக்குத் தெரிந்த சகோதரர்கள் எங்கே? தாம் முற்படுத்தி வைத்தவற்றின் மூலம் இன்பத்தையோ அல்லது துன்பத்தையோ தனியாக  அனுபவித்துக் கொண்டிருக்கன்றார்கள்.🌾

🍀நகரங்களையும் அவற்றைச் சுற்றி பாதுகாப்பான கோட்டைகளையும் அமைத்து, அடக்கியாண்டு கொண்டிருந்தவர்கள் எங்கே?
கல் மற்றும் குன்றுகளுக்குக் கீழே புதைந்து விட்டார்கள்.🍀

🌹அல்லாஹ்வின் இந்த வேதத்தின் அற்புதங்கள் அழிந்து விடாது. இருள் சூழ்ந்த (மறுமை ) நாளுக்காக அதிலிருக்கும் ஒளியைப் பெற்றுக் கொள்ளுங்கள். அவனுடைய வேதத்திலிருந்தும் ஹதீஸிலிருந்தும் உபதேசம் பெற்றுக் கொள்ளுங்கள். 🌹

🌸அல்லாஹ் ஜகரிய்யா ( அலை ) அவர்களையும் அவரது குடும்பத்தினரையும் பின்வருமாறு புகழ்ந்து கூறுகிறான்.🌸

🍑" அவர்கள் நன்மையானவற்றை விரைந்து செய்வார்கள். அச்சத்தோடும் ஆசையோடும் எம்மை அழைப்பார்கள். எம்மைப் பயந்தவர்களாகவும் இருந்தார்கள்."
( அல் அன்பியா 90 )🍑

🍋அல்லாஹ்வின் திருமுகம் நாடப்படாத எந்தப் பேச்சிலும்,  அல்லாஹ்வுக்காக செலவளிக்கப்படாத எந்த சொத்திலும்,
அறியாமை அதிகம் இருப்பவனிடத்திலும் பழிப்பவர்களின் பழிப்புக்கு பயப்படக் கூடியவனிடத்திலும் எந்த நலவும்  இருக்காது.🍋

💐🌻🌼🌸🌹🌷💐

அபூதாவூத் --- ஸுஹ்த் 50
தபரானீ --- அல் கபீர் 1/60
அபூபக்கர் நுஐம் -- ஹில்யா 1/36

🌷ஷுஐப் உமரி 🌷
[17/05 5:43 am] 💐 🕋 Shuaib Umari 🕋💐:


💍முன்னோர் வாழ்வில்💍11

⭐🔷⭐🔷ஸஹீஹ்⭐🔷⭐🔷

அபூபக்ர்  (ரழி) அவர்கள் "இதுதான் என்னை அழிவுக்கு உள்ளாக்கக் கூடியது." என்று தமது நாவைப் பிடித்து சொன்னார்கள்.

அபூதாவூத் -- ஸுஹ்த் 55
இப்னுல் முபாரக் -- ஸுஹ்த் 125
இப்னு அபீஆஸிம் - ஸுஹ்த் 20
வகீஃ - ஸுஹ்த் 287
அஹ்மத் -- ஸுஹ்த் 135,136
ஹன்னாத் - ஸுஹ்த் 1093
மாலிக் - முவத்தா 988
பைஹகீ - ஷுஅப் 4/4990

💐🌻🌼🌸🌹🌷💐

🌷ஷுஐப் உமரி 🌷
[21/05 4:43 pm] 💐 🕋 Shuaib Umari 🕋💐:


💍முன்னோர் வாழ்வில்💍12

⭐🔷⭐🔷ஸஹீஹ்⭐🔷⭐🔷

🌼அபூபக்ர் (ரழி) அவர்களும் இருக்கக்கூடிய ஒரு படைக்குத் தளபதியாக  அம்ர் இப்னுல் ஆஸ் (ரழி) அவர்களை நியமித்து  ذات السلاسل  என்ற யுத்தத்திற்கு நபியவர்கள் அனுப்பி வைத்தார்கள். 🍃
செல்லும் வழியில் எதிர்ப்படும் முஸ்லிம்களையும் கூட்டிச் செல்லுமாறு பணித்திருந்தார்கள்.🌼

🌹 அபூபக்ர்  (ரழி) அவர்களும் இருந்த ஒரு படைக்கு அம்ருப்னுல் ஆஸ் தலைமை தாங்கினார் என்று ஷாம் வாசிகள் பெருமைப்பட்டுக் கொள்வார்கள். எங்களைக் கடந்து செல்லும் போது நாங்களும் சேர்ந்து கொண்டோம்.🌹

🌻யாருடனாவது சேர்ந்து செல்ல வேண்டுமே என்று அபூபக்ர்  (ரழி) உடன் சேர்ந்து கொண்டேன். அவரிடம் فدك பதக் என்ற ஊரைச் சேர்ந்த ஒரு போர்வை இருந்தது. வாகனத்தில் இருக்கும் போது குச்சிகளால்  அவர் இணைத்து போர்த்திக் கொள்வார். நான் ஏறும் போது நான் அதை
அணிந்து கொள்வேன். 🌻

🌳அதை هوازن ஹவாஸின் கோத்திரத்தார் அவருக்கு இரவலாக கொடுத்திருந்தனர். 🌷குச்சிகளால்
இணைத்து ஆடையை அணிபவரா ரஸூலுல்லாஹ்வுக்கு பின்னர் தலைவராகப் போகிறார்.🌷 என்று மக்கள் பேசிக் கொண்டார்கள். 🌳

🍁யுத்தம் முடிந்து திரும்பும் வழியில் " அபூபக்ரே! உம்முடன் நான்  சேர்ந்திருக்கிறேன். ஸஹாபாக்களுக்கு ஒரு கடமை இருக்கிறது. நினைத்தவுடன் என்னால் மதீனாவுக்கு வர முடியாது. எனக்குப் பயன் தரக்கூடிய ஏதாவதொன்றை சொல்லித் தாருங்கள்." என்றேன்.🍁

🌺அதற்கவர் "நீர் கேட்டிருக்கா விட்டாலும் நான் செய்திருப்பேன். அல்லாஹ்வை வணங்கு. அவனுக்கு எதையும் இணையாக்க வேண்டாம். கடமையான தொழுகையை நிறைவேற்று. கடமையான ஸகாத்தை கொடுத்து விடு. ரமழானில் நோன்பு இரு. பைத்துல்லாஹ்வை ஹஜ் செய். இருவருக்கு தலைவராக இருக்க வேண்டாம்." என்றார்.🌺

🍑அல்லாஹ்வை வணங்குதல், தொழுவதை நான் அறிவேன். இருவருக்கு தலைவராக இருக்க வேண்டாம் என்றால் என்ன? தலைமைத்துவம் மூலம் மக்களுக்கு நலவும் சிறப்பும் தானே கிடைக்கும்." என்று கேட்டதற்கு,🍑

🌾"நீ விளக்கம் கேட்டு விட்டதால் ( பதில் சொல்ல) முயற்சிக்கிறேன். விரும்பியோ விரும்பாமலோ மக்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். அநியாயத்திலிருந்து அல்லாஹ் அவர்களை பாதுகாத்து விட்டான். எனவே,  அல்லாஹ்வின் பாதுகாப்பில் அவர்கள் இருக்கின்றார்கள்.🌾

🌱 உங்களில் யாராவது தாம் செய்துள்ள உடன்படிக்கையை மீறினால் அல்லாஹ்வின் உடன்படிக்கையையே மீறுகிறார்.  உங்களில் ஒருவர் தனது அண்டை வீட்டாரின் சிறிய ஆட்டையோ ஒட்டகத்தையோ  அநியாயமாக எடுத்துக் கொண்டு அவருடனே கோபித்துக் கொண்டிருப்பார். அல்லாஹ் அண்டை வீட்டாரின் பக்கம் இருக்கின்றான்."
என்று கூறினார்கள். 🌱

🌹பின்னர் எமது வீடுகளுக்கு சென்று விட்டோம். நபியவர்கள் மரணித்ததன் பிறகு அபூபக்ர் தலைவராகி விட்டார் என்று கேள்விப்பட்டேன்.
தலைமைத்துவத்தை விட்டும் என்னை தடுத்தவரே தலைவராகி விட்டாரா. (இது பற்றி விசாரிக்க)
அவரிடம் நான் செல்ல வேண்டும் என்று மதீனாவுக்கு சென்று,🌹

🌸" அபூபக்ரே! தலைமைத்துவத்தை விட்டும் என்னை தடுத்து விட்டு நீங்களே தலைவராகி விட்டீர்களே. " என்று கேட்டதற்கு,🌸

 🌼" மக்கள் இஸ்லாத்தை ஏற்ற புதிதிலே நபியவர்கள் மரணித்து விட்டார்கள். சில அரபிகள் மதம் மாறினார்கள். எனது தோழர்கள் என்னை விடாப்பிடியாக இப்பதவியில் அமர்த்தி விட்டார்கள். என்று காரணம் சொல்லிக் கொண்டே இருந்தார். நானும் ஏற்றுக் கொண்டேன்.🌼

🌺 ஜாஹிலிய்யா காலத்தில் திருடனாக இருந்த நான் காலப்போக்கில் ஹஜ்ஜாஜுடைய காலத்தில் நானும் ஒரு தலைவராக நியமிக்கப்பட்டேன்.🌺

🌼அறிவிப்பவர் : ராபிஃ இப்னு அபீராபிஃ🌼

💐🌻🌼🌸🌹🌷💐

🌟الزهد لأبي داود 25،26
🌟الزهد لوكيع 130
🌟الزهد لأحمد 135
🌟مصنف ابن أبي شيبة 8/145
🌟المعجم الكبير الطبراني 5/21،22
🌟السيرة لابن هشام 2/479


🌷ஷுஐப் உமரி 🌷

21/05/2016
[22/05 9:54 pm] 💐 🕋 Shuaib Umari 🕋💐:


💍முன்னோர் வாழ்வில்💍13

⭐🔷⭐🔷 ஹஸன்⭐🔷⭐🔷

நான் உங்களுக்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளேன். நான் உங்களை விடவும் சிறந்தவனல்ல. நான் சரியாக நடந்தால் எனக்கு உதவி செய்யுங்கள். நான் தவறிழைத்தால் என்னை சரிப்படுத்துங்கள். ஏனென்றால் என்னுடனும் ஒரு ஷைத்தான் இருக்கிறான்.

என்னால் உங்களுக்கு எந்தத் தீங்கும் வராமல் இருப்பதற்காக,  நான் கோபமாக இருக்கும் போது என்னை நெருங்காதீர்கள். என்று அபூபக்ர்  (ரழி) அவர்கள் தனது குத்பாவில் கூறினார்கள்.

உண்மையில் மக்களில் நீங்கள் தான் சிறந்தவர். என்றாலும் ஒரு முஃமின் தன்னை தாழ்த்திக் கொள்வான். என்று இதை அறிவிப்பவர்களில் ஒருவரான இமாம் ஹஸன் அல் பஸரீ கூறுகிறார்கள்.
الزهد لابي داود 56
💐🌻🌼🌸🌹🌷💐

🌷ஷுஐப் உமரி 🌷
[23/05 9:10 pm] 💐 🕋 Shuaib Umari 🕋💐:


💍முன்னோர் வாழ்வில்💍14

🌟🔷ஆதாரபூர்வமானது🔷🌟

🌹(ஒருநாள்) உமர் (ரழி) அவர்கள் ثمغ என்ற இடத்தில் உள்ள தனது சொத்துக்களை பார்க்கச் சென்ற போது, அஸ்ர் தொழுகைக்கு நேரத்திற்கு  சமூகமளிக்க முடியவில்லை.🌹

🌼 (இவர் வராததால்) வேறொருவரை மக்கள் இமாமாக நிற்க வைத்து தொழுதார்கள்.
உமர் (ரழி) அவர்கள் தொழுவதற்காக வந்த போது மக்கள் தொழுது முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள்.🌸

🌳 அவர்களிடம்  (தொழுகை முடிந்து விட்டதா என்று) இரண்டு அல்லது மூன்று தடவை கேட்டு, "ثمغ இல் உள்ள சொத்தினால் எனது தொழுகையை நான் தவறிவிட்டேனே" என்று கூறிவிட்டு,  🌼

🌻(எனது தொழுகைக்கு பங்கம் விளைவித்த) அந்த சொத்து எனக்குத் தேவையில்லை. அதை அல்லாஹ்வுக்காக ஸதகா செய்து விடுகிறேன் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள் . என்று கூறினார்கள். 🌼


الزهد لابي داود 65


🌟இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார்கள்.  🌟

🌻உமர்(ரலி) ثمغ  'தம்ஃக்' என்ற இடத்திலுள்ள தம் சொத்தொன்றை அல்லாஹ்வின் தூதருடைய காலத்தில் தருமம் செய்தார்கள். அது ஒரு பேரீச்சந் தோட்டமாக இருந்தது. அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! நான் ஒரு செல்வத்தைப் பெற்றுள்ளேன். அது என்னிடம் (இருப்பவற்றிலேயே) உயர் தரமானதாகும். எனவே, அதை தருமம் செய்து விட விரும்புகிறேன்" என்று கூறினார்கள். 🌻

🌸நபி(ஸல்) அவர்கள், 'அதன் நிலத்தை (எவருக்கும்) விற்கக் கூடாது; அன்பளிப்பாகவும் தரக்கூடாது; அதற்கு எவரும் வாரிசாகவும் ஆக முடியாது; அதன் வருவாய் மட்டுமே செலவிடப்பட வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் அதை தருமம் செய்து விடு" என்று கூறினார்கள்.🌸

🌹 எனவே, உமர்(ரலி) அதை தருமம் (வக்ஃபு) செய்துவிட்டார்கள். அவர்களின் அந்த தருமம் (வக்ஃபு) அல்லாஹ்வின் பாதையிலும், அடிமைகளை விடுதலை செய்யவும், ஏழைகளுக்காகவும், விருந்தினர்களுக்காகவும், வழிப்போக்கர்களுக்காகவும், உறவினர்களுக்காகவும் வழங்கப்பட்டது.🌹

🌼 'நிர்வாகம் செய்பவர் அதிலிருந்து பொது வழக்கப்படி (நியாயமான முறையில்) உண்பதில் அல்லது விரயம் செய்யாமல் தம் நண்பருக்கு உண்ணக் கொடுப்பதில் குற்றமில்லை' என்றும் (அது தொடர்பான ஆவணத்தில்) அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள். 🌼
 📖 صحيح البخاري 2764 📖

💐🌻🌼🌸🌹🌷💐

🌷ஷுஐப் உமரி பேருவளை🌷

23/05/2016
[24/05 6:23 am] 💐 🕋 Shuaib Umari 🕋💐:


💍முன்னோர் வாழ்வில்💍15

🌟🔷ஆதாரபூர்வமானது🔷🌟

🌹உமர் (ரழி)அவர்களிடம் கொஞ்சம் பணம் கொண்டு வரப்பட்டு பள்ளிவாசலில் வைக்கப்பட்டிருந்தது. அதை பிரட்டிப் பிரட்டிப் பார்த்துக் கொண்டிருந்த அவர்களின் கண்களால் கண்ணீர் கொட்ட ஆரம்பித்தது.🌹

🌼 அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப்  (ரழி) அவர்கள் " அமீருல் முஃமினீன் அவர்களே!  ஏன் அழுகின்றீர்கள்?
அல்லாஹ்வின் மீது ஆணையாக! இது  ஒரு சந்தோசப்பட வேண்டிய நேரம் தானே" என்று சொன்ன போது "🌳

🌱 அல்லாஹ்வின் மீது ஆணையாக! எந்த சமூகத்திற்கு இது கொடுக்கப்படுகிறதோ அவர்களுக்கிடையே பகைமையும் விரோதமும் ஏற்படும். என்று கூறினார்கள்.🌼🍑

📙الزهد لعبد الله بن أحمد 143
📙مصنف ابن أبي شيبة 8/147
📙تاريخ ابن عساكر 13/167 ، 13/126
📙الزهد لابن المبارك 265
📙الزهد لأبي داود 68

💐🌻🌼🌸🌹🌷💐

🌷ஷுஐப் உமரி பேருவளை🌷

24/05/2016
[02/06 6:12 pm] 💐 🕋 Shuaib Umari 🕋💐:


💍முன்னோர் வாழ்வில்💍16

🌟🔷ஆதாரபூர்வமானது🔷🌟

🌼உமர் (ரழி) அவர்கள் ஷாம் நாட்டுக்கு வந்த போது பலமான ஒரு குதிரையில் ஏறினார். அந்தக் குதிரை அவரை அசைத்ததால்,  அதிலிருந்து இறங்கி ஒரு ஒட்டகத்தில் ஏறிக்கொண்டார். வழியில் ஓரு ஆறு எதிர்ப்பட்ட போது ஒட்டகத்திலிருந்து இறங்கி, தனது காலணியை கையில் எடுத்துக் கொண்டு அவரும் தண்ணீரில் இறங்கினார்.🌼

💎"உலக மக்கள் பெரிதாக கருதக்கூடிய ஒரு விடயத்தை நீங்கள் செய்து விட்டீர்கள்" என்று அபூ உபைதா (ரழி) அவர்கள் கூறினார்கள்.💎

✏"வேறு யாராவது இதை சொல்லியிருந்தால்" என்று கூறியவராக அவருடைய நெஞ்சில் உமர் (ரழி) குத்தி விட்டு,

 🌷"மனிதர்களில் மிகவும் குறைந்தவர்களாகவும், இழிவானவர்களாகவும், பலவீனர்களாகவும் இருந்த உங்களை, அல்லாஹ் இஸ்லாத்தைக் கொண்டு கண்ணியப்படுத்தினான்.

 வேறெதைக் கொண்டாவது நீங்கள் கண்ணியத்தைத் தேடினால் அவன் உங்களை இழிவுபடுத்தி விடுவான். என்று கூறினார்கள்.🌷

📘الزهد لأبي داود 69
📘الزهد لابن المبارك 207
📘مصنف ابن ابي شيبة 8/146
📘المستدرك 1/61،62 - 3/82
📘حلية الأولياء 1/47

💐🌻🌼🌸🌹🌷💐

🌷ஷுஐப் உமரி பேருவளை🌷

02/06/2016
[04/06 5:17 pm] 💐 🕋 Shuaib Umari 🕋💐:


💍முன்னோர் வாழ்வில்💍17

🌟🔷ஆதாரபூர்வமானது🔷🌟

💎யஹ்யா இப்னு ஸஈத் (ரஹ்) கூறுகிறார்.💎
🌟"உமர் (ரழி) அவர்களுடன் நான் ஹஜ் செய்யச் சென்றேன். அவர் திரும்பி வரும் வரை (தனக்கு) கூடாரம் எதுவும் அமைக்கவில்லை." என்று அப்துல்லாஹ் இப்னு ஆமிர் (ரஹ்)  என்பவர் கூறிய போது, 🌟

🌼"(நிழல் பெற) என்ன செய்தார்?" என நான் கேட்டேன். அதற்கவர் "போர்வையாலும் விரிப்பாலுமே நிழல் பெற்றார்." என்று கூறினார்.🌼

📘الزهد لأبي داود 70
📘مصنف ابن أبي شيبة 8/153
📘طبقات ابن سعد 3/211

💐🌻🌼🌸🌹🌷💐

🌷ஷுஐப் உமரி பேருவளை🌷

04/06/2016


💍முன்னோர் வாழ்வில்💍18

⭐🔷ஸஹீஹ்⭐🔷

🌼உபைதுல்லாஹ் இப்னு அதீ என்பவர் கூறுகிறார். உமர் (ரழி) அவர்கள் மிம்பரில்,📣

🔮"ஒரு அடியான் பணிவாக நடந்து கொண்டால் அல்லாஹ் அவனை உயர்த்துகின்றான். அவன் தன்னைத் தாழ்ந்தவனாக நினைத்துக் கொண்டாலும் மக்களிடையே பெரியவனாக இருப்பான்.🎤

🔮ஒரு அடியான் அளவு கடந்து பெருமையடித்தால் அல்லாஹ் அவனை இழிவாக்கி விடுவான். அவன் தன்னைப் பெரியவனாக நினைத்துக் கொண்டாலும் மக்களுடைய பார்வையில் பன்றியை விடவும் இழிவானவனாக இருப்பான்.

