Monday, May 09, 2016

தொடர் 🌎 24 🍓🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷🍓

தொடர் 🌎 24

🍓🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷🍓

🔬ஆதாரபூர்வமானதும் 🔦 பலவீனமானதும் 🔬

📔 பலவீனமானது📔

🍯குடும்பப் பாரம் அதிகமில்லாத, அதிகம் தொழக்கூடிய ஒரு முஃமின் இருக்கிறார். தேவைக்குப் போதுமான உணவைக் கொண்டு பொறுமையாக வாழ்ந்து வருகிறார். நல்லவிதமாக வணக்கங்கள் செய்கிறார். பிரபல்யமின்றி அடக்கத்தோடு வாழ்கிறார். சீக்கிரமாகவே இவ்வுலகை விட்டுப் பிரிந்து செல்கிறார். வாரிசுகளுக்கு அதிகம் சொத்து சேர்த்து வைக்கவில்லை. அவரது மரணத்தின் போது அழுபவர்களும் அதிகமில்லை. இப்படிப்பட்ட முஸ்லிம் உண்மையில் பொறாமைப் படத்தக்கவராவார்.🍯

🍓இந்த செய்தி நபியவர்கள் சொன்னதாக ابو امامة அபூஉமாமா (ரழி ) அவர்கள் மூலம் மூன்று அறிவிப்பாளர் வரிசைகளில் சில வார்த்தை மாற்றங்களுடன் அறிவிக்கப்பட்டுள்ளது.🍓


(1)

இமாம்களான

🌷இப்னு மாஜா தனது ஸுனன் 4117 இலும்,

🌷அபுல் காஸிம் அல்அஸ்பஹானீ தனது தர்கீப்  الترغيب والترهيب  12 இலும்,

❌பதிவு செய்துள்ள அறிவிப்பில்
ஐயூப் இப்னு ஸுலைமான் ايوب بن سليمان எனும் இனந்தெரியாதவரும், ❌

❌ஸதகா இப்னு அப்தில்லா  صدقة بن عبد الله என்ற பலவீனமான அறிவிப்பாளரும்❌ இடம்பெற்றுள்ளதாக இமாம் பூஸீரீ  البوصيري தனது مصباح الزجاجة ஸவாஇத்  (4/215) இல் கூறுகிறார்.⏬


(2 )

இமாம்களான

🌷இப்னு அதீ தனது  الكامل அல்காமில் (6/383) இலும்,

🌷இப்னுல் அஃராபீ தனது الزهد والمتزهدين ஸுஹ்த் 104 இலும்,

🌷இவர் வழியாக பைஹகீ தனது ஷுஅபுல் ஈமான் 9867 இலும்,

❌பதிந்துள்ள அறிவிப்பில் ஹிலால் இப்னு உமர் هلال بن عمر الرقي என்பவர் இடம்பெற்றுள்ளார்❌

 🚫இவர் பலவீனமானவர் என்று இமாம் அபூ ஹாதம் கூறியதாக இப்னு ஹஜர் அல் அஸ்கலானீ தனது லிஸான் لسان الميزان  8288 இல் குறிப்பிட்டுள்ளார்.🚫

✏இவ் அறிவிப்பில் பலவீனமானவர்களும் இனந்தெரியாதவர்களும் இருக்கின்றனர் என்று ஷுஐப் அல் அர்னவூத் கூறுகிறார்.✏

📖22167 مسند أحمد بتحقيقه 📖

(3 )

