யார் இந்த மாலிக் இப்னு தீனார்??
++++++++++++++++++++++++++ +++++
இமாம்களின் பெயரில் கட்டுக்கதைகள் நமது சமூகத்தில் பரவியிருப்பதைப் போன்று அவர்களைப் பற்றி தவறான செய்திகளும் பரவியிருக்கின்றன. அப்படியான சம்பவங்களில் ஒன்று தான் இமாம் மாலிக் இப்னு தீனார் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் திருந்திய சம்பவம்.
சம்பவத்தின் சுருக்கம்
++++++++++++++++++++++++++
இமாம்களின் பெயரில் கட்டுக்கதைகள் நமது சமூகத்தில் பரவியிருப்பதைப் போன்று அவர்களைப் பற்றி தவறான செய்திகளும் பரவியிருக்கின்றன. அப்படியான சம்பவங்களில் ஒன்று தான் இமாம் மாலிக் இப்னு தீனார் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் திருந்திய சம்பவம்.
சம்பவத்தின் சுருக்கம்
ஊர் காவல்கார்ராக இருந்த அவர் எப்போதும் மது மயக்கத்திலே மூழ்கியிருந்தார். அவருடைய அடிமைப் பெண் மூலம் பிறந்த பெண் குழந்தையை மிகவும் நேசித்தார். அவருடைய கையில் இருக்கும் மதுக் கோப்பையை பறித்து அவருடைய மடியலேயே கொட்டிவிடுவாள். அவளுக்கு இரண்டு வயதாகும் போது மரணித்து விட்டாள்.
ஷஅபான் மாதம் பராஅத்துடைய இரவு அதுவும் வெள்ளி இரவு இஷாவும் தொழாமல் மது மயக்கத்திலேயே தூங்கிவிட்ட அவர் ஒரு கனவு கண்டார். கியாமத் நாள் உண்டாகி , கருநிறப் பாம்பொன்று தன்னை துரத்தி வரவதைக் கண்டு விரண்டோடுகின்றார். இடையில் எதிர்ப்பட்ட வெண்ணிற ஆடையணிந்தவரிடம் தன்னைக் காப்பாற்றுமாறு வேண்ட அவரோ கையை விரித்து விடுகின்றார். கடைசியாக தனது மகளை ஓரிடத்தில் சந்திக்கின்றார்.
அவர்களுடையஎன்ற வசனத்தை அவள் ஓதி உபதேசித்ததாகவும் கண்டெழுந்த அவர் அன்றிலிருந்து திருந்தி வாழ்ந்தார் என்று சம்பவம் நீள்கிறது.இருதயங்கள் அல்லாஹ்வையும், இறங்கியுள்ள உண்மையான (வேதத்)தையும் நினைத்து, அஞ்சி நடுங்கும் நேரம் ஈமான் கொண்டவர்களுக்கு வரவில்லையா? 57—16
நீங்கள் எப்படி திருந்தினீர்கள் என்ற கேட்டப்பட்ட போதே இவ்வாறு சொல்லியிருக்கிறார்.
இந்த சம்பவம் இமாம் மாலிக் இப்னு தீனாருக்கு மட்டுமல்லாமல் அப்துல்லாஹிப்னுல் முபாரக் போன்ற நல்லறிஞர்கள் பெயராலும் மிம்பர் மேடைகளில் உலாவருவதே இது இட்டுக்கட்டபட்டதென்பதற்கு மேலதிக சான்றாகும்.
இவர் யார் ?
இமாம் தஹபீ தனது ஸியரு அ/லாமின் நுபலா என்ற கிதாபில் பின்வருமாறு எழுதுகின்றார் -
இவர் முக்கியமான நல்ல உலமாக்களில் ஒருவர். நம்பகமான தாபிஈன்களில் உள்ளவர். அல் குர்ஆனைப் பிரதி செய்து விற்பதே அவரது தொழிலாக இருந்தது. இப்னு அப்பாஸ் ரழி காலத்தில் பிறந்தார். அனஸ் இப்னு மாலிக் , அஹ்னப் இப்னு கைஸ் , ஸஈதுப்னு ஜுபைர் , ஹஸன் பஸ்ரி , முஹம்மதுப்னு ஸீரீன் , காஸிம் இப்னு முஹம்மத் மேலும் இன்னும் பலரிடமிருந்தும் ஹதீஸ்களை அறிவித்திருக்கின்றார்......... இமாம் நஸாஈயும் இன்னும் பலரும் அவரை நம்பகமானவர் என உறுதிப்படுத்தியுள்ளனர். ...இவர் அறிவிக்கும் ஹதீஸ் ஹஸனுடைய தரத்தைச் சார்ந்தது.