 📢மக்களே! மக்களுக்கு அல்லாஹ் பற்றி வெறுப்பை உண்டாக்க வேண்டாம். என்று கூறினார்கள்.🔮

🌼அப்போது ஒருவர் "அல்லாஹ் உம்மை சீராக்குவானாக. அது எவ்வாறு ஏற்படும்? என்று கேட்டார். அதற்கு உமர் (ரழி),

🚈 " உங்களில் ஒருவர் இமாமாக நின்று நீண்ட நேரம் தொழுவிப்பதாலும், உபதேசிப்பதாலும் (மக்களுக்கு) வெறுப்பூட்டி விடுகின்றார். என்றார்கள்.🚇

📔مصنف ابن أبي شيبة 8/150
📔الزهد لأبي داود 73
📔تاريخ المدينة لابن شبة 2/750
📔تاريخ عمر بن الخطاب لابن الجوزي 177
📔مكارم الأخلاق للخرائطي

💐🌻🌼🌸🌹🌷💐

🌷ஷுஐப் உமரி பேருவளை🌷

08/06/2016


💍முன்னோர் வாழ்வில்💍19

⭐🔷ஸஹீஹ்⭐🔷

🍐அப்துல்லாஹ் இப்னுல் அர்கம் (ரழி) அவர்கள் உமர் (ரழி) அவர்களிடம்🌴
"அமீருல் முஃமினீன் அவர்களே! ஜலூலா யுத்தத்தின் போது கிடைத்த சில ஆபரணங்களும் தங்கம் வெள்ளிப் பாத்திரங்களும் இருக்கின்றன. அவற்றை என்ன செய்யலாம் என கட்டளையிடுகிறீர்" என்று கேட்டார். 🍐

🍒அதற்கவர் " நான் ஓய்வாக இருக்கக் கண்டால் என்னை அழைப்பீராக" என்றார்.
பின்பு ஒருநாள் அவரைக் கண்டு " இன்று ஓய்வாக இருக்கக் காண்கிறேனே" என்ற போது,🍓

🍍 ஈத்தஞ்சோலை ஒன்றை சுட்டிக்காட்டி " இந்த தோட்டத்தில் ஒரு விரிப்பை விரியுங்கள்" என்றார்.🌲
பின்னர் அந்த செல்வங்களை கொண்டு வரப்பட்டு அவற்றை அவ்விரிப்பில் கொட்டப்பட்டன. 🌱

🌸உமர் (ரழி) அவர்கள் " யா அல்லாஹ்! "பெண்கள், ஆண் பிள்ளைகள், தங்கம் வெள்ளிக் குவியல்கள் மனிதர்களுக்கு அலங்கரித்துக் காட்டப்பட்டுள்ளது" என்றும், 🍀
"உங்களுக்கு தவறிவிட்டதற்காக நீங்கள் கவலை கொள்ளாமல் இருக்கவும் உங்களுக்கு வழங்கியவற்றுக்காக ஆவணம் கொள்ளாதிருப்பதற்காகவும் விதியை ஏற்படுத்தினான்" என்றும் செல்வங்களைப் பற்றி நீ கூறியுள்ளாய். 🌹

🍑யா அல்லாஹ்! எங்களுக்கு அலங்கரித்தவற்றைக் கொண்டு நாம் சந்தோசப்படுவதைத் தவிர வேறு ஒன்றும் எங்களால் செய்ய முடியாது. யா அல்லாஹ் அதனை உரிய முறையில் செலவளிப்பதை வேண்டுவதோடு, அதன் தீங்குகளை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். என்று கூறினார்கள்.🍋

🍊அப்போது அங்கு கொண்டு வரப்பட்ட அப்துர் ரஹ்மான் இப்னு பஹிய்யா என்ற அவரது பிள்ளை
 " தந்தையே! எனக்கு ஒரு மோதிரம்💫 தாருங்களேன்." அதற்கவர் " உனது தாயிடம் சென்று கஞ்சி குடித்துக் கொள்" என்று சொல்லி அனுப்பினார். அந்தப் பிள்ளைக்கு எதுவும் கொடுக்கவில்லை.🍅

🌹🌹🌹🌹🌹🌹🌹
الزهد لأبي داود 74
تاريخ المدينة لابن شبة 699، 700/2
زوائد عبد الله بن أحمد 143
تاريخ دمشق 13/119


💐🌻🌼🌸🌹🌷💐

🌷ஷுஐப் உமரி பேருவளை🌷

11/06/2016



[25/06 7:57 pm] 💐 🕋 ShuaibFaiz (Umari) 🕋💐: 💍முன்னோர் வாழ்வில்💍20

       ⭐🔷ஸஹீஹ்⭐🔷

 🌸எளிமையை விரும்பிய       🌺உமர் (ரழி)🌸

🍏உமர் (ரழி) அவர்களுடன் ஷாமுக்குப் போனேன். தண்ணீர் இருக்கும் ஒரு தாழ்ந்த இடத்தை அடைந்ததும் அவர்கள்  இறங்கி தமது சுய தேவைகளை முடித்துவிட்டு வந்தார்கள். எனது போர்வையை பொதிகளுக்கிடையே வைத்தேன். அவர் எனது ஒட்டகையிலும் நான் அவரது ஒட்டகையிலும் ஏறினோம்.🍏

🍀சில மக்கள்  (இவரா) அமீருல் முஃமினீன்? என்று தங்களது மொழியில் ஏதோ பேசிக்கொண்டார்கள்.
"அல்லாஹ்வின் கோபத்திற்கு உள்ளானவர்களின் (ஆணவமான) நடையை நம்மிடம் காணாததால் எம்மை இழிவாக நினைக்கிறார்கள்." என்று உமர் (ரழி) கூறினார்கள்.🍀

🌱பின்பு அம்ரு இப்னுல் ஆஸையும் (ரழி) படைத் தளபதிகளையும் சந்தித்தார்கள்.
"அமீருல் முஃமினீனே! நீங்கள் இஸ்லாத்தை புதிதாக அறிந்து கொண்டவர்களிடம் வந்திருக்கிறீர்கள்." என்று அம்ரு (ரழி) கூறிய போது "அதற்கென்ன?" என்று கேட்டார். 🌱

🍇"வேறொரு வாகனத்தில் ஏறிக் கொள்ளுங்கள்" என்றார் அம்ரு (ரழி).
"உங்களது விருப்பம்" என்று கூறி, கொண்டு வரப்பட்ட (பலமிக்க) குதிரையில் ஏறினார். அக்குதிரை அவரை அங்குமிங்கும் அசைத்ததால் அதற்கும் அதன் முகத்திற்கும் அடித்தார். ஆனால் அது சென்று கொண்டே இருந்தது.
"அதில் அமீருல் முஃமினீன் என்ன குறையை கண்டுவிட்டார்!" என்று குதிரையோட்டி கூறியதும் அவர் இறங்கி விட்டார்.🍇

🍅"என்னை ஒரு ஷைத்தானின் மீதுதான் ஏற்றியிருக்கிறீர்கள். என்னை நான் பழித்தவனாகவே  அதிலிருந்து இறங்கினேன். எனது ஒட்டகத்தை கொண்டு வாருங்கள் ." என்றார்.
அதில் ஏறி மக்களை விட்டும் தனியாகச் சென்றார்.🍅

🌹பின்பு கறுப்பு கயிறினால் கடிவாளமிடப்பட்ட ஒரு ஒட்டகையில் வந்த  அபூ உபைதாவை சந்தித்தார்.
உமர் ரழி அவர்கள் அவரைக் கண்டவுடன் "சகோதரரே! உம்மை துன்யா மாற்றிவிடவில்லையே" என்று புன்முறுவலுடன் கூறினார்.🌹

🍓பின்னர் தனது ஆடையை கழுவி, ஒட்டுப் போடுவதற்காக அந்த இடத்தின் உரிமையாளரிடம் கொடுத்தார். அவர் அதையும் தயாரித்து புதிய ஆடையொன்றை அவருக்கு கொடுத்த போது, என்னுடைய ஆடையை தாருங்கள் என்று தமது ஆடையை அணிந்து கொண்டார்கள். 🍓

         🌺🌺🌺🌺🌺🌺

📘الزهد لأبي داود 77،78
📘تاريخ المدينة لابن شبة3/831،  3/823
📘الزهد لابن المبارك 207

💐🌻🌼🌸🌹🌷💐

🌷ஷுஐப் உமரி பேருவளை🌷

25/04/2016
[26/06 5:39 pm] 💐 🕋 ShuaibFaiz (Umari) 🕋💐: 💍முன்னோர் வாழ்வில்💍21

       ⭐🔷ஸஹீஹ்⭐🔷

    🌷இரவுத் தொழுகை🌷

🍅உமர் (ரழி) அவர்கள் இரவில் அல்லாஹ் நாடியளவு (அதிகம்) தொழுவார்கள். இரவின் இறுதிப் பகுதி வந்தால் தமது குடும்பத்தினரையும் தொழுவதற்காக எழுப்புவார்கள். பின்வரும் வசனத்தையும் ஓதிக் காட்டுவார்கள்.🍅

🌸"நபியே! உமது குடும்பத்தை தொழுமாறு ஏவுவீராக. அதன் மீது பொறுமையாக இருப்பீராக. உம்மிடம் நாம் ரிஸ்கை கேட்கவில்லை. நாமே உமக்கு ரிஸ்கை வழங்குகிறோம். நல்ல முடிவு இறையச்சத்திற்கு உரியதாகும்."🌸

📖அல்குர்ஆன் 20/132📖

        🌹🌹🌹🌹🌹🌹
📚موطأ الإمام مالك 119
📚مصنف عبد الرزاق 3/49
📚تفسير الطبري 16/170
📚الزهد لأبي داود 81

         🌺🌺🌺🌺🌺🌺

ஷுஐப் உமரி பேருவளை

26/06/2016
[28/06 2:27 pm] 💐 🕋 ShuaibFaiz (Umari) 🕋💐: 💍முன்னோர் வாழ்வில்💍22

       ⭐🔷ஸஹீஹ்⭐🔷

🌹உமர் (ரழி) அவர்கள் நபித்தோழர்களிடம் "பின்வரும் வசனம் எவ்விடயமாக இறங்கியதென்று நினைக்கிறீர்கள்? " என்று கேட்டார்.🌸

📖"உங்களில் ஒருவர் அவருக்கு பேரீச்ச மரங்களும், திராட்சைக் கொடிகளும்🍇 கொண்ட ஒரு தோட்டம் இருக்கிறது;🌴🌴 அதன் கீழே நீரோடைகள்🏊 ஓடுகின்றன; அதில் அவருக்கு எல்லா வகையான கனி வர்க்கங்களும் உள்ளன;🍎🍊🍋

🌸 (அப்பொழுது) அவருக்கு வயோதிபம்👳 வந்து விடுகிறது;அவருக்கு பலஹீனமான சிறு சந்ததிகள் இருக்கின்றன இந்நிலையில் நெருப்புடன் 🔥கூடிய ஒரு சூறாவளிக் காற்று,💨 அ(ந்தத் தோட்டத்)தை எரித்து(ச் சாம்பலாக்கி)விடுகின்றது அவர் (இதை) விரும்புவாரா?. நீங்கள் சிந்தனை செய்யும் பொருட்டு அல்லாஹ்(தன்) அத்தாட்சிகளை உங்களுக்குத் தெளிவாக விளக்குகின்றான்." 🌹

📖 سورةالبقرة 266 📖

🌺அதற்கவர்கள் " அல்லாஹ்வே மிக அறிந்தவன்" என்றனர்.🍊
 உமர் ரழி அவர்கள் கோபமாக
" தெரியும் என்று கூறுங்கள், அல்லது தெரியாது என்று கூறுங்கள் " என்ற போது, 🌺

🍎இப்னு அப்பாஸ் ரழி அவர்கள் " அமீருல் முஃமினீனே! அது பற்றி எனக்கு ஒரு விடயம் தோன்றுகிறது." என்றார்.🍊

🔦"சொல்லுங்கள். எனது சகோதரரின் மகனே! உம்மை நீர் தாழ்த்திக் கொள்ளாதீர்." என உமர் ரழி அவர்கள் கூறியபோது, 🔦

📬" அல்லாஹ் அமல் செய்வதற்கு உதாரணம் கூறியுள்ளான்" என்றார்.
" எந்த அமலுக்கு?" என வினவியதற்கு, "ஒரு அமலுக்கு" என்றார் இப்னு அப்பாஸ் ரழி அவர்கள்.📬

🍄அப்போது உமர் ரழி அவர்கள்  "(ஆம்). வசதியுள்ள ஒரு மனிதருக்கு உதாரணம் கூறுகிறான்.
அவர் (தனது செல்வத்தின் மூலம்) நல்லறங்கள் செய்கிறார். பின்னர் அல்லாஹ் (அவரை சோதிப்பதற்காக) ஷைத்தானை அனுப்புகிறான். (அவனது தாண்டுதலினால்) பாவங்களைச் செய்து தான் செய்த நன்மைகளை இழந்து விடுகிறான். என்று கூறினார்கள்.🍄

🌼🌼🌼🌼🌼🌼

📚صحيح البخاري 732
📚تفسير الطبري 3/51
📚الزهد لأبي داود 85،86،87

🌷🌷🌷🌷🌷

ஷுஐப் உமரி பேருவளை

28/06/2016
[11/07 8:09 pm] 💐 🕋 ShuaibFaiz (Umari) 🕋💐: 💍முன்னோர் வாழ்வில்💍23

       ⭐🔷ஸஹீஹ்⭐🔷

🍎யார் (பிறருக்கு) இரக்கம் காட்டவில்லையோ அவருக்கு இரக்கம் காட்டப்பட மாட்டாது.🍎

🍓யார் (பிறரை) மன்னிக்கவில்லையோ அவரை மன்னிக்கப்பட மாட்டாது.🍓

🌳 யார் விட்டுக் கொடுக்கவில்லையோ அவருக்கு விட்டுக்கொடுக்கப்பட மாட்டாது.

🍉 யார்(பாவங்களை விட்டும் தன்னை பாதுகாத்துக் கொள்ளவில்லையோ)  அவர் (பாவங்களை விட்டும் )  பாதுகாக்கப்பட மாட்டார்.🍉

என்று உமர் (ரழி) கூறினார்கள்.🌹

   ⛅⛅⛅⛅⛅
الأدب المفرد 371
الزهد لأبي داود 88
تاريخ عمر لابن الجوزي 181

🌷🌷🌷🌷🌷🌷

ஷுஐப் உமரி பேருவளை

11/07/2016
[15/07 2:08 pm] 💐 🕋 ShuaibFaiz (Umari) 🕋💐: 💍முன்னோர் வாழ்வில்💍23

            ⭐🔷ஸஹீஹ்⭐🔷

      🌹 இரகசிய வணக்கம் 🌹

( ஒருவர் தனக்கு மட்டுமே தெரிந்த, மற்றவர்களுக்கு ) மறைக்கப்பட்ட (இரகசியமான) ஒரு நல் அமலைச் செய்து வர முடியுமென்றால் அதை அவர் செய்யட்டும்.

என்று சுவனத்தைக் கொண்டு நன்மாறாயம் சொல்லப்பட்ட ஸுபைர் இப்னுல் அவ்வாம் (ரழி) அவர்கள் கூறினார்கள்.

      🌼🌼🌼🌼🌼🌼🌼

                    📚📚📚

📒الزهد لابن المبارك بزيادة المروزي 392
📗الزهد لوكيع 252
📘مصنف ابن أبي شيبة 8/174،193
📙الزهد لأحمد 179
📕الزهد لهناد 878
📓الزهد لأبي داود 119،120

   🌷🌷🌷🌷🌷🌷

ஷுஐப் உமரி பேருவளை

15/07/2016
[24/07 3:39 pm] 💐 🕋 ShuaibFaiz (Umari) 🕋💐: 💍முன்னோர் வாழ்வில்💍25

            ⭐🔷ஸஹீஹ்⭐🔷

✏அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழி அவர்கள் கூறினார்கள்.

🌹நல்லவரோ கெட்டவரோ, மரணம் இருவருக்குமே நலவாக  இருக்கின்றது.🌹

🌴"அல்லாஹ்விடம் இருப்பவை நல்லவர்களுக்கு சிறந்தது" என்று நல்லவர்கள் பெறும் (வெகுமதி) பற்றி அல்லாஹ் கூறுகிறான்.🌴
(ஆலு இம்ரான் 178)✏

🍇"அவர்களை நாம் தண்டிக்காமல் விட்டு வைப்பது தங்களுக்கு நல்லது என்று நிராகரிப்போர் எண்ண வேண்டாம். அவர்களைநாம் விட்டு வைப்பது அவர்கள் பாவங்களை அதிகரித்துக் கொள்வதற்கே. மேலும் அவர்களுக்கு இழிவு தரும் வேதனை உண்டு."
என்று பாவிகள் (மரணிப்பதில் அவர்களுக்குரிய நலவு) பற்றி அல்லாஹ் கூறுகிறான்.
(ஆலு இம்ரான் 198)🍇

          🍀🍀🍀🍀🍀🍀🍀

            📚📚📚📚📚📚

📗مصنف ابن أبي شيبة 35575
📘تفسير ابن أبي حاتم 846
📙الزهد لأبي داود 128
📔المعجم الكبير 9/151
📒تفسير الطبري 3/527
📓المستدرك للحاكم 3168
📕القدر للبيهقي 325

🌷🌷🌷🌷🌷🌷


ஷுஐப் உமரி பேருவளை

23/07/2016

  💍முன்னோர் வாழ்வில்💍26

            ⭐🔷ஸஹீஹ்⭐🔷

🍒நீங்கள் அதிகம் நீண்ட நேரம் நின்று வணங்குகிறீர்கள். நபியவர்களின் தோழர்களையும் விட அதிகமாக ஜிஹாதில் பங்கு பற்றுகிறீர்கள். என்றாலும் அவர்களுக்கு உங்களை விட அதிக கூலி இருக்கிறது. என்று இப்னு மஸ்ஊத்  (ரழி) கூறிய போது " ஏன் அபூ அப்திர் ரஹ்மானே? என்று மக்கள் கேட்டார்கள்.  🍇

🎓அதற்கவர் " அவர்கள் மிகவும் உலகப் பற்றில்லாதவர்களாகவும், மறுமை பற்றி மிகுந்த ஆர்வமுள்ளவர்களாகவும் இருந்தார்கள். 🎀

            ✒✒✒✒✒✒✒

                 📚📚📚📚📚

📗مصنف ابن أبي شيبة 8/162
📘الزهد لهناد 575
📙ذم الدنيا لابن أبي الدنيا 68، 176
📔المعجم الكبير 9/153
📒المستدرك للحاكم 4/315
📓حلية الأولياء 1/136
📕شعب الإيمان للبيهقي 7/10636
📑الزهد لابن المبارك 173

         🌹🌹🌹🌹🌹🌹🌹

ஷுஐப் உமரி பேருவளை

28/07/2016[04/08 6:25 pm] 💐 🕋 ShuaibFaiz (Umari) 🕋💐: 💍முன்னோர் வாழ்வில்💍27

            ⭐🔷ஸஹீஹ்⭐🔷

🌺சில மனிதர்கள் (மரங்கள் அற்ற) மேட்டு நிலங்களில் (உட்புறம் விசாலமான) குழிகளைத் தோண்டி,
மக்களுடன் பேசவோ பழகவோ மாட்டோம் என்று கூறி அங்கு கடும் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதாக இப்னு மஸ்ஊத்  (ரழி) அவர்களுக்கு கேள்விப்பட்ட போது, 🍓

🌺 "பதுங்குக் குழிகளில் இருந்து கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் இவர்களுக்கு என்ன நேர்ந்து விட்டது. அல்லாஹ்வின் மீது ஆணையாக நாம் அறிந்தவற்றை நீங்கள் அறிந்தால் அமல் செய்வதையே விட்டிருப்பீர்கள்." என்று கூறினார்கள். 🍑

              🍉🍉🍉🍉🍉

              📚📚📚📚📚

📙 الزهد لأبي داود 138

ஷுஐப் உமரி பேருவளை

04/08/2016
[04/08 8:43 pm] 💐 🕋 ShuaibFaiz (Umari) 🕋💐: 💍முன்னோர் வாழ்வில்💍28

            ⭐🔷ஸஹீஹ்⭐🔷

🌷அல்லாஹ் உமக்கு அளித்தவற்றைப் பொருந்திக் கொள். மனிதர்களில் நீ தான் மிகவும் செல்வந்தனாக இருப்பாய். 🌴

🌷அவன் உன் மீது கடமையாக்கியவற்றை நிறைவேற்று.  மக்களிலேயே மிகவும் வணக்கவாளியாக நீ இருப்பாய்.🌴

🌷 அவன் உன் மீது ஹராமாக்கியவற்றை தவிர்த்து விடு. மக்களிலேயே மிக பேணுதலுள்ளவனாக இருப்பாய்.🌴
என்று இப்னு மஸ்ஊத்  (ரழி) அவர்கள் கூறினார்கள்.🌺

          🌳🌳🌳🌳🌳🌳

          📚📚📚📚📚📚

📗الزهد لهناد 1032
📘شعب الإيمان 1/201 ، 6/8477
📙الزهد لأبي داود 139
📒الكامل لابن عدي 5/220