இமாம்களான

🌷ஹுமைதீ தனது முஸ்னத் 933 இலும்,

🌷அஹ்மத் தனது முஸ்னத் 22197, 22198, 22167 இலும்,

🌷இப்னுல் அஃராபீ தனது ஸுஹ்த் 102, 105 இலும்,

🌷கத்தாபீ தனது  العزلة உஸ்லா 1/36 இலும்,

🌷இப்னுல் ஜௌஸீ தனது العلل المتناهية அல் இலல் 1053 இலும்,

🌷இப்னுல் முபாரக் தனது ஸுஹ்த் 2/54 இலும்,

🌷இவர் வழியாக திர்மிதீ தனது ஸுனன் 2347 இலும்,

🌷இப்னு அபித்துன்யா தனது التواضع والخمول  தவாழுஃ 13 இலும்,

🌷தபரானீ தனது அல் கபீர் 7829, 786 இலும்,

🌷ஹாகிம் 7148 இலும்,

🌷மேலும் الروياني  தனது முஸ்னத்
1219 இலும்,

🌷ஷஜரீ தனது அமாலீ 2429 , 2439 இலும்,

🌷பகவீ  البغوي தனது شرح السنة ஷரஹுஸ் ஸுன்னா 4044 இலும்,

🌷 மேலும் الخلعي  தனது الفوائد المنتقاة பவாஇத் 820 இலும்,

🌷அபுல் காஸிம் தனது தர்கீப் 135 இலும்,

🌷தயாலஸீ  தனது முஸ்னத் 1229 இலும்,

🌷இவர் வழியாக பைஹகீ தனது ஸுஹ்த் 196 இலும்,

🌷தனது ஷுஅபுல் ஈமான்  9873 இலும்,

🌷அபூ நுஐம் தனது حلية الأولياء  ஹில்யா 1/25 இலும்

🌷 ஆஜுர்ரீ தனது الغرباء 35 இலும்,

🌷இவர் வழியாக நக்காஷ் தனது فوائد العراقيين  20 இலும்,

🌷 தொடர்ந்து அப்துல் கனீ அல் மக்திஸீ أخبار الصلاة  10 இலும்,

பதிந்துள்ளனர்.

🚥🚥🚥🚥🚥

✒இவ்வறிவிப்பில் வரும் அலீ இப்னு யஸீத் علي بن يزيد الألهاني என்பவர் பலவீனமானவர் என்று ஹதீஸ் துறை அறிஞர்கள் கூறுகிறார்கள்


✒இவர் அபூ உமாமா வழியாக அறிவிக்கும் அனைத்து ஹதீஸ்களும் பலவீனமானவை என்றும் ஹதீஸ் கலை அறிஞர்கள் கூறுகிறார்கள்
📖 4154 تهذيب الكمال 📖

💡🚧🚧🚧💡

🔬இமாம்களான

 🌹ஸுபைதீ ,  இராகீ சொன்னதாக تخريج أحاديث الإحياء  5/1966 இலும்,

🌹இப்னுல் ஜௌஸிالعلل المتناهية  1053 இலும்,

🌹முல்லா அலீ காரீ தனது الموضوعات الكبرى அல் மௌழூஆத் 1/484 இலும்,

இதை பலவீனமானதென்று கூறியுள்ளார்கள்.🔬

👇👇👇

இதே செய்தியை அனஸ் (ரழி ) அறிவித்ததாக பிஷ்ர் இப்னுல் ஹுஸைன் என்பவரிடம் இருந்த ஸுபைர் இப்னு அதீ என்பவர் சொன்னதாக இட்டுக்கட்டப்பட்ட ஒரு பிரதியிலும் காணப்படுகிறது.
📖 لسان الميزان 1468 / تاريخ الإسلام 5/39 📖

🌹🌴🌳🌱🌹

🍓உலகப் பற்றின்மை பற்றி ஸஹீஹான ஹதீஸ்களில் கூறப்படுவதால் இதை விட்டு ஆதாரபூர்வமானதை மாத்திரம் முன்வைத்து நாமும் அமல் செய்வோம் 🍓

அல்லாஹு அஃலம்

ஷுஐப் உமரி

09/05/2016

தொடர் 🌎 23 🍓🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷🍓

தொடர் 🌎 23

🍓🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷🍓

🔬ஆதாரபூர்வமானதும் 🔦 பலவீனமானதும் 🔬

📔 இட்டுக்கட்டப்பட்ட சம்பவம் 📔

சம்பவத்தின் சுருக்கம்

🏇🏇டமஸ்கஸ் நகரில் இருந்த நம்பிக்கையான ஒரு மனிதர்,  மக்களையும் மக்களின் பொருட்களையும்  ஸபதானீ என்ற ஊருக்கு பாதுகாப்பாக கொண்டு போய்ச் சேர்ப்பதைத் தொழிலாகக் கொண்டிருந்தார்.

🏇ஒரு நாள் ஒருவரின் பொருட்களை எடுத்துச் செல்லும்  வழியில், ஒரு மனிதன் கூலிக்கு தன்னையும் கூட்டிச் செல்லுமாறு வேண்ட, அவரும் சம்மதித்தார்.

🚩🔀செல்லும் வழியில் எதிர்ப்பட்ட இரு பாதைகளில், வழமையாகச் செல்லாத பாதையில் அம் மனிதன் அழைத்துச் சென்றான்.