இவருடைய ஹதீஸ்கள் நான்கு ஸுனன்களிலும், புகாரியில் முஅல்லகாகவும் இடம்பெற்றுள்ளது. ஹிஜ்ரி 127 அல்லது 130 களில் மரணித்தார் .
இந்த சம்பவம் எந்த கிரந்தத்தில் பதியப்பட்டுள்ளது ?
இவர் ஹதீஸ்களை அறிவிக்கும் ராவீ என்ற வகையில், அறிவிப்பாளர்கள் பற்றி எழுதப்பட்ட எந்த கிதாப்களிலும் இப்படியொரு சம்பவத்தை காண முடியவில்லை. ஹிஜ்ரி 620 இல் மரணித்த இமாம் இப்னு குதாமா தன்னுடைய அத்தவ்வாபீன் (திருந்தியவர்கள் ) என்ற கிதாபில் பதிவு செய்திருக்கறார்.
சுமார் 5 நூற்றாண்டுகளின் பின் பதிவு செய்த இந்த அறிஞர் தனக்கும் இமாம் மாலிக் இப்னு தீனாருக்கும் மத்தியிலுள்ள அறிவிப்பாளர் வரிசையைக் கூறவில்லை. மாலிக் இப்னு தீனாரைத் தொட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது என்றே குறிப்பிடுகிறார். ஒரு செய்திக்கு முன்னால் அறிவிக்கப்பட்டுள்ளது என்ற வாசகம் பிரயோகப்படுத்துவது அந்த செய்தி பலவீனம் என்பதை உணர்த்தும் என்பது ஹதீஸ் துறையில் அறியப்பட்ட விடயமாகும்.
இவரிடமிருந்து தான் இப்னுல் ஜஸரீ , அஜலூனீ போன்றவர்கள் தங்களது கிதாப்களில் பதிவு செய்திருக்கின்றனர். தவ்பா செய்து நல்லறம் புரியுமாறு மக்களை தூண்டுவதற்காக பிரபல்யமடைந்திருந்த இந்த சம்பவத்தை அவர் பதிவு செய்தருக்கலாம். அல்லாஹ் மிக அறிந்தவன்.
இவர் ஊர் காவல்கார்ராக இருந்ததாகவோ, எப்போதும் மது மயக்கத்தில் மூழ்கியிருந்த்தாகவோ அல்லது அவருக்கு ஒரு பெண் குழந்தை இருந்ததாகவோ எந்தவிதமான குறிப்புகளும் கிடையாது.
இமாம் மாலிக் இப்னு தீனார் அவர்கள் இயல்பிலேயேநல்லவராகவும், அல் குர்ஆனைப் பிரதி செய்து விற்பதே அவரது தொழிலாக இருந்துள்ளது.
உண்மையலேயே மோசமானவராயிருந்து திருந்தியிருந்தால், அறிவிப்பாளர்கள் பற்றி எழுதிய இமாம்கள் இப்படிக் கூறியிருப்பார்கள்.
இவர் ஊர் காவல்கார்ராக இருந்ததாகவோ, எப்போதும் மது மயக்கத்தில் மூழ்கியிருந்த்தாகவோ அல்லது அவருக்கு ஒரு பெண் குழந்தை இருந்ததாகவோ எந்தவிதமான குறிப்புகளும் கிடையாது.
இமாம் மாலிக் இப்னு தீனார் அவர்கள் இயல்பிலேயேநல்லவராகவும், அல் குர்ஆனைப் பிரதி செய்து விற்பதே அவரது தொழிலாக இருந்துள்ளது.
உண்மையலேயே மோசமானவராயிருந்து திருந்தியிருந்தால், அறிவிப்பாளர்கள் பற்றி எழுதிய இமாம்கள் இப்படிக் கூறியிருப்பார்கள்.
இவர் மோசமானவராகவும் மது அருந்தும் பழக்கம் உள்ளவராகவும் இருந்து, பின்னர் திருந்தி வணக்கவாளியாகவும் உலகப்பற்றில்லாதவராகவும் மாறிவிட்டார்.
துணை நின்றவை
سير أعلام النبلاء
تقريب التهذيب
ملتقى أهل الحيث
ஆக்கம் : ஷுஐப் உமரி
No comments:
Post a Comment