ஷுஐப் உமரி பேருவளை

04/08/2016

தொடர் 🌎 25 🍓🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷🍓

தொடர் 🌎 25

🍓🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷🍓

🔬ஆதாரபூர்வமானதும் 🔦 பலவீனமானதும் 🔬

📔 இட்டுக்கட்டப்பட்ட செய்தி 📔

🌹உங்களுடைய வீட்டில் அதிகமாக தொழுது வாருங்கள். அதனால் வீட்டில் நல்லவை அதிகமாகும்.🌹

🌴🍓🌱🌳

🌾இதை அனஸ்  (ரழி ) அவர்கள் வழியாக இமாம்களான

🌽அபூநுஐம் தனது أخبار أصبهان 1/170 இலும்,

🌽பைஹகீ தனது ஷுஅபுல் ஈமான் 8385 இலும்,

🌽இப்னுல் முகர்ரிப் தனது الأربعين 1/88  இலும்,

🌽அப்துல் கனீ அல் மக்திஸீ தனது  أخبار الصلاة  1/17 இலும்,

🌽இப்னு குதாமா தனது  المتحابين في الله 1/57  இலும்,

 🌽மேலும் ابن الأبار தனது முஃஜம் 1/273 இலும்,

பதிந்துள்ளனர்.🌾

💡🔬🔬🔬💡


🔬இந்த செய்தி அனஸ்  (ரழி ) மூலம் பல அறிவிப்பாளர் வரிசைகளில் கூடுதல் குறைத்தலுடன் அறிவிக்கப்பட்டுள்ளது.🔬

🍒இப்னு ஹஜர் அஸ்கலானீ ஒன்று சேர்த்த  வேறு ஒன்பது அறிவிப்பாளர் வரிசைகளுடன், மேலும் ஐந்து வழிகளை தான் சேர்த்துள்ளதாக இமாம் அல்பானி குறிப்பிட்டுள்ளார்.🍒

📖  سلسلة الأحاديث الضعيفة 7039 📖

🏆அத்தோடு,  அனைத்து அறிவிப்புகளையும் இணைத்து ஆதாரமாகக் கொள்ள முடியாத அளவுக்கு, ஒன்று மற்றதை விட மிக பலவீனமானதாக இருக்கின்றது. 🔵
இதன் பல அறிவிப்புகள், இந்த செய்திக்கு ஏதோ ஒரு அடிப்படை இருக்கிறது என்பதை உணர்த்துகிறது என்று இமாம் இப்னு ஹஜர் கூறிவிட்டு,   அவற்றை சரி காணாமல் அவை  அனைத்தும் மிக பலவீனமானவை என்று  கூறுகிறார்.🏆

📖سلسلة الأحاديث الضعيفة 3773 📖

✏இவ் அறிவிப்பில் இடம் பெறும் அலீ இப்னுல் ஜனத் علي بن الجند என்பவர் இட்டுக்கட்டுவார் என்று சந்தேகிக்கப்படக்கூடியவர்  ஆவார்.✏

📖 الضعيفة 7039 📖

🌱இவரை இமாம் உகைலீ "அறியப்படாதவர்" என்கிறார்.
📖 الضعفاء الكبير (3/224) 📖

🌱இமாம் புகாரி "منكر الحديث" என்கிறார்.
📖 التاريخ الكبير 2363📖

🌱"இவர் கூறும் அறிவிப்பாளர் வரிசைகளை ஹதீஸ் துறையில் ஆரம்ப நிலையில் உள்ள ஒருவர் கேட்டால் கூட அது புனையப்பட்டது என்பது தெளிவாகி விடும்.🔵
 பிரபலமான நம்பகமானவர்கள் சொன்னதாக மறுக்கத்தக்க விடயங்களை இவர் மாத்திரம் அறிவித்திருப்பதால் இவர் அறிப்பவற்றை ஆதாரமாகக் கொள்ள முடியாது" என்று இமாம் இப்னு ஹிப்பான் கூறுகிறார்.🎡

📖 المجروحين 682 📖

🌱இமாம்  அபூஹாதம் "ஆளும் அறியப்படாதவர், ஹதீஸும் இட்டுக்கட்டப்பட்டது" என்கிறார்.
📖  الجرح والتعديل 973 📖

🌱"இவர் அறிவிப்பவை பொய்யானவையாகும்" என்று இமாம் அபூ ஹாதம் கூறியதாக இமாம் தஹபீ கூறுகிறார்.

📖 ميزان الاعتدال 3/118 📖


🚥🚥🚥🚥

🎓எனவே, மறுக்கப்பட வேண்டிய நிலையில் உள்ள இவ்வறிவிப்பை ஓரங்கட்டிவிட்டு, வீடுகளில் தொழுவதை ஊக்குவிக்கும் ஸஹீஹான ஹதீஸ்களை நாம் கவனத்தில் கொள்வோம்.🎓

அல்லாஹு அஃலம்

ஷுஐப் உமரி

11/05/2016



தொடர் 🌎 26

🍓🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷🍓

🔬ஆதாரபூர்வமானதும் 🔦 பலவீனமானதும் 🔬

📔 இட்டுக்கட்டப்பட்ட செய்தி 📔

🍓"சுவர்க்கம் போகிறீரா? அல்லது இரண்டு ரக்அத்துகள் தொழுகிறீரா?" என்று என்னிடம்  கேட்கப்பட்டால்,
இரண்டு ரக்அத்துகள் தொழுவதற்கே நான் ஆசைப்படுவேன். ஏனென்றால்,  சொர்க்கம் செல்வதால் எனக்கு இன்பம் கிடைக்கிறது.
இரண்டு ரக்அத்துகள் தொழுவதால் எனது இறைவன் திருப்தி அடைகிறான்."🍓

💡🔬🔬🔬🔬💡

🚧 இந்த செய்தியில் பல விமர்சனங்கள் இருக்கின்றன.🚧

🍒 ஒன்று : 🍒

🌱 குறித்த அறிஞர் சொன்னதாக அரபு வாக்கியத்தில் இல்லை. உங்களுக்கு இவ்வாறு விருப்பம் கொடுக்கப்பட்டால் எதை தெரிவு செய்வீர்கள்? என்று மக்கள் கேட்டதற்கு பதிலாகச் சொன்னதாகவே வருகின்றது.🌱

🍒 இரண்டு : 🍒

🌱இதை சொன்ன அறிஞர் யாரென்று உறுதிப்படுத்தப்படவில்லை. ஏனென்றால் , சமூக வலைத்தளங்களில் அந்த அறிஞர் ஹஸன் அல் பஸரீ (ரஹ் ) என்று காணலாம்.🎡
சூபிகளிடம் முஹம்மத் இப்னு ஸீரீன் (ரஹ்) என்று காணலாம்.🎡
ஷீஆக்களிடம் அலீ (அலை)!!! என்று காணலாம்.🌸

🚫இவற்றில் எது சரி? ❌

🍒 மூன்று : 🍒

🌹இந்த மூன்று இமாம்கள் பற்றிய வரலாறுகளும், அவர்களின் உபதேங்களும் தொகுக்கப்பட்டுள்ள மூல நூற்களில் இச்செய்தியை காணமுடியவில்லை.🍇

🍒 நான்கு : 🍒

🌳இந்த அறிஞர்கள் சொர்க்கத்தை ஆசை வைத்து அமல் செய்ததாகவே அவர்களின் வரலாறுகளில் காணலாம்.🌳

🍒 ஐந்து : 🍒

🌹சொர்க்கத்தை ஆசை வைத்து நரகைப் பயந்து அமல் செய்யாமல்,  அல்லாஹ்வின் பொருத்தத்தை மாத்திரம் நாடி அமல் செய்ய வேண்டும் என்ற ஒரு கொள்கை சூபிகளிடம் இருக்கின்றது.🌸

🍇சொர்க்கம் என்பது வெறுமனே இன்பம் அனுபவிப்பது மட்டுமே என்ற எண்ணம் தான் இதற்கான காரணம்.🍇

🎓"உனது சொர்க்கத்தை ஆசைப்பட்டோ உனது நரகத்தைப் பயந்தோ உன்னை வணங்கவில்லை. மாறாக, உன்னைப் பார்க்கவும் சங்கைப் படுத்தவும் தான் வணங்குகிறேன்." என்பது அவர்களின் தாரக மந்திரம்.🎓

🌴அதை இமாம்கள் பெயரில் நியாயப்படுத்தும் முயற்சியாக இது இருக்கலாம்.🌱

🍒 ஆறாவது : 🍒

🌽தொழுகை,  சொர்க்கம் இவ்விரண்டும் தான் நாம் செய்யும் அமல்களுக்கு கூலி என்று இருந்தால்,  இவ்வாறு சொல்வது நியாயம் தான்.🌽

🌾ஆனால், தொழுகைக்கே சொர்க்கம் தான் கூலி என்றும், அங்கு தான் மேலதிகமாக அல்லாஹ்வைக் காணும் பாக்கியம் கிடைக்கும் எனும் போது எப்படி ஒருவர் இப்படி சிந்திக்க  அல்லது அதற்காக ஏங்க  முடியும்?🌾

🍒 ஏழாவது : 🍒

🔵ஒரு முஸ்லிம் செய்யும் அமல்களுக்கு கூலியாக சொர்க்கத்தையே வழங்குவதாக அல் குர்ஆனின் பல வசனங்களில் அல்லாஹ் கூறியுள்ளான்.
மேலதிகமாக, தனது தரிசனத்தை வழங்குவதாக வாக்களித்துள்ளான். 🔵

🍒 எட்டாவது : 🍒

🌿இந்த சிந்தனைத் தாக்கத்தினால் தனக்குத் தேவையானதை அல்லாஹ்விடம் கேட்பதையும் ஆபத்துகளை விட்டும் பாதுகாப்பு தேடுவதையும் ஏன் சொர்க்கத்தை கேட்பதையும் நகரத்தை விட்டு பாதுகாப்பு தேடுவதையும் கூட சிலர் விட்டு விட்ட வரலாறும் இருக்கின்றது. 🍀
🔥"நரகம் வலதுபுறம் வைக்கப்பட்டால் இடது புறம் மாற்றுமாறு கூட கேட்கக் கூடாது." என்றும் சிலர் கூறியுள்ளார்கள். 🔥

🌲சிலர் சாப்பிடுதல், குடித்தல், தூங்குதல், ஆடை அணிதல், திருமணம் போன்ற அவசியத் தேவைகளையும் மறந்து,
 பசி, இரவில் தூங்காமை, தனித்திருத்தல், யாருடனும் பேசாதிருத்தல்,  போன்றவைகளை இபாதத்துகளாக நினைத்து,
தம்மைத் தாமே வருத்திக் கொண்ட எத்தனையோ சூபி ஞானிகளின் வரலாறுகளை
நாம் அறிந்திருக்கிறோம். 🌲

🍀சிலர் சிறுநீரை பலநாட்கள் அடக்கிக் கொண்டு அதில் இறை பொருத்தத்தை தேடியிருக்கிறார்கள். 🍀

🍓சிலர் அடர்ந்த காடுகளிலும் பாலைவனங்களிலும் இறைவனையே தேடி பித்துப் பிடித்து அலைந்திருக்கிறார்கள்.🍓

🌿இச்சிந்தனை தான் ஏவல் விலக்கல் நல்லவன் கெட்டவன் என்ற வேறுபாடுகளுக்கு அப்பால் எல்லாவற்றையும் ஒரே பார்வையில் பார்க்கக்கூடிய ஹகீகத் என்று அவர்கள் சொல்லக்கூடிய மனநிலையை தோற்றுவித்திருக்கிறது எனலாம்.🌿

⚠ விளைவு?? ⚠

🌹தாங்கள் ஷரீஅத்தின் சட்டங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் என்று அவர்கள் செய்திருக்கும்  கூத்துகள் கொஞ்ச நஞ்சமா என்ன?!!🌸

🌷இது பற்றி இன்னும் விரிவாக இமாம் இப்னு  தைமிய்யா ( ரஹ்) அவர்களுடைய மஜ்மூஉ பதாவா مجموع فتاوى ابن  تيمية  678 -720 இல் காணலாம்.🌷

🚥🚥🚥🚥🚥

🌹மக்களை தொழுகைக்கு அழைப்பதற்கு இவ்வாறான இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை நாம் நாடவேண்டிய நிலையில் இஸ்லாம் எம்மை விடவில்லை.🌸

🌷ஸஹீஹான ஹதீஸ்களை மாத்திரம் முன்வைப்போம். அவற்றின் படி அமல் செய்வோம்.🌷

அல்லாஹுஅஃலம்

ஷுஐப் உமரி

12/05/2016


தொடர் 🌎 27

🍓🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷🍓

🔬ஆதாரபூர்வமானதும் 🔦 பலவீனமானதும் 🔬

📔 பலவீனமான செய்தி 📔

🍓நான் அபூ உமாமா  (ரழி) அவர்கள் மஸ்ஜிதில் இருக்கும் போது அவர்களிடம் சென்றேன்.

🌿"அபூ உமாமா அவர்களே! ஒருவர் நல்ல முறையில் வுழூச் செய்கிறார். இரு கைகளையும் முகத்தையும் கழுவி, தலையையும் காதுகளையும் மஸ்ஹ் செய்தார்.

 🌿பிறகு பர்ழான தொழுகயைத் தொழுதால், அன்றைய தினம் அவரது கால்கள், கைகள், காதுகள், கண்கள் மூலம் நடந்த பாவங்களையும், தவறானவற்றை செய்ய நினைத்ததற்கான பாவங்களையும் அல்லாஹ் மன்னித்து விடுவான்."

🌿 என்று நபியவர்கள் சொன்னதை நீங்கள் கேட்டதாக ஒரு மனிதர் என்னிடம் கூறினார். என்றேன்.

🌿அப்போது அவர் அல்லாஹ்வின் மீது ஆணையாக! இதை நான் பல தடவைகள் நபியவர்களிடமிருந்து கேட்டிருக்கிறேன். என்றார்.🍓

  💡🔬🔬🔬💡

இதை அபூ முஸ்லிம் என்பவர் கூறியதாக இமாம்களான

🌾அஹ்மத் தனது முஸ்னத் 22272 இலும்,

🌾தபரானீ தனது அல் கபீர் 8032 இலும்,

🌾இப்னு ஷாஹீன் தனது தர்கீப் 28 இலும்,

🌾பைஹகீ தனது ஷுஅப் 2481 இலும்,

🌾இப்னு அஸாகிர் தனது தாரீக் 8834 இலும்,

பதிந்துள்ளனர்.

   🚥🚥🚥🚥🚥

🔷இதை அறிவிக்கும் அபூ முஸ்லிம் என்பவர் பற்றிய தகவல்களை யாரும் கூறவில்லை. என்று இமாம் ஹைஸமீ   கூறுகிறார்.🔷
📖 مجمع الزوائد 1125, 1666📖

💎இமாம்களான புகாரி தனது தாரீக் 629 இலும்,

💎இப்னு அபீஹாதம் தனது அல் ஜர்ஹ் 2178 இலும் இவரின் நம்பகத்தன்மை பற்றி எதுவும் கூறவில்லை.🔬

💎யாரென்று அறியப்படாதவரையும் நம்பகமானவர் என்று சொல்லும் இமாம் இப்னு ஹிப்பான் கூட இவரை " நம்பகமானவர்கள் " என்ற தனது கிதாபில் சேர்க்கவில்லை. என்று இமாம் அல்பானி கூறுகிறார்.
📖 سلسلة الأحاديث الضعيفة 6711 📖

🍀அத்தோடு, " மனதால் எண்ணிய பாவங்களையும் அல்லாஹ் மன்னித்து விடுவான்."  என்பது வேறு ஸஹீஹான ஹதீஸ்களுக்கு முரண்படுகிறது.🍀

🌹பாவம் செய்ய நினைத்து அதை செய்யாவிட்டால் அல்லாஹ் குற்றம் பிடிக்க மாட்டான். என்று ஸஹீஹான ஹதீஸ்களில் காணலாம்.🌹

💎⭐💎⭐💎⭐

🌷தொழுகையின் பால் மக்களை ஆர்வப்படுத்த ஸஹீஹான ஹதீஸ்களை முற்படுத்துவோம். 🌷

அல்லாஹு அஃலம்

ஷுஐப் உமரி

14/05/2016

தொடர் 🌎 28

🍓🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷🍓

🔬ஆதாரபூர்வமானதும் 🔦 பலவீனமானதும் 🔬

📔இட்டுக்கட்டப்பட்ட செய்தி 📔

🔴இமாம் அபூஹனீபா  (ரஹ்) அவர்கள் வுழூ செய்யும் போது வடியும் நீரைப் பார்த்து, அதனால் எந்தப் பாவம் நீங்குகிறது என்று அறிந்து கொள்வார்கள்.🔴

💡🔬🔬🔬💡

🍀இந்த செய்தியை அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஃரானீ என்பவர் தனது ஷைகான அலீ அல்கவாஸ் சொன்னதாக தனது الميزان   அல்மீஸான் 333 இல் பதிவு செய்துள்ளார்.🍀

🌿வுழூ செய்பவர் உறுப்புக்களை கழுவும்போது அவ்வுறுப்புக்களால் அவர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என்ற ஹதீஸின் படி
- பொதுவாக   அசுத்தத்தை நீக்கிய தண்ணீர் நஜீஸாகி விடுவது போன்று -
பாவங்கள் என்ற அசுத்தங்களைப் போக்கிய அந்தத் தண்ணீரும் அசுத்தமாகி விடுகிறது. எனவே ஒருவர் வுழூ செய்த தண்ணீரை இன்னொருவர் பாவிக்க முடியாது. என்ற இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்களின் கருத்து ஹனபி கிதாபுகளில் காணலாம்.🌿


🌴கஷ்பு எனும் அகப்பார்வையின் மூலம் பாவங்கள் கழுவப்படுவதைக் கண்டதால் தான் அத்தண்ணீர் நஜீஸாகின்றதென்று  கூறியுள்ளார்கள் என்று கற்பனை பண்ணி அவர் மீது இப்படியொரு அபாண்டத்தை சுமத்தி விட்டார்கள்.🌴

🌏கூபாவிலுள்ள ஒரு  பள்ளிவாசலுக்குச் சென்ற போது அங்கு வுழூச் செய்து கொண்டிருந்த சிலரைப் பார்த்து இன்னின்ன பாவங்களை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள். என்று கூறியதாகவும்,  பின்னர் இதன் மூலம் மற்றவர்களுடைய குறைகள் தமக்குத் தெரிவதால் அகப்பார்வையை நீக்கி விடுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள் என்றும் அலீ அல்கவாஸ் கூறுகிறார். 🌏
📖 الميزان للشعراني 333 - 338 📖

🍒கஷ்பு எனும் அகப்பார்வை இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்களுக்கு இருந்தது உண்மையானால் அவர்களை விட பலமடங்கு உயர்வான மதிப்புடைய நபித்தோழர்களுக்கும் அந்த ஞானம் இருந்திருக்க வேண்டும். ஆனால் நபித்தோழர்களில் எவருமே எந்தெந்த பாவங்கள் கழுவப்படுகின்றன என்பதை அறிந்திருந்தார்கள் என்று காண முடியவில்லை. 🍒

🌹நபித்தோழர்கள் கஷ்பு எனும் ஞானத்தின் வாயிலாக இதை அறிந்திருப்பார்களானால் பாவங்கள் கழுவப்படுகின்றன, என்ற விபரத்தை நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களுக்குக் கூற வேண்டிய அவசியம் இருந்திருக்காது.🌹

🍓நபித்தோழர்களை விட்டு விடுவோம். நபி (ஸல்) அவர்கள் முன்னிலையில் எத்தனையோ நபித்தோழர்கள் உலூச் செய்திருக்கிறார்கள். அது போன்ற சந்தர்ப்பங்களில் இவரது இந்தப் பாவம் கழுவப்படுகின்றது என்று நபி (ஸல்) கூறியதுண்டா? நிச்சயமாக இல்லை. 🍓

🌸மறைவான ஞானம் இறைவனுக்கு மாத்திரமே உரியது என்பதில் எவருக்குமே மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஒருவன் எவருக்கும் தெரியாமல் ஒரு பாவம் செய்கின்றான் என்றால் அதுபாவம் செய்தவனுக்கும் இறைவனுக்கும் மட்டும் தெரிந்த விஷயமாகும். இவர்கள் கற்பனை செய்து கொண்டிருக்கும் கஷ்பு என்பது, அந்த ஞானத்தில் மற்றவர்களுக்கு பங்கு போட்டுக் கொடுக்கும் விதமாக அமைந்துள்ளது. 🍓