💀💀ஆளரவமற்ற வெருட்சியான ஒரு பயங்கரமான  மலையடிவாரத்தை அடைந்ததும், அவன் இறங்கி கொலை செய்யப்போவதாக மிரட்டினான்.
பிணங்களும் இருப்பதாகத் தோன்றியது.

😢😩இருக்கும் பொருட்களை எடுத்துக் கொண்டு தன்னை விட்டு விடுமாறு அழுது கெஞ்சியும், அல்லாஹ்வைப் பற்றியும் அவனது தண்டனைகள் பற்றியும் எச்சரித்தும் பலனளிக்கவில்லை.

🍑🍑இரண்டு ரக்அத்துகள் தொழுவதற்கு அனுமதி கேட்டதற்கு, "அவசரமாகக் தொழுவது முடி" என்றான். தொழ ஆரம்பித்தவருக்கு குர்ஆன் வசனங்கள் ஞாபகம் வராது தடுமாறிக் கொண்டிருக்க அவன் அவசரப்படுத்தினான். அப்போது  அல்லாஹ் அவரது நாவிலிருந்து  பின் வரும் வசனத்தை ஓத வைத்தான்.
 📚أمن يجيب المضطر إذا دعاه ويكشف السوء

திக்கற்றவர் அவனை அழைக்கும் போது பதில் தருபவனும், துன்பத்தை நீக்குபவனும் யார் ? (27/62)📚

🏇🏇அப்போது அங்கு வந்த குதிரை வீரரொருவர் அவனைத் தன்னிடமிருந்த ஆயுதத்தால் குறி பார்த்து அம்மனிதனைக் கொன்று இவரைக் காப்பாற்றினார். தாங்கள் யாரென்று கேட்டதற்கு "திக்கற்றவருக்கு உதவி செய்பவனின் தூதர்" என்று கூறி விட்டு போய்விட்டார். அம்மனிதர் பாதுகாப்பாக டமஸ்கஸை வந்தடைந்தார்.🏇🏇

🚫❌🚫❌🚫❌🚫

இச்சம்பவத்தை சொல்லக்கூடியவர்கள் அதில் சொல்லப்படாதவைகளையும் சேர்த்துக் கூறுவது இது பொய் என்பதற்கு மேலதிக சான்றாகும்.🚫❌

🔬💡💡💡🔬

🌽இதை இமாம் இப்னு அஸாகிர் தனது 📖 (டமஸ்கஸ் நகர வரலாறு) تاريخ دمشق 9271 📖 இல்

🍯 "யாரென்று அறியப்படாதவர்கள்" பற்றிய பாடத்தில் பதிந்துள்ளார். 🍯

🚉 இந்த சம்பவத்தில் இடம் பெறும்
அந்த கூலிக்காரர் யாரென்ற தகவல் இல்லை. 🚉

💡🔭🔭🔭💡

இதை அபூபக்ர் அத்தீநூரி சொன்னதாகக் கூறும்,

❌அலீ இப்னு அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ழம்❌

 என்பவர் பற்றி இமாம்கள் குறைகூறியிருக்கிறார்கள் என்று  இமாம் இப்னு அஸாகிர் அதே கிதாபில் 📖 4948 تاريخ دمشق 📖 இல் குறிப்பிட்டுள்ளார்.🔋

🔮இவர் நம்பத்தகுந்தவரல்ல. இட்டுக்கட்டுவார் என்று சந்தேகிக்கப்படக் கூடியவர். என்று இமாம் தஹபீ தனது

👉📖 ஸியர்  17/275 سير أعلام النبلاء இலும், 5879  ميزان الاعتدال இலும்,📖

👉இமாம்  الزركلي ஸர்கலீ الأعلام   📖 4/304 📖 இலும் கூறியுள்ளார்கள்.

🚥🚥🚥🚥🚥

📓அத்தோடு இட்டுக்கட்டப்பட்ட பல சம்பவங்கள் அடங்கிய 📖  بهجة الاسرار 📖 எனும் புத்தகத்தை எழுதியுள்ளதோடு,  📓

📑ரஜப் மாதத்தின் முதல் வெள்ளியிரவு மஃரிபுக்கும் இஷாவுக்கும் இடையில் 12 ரக்அத்துகள் அடங்கிய صلاة الرغائب என்று புதிய தொழுகை முறை பற்றிய ஹதீஸை இட்டுக்கட்டியவர்  இவர் தான் என  அறிஞர்கள் சந்தேகிக்கிறார்கள்.