🔮கஷ்பு என்னும் ஞானம் (?) பெற்றவர்கள் இறைவனுக்கு மாத்திரமே தெரிந்த இந்த இரகசியத்தையும் அறிந்து கொள்வார்கள் என்ற நச்சுக் கருத்து இதன் மூலம் இஸ்லாத்திற்குள் நுழைக்கப்படுவதை சிந்திக்கும் போது உணரலாம்.🔮

🔦🔦மற்றொரு வழியிலும் நாம் சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கின்றோம்.
 வுழூச் செய்யும்போது எந்தெந்த பாவங்கள் கழுவப்படுகின்றன என்பதை அபூஹனீபா (ரஹ்) அவர்கள் கண்டதை அவர்களைத் தவிர மற்ற எவரும் அறிந்து கொள்ள முடியாது.🚪
🎊 அபூஹனீபா (ரஹ்) அவர்களே தன்னைப் பற்றி இவ்வாறு கூறியிருந்தால் மட்டுமே மற்றவர்களால் அதை அறிய முடியும்.🎀
அபூஹனீபா (ரஹ்) அவர்கள் எந்த நூலிலாவது தன்னைப் பற்றி இவ்வாறு எழுதியுள்ளார்களார்களா? என்றால் நிச்சயமாக இல்லை. அல்லது இவர்கள் தமது மாணவர்களில் எவரிடமாவது கூறி அந்த மாணவர்களாவது எழுதி வைத்திருக்கின்றார்களா? அதுவும் இல்லை.🔦🔦
🌐http://frtj.net/2012/05/blog-post_30-3.html🌐

🌷ஹிஜ்ரி 150  இல் மரணித்த இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்களுக்கு மட்டுமே தெரிந்திருக்க வேண்டிய இந்த விஷயம் - அவர்கள் கூறாமல் மற்றவர்கள் அறிந்து கொள்ள முடியாத இந்த விஷயம் - ஹிஜ்ரீ ஒன்பதுகளில் வாழ்ந்த அலீ அல்கவாஸ் என்பவருக்கு எப்படித் தெரிந்தது? 🌷

🚥🚥🚥🚥🚥

💐இப்படிப்பட்ட பொய்யான சம்பவங்களை இமாம்களின் பெயரால் சொல்லி மக்களை தொழுகைக்கு அழைப்பதை விட்டு  ஸஹீஹான ஹதீஸ்களை முற்படுத்துவோம்.💐

அல்லாஹு அஃலம்

ஷுஐப் உமரி

16/05/2016


தொடர் 🌎 29

🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷

           🔬 🔦🔦🔦 🔬

📔 ஸஹீஹான ஹதீஸ் 📔

🌹 (தொழுகையினால் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என்று எண்ணி யாரும் பாவங்களைச் செய்யத் துணிந்து) ஏமாந்து விட வேண்டாம். என்று நபி ( ஸல்) கூறினார்கள். 🌹

🌼 இது  உஸ்மான் (ரழி)அவர்கள் நபியவர்களின் வுழூ பற்றி தெளிவுபடுத்தும் ஹதீஸின் இறுதிப் பகுதியாகும்.🌼

💐 ஸஹீஹுல் புகாரியில் 6433 இலும், வேறு பல கிதாபுகளிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.💐

🌟அல்லாஹு அஃலம்🌟

🌷ஷுஐப் உமரி🌷

17/05/2016

தொடர் 🌎 30

🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷

           🔬 🔦🔦🔦 🔬

📔 பலவீனமான அறிவிப்பாளர் வரிசை உடையது 📔

🍎அபூஹுரைரா  ( ரழி ) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

🌾குஸாஆ கோத்திரத்தைச் சேர்ந்த இருவர் ஒரே நேரத்தில் முஸ்லிமானார்கள். ஒருவர் ஷஹீதாகி விட்டார். அடுத்தவர் ஒரு வருடத்திற்குப் பிறகு மரணமடைந்தார். 🌾

🌹தல்ஹா (ரழி) அவர்கள் கூறுகிறார்கள். "இறுதியில்  மரணித்தவர் ஷஹீதுக்கு முன்னரே சொர்க்கத்தில் நுழைந்ததாக கனவு கண்டேன். இது பெரும் ஆச்சரியத்தை அளித்தது. 🌹

🎀இது பற்றி நானோ வேறு யாரோ நபி (ஸல்) அவர்களிடம் விளக்கம் கேட்ட போது "ஒரு வருடத்திற்குப் பின்னர் மரணித்தவர் செய்த அதிகமான நன்மைகளை நீ கவனிக்கவில்லையா? ரமழான் மாதம் முழுவதும் நோன்பு வைத்திருக்கிறார். 🎀
🌴ஒரு வருடத்தில் ஆறாயிரம் ரக்அத்துகளும் இன்னும் எத்தனையோ ரக்அத்துகளும்  (ஷஹீதை விட) அதிகமாக தொழுதிருக்கிறார்." என்று பதில் கூறினார்கள்.🍎

🚥🚥🚥🚥🚥
🍒இந்த செய்தியை அபூஸலமா இப்னு அப்துர் ரஹ்மான் என்பவர் அபூஹுரைரா ( ரழி) இடமிருந்து அறிவிக்கிறார்.🍒

🔬💡இதில் சில குறைகள் காணப்படுகின்றன.

🔦முதலாவது🔦

🍀அபூஸலமாவிடமிருந்து அறிவிக்கும் முஹம்மத் இப்னு அம்ர் என்பவர் 🍀

🌻சிலரிடம் இது தல்ஹாவிடமிருந்து அபூஸலமா அறிவித்ததாகவும்,🌻

📚مسند الشاشي 27 ، مسند ابي يعلى 648
الأحاديث المختارة 826 ، 📚أحمد 8400
الزهد للبيهقي 632 ،الفوائد المنتقاة للخلعي 827 ، شرح مشكل الآثار 2307📚

 ✏இன்னும் சிலரிடம் அபூஸலமா தான் இதைச் சொன்னார் என்றும்,✏
📖شرح مشكل الآثار 2308📖

 🔮இன்னும் சிலரிடம் அபூஸலமா அபூஹுரைராவிடமிருந்து அறிவிப்பதாகவும் கூறி, 🔮
📚أحمد 8399 ، البزار 929 ، امالي الشجري 1251 ، تاريخ أصبهان 2/220📚

தனக்குத் தானே முரண்படுகிறார். 🔬💡

🔧இதில் அபூஹுரைரா  ( ரழி ) கூறப்பட்டிருப்பது தவறு என்று இமாம் தாரகுத்னீ கூறுகிறார்🔧
📖العلل 518📖

✂இதனால் தான் இவருடைய ஹதீஸ்களை மக்கள் தவிர்ந்து கொண்டார்கள் என்று இமாம் இப்னு மயீன் கூறுகிறார்.✂
 📖تهذيب الكمال 6188📖

💊இமாம்களான புகாரி முஸ்லிம் ஆகியோர் வேறு அறிவிப்பார்கள் மூலம் அறிவிக்கப்பட்ட இவரது ஹதீஸ்களையே தமது கிதாபுகளில் பதிந்துள்ளனர்.  என்று இமாம் இப்னு ஹஜர் கூறுகிறார் 💊
📖هدي الساري 1/441📖


🔦இரண்டாவது🔦

🔬அபூஸலமாவிடமிருந்து அறிவிக்கும் மற்றையவரான முஹம்மத் இப்னு இப்ராஹீம் என்பவரும் 🍀

🍑சிலரிடம் அபூஸலமா தான் இதைச் சொன்னதாகவும் 🍑
📖أحمد 1389 ، الأحاديث المختارة 827📖

🍒இன்னும் சிலரிடம் அபூஸலமா தல்ஹாவிடமிருந்து அறிவிப்பதாகவும்🍒
📚أحمد 1403 ، ابن ماجه 3925 ، ابن حبان 2982، 📚البيهقي 6530 ، المختارة 828، شرح مشكل الآثار 2309/2310 📚

🌻இன்னும் சிலரிடம் தான் தல்ஹாவிடமிருந்து அறிவிப்பதாகவும்🌻
📖مسند الشاشي 28📖

 தனக்குத் தானே முரணாகக் கூறியுள்ளார். 🔬

⚠இவர் நம்பகமானவராக இருந்தாலும் மறுக்கப்படக்கூடிய சில விடயங்களை அறிவித்துள்ளார் என்று இமாம் அஹ்மத் கூறியுள்ளார்.
📖تهذيب الكمال 5691📖

🎓இந்த செய்தியும் அவ்வாறானதாக இருக்க வாய்ப்புள்ளது.
ஏனென்றால், இந்த சம்பவம் ஸஹீஹாக இடம் பெற்றுள்ள   ஏனைய அறிவிப்புகளில் கனவு விவகாரமோ, தொழுகைகளின் எண்ணிக்கையோ, ஒரு வருடம் என்பதோ கூறப்படவில்லை.🎓

🔦மூன்றாவது 🔦

♻எல்லாவற்றிற்கும் மேலாக இதை அறிவிக்கும் அபூஸலமா இச்சம்பவம் நிகழும் போது இருக்கவுமில்லை. 🌹

✏இமாம்களான இப்னுல் மதீனீ, இப்னு மஈன், பஸ்ஸார் ஆகியோர் கூறுவது போன்று தல்ஹாவிடமிருந்து அபூஸலமா எதையும் கேட்டு அறிவிக்கவுமில்லை. 🌻
📚جامع التحصيل 1380 ، مصباح الزجاجة البوصيري 3/218📚

⚠எனவே அவர் தல்ஹாவிடமிருந்து அறிவிப்பவை தொடர்பு துண்டிக்கப்பட்டவையாகும் என்று இமாம் தஹபீ மற்றும் இமாம் பூஸீரீ கூறுகின்றார்கள்.⚠

📚سير أعلام النبلاء 4/287 ، مصباح الزجاجة 4/158📚

💡💡💡💡💡

🌟எனவே இது பலவீனமான அறிவிப்பாகும். இதைத் தவிர்த்து மற்றைய ஸஹீஹான அறிவிப்புகளை கவனத்தில் கொள்வோம். அடுத்த தொடரில் அதனுடைய விபரத்தைப் பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்.🌟

அல்லாஹுஅஃலம்

ஷுஐப் உமரி

19/05/2016

தொடர் 🌎 31

🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷

           🔬 🔦🔦🔦 🔬

📔 ஆதாரபூர்வமானது📔

🍑நபியவர்களின் காலத்தில் இரண்டு சகோதரர்கள் இருந்தார்கள். அவர்களில் மிக நல்லவர் முதலில் மரணித்து விட்டார். மற்றவர் நாற்பது நாட்களுக்குப் பிறகு மரணமடைந்தார். 🍑

🌳முதலில் மரணித்தவரைப் பற்றி நபியவர்களிடம் மக்கள்  புகழ்ந்த போது, " மற்றவர் தொழுது கொண்டு தானே இருந்தார். என்று கேட்டதற்கு, " ஆம். ஆனால் அவர் சாதாரணமானவராகத் தான் இருந்தார்." என்றார்கள்.🌳

🌻(  அந்த நாற்பது நாட்களில்) அவர் தொழுத தொழுகை எந்த நிலைக்கு உயர்த்தி இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?🌼

🌹 தொழுகை ஒருவரது வீட்டுக்குப் பக்கத்தில் ஓடக்கூடிய ஒரு ஆழமான ஆறு போன்றதாகும். அதில் அவர் ஒரு நாளைக்கு ஐந்து வேளை குளித்தால் அவருடைய உடலில் அழுக்கு இருக்குமா?
என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.🌻

💡💡💡💡💡

இந்த ஹதீஸை இமாம்களான

🌷அஹ்மத் 1534 இலும்,

🌷தௌரகீ  الدورقي தனது முஸ்னத் 40 இலும்,

🌷இப்னு ஹுஸைமா 310 இலும்,

🌷தபரானீ தனது அல் அவ்ஸத் 6476 இலும்,

🌷இப்னு ஷாஹீன் தனது அத்தர்கீப் 50 இலும்,

🌷அபூ அஹ்மத் அல் ஹாகிம் தனது அவாலீ العوالي   52 இலும்,

🌷ஹாகிம் தனது முஸ்தத்ரக் 718 இலும்,

🌷பைஹகீ தனது ஷுஅப் 2557 இலும்,

ஆகியோர் பதிந்துள்ளனர்.

🌱🍃🌱🍃🌱🍃🌱🍃

இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறும் மஹ்ரமா مخرمة بن بكير என்பவர் தனது தந்தை புகைரிடம் நேரடியாக கேட்டு அறிவிக்காமல் அவர் எழுதி வைத்த கிதாபுகளில் இருந்து அறிவிக்கிறார்.
📖 تهذيب الكمال 📖

🌸இமாம் மாலிக் உடைய அறிவிப்பில் அவர் முஸ்லிமாகத் தானே இருந்தார்? என்று இடம் பெற்றுள்ளது.
இமாம் மாலிக் அவர்கள் நான் கேள்விப்பட்டேன் என்று அறிவித்துள்ளார்.🌸

🌼இமாம் ஹாகிம் இந்த ஹதீஸை ஸஹீஹானது என்று கூறியுள்ளதை  இமாம் தஹபீ சரி கண்டுள்ளார்.🌼
இமாம் அல்பானி அவர்களும் இதை ஸஹீஹானது என்று கூறியுள்ளார் 🌷

🌟அல்லாஹு அஃலம்🌟

🌼ஷுஐப் உமரி பேருவளை🌼

25/05/2016


தொடர் 🌎 32
🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷

           🔬 🔦🔦🔦 🔬

📔 இட்டுக்கட்டப்பட்டது 📔

🌹ஒரு நாள் ரமலான் பிறை தெரிந்த போது "ரமலான் மாதத்தில் உள்ளதை அடியார்கள் அறிந்தால் வருடம் முழுவதும் ரமலானாக இருக்காதா? என்று ஆசைபடுவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.🌹

🔬இந்த செய்தியை அபூமஸ்வூத் (ரலி) வழியாக இமாம்களான

🌷இப்னு ஹுஸைமா 1886 இலும்,
🌷அவர் வழியாக பைஹகீ தனது ஷுஅபுல் ஈமான் 3361இலும் , பழாஇலுல் அவ்காத் 42 இலும்,
🌷ஷஜரீ தனது அமாலீ 1379, 1477, 1569 இலும்,

🔬இப்னு மஸ்ஊத்  (ரழி) வழியாக இமாம்களான
🌷அபூயஃலா 5273 இலும்,
🌷இப்னு அபித்துன்யா தனது பழாஇலு ரமழான் 22
🌷அத்தர்கீப் வத்தர்ஹீப் 1765 இல் قوام السنة வும்,
🌷இப்னு ஷாஹீன் தனது பழாஇலு ரமழான் 18 இலும்,
🌷அல்மக்திஸீ தனது பழாஇலு ரமழான் 09 இலும்,
🌷அபூநுஐம் தனது மஃரிபதுஸ் ஸஹாபா 7091 இலும்,
🌷அபூதாஹிர் தனது துயூரிய்யாத் 983 இலும் பதிந்துள்ளனர்.

🚥🚥🚥
இதன் அறிவிப்பாளர் வரிசையில் ஜரீர் பின் அய்யூப் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் என்று இமாம்களான

⛳இப்னு மஈன்تاريخ ابن معين2644  ،1434
⛳இமாம் பகவீ   معجم الصحابة 2/41
⛳இமாம் தஹபீ المقتنى في سرد الكنى1/430  இலும், பிரபலமான பலவீனமானவர் என்று ميزان الاعتدال 1/391இலும் ,
⛳இமாம் அபூஸுர்ஆ الضعفاء2/419
இலும்,
⛳இமாம் பைஹகீ அல் குப்ரா 3361 இலும்,
⛳இமாம் ஹைஸமீ தனது மஜமஉஸ் ஸவாஇத் 4781 இலும்,
குறிப்பிடுகிறார்கள்.

🌷இமாம்களான புகாரி، அபூஹாதம், அபூஸுர்ஆ, உகைலீ منكر الحديث  என்கிறார்கள்
التاريخ الأوسط 1964 ،  التاريخ الكبير 2237 ، الضعفاء الصغير 51 ، الجرح والتعديل 2/504, علل الترمذي 1/389,  الضعفاء للعقيلي 242،

🌼நான் யாரைப்பற்றியாவது منكر الحديث என்று கூறினால் அவர் வழியாக அறிவிக்கக் கூடாது என்று இமாம் புகாரி கூறியதாக இமாம் தஹபீ கூறுகிறார்.🌼
 ميزان الاعتدال 1/6

🌟அதிகம் தவறு விடக்கூடியவர். இவர் ஹதீஸ்களை இட்டுக்கட்டக் கூடியவர் என்று இமாம் அபூநுஐம், கூறுகிறார்.🌟
المجروحين  194

🌟இமாம்களான வகீஃ,  அபூநுஐம் இவர் இட்டுக்கட்டக் கூடியவர் என்கிறார்கள். இமாம் இப்னு மஈன் பலவீனமானவர் என்கிறார். புகாரி அபூஸுர்ஆ منكرالحديث என்கிறார்கள். நஸாயீ, தாரகுத்னீ ஆகியோர் ஹதீஸ் கலையில் ஓரங்கட்டப்பட்டவர் என்கிறார்கள்.
الضعفاء والمتروكون لابن الجوزي 647

💎ஹதீஸ் கலையில் ஓரங்கட்டப்பட்டவர் என்கிறார் இமாம் அபூஸுர்ஆ மற்றும் இப்னுல் கைஸரானீ .💎
 المغني في الضعفاء 1107 ، ذخيرة الحفاظ

✏இமாம் ஸிப்த் இப்னுல் அஜமீ தனது  الكشف الحثيث عمن رمي بوضع الحديث  185  இல் இவரை பதிந்துள்ளார். ✏

🚥இமாம்களான இப்னுல் ஜௌஸி, முன்திரீ, ஷௌகானீ, அல்பானீ ஆகியோர் இது இட்டுக்கட்டப்பட்டசெய்தி  என்கிறார்கள். 🚥
الموضوعات لابن الجوزي 2/189، الترغيب والترهيب للمنذري 2/72، الفوائد المجموعة 1/88، ضعيف الترغيب 596

🌼🌼🌼🌼🌼
இதே செய்தியை இமாம் தபரானீ தனது அல் கபீர் 967 இல் வேறொரு அறிவிப்பாளர் வரிசையில் பதிந்துள்ளார்.🌹

🔬இதில் இடம்பெறும் ஹய்யாஜ் என்பவர் பலவீனமானவர் என்று அறிஞர்கள் கூறியிருப்பதை இமாம் மிஸ்ஸீ தஹ்தீபுல் கமாலில் 6637 பதிவு செய்துள்ளார்.🔬

தொடரும் அறிவிப்பு

 அப்போது குஸாஆ குலத்தைச் சார்ந்த ஒருவர் அல்லாஹ்வின் தூதரே! (இது தொடர்பாக) விளக்குங்கள் என்றார். அதற்கு, சொர்க்கம் அந்த வருடத்தின் ஆரம்பத்திலிருந்து அடுத்தவருடம் வரை அலங்கரிக்கப்படும். ரமலான் மாதத்தின் முதல்நாள் வரும் போது அர்ஷின் கீழிலிருந்து காற்று அடிக்கும் சொர்க்கத்தின் இலைகள் அசையும். இதை ஹூருல் ஈன்கள் பார்ப்பார்கள். இறைவா! இந்த மாதத்தில் உன் அடியார்களில் எங்களுக்கு துணையாக்குவாயாக! அவர்கள் மூலம் எங்களுக்கு கண் குளிர்ச்சியும் எங்கள் மூலம் அவர்களுக்கு கண் குளிர்ச்சியும் ஏற்படுத்துவாயாக! என்று கூறுவார்கள்.
யார் ரமலான் மாதத்தில் ஒரு நாள் நோன்பு நோற்பாரோ அவருக்கு கூடாரங்களில் தங்க வைக்கப்பட்ட ஹூர் எனும் கன்னியராவர். (அல்குர்ஆன் 55:72) என்று அல்லாஹ் வர்ணித்த முத்தாலான கூடாரத்தில் ஹூர் எனும் கன்னியரை அல்லாஹ் மனைவியாக்குவான். அவர்களில் உள்ள பெண்களில் ஒவ்வொருவருக்கும் எழுபது மேலாடைகள் இருக்கும். ஒன்று மற்றொரு நிறத்தில் இருக்காது. எழுபது நிற நறுமணங்கள் அவர்களுக்கு வழங்கப்படும் ஒன்று மற்றொரு நிறத்தில் இருக்காது. (இதைப்போன்று) ஒரு வாசனை மற்றொரு நிறத்தில் அமைந்திருக்காது.
அப்பெண்களில் ஒவ்வொருவருக்கும் அவர்களின் தேவையை நிறைவு செய்ய எழுபதாயிரம் வேலைக்காரப் பெண்கள் இருப்பார்கள். ஒவ்வொரு வேலைக்காரப் பெண்ணிடமும் தங்கத்தாலான தட்டு இருக்கும். அதில் உணவுகள் இருக்கும். அதில் கடைசி கவள உணவின் சுவை ஆரம்பத்தின் சுவையைப் போன்று இருக்காது. ஒவ்வொரு கட்டிலிலும் எழுபது விரிப்புகள் இருக்கும். அதன் உட்பகுதி இஸ்தபரக் என்ற பட்டுவகையைச் சார்ந்திருக்கும்... என்று நீண்டு செல்கிறது.

 ஷுஐப் உமரி
அல்லாஹு அஃலம்
06/01/2016



தொடர் 🌎 33
🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷ரமழான் 02

           🔬 🔦🔦🔦 🔬

📔 ஆதாரபூர்வமானது 📔

🍓" பொறுமையின் மாதத்தில் நோன்பு நோற்பதும், ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பதும் உள்ளத்தின் அழுக்குகளையும் ஊசலாட்டங்களையும் நீக்கிவிடும்."
என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.🍓

🚥🚥🚥🚥🚥

0⃣1⃣
🍒இதை النمر بن تولب  என்ற கிராமப்புற ஸஹாபி அறிவித்ததாக பின்வரும் கிரந்தங்களில் ஒரு சம்பவத்துடன்  பதிவாகியுள்ளது.🍒

📚مصنف عبد الرزاق 7877 ، 📙الأموال لابن أبي عبيد 30 ، 📘طبقات ابن سعد 1/213 ، 📓مسند أحمد 20737 ،20738 ،23070، 📔الأموال لابن زنجويه 80 ،  📒التاريخ الكبير 7/238 ، 📕سنن أبي داود 2999 ، 📓سنن النسائي 4146 ، 📗المنتقى لابن الجارود 1099 ،  📘شرح معاني الآثار 5429 ،📙معجم الصحابة لابن قانع 3/165،166  ، 📒صحيح ابن حبان 6557 ،  ، 📙المعجم الأوسط 4940 ، 📕معرفة الصحابة لأبي نعيم 6466،7309،6468، 📘أخبار أصبهان 1/360 ، 📗السنن الكبرى للبيهقي 12749 ،  📕شعب الإيمان 3574 ،3575 ، 📗الاسماء المبهمة للخطيب 157.📚

🌹இதன் சில அறிவிப்புகள் பலவீனமாக இருந்தாலும் மற்றவை ஆதாரபூர்வமானவையாகும்.🌹

0⃣2⃣
🌱இதே செய்தியை தமீம் கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் அபூதர் (ரழி) வழியாக அறிவிப்பதாக ஒரு சம்பவத்துடன்  பின்வரும் கிதாபுகளில்  பதிந்துள்ளனர்.🌱

📚مسند أبي داود الطيالسي 484 ، 📕مسند أحمد 21364 ، 📘شعب الإيمان 3573 ، 📙فضائل الأوقات للبيهقي 295 ، 📒تاريخ دمشق 9075 ، 📓الأمالي لابن عساكر 5 .📚

🍑இந்த தமீம் கோத்திரத்தைச் சேர்ந்தவர் அபூரீமா என்ற ஸஹாபியாக இருக்கலாம். ஏனெனில் இவரிடமிருந்து  அறிவிக்கும் அஸ்zரக் என்பவர் வேறொரு ஹதீஸை அறிவிக்கும் போதும் "அபூரீமா என்று கூறப்படும் ஒருவர் எங்களுக்கு தொழுவித்தார்" என்று அறிவிக்கிறார். அவ்வாறு இருந்தால் இவ்வறிவிப்பும் ஆதாரமானதாகும்.🍑

0⃣3⃣
🍀இதே செய்தி இப்னு அப்பாஸ் (ரழி) வழியாகவும்

 📚كشف الأسرار عن زوائد البزار 1057 ، 📖التاريخ الكبير للبخاري 7/238 📚

ஆகிய கிதாபுகளில் பதிவாகியுள்ளது.🍀

🌸இதன் அறிவிப்பாளர் வரிசையில் سماك بن حرب என்பவர் பற்றி விமர்சனம் இருந்தாலும் இந்த செய்தி வேறு வழிகளில் நபியவர்களிடமிருந்தே அறிவிக்கப்பட்டிருப்பதால் அவர் பற்றிய விமர்சனம் இல்லாமல் போய்விடுகின்றது.🌸

0⃣4⃣
🌴இதே செய்தி அலி (ரழி) வழியாகவும்
 📚مسند البزار  862،688، 📖 المعجم الأوسط 9174 ، 📕تنبيه الغافلين 484 📚

ஆகிய கிதாபுகளில் பதிந்துள்ளார்கள். 🌴

🔮இதில் இடம்பெறும் ஹாரிஸ் அல் அஃவர் என்பவர் பலவீனமானவர். சில அறிஞர்கள் பொய்யர் என்றும் கூறியுள்ளனர்.🔮 📖تهذيب الكمال📖

0⃣5⃣
🌳இதே விடயத்தை عمرو بن شرحبيل என்பவர் ஒரு ஸஹாபியிடமிருந்து அறிவித்துள்ளதாகவும் பின்வரும் கிதாபுகளில் பதிந்துள்ளனர். 🌳

📚مصنف عبد الرزاق 7867 ، 📗سنن النسائي 2706 ،2707 ، 📙الترغيب والترهيب لقوام السنة 1886.📚

👉ஆனால் இந்த அறிவிப்பில் ரமழான் மாதம் பற்றி கூறப்படவில்லை.👈

0⃣6⃣
💼இதே விடயம் المعجم الكبير 8984 இல் இப்னு மஸ்ஊத்  (ரழி) உடைய கூற்றாக பதிவாகியுள்ளது.💼

0⃣7⃣
🚪இது மேற்கண்ட ஹாரிஸ் என்ற பலவீனமானவருடைய கூற்றாகவும் مصنف عبد الرزاق 7872  இல் பதிவாகியுள்ளது.🚪

🚦🚦🚦🚦🚦

இந்த அறிவிப்புகளில் சிலது பலவீனமானதாக இருந்தாலும் அதிகமானவை நம்பகமானவர்கள் வழியாக வந்துள்ளன.
எனவே இந்த ரமழான் மூலம் உள்ளங்களில் உள்ள அசுத்தங்கள் நீங்கிய கூட்டத்தில் நம் அனைவரையும் அல்லாஹ் சேர்ப்பானாக.

🌹🌺🌷🌸🌼🌻

அல்லாஹு அஃலம்

ஷுஐப் உமரி பேருவளை

14/06/2016


தொடர் 🌎 34
🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷ரமழான் 03

              🔬🔦🔦🔦🔬
    🌟பலவீனமானது🌟

🌷இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு ஸுஹுபுகள்  ரமழான் மாதம் இரண்டாவது இரவில் இறக்கப்பட்டது. தாவூத்  (அலை) அவர்களுக்கு ஸபூர் வேதம் ரமழான் மாதம் ஆறாவது நாளிலும் மூஸா (அலை) அவர்களுக்கு தௌராத் வேதம்  பதினெட்டிலும் முஹம்மத்  (ஸல்) அவர்களுக்கு குர்ஆன்  இருபத்தி நான்கிலும் இறக்கப்பட்டன. என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.🌷
               🚥🚥🚥🚥🚥
1⃣
🎒இதை இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் வழியாக இமாம் இப்னு அஸாகிர் தனது 📓தாரீகு திமிஷ்க் 84/17,6/202 📓 இல் பதிந்துள்ளார்.🎒

👒இப்னு அப்பாஸ் (ரழி) இடமிருந்து அறிவிக்கும் அலீ இப்னு அபீதல்ஹா என்பவரின் நம்பகத்தன்மை பற்றி அறிஞர்கள் விமர்சித்துள்ளார்கள்.👒 📖 تهذيب الكمال 4754📖

🔮இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் குர்ஆனுக்கு விளக்கமாக கூறியவற்றை இவர் அறிவிக்கிறார். ஆனால் இவர் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களை காணவில்லை.🔮
📖 تاريخ الإسلام 313📖 تهذيب الكمال 4754📚

🔭ஆனால் அவருடைய மாணவர்களான முஜாஹித், காஸிம் இடமிருந்து அவர்களை கூறாமல் அறிவிக்கிறார்.🔭
📖 جامع التحصيل للعلائي 542 📖 ميزان الاعتدال 5870📖

🎈இவர்களிடமிருந்து தான் அறிந்தவற்றை ஒரு ஏட்டில் எழுதி வைத்திருந்தார். அதிலிருந்து இமாம் புகாரி போன்ற அறிஞர்கள் எடுத்தெழுதியுள்ளார்கள்.
ஆனால் இந்த செய்தி அந்த ஏட்டிலும் இல்லை.🎈

2⃣
📮இதே செய்தியை அபூ முலைஹ் என்பவர் واثلة بن الأسقع என்ற ஸஹாபியின் வழியாக அறிவிப்பதாக நாட்கள் மாற்றங்களுடன் பின்வரும் கிரந்தங்களில் பதியப்பட்டுள்ளது.📮

📚مسند أحمد 16984 ، 📖 مختصر قيام الليل للمروزي 1/250 ، 📙 تفسير الطبري 2814 ، 📗 تفسير ابن أبي حاتم 519،1649 ، 📓 المعجم الكبير 185 ، 📒 المعجم الأوسط 3740 ، 📘 جزء من حديث النعالي 66 ، 📕 السنن الكبرى للبيهقي 18649 ، 📑 الأسماء والصفات له 494 ، 📖 شعب الإيمان له 2053 ، 📙 التفسير الوسيط للواحدي 1/280 ، 📗 أسباب النزول له 1/15 ، 📓 الترغيب والترهيب لقوام السنة 1848 ، 📒 تاريخ دمشق 1477 ، 📘 فضائل شهر رمضان لعبد الغني المقدسي 32 📚

📝இதில் இப்ராஹீம் நபிக்கு ஸுஹுபுகள் ரமழான் ஒன்றிலும் தௌராத் ஆறிலும் இன்ஜீல் பதிமூன்றிலும் ஸபூர் பதினெட்டிலும் குர்ஆன் இருபத்தி நான்கிலும் இறக்கப்பட்டதாக வந்துள்ளது.📝

✏இந்த அறிவிப்பில் இரு குறைகள் இருக்கின்றன. ✏

1. இந்த அறிவிப்பாளர் வரிசையில் இம்ரான் இப்னு தாவர் என்பவரை அபூதாவூத், நஸாயீ போன்ற பல அறிஞர்கள் "பலவீனமானவர்" என்று கூறியுள்ளனர்.

2. இதில் வரும் கதாதா قتادة  என்பவர்  مدلس இருட்டடிப்பு செய்பவர் என்று பிரபலமானவர். "இவர் தனது ஆசிரியரிடம் கேட்டதை உறுதிப்படுத்திக் கூடிய வார்த்தைகளை பிரயோகித்தால் மாத்திரமே ஏற்கப்படும்." என்று இமாம் தஹபீ سير أعلام النبلاء 5/271 இல் குறிப்பிடுகிறார்.ஆனால் இந்த அறிவிப்பில் அவ்வாறு சொல்லாமல்  عن என்ற பதத்தைப் பாவித்துள்ளார்.
எனவே இது பலவீனமான அறிவிப்பாகும்.✉

3⃣
📌மேலே கூறப்பட்ட அபூ முலைஹ் என்பவர் ஜாபிர் (ரழி) வழியாக அறிவித்துள்ளதாக பின்வரும் கிதாபுகளில் பதிவாகியுள்ளது.📌

📚 جزء هشام بن عمار 14 ، 📘 مسند أبي يعلى 2190📚

💻இதில் ஹிஷாமுடைய அறிவிப்பில் இன்ஜீல் ரமழான் பதினெட்டில் இறக்கப்பட்டது என்றும் அபூ யஃலாவுடைய அறிவிப்பில் ஸபூர் பதினொன்றில் இறக்கப்பட்டது என்றும்  பதிவாகியுள்ளது.💻

📂இந்த அறிவிப்பிலும் இரு குறைகள் காணப்படுகின்றன.📂

1. இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறும் உபைதுல்லாஹ் என்பவர்  பலவீனமானவர்.
📖 تهذيب الكمال 4285 📖

2. அதேபோல் سفيان بن وكيع  என்பவரும் பலவீனமானவர் ஆவார்.

⛺இதே செய்தி இமாம் இப்னு அஸாகிர் தனது தாரீகு திமிஷ்க் 5/100 இல் பதிந்துள்ளார். அதில் இடம் பெறும் அபூ பக்ர் என்பவர் மிகவும் பலவீனமானவர் ஆவார். ⛺                   📖تهذيب الكمال 8002 📖

🔦இமாம் இப்னு ஹஜர் அல் அஸ்கலானீ அவர்கள் இந்த அறிவிப்பு مقلوب மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. என்கிறார். 🔦
📗المطالب العالية لابن حجر 3482📗

🔭அதாவது  அபூ முலைஹ் வாஸிலா (ரழி) இடமிருந்து அறிவித்ததை ஜாபிர்(ரழி) இடமிருந்து அறிவித்ததாக கூறப்படுகிறது.🔭

4⃣
🗼இதே விடயத்தை இமாம் الثعلبي தனது தப்ஸீரில் அபூதர்  (ரழி) வழியாக பதிந்துள்ளதாக இமாம்  ஸைலஈ அவர்கள்
📒 تخريج أحاديث الكشاف  1/113 📘
 இல் குறிப்பிட்டுள்ளார்.🗼

💈இந்த அறிவிப்பில் இடம் பெறும்  ஷிஹாப் இப்னு தாரிக்,  தாரிக் இப்னு இயாஸ் என்பவர்கள் பற்றிய தகவல்கள் இல்லை.💈

🚨அதேநேரம் இதில் வரும் நஹ்ஷல் என்பவர் மிகவும் பலவீனமானவர். இமாம் அபூதாவூத் தயாலஸீ இமாம் இஸ்ஹாக் ஆகியோர் இவரை "பொய்யர்" என்கிறார்கள். 🚨
📖 تهذيب الكمال 7198 📖

5⃣
இதே செய்தி  أبو الجلد என்பவருடைய கூற்றாக
📚 مصنف عبد الرزاق 30191 ، 📗 فضائل القرآن لابن الضريس 127📚
ஆகிய கிதாபுகளில் பதிந்துள்ளனர். இவரிடமிருந்து அறிவிக்கும் இருவரும் யாரென்று கூறப்படவில்லை. ⏳

⏰அத்தோடு இவர் குர்ஆனை ஏழு நாட்களிலும் தௌராத்தை ஆறு நாட்களிலும் வாசித்து முடிப்பார்.  என்று  அவருடைய மகள் மைமூனா சொன்னதாக இமாம் இப்னு ஸஃத 📘طبقات ابن سعد 3115📘 இல் கூறுகிறார்.⏰

✏இந்த விடயம் வேதக்காரர்களிடமிருந்து வந்திருக்கலாம் என்பதற்கு சான்றாக அவர்களிடமிருந்து அறிவிப்பதாக பிரபலமான வஹப் இப்னு முனப்பஹ் என்ற அறிஞர் இக் கூற்றை கூறியுள்ளதாக இமாம் இப்னுல் ஜௌஸி المنتظم 1/144இல் குறிப்பிடுவதை குறிப்பிடலாம்.
இவர் அந்த வேதங்களில் உள்ளவற்றை குர்ஆனுடன் இணைத்துக் கூறியிருக்க வாய்ப்புண்டு.✏

              🚥🚥🚥
எனவே இதை நபியவர்கள் சொன்னதாக பலவீனமான அறிவிப்புகளில் தான் வந்துள்ளது.🎈

⏳வேதக்காரர்கள் அவர்களது வேதங்களிலிருந்து சொல்பவற்றை நாம் முழுமையாக நம்பவோ மறுக்கவோ முடியாது.⏳

அல்லாஹு அஃலம்

ஷுஐப் உமரி பேருவளை

18/06/2016


தொடர் 🌎 35
🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷ரமழான் 04

             🔦🔭🔭🔭🔦

     ✏🔬பலவீனமானது🔬✏

🎀முன்வந்த எந்த சமூகங்களுக்கும் கொடுக்கப்படாத  ஐந்து விடயங்கள் எனது உம்மத்தினருக்கு ரமழான் மாதத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

1.
நோன்பாளியின் வாய் வாடை அல்லாஹ்விடம் கஸ்தூரியை விட அதிக நறுமணமுள்ளதாக இருக்கும்.

2.
நோன்பு திறக்கும் வரை மலக்குகள் அவர்களுக்கு பாவமன்னிப்புத் தேடுவார்கள்.

3.
ஒவ்வொரு நாளும் சொர்க்கம் அலங்கரிக்கப்படும். "எனது நல்லடியார்கள் உலகத் துன்பங்களை விட்டு உன்னிடம் வரவிருக்கிறார்கள்." என்று அல்லாஹ் கூறுவான்.

4.
அட்டூழியம் செய்யும் ஷைத்தான்கள் அம்மாதத்தில் விலங்கிடப்படும். ஏனைய மாதங்களில் அவர்களை நெருங்கியவற்றைக் கொண்டு அம்மாதத்தில் நெருங்க மாட்டார்கள்.

5.
கடைசி இரவில் அவர்களுடைய பாவங்கள் மன்னிக்கப்படும்.

"அது லைலதுல் கத்ர் இரவா?" என்று ஒருவர் கேட்டதற்கு, " இல்லை. வேலைக்காரருக்கு கூலி கொடுக்கப்படுவது அவர் வேலையை முடித்த பிறகு தான்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.🎀

            🚥🚥🚥🚥🚥

இந்த செய்தி அபூஹுரைரா (ரழி) வழியாக பின்வரும் கிரந்தங்களில் பதியப்பட்டுள்ளது.

📚 مسند أحمد 7917 ، 📗 فضائل رمضان لابن أبي الدنيا 18 ، 📘 مسند الحارث 318 ، 📙 مسند البزار 8571 ، 📔 مختصر قيام الليل للمروزي 1/258 ، 📒 شرح مشكل الآثار 3013 ، 📑 المجالسة وجواهر العلم للدينوري 2991 ، 📓 تنبيه الغافلين للسمرقندي 453 ، 📕 فضائل رمضان لابن شاهين 27 ، 📗 المخلصيات 819 ، 📕 شعب الإيمان 3330 ، 📓 فضائل الأوقات للبيهقي 35 ، 📑 أمالي الباطرقاني 8 ، 📒 أمالي الشجري 1499 ، 📔 الترغيب والترهيب لقوام السنة 1757 ، 📙 فضل شهر رمضان لابن عساكر 7 ، 📘 فضائل شهر رمضان لعبد الغني المقدسي 18 ، 📗 أحاديث شهر رمضان لأبي اليمن بن عساكر 9 ، 📚 مسند أحمد بن منيع 📓 الثواب لأبي الشيخ ، 📓 حديث محمد المديني لأبي نعيم📚

✏✏இதன் அறிவிப்பாளர் வரிசையில் இரண்டு பலவீனமானவர்கள் உள்ளனர்.

1.
முஹம்மத் இப்னுல் அஸ்வத்.
இவருடைய நம்பகத்தன்மை பற்றி இமாம் இப்னு ஹிப்பானைத் தவிர யாரும் பேசவில்லை. இமாம் இப்னு ஹஜர் இவரை مستور என்கிறார்.
📚تقريب التهذيب 6269، 📕تهذيب الكمال 6269📚

2.
ஹிஷாம் இப்னு ஸியாத்.
இவரை பலவீனமானவர் என்று பல அறிஞர்கள் விமர்சித்துள்ளார்கள்.
📚 تهذيب الكمال 7292، إكمال تهذيب الكمال 4945 📚
✏✏

         🗼🗼🗼🗼🗼

⏳இதே செய்தி ஜாபிர் (ரழி) வழியாக பின்வரும் கிதாபுகளில் பதிவாகியுள்ளது.⏳

📚 فضائل رمضان لابن شاهين 19 ، 📕 الأربعون للنسوي 34 ، 📗 شعب الإيمان 3331 ، 📘 فضائل الأوقات للبيهقي 36 ، 📙  التفسير الوسيط للواحدي80 ، 📒 الترغيب والترهيب لقوام السنة 1820 ، 📔 فضل شهر رمضان لابن عساكر 8 📚

 🔬 இந்த அறிவிப்பில் ஷைத்தான்கள் விலங்கிடப்படுவதை கூறுவதற்கு பதிலாக "ரமழான் முதல் இரவில் அவர்களைப் பார்க்கிறான். யாரை அல்லாஹ் பார்த்து விட்டானோ அவனை ஒருபோதும் வேதனை செய்ய மாட்டான்." என்று இடம்பெற்றுள்ளது.🔬

🔮இதன் அறிவிப்பாளர் வரிசையிலும் இரண்டு பலவீனமானவர்கள் உள்ளனர்.🔮

1.
ஹைஸம் இப்னுல் ஹவாரீ.
இவர் பற்றிய தகவல்கள் எதுவுமே இல்லை என இமாம் அல்பானி கூறுகிறார்கள்.
📖 الضعيفة 5081 📖
2.
  ஸைத் அல்அம்மீ.
இவர் பலவீனமானவர் என்று பல அறிஞர்கள் கூறுகிறார்கள்.
📚تهذيب الكمال 2131، 📙 تقريب التعذيب 2131 📚

🔦எனவே இது பலவீனமானதாகும். என்றாலும் இதில் கூறப்பட்ட சிலது வேறு ஸஹீஹான ஹதீஸ்களில் இருப்பதால் இதை விட்டு ஸஹீஹானதை மாத்திரம் பிற்பற்றுவோம். 🔦

அல்லாஹு அஃலம்

ஷுஐப் உமரி பேருவளை

22/06/2016



தொடர் 🌎 36
🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷ரமழான் 05

             🔦🔭🔭🔭🔦

     ✏🔬பலவீனமானது🔬✏

🍇ஒவ்வொன்றுக்கும் ஒரு வாசல் இருக்கும். (عبادة) வணக்கங்களுக்குரிய வாசல் நோன்பாகும். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.🍇

          🚥🚥🚥🚥🚥

🍎இந்த செய்தியை அபூதர்தா (ரழி)வழியாக இமாம் அபூயஃலா பதிவு செய்துள்ளதாக இமாம் இப்னு ஹஜர் அல் அஸ்கலானீ கூறுகிறார்.🍎
📕 المطالب العالية 105📕

🌺 இதை இமாம் அபுஷ் ஷைக் தனது  الثواب  என்ற கிதாபிலும் பதிந்துள்ளதாக பின்வரும் கிரந்தங்களில் பதியப்பட்டுள்ளது.🌺

📚المغني عن حمل الأسفار للعراقي 1/273 ، 📙 الجامع الصغير وزيادته 10191 للسيوطي ، 📒 الفتح الكبير 9831 له ، 📗 كنز العمال للمتقي الهندي 23581 📚

🌹இவ்வறிவிப்பில் வரும் அபூபக்ர் இப்னு அபீ மர்யம் என்பவர் பலவீனமானவர் ஆவார்.🌹

📚تهذيب الكمال 7974 ، 📕 تقريب التهذيب 7974 ، 📓 الكاشف 6526 📚

            🌴🌴🌴🌴🌴

🍅 இதே செய்தியை ضمرة بن حبيب என்ற தாபிஈ நபியவர்களிடமிருந்து  அறிவிப்பதாக இந்த அபூபக்ர் இப்னு அபீமர்யம் கூறிய செய்தி பின்வரும் கிதாபுகளில் பதிவாகியுள்ளது.🍅

📚الزهد والرقائق لابن المبارك 1423 ، 📔 الزهد لهناد 2/358 ، 📘 مسند الشهاب للقضاعي 1032 📚

🍄இந்த செய்தி ஒரு தாபிஈ நபியவர்களைத் தொட்டும் அறிவிக்கக் கூடிய முர்ஸல் வகையைச் சேர்ந்ததாகும்.🍄

🍏இதனாலும் இதை அறிவப்பவரான அபூபக்ர் பலவீனமானவர் என்பதாலும் இந்த செய்தி பலவீனமானதாகும்.🍏

           🌱🌱🌱🌱🌱🌱🌱

அல்லாஹு அஃலம்

ஷுஐப் உமரி பேருவளை

22/06/2016



[23/06 6:25 pm] 💐 🕋 ShuaibFaiz (Umari) 🕋💐: தொடர் 🌎 37
🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷ரமழான் 06

             🔦🔭🔭🔭🔦

    ✏🔬இட்டுக்கட்டப்பட்டது🔬✏

🍎நபி (ஸல்) அவர்கள் ரமழான் நம்மை வந்தடைந்த போது கூறினார்கள் :
பரகத் பொருந்திய ரமழான் மாதம் உங்களிடம் வந்துள்ளது. அதில் அல்லாஹ் உங்கள் பக்கம் கவனம் செலுத்தி ரஹ்மத்தை இறக்குகிறான். பாவங்களை மன்னிக்கிறான். துஆக்களை ஏற்றுக் கொள்கிறான். (அமல்களில்) நீங்கள் போட்டி போடுவதைப் பார்த்து மலக்குகளிடம் பெருமையாகப் பேசுகிறான். அல்லாஹ்வுக்கு உங்கள் நன்மைகளைக் காட்டுங்கள். அதில் அவனது அருளைப் பெறாதவன் துர்ப்பாக்கியசாலி தான். 🍎

🍇இந்த செய்தியை அபூதர்தா  (ரழி) வழியாக இமாம் தபரானீ தனது مسند الشاميين 2238 இல் பதிந்துள்ளார்.🍇

🍓இமாம் இப்னுன் நஜ்ஜாரும் இதை பதிந்துள்ளதாக பின்வரும் கிதாபுகளில் கூறுகிறார்கள்.🍓

📚مجمع الزوائد 4783 ، 📘جامع الأحاديث 255 ، 📗كنز العمال 23692📚

           
            🚥🚥🚥🚥🚥

🍏இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறும் முஹம்மத் இப்னு அபீகைஸ் என்பவர் நான்காயிரம் ஹதீஸ்களை இட்டுக்கட்டியவராவார்.  அவரை அபூஜஃபர் அல் மன்ஸூர் எனும் கலீபா கொலை செய்து சிலுவையில் அறைந்தார். இவரிடமிருந்து அறிவிப்பவர்கள் இவரென்று தெரியாமல் இருப்பதற்காக நூறு விதங்களில் இவரது பெயரை மாற்றி அறிவிக்கிறார்கள். 🍏

📘تقريب التهذيب 5907📘

🌹பிரபலமான ஹதீஸ்களை இட்டுக்கட்டுபவர்கள் நால்வர் இருக்கின்றனர்.🌹

1. மதீனாவில் இப்ராஹீம் இப்னு அபீஷைபா யஹ்யா

2. பக்தாதில் வாகிதீ

3. குராஸானில் முகாதில் இப்னு ஸுலைமான்

4. ஷாமில் முஹம்மத் இப்னு ஸஈத்
என்று இமாம் நஸாயீ கூறுகிறார்.⏳

🍄ஒரு கருத்து நல்லதாக இருந்தால் அதற்கு ஒரு அறிவிப்பாளர் வரிசையை உண்டாக்க நான் தயங்க மாட்டேன். என்றும் அவர் கூறியுள்ளார்.🍄
📓 تهذيب الكمال 5907 📓

🌺இவரிடமிருந்து அறிவிக்கும் மர்வான் இப்னு முஆவியா நம்பகமானவராக இருந்தாலும் இவ்வாறு இருட்டடிப்பு செய்யக்கூடியவராவார். 🌺

📔تقريب التهذيب 6575📔

🌴எனவே இது இட்டுக்கட்டப்பட்ட ஒரு செய்தியாகும்🌴

🍀ரமழான் மாதத்தில் அமல் செய்வதற்கு ஆர்வமூட்டப்பட்ட வேறு ஸஹீஹான ஹதீஸ்களை முற்படுத்துவோம்.🍀


        🌴🌴🌴🌴🌴🌴🌴

அல்லாஹு அஃலம்

ஷுஐப் உமரி பேருவளை

23/06/2016
[25/06 6:05 pm] 💐 🕋 ShuaibFaiz (Umari) 🕋💐: தொடர் 🌎 38
🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷ரமழான் 07

             🔦🔭🔭🔭🔦

    ✏🔬ஸஹீஹானது🔬✏

🍇ஸஹர் செய்யுங்கள். நிச்சயமாக ஸஹர் செய்வதில் பரகத் இருக்கிறது. என்று நபி (ஸல்) கூறினார்கள். 🍇

🍅இதை அனஸ் இப்னு மாலிக்  (ரழி) வழியாக 🔮

📚صحيح البخاري 1933 ، 📔صحيح مسلم 1059📚

போன்ற பல கிரந்தங்களில் பதிவாகியுள்ளது.🍅

🌹இதே விடயத்தை
🌴அபூ ஹுரைரா,
🌴இப்னு மஸ்ஊத்,
🌴ஜாபிர்,
🌴இப்னு அப்பாஸ்,
🌴அம்ருப்னுல் ஆஸ்,
🌴இர்பாழ் இப்னு ஸாரியா,
🌴உத்பா இப்னு அப்து,
🌴அபூதர்தா
   (ரழியல்லாஹு அன்ஹும்)

ஆகிய ஸஹாபாக்களும் அறிவித்துள்ளார்கள் என்று இமாம் திர்மிதீ கூறுகிறார்கள்.🌹

📗سنن الترمذي 708📗

🌺🌺🌺🌺🌺🌺🌺

🍏 எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவரையும் அந்த பரகத்தை பெற்றவர்களாக ஆக்குவானாக.🍏

      🌷🌷🌷🌷🌷

ஷுஐப் உமரி பேருவளை

25/06/2016
[14/07 1:02 pm] 💐 🕋 ShuaibFaiz (Umari) 🕋💐: தொடர் 🌎 39
🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷ரமழான் 08

🌳ஸஹர் பற்றிய சில ஹதீஸ்கள்.

       🌹🌹🌹🌹🌹🌹

இந்த ஹதீஸ்களின் அறிவிப்பாளர் வரிசையில் பலவீனம் இருந்தாலும், சில அறிவிப்பாளர்கள் விடப்படக்கூடிய அளவுக்கு பலவீனமாக இல்லாததாலும், அவற்றின் சில கருத்துக்கள் வேறு ஸஹீஹான ஹதீஸ்களில் கூறப்படுவதாலும் இமாம் அல்பானி, ஷுஐப் அல் அர்ணவூத் போன்றோர் சரி காண்கிறார்கள். அல்லாஹு அஃலம்.

1.
கூட்டாக இருப்பதிலும், ஸரீத் என்ற உணவிலும், ஸஹர் உணவிலும் பரகத் இருக்கிறது. ஸஹர் செய்யுங்கள். அது சக்தியை அதிகரிக்கச் செய்வதோடு, ஸுன்னத்தானதுமாகும். ஒரு தண்ணீர் மிடரைக் கொண்டாவது ஸஹர் செய்யுங்கள். ஸஹர் செய்பவர்கள் மீது அல்லாஹ் அருள் புரிவானாக.

என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இதை அபூஸஈத் அல் இஸ்கந்தரீ என்ற ஸஹாபியின் வழியாக பின்வரும் கிரந்தங்களில் பதியப்பட்டுள்ளது.

📚 مسند ابن الجعد 3391 ، فضائل رمضان لابن أبي الدنيا 62 ، مسند الحارث 323 ، المجالس العشرة الأمالي للحسن الخلال 43 ، الخامس والتاسع من المشيخة البغدادية لأبي طاهر السلفي 50،221 📚

இவ்வறிவிப்பில் இடம்பெற்றுள்ள بحر بن كنيز  என்பவரை அனைத்து அறிஞர்களும் பலவீனமானவர் என்கிறார்கள். இமாம் தாரகுத்னீ மத்ரூக் என்கிறார்.
تهذيب الكمال ،تقريب التهذيب 637 ، الكاشف 537 ، الضعفاء والمتروكون للدارقطني 128


இதே விடயம் அலீ (ரழி) வழியாக
حديث أبي القاسم عافية وغيره 137
 என்ற கிதாபில்  "அளக்கப்பட்ட உணவிலும்" என்று மேலதிகமாக பதிவாகியுள்ளது.

இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறும் ஹாரிஸ் அல் அஃவர் என்பவர்  பலவீனமானவர் .

تهذيب الكمال ، تقريب التهذيب 1029 ، الكاشف 859

அத்தோடு அபூ மஃமர் , ஹாரிஸ் இப்னுல் ஹஜ்ஜாஜ் , உமர் இப்னு புஸைஃ ஆகியோர் யாரென்று அறியப்படாதவர்களாவர்.

لسان الميزان 650 ، 817

2.
கூட்டாக இருப்பதிலும், ஸரீத் என்ற உணவிலும், ஸஹர் உணவிலும் பரகத் இருக்கிறது.

இதை ஸல்மான் (ரழி) வழியாக பின்வரும் கிதாபுகளில் பதிவாகியுள்ளது.
 المعجم الكبير 6127 ، المشيخة للأنباري ، شعب الإيمان 7114

இதில் இடம் பெறும் அபூ அப்தில்லா அல் பஸரி என்பவர் யாரென்று அறியப்படாதவர் என்று இமாம் தஹபீ கூறுவதாக இமாம் ஹைஸமீ கூறுகிறார்.

 مجمع الزوائد 4850
இமாம் முனாவியும் இதே கருத்தைக் கூறியுள்ளார்.
فيض القدير 3202 ، التيسير 1/439

3.
கூட்டாக இருப்பதிலும், ஸரீத் என்ற உணவிலும், ஸஹர் உணவிலும் பரகத் இருக்கிறது.
என்று
موضح أوهام الجمع والتفريق للخطيب 83
இலும்,

ஸஹர் உணவிலும் அளக்கப்பட்ட உணவிலும் அல்லாஹ் பரகத் செய்துள்ளான்.
என்று
موضح أوهام الجمع والتفريق للخطيب 83 ،
فضائل شهر رمضان للمقدسي 46
இலும்

ஸஹர் உணவிலும் ஸரீதிலும்  அளக்கப்பட்ட உணவிலும் பரகத் செய்யுமாறு நபியவர்கள் துஆ செய்தார்கள் என்று
 الأوسط 6866 ، الصغير 972 ،

இலும்  அபூஹுரைரா வழியாக பதியப்பட்டுள்ளது

இதில் இடம் பெறும் أسد بن عيسى رفعين   என்பவர் ஷாம் தேச வணக்கவாளியாக இருந்தார்.
இமாம் இப்னு ஹிப்பான் தனது الصفات  12618 இல் يغرب என்கிறார்.
لسان الميزان 1204
இவரைப் பற்றிய வேறு தகவல்கள் இல்லை.

இவரிடமிருந்து அறிவிக்கும்
مزداد أو يزداد بن جميل
என்பவர் வணக்கவாளியாக இருந்தார். என்று இமாம் தஹபீ تاريخ الإسلام 542 இல் குறிப்பிடுகின்றார். அவரைப்பற்றிய வேறு தகவல்கள் இல்லை.

அதன் அறிவிப்பாளர் வரிசையில் வரும் சிலர் பற்றி யாரும் கூறியதாக தெரியவில்லை.
مجمع الزوائد 7879

4.
ஸஹர், ஸரீத் ஆகிய உணவுகளில் பரகத் செய்யுமாறு நபியவர்கள் துஆ செய்தார்கள்.

என்று அபூஹுரைரா (ரழி) அவர்களிடமிருந்து عطاء என்பவர் அறிவிப்பதாக
الترغيب والترهيب لقوام السنة 1795 ، المقصد العلي للهيثمي 1500
 ஆகிய கிரந்தங்களில் பதியப்பட்டுள்ளது.

இதை عطاء  இடமிருந்து அறிவிக்கும் முஹம்மத் இப்னு அபீலைலா என்பவர் பலவீனமானவர். அதாவிடமிருந்து அறிவிக்கும் போது அதிகம் தவறு விடுபவர் என்று இமாம் அஹ்மத் கூறுகிறார்.
மிகவும் மனனக் கோளாறு உள்ளவர் என்றும் அறிஞர்கள் விமர்சித்துள்ளார்கள்.
 تهذيب الكمال ، تقريب التهذيب 6081 ،
مجمع الزوائد 7877

5.
ஸரீத் என்ற உணவிலும், ஸஹர் உணவிலும், கூட்டாக இருப்பதிலும் பரகத் இருக்கிறது.

இதை அபூஹுரைரா ரழி வழியாக இமாம் அபூயஃலா பதிந்துள்ளார்.
المقصد العلي 1501
 இதில் இடம் பெறும் அபூ யாஸிர் என்பவர் பலவீனமானவர். பிறரின் ஹதீஸ்களை திருடி அறிவிப்பவராக இருந்தார்.
تهذيب الكمال، تقريب التهذيب 4835 ، مجمع الزوائد 7878
மூஸா இப்னு ஹாரூன் என்ற அறிஞர் இவரை மத்ரூக் என்கிறார்.
ميزان الاعتدال 6009

6.
கூட்டாக இருப்பதிலும், ஸஹர் உணவிலும், ஸரீத் என்ற உணவிலும் பரகத் இருக்கிறது.

இதை அனஸ் (ரழி) அவர்கள் வழியாக المشيخة الصغيرة لابن شاذان 63 இல் பதிவாகியுள்ளது.

இவ்வறிவிப்பில் இடம்பெறும் ஹஸன் அல்அதவீ என்பவர் ஹதீஸ்களை இட்டுக்கட்டியவராவார்.
الكامل لابن عدي 474

7.
ஸஹர் உணவில் பரகத் இருக்கிறது. அதை விட்டு விடாதீர்கள். ஒரு தண்ணீர் மிடரைக் கொண்டாவது  (ஸஹர் செய்யுங்கள்). ஏனெனில் அல்லாஹ் ஸஹர் செய்பவர்களுக்கு அருள் புரிகிறான். மலக்குகள் பாவமன்னிப்புத் தேடுகிறார்கள்.

என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இதை அபூஸஈத் அல் குத்ரீ (ரழி) வழியாக இமாம் அஹ்மத் இரு அறிவிப்பாளர் வரிசையூடாக பதிந்துள்ளார்.

அவற்றில் 11086 இலக்க அறிவிப்பில் உள்ள அபூ ரிபாஆ என்பவரைப் பற்றி எந்த அறிஞரும் எதுவும் கூறவில்லை. என்று இமாம் ஹைஸமீ கூறுகிறார்.
مجمع الزوائد 4840

11396 இலக்க அறிவிப்பில் அப்துர்ரஹ்மான் இப்னு ஸைத் இப்னு அஸ்லம் என்ற மிக  பலவீனமானவர் இடம்பெற்றுள்ளார்.

இது தவிர அபூஸஈத் அல் குத்ரீ (ரழி) வழியாக உள்ள 11281 இலக்க அறிவிப்பில் மிகவும் மனனக் கோளாறு உள்ள இப்னு அபீலைலா முதல்லிஸ் என்று இனங்காணப்பட்ட அதிய்யா அல் அவ்பீ ஆகிய பலவீனமானவர்கள் இடம் பெறுவதோடு,
"ஸஹர் செய்யுங்கள் ஏனெனில் அதில் பரகத் இருக்கிறது" என்று மட்டுமே இடம்பெற்றுள்ளது.

இதே ஸஹாபி வழியாக நஸ்ர் இப்னு தரீப் என்பவரின் அறிவிப்பு
التاسع من المشيخة البغدادية 218
இல் பதிவாகியுள்ளது.

இந்த நஸ்ர் என்பவர் மிக பலவீனமானவர். இட்டுக்கட்டியவர் என்று பிரபலமானவர்.
ميزان الاعتدال 9034
இந்த அறிவிப்பில் " ஒரு தண்ணீர் மிடரைக் கொண்டாவது ஸஹர் செய்யுங்கள்" என்று மட்டுமே இடம்பெற்றுள்ளது.

8.
யாஅல்லாஹ்! ஸஹர் செய்பவர்களுக்கு அருள் புரிவாயாக.
என நபியவர்கள் பிரார்த்தித்தார்கள்.

இதை அபூஸுவைத் என்ற ஸஹாபி வழியாக
الآحاد والمثاني 2758 ، كشف الأستار للهيثمي  974 ، الكنى للدولابي 217 ، المعجم الكبير للطبراني 845 ، معرفة الصحابة لأبي نعيم 6843
ஆகிய கிதாபுகளில் பதிவாகியுள்ளது.

இந்த அறிவிப்பில் வரும் ஹாதம் இப்னு அபீ நஸ்ர் என்பவர் யாரென்று அறியப்படாதராவார்.
بيان الوهم والإيهام لابن القطان 3/413 ، البدر المنير 9/301 ، اتحاف الخيرة للبوصيري 1878 ، المغني للذهبي 1217 ، التقريب لابن حجر 1000


இவரிடமிருந்து அறிவிக்கும் ஹிஷாம் இப்னு ஸஃத் என்பவரும் பலவீனமானவர் ஆவார்.
التقريب لابن حجر 7294 ، الكاشف 5964

9.
ஸஹர் உணவு ஒரு முஃமினின் சிறந்த உணவாகும். நிச்சயமாக அல்லாஹ் ஸஹர் செய்பவர்களுக்கு அருள் புரிகிறான். மலக்குகள் பாவமன்னிப்புத் தேடுகிறார்கள்.

என நபியவர்கள் கூறினார்கள்.

இதை இப்னு உமர் (ரழி) வழியாக
فضائل شهر رمضان لابن أبي الدنيا 61 ، أمالي الجوهري 3 /25
 இல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வறிவிப்பில் இடம்பெறும் அப்துர்ரஹ்மான் இப்னு ஸைத் என்பவர் மிகவும் பலவீனமானவர் ஆவார்.
تقريب التهذيب 3865 ، الكاشف 3196
 அத்தோடு அப்துல்லாஹ் இப்னு ஷபீப் என்பவர் மிகவும் பலவீனமானவர் ஆவார்.
لسان الميزان 4273

10.
நிச்சயமாக அல்லாஹ் ஸஹர் செய்பவர்களுக்கு அருள் புரிகிறான். மலக்குகள் பாவமன்னிப்புத் தேடுகிறார்கள்.
என நபியவர்கள் கூறினார்கள்.

இதை இப்னு உமர் (ரழி) வழியாக
مسند الروياني 1432 ، مجموع فيه مصنفات أبي العباس الأصم 416 ، صحيح ابن حبان 3467 ، الأوسط للطبراني 6434 ، الحليةلأبي نعيم 8/320 ، الترغيب لقوام السنة 1793
ஆகிய கிதாபுகளில் பதிவாகியுள்ளது.

இவ்வறிவிப்பில் இடம்பெறும் அப்துல்லாஹ் இப்னு ஸுலைமான் அத்தவீல் என்பவரை இமாம் இப்னு ஹிப்பானைத் தவிர வேறெவரும் நம்பகமானவர் என்று கூறவில்லை. என்று இமாம் அல்பானி கூறுகிறார்.
الضعيفة 6427, 2591
இமாம் இப்னு ஹஜர் صدوق يخطئ என்கிறார்.
التقريب 3370

11.
ஈத்தம் பழம் சிறந்த ஸஹர் உணவாகும். ஸஹர் செய்பவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிகிறான்
என நபியவர்கள் கூறினார்கள்.

இதை ஸாஇப் இப்னு யஸீத் (ரழி) வழியாக
المعجم الكبير للطبراني 6689
இல் பதிவாகியுள்ளது.

இவ்வறிவிப்பில் இடம்பெறும் யஸீத் இப்னு அப்துல் மலிக் என்பவர் பலவீனமானவர்.
تقريب التهذيب 7751 ، الكاشف 6338

அத்தோடு இவரிடமிருந்து அறிவிக்கும் காலித் இப்னு யஸீத் என்பவர் மிக பலவீனமானவர், இட்டுக்கட்டப்பட்டவைகளை அறிவிப்பவர்.
تاريخ الإسلام 123
12.
ஸஹர் செய்யுங்கள். நிச்சயமாக
ஸஹர் செய்பவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிகிறான்
என நபியவர்கள் கூறினார்கள்.

இதை ஸைத் இப்னு அர்கம் (ரழி) வழியாக
التاسع من المشيخة البغدادية لأبي طاهر 219
இல் பதிவாகியுள்ளது.

இந்த ஸஹாபியிடமிருந்து அறிவிக்கும் அவரது மகன் பற்றிய தகவல்கள் இல்லை.

இவ்வறிவிப்பில் இடம்பெறும் காரிஜா என்பவர் மிகவும் பலவீனமானவர் ஆவார்.
التقريب 1612 ، الكاشف 1303

13.
நிச்சயமாக அல்லாஹ் ஸஹர் செய்பவர்களுக்கு அருள் புரிகிறான். மலக்குகள் பாவமன்னிப்புத் தேடுகிறார்கள்.
என நபியவர்கள் கூறினார்கள்.

இதை அலீ (ரழி) வழியாக
أمالي الشجري1503
இல் பதிவாகியுள்ளது.

இந்த அறிவிப்பில் முஹம்மத் இப்னு முஹம்மத் இப்னுல் அஷ்அஸ் என்பவர் ஷீயாக் கொள்கை சார்ந்தவராகவும், மூஸா இப்னு இஸ்மாயீல் என்பவரூடாக அஹ்லுல் பைத் வழியாக தாம் அறிவிக்கும் கிட்டத்தட்ட ஆயிரம் ஹதீஸ்கள் கொண்ட ஒரு பிரதியை வைத்திருந்தார்.

அவற்றில் தொடர்பு துண்டிக்கப்பட்டவைகளும் முன்கரானவைகளும் இருக்கின்றன.

இந்த மூஸா என்பவரின் நாற்பது வருட அண்டை வீட்டாரான அஹ்லுல் பைத்தைச் சேர்ந்த ஹுஸைனிடம் அந்த ஹதீஸ்களை நாம் கூறிய போது அவ்வாறான அறிவிப்புகள் தம்மிடம் இருப்பதாக கூறவில்லை என்றார்.
الكامل لابن عدي 1791

14.
ஒரு தண்ணீர் மிடரைக் கொண்டாவது  (ஸஹர் செய்யுங்கள்).
என நபியவர்கள் கூறினார்கள்.

இதை அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரழி) வழியாக
صحيح ابن حبان 3476
 இல் பதிவாகியுள்ளது.

 இந்த அறிவிப்பாளர் வரிசையில் இம்ரான் இப்னு தாவர் என்பவரை அபூதாவூத், நஸாயீ போன்ற பல அறிஞர்கள் "பலவீனமானவர்" என்று கூறியுள்ளனர்.

இதில் வரும் கதாதா قتادة  என்பவர்  مدلس இருட்டடிப்பு செய்பவர் என்று பிரபலமானவர். "இவர் தனது ஆசிரியரிடம் கேட்டதை உறுதிப்படுத்திக் கூடிய வார்த்தைகளை பிரயோகித்தால் மாத்திரமே ஏற்கப்படும்." என்று இமாம் தஹபீ سير أعلام النبلاء 5/271 இல் குறிப்பிடுகிறார்.ஆனால் இந்த அறிவிப்பில் அவ்வாறு சொல்லாமல்  عن என்ற பதத்தைப் பாவித்துள்ளார்.

முஹம்மத் இப்னு பிலால் என்பவர் இம்ரானிடமிருந்து வேறெவரும் அறிவிக்காதவற்றை அறிவிக்கிறார்.
الكامل 1636

15.
இதே செய்தியை அனஸ் (ரழி) வழியாக இமாம் அபூயஃலா 3340 இல் பதிந்துள்ளார்.
அந்த அறிவிப்பில் வரும் அப்துல் வாஹித் என்பவர் முன்கருல் ஹதீஸ் என்று இமாம் புகாரி கூறுகிறார்.
ميزان الاعتدال 5282
 எல்லாம் வல்ல இறைவன் நம்மனைவரையும்அவனது அருள் பெற்ற கூட்டத்தில் சேர்ப்பானாக.

அல்லாஹு அஃலம்

 ஷுஐப் உமரி

14/07/2016
[20/07 5:43 pm] 💐 🕋 ShuaibFaiz (Umari) 🕋💐: தொடர் 🌎 40
🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷ரமழான் 09

   🔭 பலவீனமானது 🔭

          🔬🔦🔦🔦🔬

🌹இரவில் நின்று வணங்குவதற்கு பகலில்  (கைலூலா) தூங்குவதைக் கொண்டும், பகலில் நோன்பு நோற்க ஸஹர் சாப்பிடுவதைக் கொண்டும் உதவி பெற்றுக் கொள்ளுங்கள்.🌵
என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.🌹

       🚥🚥🚥🚥🚥
1.

🚋இந்த செய்தி இப்னு அப்பாஸ் (ரழி) வழியாக நான்கு அறிவிப்பாளர் வரிசை ஊடாக பின்வரும் கிரந்தங்களில் பதியப்பட்டுள்ளது.🚄

📔حديث خالد بن مرداس السراج 18
📗الفوائد المعللة لأبي زرعة الدمشقي 80
📙فضائل رمضان لابن أبي الدنيا 63
📔مختصر قيام الليل للمروزي 1/104
📒المعجم الكبير للطبراني 11625
📓حديث أبي القاسم لابن المهندس 122
📕التاسع من المشيخة البغدادية للسلفي 222
📑سنن ابن ماجه 1683
📗الكامل لابن عدي 4/368
📘المستدرك على الصحيحين للحاكم 1551
📙الأحاديث المختارة للضياء 424
📔صحيح ابن خزيمة 1939
📒الترغيب والترهيب لقوام السنة 1796
📑المخلصيات لأبي طاهر المخلص 516
📓ذيل تاريخ بغداد لابن النجار 33
📕تاريخ أصبهان 2/107
📙شعب الإيمان للبيهقي 4413

🔦இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறும் زمعة بن صالح என்பவர் பலவீனமானவர் என்று ஹதீஸ் கலை அறிஞர்கள் கூறுகிறார்கள்.🔦

📚تهذيب الكمال ، تقريب التهذيب 2035📚

🔦இவர் அறிவித்தவை வேறு நம்பகமானவர்கள் வழியாக அறிவிக்கப்பட்டதால் இமாம் முஸ்லிம் அவற்றை துணை ஆதாரமாக பதிந்துள்ளார்.🔦

 📖من تكلم فيه وهو موثق للذهبي 116📖

🔦இவரது ஆசிரியரான              سلمة بن وهرام என்பவரை அபூஸுர்ஆ, இப்னு மயீன் ஆகிய இமாம்கள் அறிஞர்கள் நம்பகமானவர் என்று கூறியிருந்தாலும், அவரிடமிருந்து  زمعة அறிவிப்பவை கணக்கெடுக்கப்பட மாட்டாது என்று அறிஞர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.🔦

📙تهذيب الكمال 2515
📒الثقات لابن حبان 8284
📕الكامل لابن عدي 789

🔮இவரை இமாம் அபூதாவூத்,நஸாயீ ஆகியோர் பலவீனமானவர் என்கிறார்கள்.🔮

📗تهذيب الكمال 2474
📘تاريخ الإسلام 135

2.

🎓இதே செய்தி நபியவர்கள் சொன்னதாக தான் கேள்விப்பட்டதாக தாவூஸ் என்ற தாபியீ அறிவித்துள்ளார்.🎓

💎இது பின்வரும் கிதாபுகளில் பதிவாகியுள்ளது.💎

📕مصنف عبد الرزاق 7603
📙شعب الإيمان للبيهقي 4412
📘الآداب للبيهقي 676

🌹இது முர்ஸல் எனப்படும் பலவீனமான செய்தியாகும்.🌹

🔮அத்தோடு இவரிடமிருந்து அறிவிக்கும் إسماعيل بن شروس என்பவர் ஹதீஸ்களை இட்டுக்கட்டக் கூடியவர் ஆவார்.🔮

📕ميزان الاعتدال 895
📗الكامل لابن عدي 144

3.

💎இதை அபூஹுரைரா வழியாக  இமாம் இப்னு அபீ ஹாதம் தனது علل الحديث 701  இல் பதிந்துள்ளார்.💎

🎊இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறும்.🎊
 مروان الفزاري ، علي بن عبد العزيز
ஆகியோர் مدلس இருட்டடிப்பு செய்பவர்களாவர்.🚪

📱இமாம் இப்னு ஹஜர் مدلس களின் பட்டியலில் மூன்றாவது படித்தரத்தில் இவர்களை சேர்த்துள்ளார். இவ்வாறானவர்கள் தாம் கேட்டதை உறுதிப்படுத்தும் வார்த்தைகளைப் பிரயோகித்தால் மாத்திரமே ஏற்கப்படும்.📱

✏ஆனால் இவர்கள் தாம் கேட்டதை உறுதிப்படுத்தும் வார்த்தைகளைப் பிரயோகிக்கவில்லை.✏

💻அத்தோடு يزيد بن أبي يزيد الجزري என்பவர் யாரென்று அறியப்படவில்லை.
இந்த அறிவிப்பு பற்றி தனது தந்தை இமாம் அபூஹாதமிடம் கேட்டதாகவும், அதற்கவர் "யாரென்று அறியப்படாதவர்கள் இருக்கின்றனர்" என்றார். என இமாம் இப்னு அபீஹாதம் கூறுகிறார்.💻
📘علل الحديث 701📘

💿இந்த அறிவிப்புகளை இமாம் அல்பானி அவர்களும் பலவீனமானவை என்று கூறுகிறார்.💿
📗الضعيفة 2758📗


அல்லாஹு அஃலம்

ஷுஐப் உமரி பேருவளை

20/07/2016
[27/07 7:43 am] 💐 🕋 ShuaibFaiz (Umari) 🕋💐: தொடர் 🌎 41
🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷ரமழான் 10

   🔭 இட்டுக்கட்டப்பட்டது🔭

          🔬🔦🔦🔦🔬

🚥பின்வரும் சம்பவம் நேரடியாக ஸுன்னாவுக்கு முரணாக இருக்கிறது. என்றாலும் ஒரு செய்தியின் நம்பகத்தன்மை தீர்மானிக்கப்படுவது அதன் அறிவிப்பாளர் வரிசையை அடிப்படையாகக் கொண்டு தான் என்ற நல்லறிஞர்களின் வழிமுறையின் படி இதை பதிவு செய்கிறேன். எடுத்த எடுப்பில் கூறப்படும் விடயத்தை ஏதாவதொன்றுக்கு  முரண் என்று மறுப்பது வழிகெட்ட சிந்தனையாகும்.🚥

✏✏✏✏✏✏✏

🌠ஸஹ்ல் இப்னு அப்துல்லாஹ் துஸ்துரீ (ரஹ்) அவர்கள் பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை தான் சாப்பிடும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். ஆனால் ஸுன்னத்தைப் பின்பற்றுவதற்காக ரமழான் மாதத்தில் மட்டும் ஒரு பிடி உணவு சாப்பிட்டுக் கொள்வார்கள். நோன்பு திறக்க தண்ணீர் மட்டும் குடித்துக் கொள்வார்கள்.🌠

🔼🔼🔼🔼🔼🔼
இந்த சம்பவம் ஸஹர் சாப்பிடுவதன் அவசியத்தை உணர்த்துவதற்காக கூறப்படுகிறது. தமது வாழ்நாளை  நோன்பு நோற்பதிலேயே கழித்த பெரியார்கள் கூட ஸஹரை விடவில்லை எனும் தொனியில் கூறுவார்கள்.

🔮இச்செய்தியை 632 இல் மரணித்த ஸுஹ்ரவர்தீ என்ற பிரபல ஸூபி அறிஞர் தனது عوارف المعارف 144 இல் இவ்வாறு கூறப்படுகிறது என்று பதிந்துள்ளார். உறுதியாக கூறவில்லை.

💾இதனை 386 இல் மரணித்த அபூதாலிப் அல்மக்கீ தனது قوت القلوب இல் பதிவு செய்துள்ளதாக குறிப்பிடும் 1205 இல் மரணித்த مرتضى الزبيدي என்பவர் தனது اتحاف السادة المتقين என்ற إحياء علوم الدين உடைய விரிவுரை நூலில் "ரமழான் மாதம் வந்து விட்டால் (ஷவ்வால்) பிறை பார்க்கும் வரை சாப்பிடவே மாட்டார்" என்று கூறுகிறார்.

🚪ஆனால் இவ்வாறு قوت القلوب இல் காண முடியவில்லை.

🚨ஒரு நேரம் சிறிது உணவு உட்கொண்டு விட்டு குறிப்பிட்ட சில நாட்களை தன்னை வருத்தி  பசியோடு கழித்து பயிற்சி பெறும் வழமை ஸூபிய்யாக்களிடம் உள்ளது. அதனை தைய்
 طي (من طوى يطوي)
என்று அழைப்பர்.

🔰சூபித்துவத்தின் ஆணிவேரே தன்னை வருத்துவது தான் என்பதை அவர்களே கூறியுள்ளார்கள்.

 🔎பசி, உலகப் பற்றின்மை விருப்பமானவற்றையும் விட்டு விடுவது ஆகியவை மூலமே தஸவ்வுபை நாம் பெற்றுக் கொண்டோம்
📗الرسالة القشيرية 1/117📗

🍒இதுபோன்ற அவர்களின் கூற்றுக்களை ஹி 1407 இல் மரணித்த إحسان إلهي ظهير என்ற பாகிஸ்தானிய அறிஞர் எழுதிய التصوف - المنشأ والمصادر ، دراسات في التصوف ஆகிய கிதாபுகளில் காணலாம்.

🛀இப்பயிற்சியில் ஈடுபட்டு  பதினைந்து தொடக்கம் இருபது மற்றும் ஒரு மாத காலத்தைக் கழித்தவர்கள் பட்டியலில் இவரை قوت القلوب இன் ஆசிரியர் 2/279 இல் கூறியுள்ளார்.

🚩2/280 இல் 23 நாட்கள் கழித்தவர் பட்டியலிலும் கூறுகிறார்.

💡இதை 505 இல் மரணித்த إحياء علوم الدين இன் ஆசிரியரும்  3/83இல் கூறியுள்ளார்.

💥இச்சம்பவத்தின் அடிப்படையை அறிவிப்பாளர் ரீதியாக ஆராய்ந்த போது உஸூலுல் பிக்ஹில் இமாம் ஷாபிஈ உடைய அர்ரிஸாலா என்ற கிதாபின் தரத்தை தஸவ்வுபில் அடைய வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட الرسالة القشيرية  1/59 இல் அறிவிப்பாளர் வரிசையுடன் பதியப்பட்டுள்ளது.
இதன் ஆசிரியர் 465 இல் மரணித்தவராவார்.💥

🔓அதில் ஸஹ்ல் என்பவர் தனது இளமைக்காலம் பற்றியும் தனது
மாமனார் محمد بن سوار  என்பவர் மூலம் தான் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டதாகவும் கூறும் இவர் தான் எடுத்த பயிற்சியை இவ்வாறு கூறுகிறார்.

🔎ஆரம்பத்தில் ஒவ்வொரு நாளும் ஸஹர் நேரத்தில் மாத்திரம் உப்பு, கறி எதுவும் இல்லாமல் ஒரு ரொட்டி சாப்பிடுவேன். பின்பு ஒரு வேளை உணவுடன் மூன்று நாட்கள் வரை இருந்தேன். பின்னர் 5, 7, என்று 25 நாட்கள் வரை நீடித்தேன். இவ்வாறு இருபது வருடங்களாக இருந்தேன். என்கிறார்.🔓

🔇இந்த செய்தியை அறிவிக்கும் உமர் இப்னு வாஸில் என்பவரும்
அவரிடமிருந்து அறிவிக்கும் உபைதுல்லாஹ் இப்னு லுஃலுஃ என்பவரும்
 இட்டுக்கட்டுவார்கள் என்று சந்தேகிக்கப் படக்கூடிவர்களாவர்.
📘لسان الميزان 959📘

👑நான் நபிமார்களுக்கு முத்திரையானவன். அலீ வலிமார்களுக்கு முத்திரையானவர் என்று நபியவர்கள் சொன்னதாக வரும் செய்தியை இவர்கள் தான் இட்டுக்கட்டியுள்ளார்கள்.
📖تاريخ بغداد 5464📖
🌎ஸஹ்ல் என்பவர் ஹதீஸ்களை அறிவிக்கும் ஒரு ராவியாக இருப்பதால் அவர் பற்றி அறிவிப்பார்கள் பற்றிய கிதாபுகளில் கூறப்பட்டாலும் இந்த செய்தி கூறப்படுவதில்லை. மாறாக ஸூபிகளுடைய கிதாபுகளில் மட்டுமே காணலாம்.

🍜இச்செய்தி பற்றி அவரது நெருங்கிய மாணவர் இப்னு ஸாலிமிடம் "இவ்வாறு கூறப்படுகிறதே!" என்று கேட்கப்பட்ட போது அதற்கு பதிலளிக்காமல் " அவர் சாப்பாட்டை விடவில்லை. சாப்பாடு தான் அவரை விட்டது" என்று பதிலளிக்கிறார்
📕اللمع للطوسي 269📕

🍝70 நாட்கள் வரை சாப்பிடாமல் இருப்பார் என்றும் அவர் சாப்பிட்டால் பலவீனமடைவார். பசித்திருந்தால் திடகாத்திரமாக இருப்பார் என்றும் اللمع للطوسي 406 இல் பதிவாகியுள்ளது.
இதை அறிவிக்கும் المقحى ، طلحة العصائدي ஆகியோர் யாரென்று அறியப்படவில்லை.

💯எனவே இச்செய்தி இட்டுக்கட்டப்பட்டதாகும்.💯

💡💡💡💡💡
இந்த ஸஹ்ல் இப்னு அப்துல்லாஹ் என்பவர் ஸூபியாக இருந்தாலும் ஹதீஸ் துறையில் ஆர்வமுள்ளவராக இருந்தார்.

🌷ஒருவர் எது வரை ஹதீஸை கற்க வேண்டும் என்று கேட்கப்பட்ட போது "மரணம் வரைக்கும் கற்று, அவற்றை  எழுதி எஞ்சிய மையை அவரது கப்ரில் கொட்டப்பட வேண்டும்." என்றார்.

🍒"யார் இம்மையையும் மறுமையையும் நாடுகிறாரோ அவன் ஹதீஸைக் கற்றுக் கொள்ளட்டும். அதில் ஈருலகத்தின் பலன்கள் இருக்கின்றன."  என்றார்.
இவ்வாறு தான் முன்னைய ஸூபி அறிஞர்கள் இருந்தார்கள். ஆனால் இன்றுள்ளவர்கள் மடையர்களாகவும் வீணர்களாகவும் சோம்பேறிகளாகவும் சாப்பிடுவதை நோக்கமாகக் கொண்டவர்களாகவும் இருக்கின்றனர்.
📒تاريخ الإسلام 280📒

🍹இது போக 🍹

🍶இவ்வாறு தன்னை வருத்தி வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவது இஸ்லாத்தின் போதனை அல்ல.

💈ஹிந்து பௌத்த கிறிஸ்தவ துறவிகளிடமிருந்து வந்தவைகள் ஆகும்.

🏁தேவையானளவு தூக்கம்😴 சாப்பாடு🍞 ஓய்வு 🛀ஆகியவற்றை இஸ்லாம் அனுமதித்துள்ளது.

🌟🌟அல்லாஹ் கடமையாக்காத இவ்வாறான அமல்களை கஷ்டப்பட்டு செய்து நகரத்துக்கு செல்லும் கூட்டத்தை விட்டும் அல்லாஹ் பாதுகாப்பானாக. 🌟

அல்லாஹு அஃலம்

ஷுஐப் உமரி பேருவளை

27/07/2016
[31/07 10:35 am] 💐 🕋 ShuaibFaiz (Umari) 🕋💐: 🌙தொடர்  42 🌎 ஹஜ்  01🌙

🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷

   🔭 இஸ்ராஈலிய்யாத்🔭

          🔬🔦🔦🔦🔬

✒ஆதம் (அலை) அவர்களை அல்லாஹ் சுவர்க்கத்திலிருந்து இறக்கிய போது அவர்களுடன் தனது வீட்டையும் இறக்கி,
" ஆதமே! நான் உம்முடன் எனது வீட்டையும் இறக்குகிறேன். என்னுடைய அர்ஷை சுற்றுவது போல் இதை சுற்றி தவாப் செய்யப்பட வேண்டும். மேலும் எனது அர்ஷை நோக்கி தொழப்படுவது போல் இதை நோக்கி தொழப்பட வேண்டும்.  என அருளினான்.🏁

🌊பின்னர் நூஹ் (அலை) அவர்களின் காலத்தில் ஏற்பட்ட பிரளயத்தின் போது இவ்வாலயம் உயர்த்தப்பட்டது. அதன் பின் நபிமார்கள் அவ்விடத்தை சுற்றி தவாப் செய்தார்களே தவிர ஆலயம் அங்கிருக்கவில்லை.🌊

🌇இதற்குப் பிறகு தான் இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு அவ்விடத்தில் இறையில்லம் கட்டும்படி அல்லாஹ் உத்தரவிட்டான்.  அத்துடன் அது இருந்த இடத்தின் அடையாளத்தையும் தானே அறிவித்துக் கொடுத்தான். அவர் حراء ، ثبير ، لبنان ، الطور ، الجبل الأحمر ஆகிய ஐந்து மலைகளில் மூலம் அதை கட்டினார். 🌃

         🚥🚥🚥🚥🚥

🔎இச்செய்தியை அபூகிலாபா என்பவர் கூறியதாக,

📕أخبار مكة للأزرقي 1/63
📓العرش لمحمد بن عثمان بن أبي شيبة 40
📗تفسير الطبري 2/551

ஆகிய கிதாபுகளில் பதிவாகியுள்ளது. 🔎

✒இந்த செய்தியை இந்த அபூ கிலாபா என்பவர் அப்துல்லாஹ் இப்னு அம்ரு  (ரழி) வழியாகவும் அறிவித்துள்ளார். 💎
📔تفسير الطبري 2/550
📒المعجم الكبير للطبراني 14157

✒இதே செய்தியை கதாதா என்பவர் கூறியதாக
تفسيرالطبري 2042
مصنف ابن أبي شيبة 9096
இல் பதிவாகியுள்ளது.

🎀இந்தியாவில் இறக்கப்பட்ட ஆதம் நபியின் கால்கள் பூமியிலும் தலை வானத்திலும் இருந்ததாகவும், மலக்குகள்  வேண்டுதலின் படி 60 முழமாக அவரது உயரத்தை குறைத்ததாகவும், தான் இது வரை கேட்டுக் கொண்டிருந்த மலக்குகளின் தஸ்பீஹ் சத்தத்தை கேட்க முடியவில்லையே என அல்லாஹ்விடம்முறையிட்ட போது தான் இவ்வாறு ஆதம் நபிக்கு கூறியதாகவும் இவ்வறிவிப்பில் இடம்பெற்றுள்ளது.🎀

✒இதே செய்தியை عطاء بن أبي رباح கூறியதாக
📙مصنف عبد الرزاق 9090
📘تفسير الطبري 2041
இல் பதிவாகியுள்ளது. 🍇

✒இந்த عطاء என்பவர் அப்துல்லாஹ் இப்னு அம்ரு  (ரழி) வழியாகவும் அறிவித்துள்ளதாக
📕المعجم الكبير 14158
இல் பதிவாகியுள்ளது. 🌇

        ✨✨✨✨✨

🌹முதன்முதலில் கஃபாவை  நிர்மாணித்தது யார்? என்பதில் ஆறு கருத்துக்கள் கூறப்படுகின்றன.🌹

1. ஆதம்  (அலை) அவர்களுக்கு முன்னரே அல்லாஹ் இறக்கிவிட்டான். பச்சை நிற மரகதத்தினாலான இரண்டு கதவுகளும் சுவனத்து விளக்குகளும் இருந்தது.
📕مثير العزم الساكن لابن الجوزي 303 ،

நபியவர்கள் சொன்னதாக இப்னு அப்பாஸ் வழியாக வரும் இச் செய்தியின் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறும் محمد بن زياد الميموني என்பவரை "பொய்யர், இட்டுக்கட்டியவர்"என்று முஹத்திஸீன்கள் கூறுகிறார்கள்.
📗تقريب التهذيب 5890

✒இதை நபியவர்கள் சொன்னதாக அப்துல்லாஹ் இப்னு அம்ரு  (ரழி) வழியாகவும் வந்துள்ளது.
📔دلائل النبوة للبيهقي 2/45

🍒இது "இப்னு லஹீஆ என்பவர் தனியாக அறிவித்தது" என இமாம் பைஹகி கூறுகிறார். இதை இமாம் இப்னு கஸீர் கூறி விட்டு "அவர் பலவீனமானவர்" என்கிறார்.
📒البداية والنهاية 2/299
2.
மலக்குகள் கட்டினார்கள்.
📙مثير العزم لابن الجوزي 204

3.
ஆதம் (அலை) அவர்களுடன் அல்லாஹ் இறக்கினான். (மேலே கூறப்பட்டதைப் போல)

4.
ஆதம்  (அலை) அவர்கள் கட்டினார்கள்.
📚تفسير الطبري 2037 ، 2038 ، 📒دلائل النبوة 2/44

5.
ஷீத் (அலை) கட்டினார்கள்

6.
இப்ராஹீம் (அலை) அவர்கள் கட்டினார்கள்.
           ✨✨✨✨✨

🌇இந்த கருத்துக்கள் பற்றி இமாம் இப்னு கஸீர் பின்வருமாறு கூறுகிறார் :

💍இப்ராஹீம்  (அலை) அவர்களுக்கு முன்னர் கஃபா கட்டப்பட்டது பற்றி நபியவர்கள் சொன்னதாக எந்த ஸஹீஹான செய்திகளிலும் வரவில்லை.

💍ஆதம் நபியின் காலத்தில் கட்டப்பட்டதாக வரும் செய்திகள் வேதக்காரர்களிடம் இருந்து பெறப்பட்டவையே.

💍முதன்முதலில் கஃபாவை நிர்மாணித்ததும் கட்டியதும் இப்ராஹீம் நபி என்றே அல் குர்ஆன் கூறுகிறது.
அந்த இடம் அதற்கு முன் கண்ணியப்படுத்தப்பட்டது.

💍இவ்வாறான செய்திகளை நாம் நம்பவோ அல்லது மறுக்கவோ முடியாது.

💍நபியவர்கள் சொன்னதாக ஸஹீஹாக வந்தால் ஏற்றுக் கொள்வோம்.
تفسير ابن كثير 1/297 ، 2/78
البداية والنهاية 1/163 ، 2/2989

👑இதுபோன்ற கருத்தை இமாம் தபரியும் கூறியுள்ளார்.
تفسير الطبري 3/64

👑இக்கருத்தையே பல சமகால அறிஞர்களும் சரி காண்கிறார்கள்.
الشيخ محمد صالح المنجد ، موقع الإسلام سؤال وجواب 1903
الشيخ عبد العزيز بن باز
فتاوى اللجنة الدائمة / رقم الفتوى 3056

அல்லாஹு அஃலம்

ஷுஐப் உமரி பேருவளை

31/07/2016


🌙தொடர்  43 🌎 ஹஜ்  02🌙

🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷

   🔭 பித்துப் பிடித்தவரின் கதை🔭

                  🔬🔦🔦🔦🔬


🍈ஒருவர் ஏதாவதொரு விடயத்தில் அளவுக்கு அதிகமாக லயிக்கும் போது அதனாலேயே பித்துப் பிடித்து அலைவதைப் பார்க்கலாம்.  🍈

🌌சூபித்துவத்தின் அடிநாதமான
 " இறைவனை அடைய  தன்னை வருத்திக் கொள்ளல் " என்ற கோட்பாட்டின் படி, இடம் உடை உணவு போன்ற அத்தியாவசியத் தேவைகளை முற்றிலுமாகத் துறந்து மாற்று மதத் துறவிகளையும் மிஞ்சுமளவிற்கு சில சூபிகள் தம்மைத் தாமே வருத்திக் கொண்டதை வரலாறு நெடுகிலும் காணலாம். 🌌

💖சிலர் சுய தேவைகளையும் துறந்து  இறைவனைத் தேடி பாலைவனம் வனாந்திரம் என்று அலைந்து திரிந்து இறுதியில் பைத்தியம் முத்தியவராக மாறிவிட்டனர்.
இப்படியானவர்களை  சூபிகள் இஷ்க் என்னும் இறை காதல் வயப்பட்டவர்கள், இறை காதலர்கள் என்றெல்லாம் அழைப்பார்கள். 💖

🍑இன்னும் சிலர் தன்னை ஒரு பாவி என்று மனதில் ஆழமாகப் பதிய வைத்துக்கொண்டு
இறைவனை எப்படியாவது திருப்திப்படுத்த வேண்டுமே என்பதற்காக அளவுக்கதிகமாக கடுமையாக வழிபாடுகளில் ஈடுபட்டனர். இவர்களும் இறுதியில் பெரும்பாலும் பித்துப் பிடித்து அலைந்தனர். 🍑

🌳இவர்களுக்கு (மஜ்னூன்) அல்லது (மஜ்தூப்) என்ற சிறப்புப் பட்டம் ??? வழங்கப்படுகிறது.  அதாவது பைத்தியக்காரர் அல்லது பித்துப் பிடித்தவர்.🌳

🍓இவர்களை இறை முக்தி பெற்றவர்களாகவும் மஃரிபத்தை அடைந்த ஞானிகளாகவும் சூபிகள் கருதுவர்.🍓

🌴கலாநிதி தீன் முஹம்மத் எனும் இலங்கையின் சமகால சூபி அறிஞர் 27ஆகஸ்ட் 2009 ஆம் தேதி வீரகேசரி வெளியீடான‘விடிவெள்ளி’பத்திரிகையில் வெளியான நேர்காணலில்
இவ்வாறு கூறுகிறார் :

சிலவேளை,ஆத்மீகத்தில் மிகவும் லயித்துப் போகின்றதொரு நிலையிலும், சிலர் தமது சுய புத்தியை இழந்து விடுவதுண்டு. இதை அரபியில் ‘மஜ்தூப்’என்பார்கள். இதுகூட, சித்த சுவாதீனமற்றதொரு நிலைதான். (முற்றும்) 🌴

🌺இவர் தனது கலாநிதிப் பட்டதுக்காக ‘இறை காதல்’எனும் தலைப்பிலான ஆய்வை முன்வைத்தவர் ஆவார். 🌺

🎓இப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான் ஸஃதூன் மஜ்னூன் என்பவர். இவரை சூபிகள் மிகப் பெரிய அந்தஸ்தில் வைக்கின்றனர்.  🎓

🎇இவ்வளவுக்கும் இவர் ஒரு பைத்தியக்காரர். இவர் நல்ல கவிதைகளையும் கருத்துக்களையும் சொல்லியிருக்கிறார். எனவே ஓரளவு தெளிந்த பைத்தியக்காரர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.🎇

📗فوات الوفيات لمحمد صلاح الدين 2/48
📘الوافي بالوفيات للصفدي  15/118
📙عقلاء المجانين لابن حبيب النيسابوري


⚠இஸ்லாம் தொடர்ந்து ரமழான் ஒரு மாதம் மட்டுமே நோன்பிருக்க அனுமதித்திருக்கும் போது இவர்
தொடர்ந்து அறுபது வருடங்கள் நோன்பிருந்தார். இதனால் அவருக்கு புத்திக் கோளாறு ஏற்பட்டு விட்டது. மக்கள் அவரை பைத்தியக்காரர் என்று அழைத்தார்கள். ⚠

📔المنتظم في تاريخ الملوك والأمم لابن الجوزي 1037
📒صفة الصفوة  له 1/570
📑البداية والنهاية 13/675
📓النجوم الزاهرة في ملوك مصر والقاهرة لابن تغري بردي2/133

இப்படிப்பட்டவரின் சம்பவமே இது. சம்பவத்தின் சுருக்கம்.

🔮துன்னூன் மிஸ்ரி என்பவர் கூறுகிறார்:

🎆நான் ஒரு முறை தவாப் செய்துகொண்டிருந்த போது ஒரு மனிதர் பின்வருமாறு துஆ செய்தார்.🌴

🎆என்னுடைய இரட்சகனே அடியேன் உனது மிஸ்கீனான அடியான்.
உன்னுடைய தர்பாரிலிருந்து வெளியேற்றப்பட்டவன் ஆவான்.
உன்னுடைய வாசலிலிருந்து விரண்டு ஓடியவன் ஆவான். 🌴

🎆யா அல்லாஹ் எது உனக்கு மிகவும் சமீபித்திருக்கிறதோ அதை உன்னிடம் கேட்கிறேன்.
எது உனக்கு எல்லாவற்றையும் விட மிகப் பிரியமானதாக இருக்கிறதோ அந்த வணக்கங்களை உன்னிடம் கேட்கிறேன். 🌴

🎆யா அல்லாஹ் உன் அன்பு நேசர்களின் பொருட்டாலும் அன்பியாக்களின் வஸீலாவைக் கொண்டும் உன்னிடம் கேட்கிறேன்.
உன் அன்பு பானத்தின் ஒரு கோப்பையை எனக்கு அருந்தக் கொடுப்பாயாக.🌴

🎆உன்னுடைய மஃரிபத்தைக் கொண்டு எனது நெஞ்சில் இருந்து அறியாமை எனும் திரைகளை அகற்றி விடுவாயாக.
அதனால் நான் ஆசையெனும் சிறகடித்து உன் வரை பறந்து வந்து விடுவேன். 🌴

🎆மேலும் இர்பானுடைய தோட்டங்களில் உன்னிடம் தனிமையில் ரகசியம் பேசுவேன்.
என்று கூறி கண்ணில் விட்டு அழுதார். 🌴

⚠பின்னர் சிரித்தவராக திறந்த வெளியில் செல்ல ஆரம்பித்தார்.  இவர் இறை நேசத்தில் முக்தி பெற்றவராகவோ பைத்தியம் முத்தியவராக இருக்க வேண்டும் என்று எண்ணியவனாக அவரைப் பின்தொடர்ந்தேன்.⚠

🌺"ஏன் என்னை பின்தொடர்கிறீர். உமது வேலையைப் பாரும்" என்றார்.
"உமது பெயர் என்ன?" என்று நான் கேட்டதற்கு, "அப்துல்லாஹ் அல்லாஹ்வின் அடிமை" என்றார். தந்தையின் பெயரைக் கேட்டபோதும், "அப்துல்லாஹ்" என்றார். 🌺

🍑"எல்லோரும் அல்லாஹ்வின் அடிமைகள் என்பது தெரிந்த உண்மையே. அவர்களில் உமது பெயர் என்ன?"  என்று கூறும் என்றதும் "என் தந்தை எனக்கு சாதூன்" என பெயரிட்டார். என்றார்.  "சாதூன் மஜ்னூன் என்று பிரபலமானவரா?" என்று கேட்டதற்கு "ஆம் அவனே தான்" என்றார். 🍑

💖"தாங்கள் எந்த நல்லடியார்களின் பொருட்டால் துஆக் கேட்டீர்கள். ?" என்று கேட்டதற்கு "இஷ்க் என்னும் இறை நேசத்தை தன் வாழ்வின் இலட்சியமாக ஆக்கிக் கொண்ட ஒருவன் எவ்வாறு விரைவானோ அது போல் அவர்கள் அல்லாஹ்வின் பால் விரைவார்கள். தம் மனதை ஒன்றில் பறி கொடுத்த ஒருவரைப் போல் அவர்கள் உலகிலிருந்து விலகியிருப்பார்கள்." என்று கூறிவிட்டு💖

🌳 " ஏ துன்னூன் நீர் மஃரிபத்துக்குரிய காரண காரியங்களை அறிவிப்பதாக கேள்விப்பட்டேனே." என்றார்.
"ஆம் தங்களது அறிவு ஞானங்களிலிருந்து நான் பயனடைய விரும்புகிறேன்."  என்றேன். 🌳

🎇 அரபியில் இரு கவிதைகளைக் கூறினார்.

🔮"ஆரிபீன்களின் உள்ளம் சதாவும் இறை தியானத்தின் தோட்டத்தில் திளைத்திருக்கும். எது வரையென்றால் இறுதியாக அவனருகில் ஒரு தங்குமிடத்தை ஆக்கிக் கொள்வார்கள். 🔮

💞தனது இறை அன்பில் எந்தளவு தூய்மையான எண்ணத்துடன் ஈடுபடுவார்கள் என்றால் அவர்களை அவன் அன்பிலிருந்து எவ்வஸ்துவும் அகற்றிவிட முடியாது." 💞
என்றார்.

🌺ஹி 190 இல் மரணித்த ஸஃதூன் என்பவர் பற்றி கூறப்படும் வரலாற்று நூல்களிலோ அல்லது ஸூபிகள் பற்றி நூல்களிலோ (நான்  வாசித்த வரை. அல்லாஹு அஃலம் ) இந்த சம்பவத்தைக் காண முடியவில்லை. 🌺

🌌உ+ம்
المنتظم لابن الجوزي ، البداية والنهاية لابن كثير ، فوات الوفيات ، الوافي بالوفيات،  حلية الأولياء لأبي نعيم ، طبقات السلمي ، طبقات الشعراني.🌌

🍈406 இல் மரணித்த ابن حبيب النيسابوري என்பவர் தனது عقلاء المجانين ) ஓரளவு  தெளிந்த பைத்தியக்காரர்கள் என்ற  கிதாபில் 1/60  பதிந்துள்ளார்.  🍈

🌴துன்னூன் என்பவர் கூறியதாக கூறும் இவர் தனக்கும் அவருக்குமிடையிலான அறிவிப்பாளர் வரிசையை கூறவில்லை.  ஒரு வேளை இச்சம்பவம் மக்களிடம் பரவலாக பேசப்பட்டதால் அதை பதிந்திருக்கலாம். மேலும் இவரை இமாம் ஹாகிம் குறை கூறியுள்ளார் என்று السجزي அறிவித்துள்ளதாக இமாம் தஹபீ سير أعلام النبلاء 3768 இல் குறிப்பிடுகிறார்.  🌴

🚥எனவே இது இட்டுக்கட்டப்பட்டதாகும்🚥

🍑இவ்வாறான கட்டுக்கதைகளை விடுத்து ஸஹீஹான ஹதீஸ்களைத் தேடிப் படித்துப் பின்பற்றுவோம்.🍑

அல்லாஹு அஃலம்

 ஷுஐப் உமரி பேருவளை

06/08/2016