 என்று இமாம் தஹபீ தனது 📖تاريخ الاسلام  9/238 📖 இலும்,📖 ميزان الاعتدال 5878 📖 இலும் குறிப்பிடுகிறார்.📑

 💡👓🚩💡

இப்னு ஹஜர் அஸ்கலானீ 📖 لسان الميزان 5426 📖 இல் இவர் சொன்ன பொய்யான சில விபரங்களையும்  பதிந்துள்ளார்.


👇👇👇

எனவே இது ஒரு இட்டுக்கட்டப்பட்ட சம்பவமாகும்.

🚥🚥🚥

🍑இதுபோன்ற இஸ்லாத்தின் பெயரால் புனையப்பட்டவைகளை ஓரங்கட்டி நமது புனிதமான இஸ்லாத்தை புனிதமானவற்றைக் கொண்டே முன்வைத்து நாமும் அமல் செய்வோம்.🍑

அல்லாஹு அஃலம்

ஷுஐப் உமரி

5/5/2016

தொடர் 🌎 22 🍓🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷🍓

தொடர் 🌎 22

🍓🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷🍓

🔬ஆதாரபூர்வமானதும் 🔦 பலவீனமானதும் 🔬

📔 பலவீனமான செய்தி 📔

🍎ஒருவருக்கு ஏதாவது தேவை ஏற்பட்டால், அது இம்மை மறுமையின் எந்தத் தேவையாக இருந்தாலும், அவர் நல்ல முறையில் வுழூச் செய்து இரண்டு ரக்அத்துகள் தொழுதபின்னர்,
 அல்லாஹ்வைப் புகழ்ந்து நபி  (ஸல் ) அவர்கள் மீது ஸலவாத் சொல்லி பின்வரும் துஆவை ஓத வேண்டும். இன்ஷா அல்லாஹ் அவருடைய தேவை நிச்சயம் நிறைவேறும்.🍎

🍎 لا إله إلا الله الحليم الكريم،  سبحان الله رب العرش العظيم، الحمد لله رب العالمين. أسألك موجبات رحمتك، وعزائم مغفرتك، والعزيمة من كل بر، والسلامة من كل إثم، لا تدع لنا ذنبا إلا غفرته، ولا هما إلا فرجته،  ولا حاجة هي لك رضا إلا قضيتها، يا أرحم الراحمين.🍎

🔭💡💡💡💡🔭

🌾இதனை இமாம்களான

🌽திர்மிதீ தனது ஸுனனிலும் 479,

 🌽இவர் வழியாக السبكي ஸுப்கீ தனது முஃஜம் 1/360 இலும்,

🌽மற்றும் இப்னுல் அஃராபீ தனது முஃஜம் 2360 இலும் ,

🌽அப்துல் கனீ அல்மக்திஸீ  عبد الغني المقدسي தனது الترغيب في الدعاء அத்தர்கீப் 60 இலும்,

🌽இவர் வழியாக الضياء ழியாஉ தனது العدة للكرب அல்உத்தா 28 இலும்,

 🌽மற்றும் ابن قدامة இப்னு குதாமா தனது فضل يوم التروية  யௌமுத் தர்வியா 35 இலும்,

🌽பைஹகீ தனது ஷுஅபுல் ஈமான் 9225 இலும்,

பதிந்துள்ளனர்.🌾

🍯🔦👓🍯

🌾இதே விடயத்தை சில வார்த்தை மாற்றங்களுடன் இமாம்களான

🌽இப்னு மாஜா தனது ஸுனன் 1384 இலும்,

🌽இவர் வழியாக عبد الغني المقدسي  அல்மக்திஸீ தனது   أخبار الصلاة ஸலாத் 56 இலும்,

🌽இப்னுன் நகூர் ابن النقور தனது அல்பவாஇத் الفوائد الحسان 14 இலும்,


🌽பஸ்ஸார் தனது முஸ்னதிலும் 3374,

🌽அபுல் காஸிம் தனது المستغيثين بالله அல் முஸ்தகீஸீன் 32 இலும்,

🌽அபூ இஸ்ஹாக் தனது المنتخب முன்தகப் 336 இலும்,

பதிந்துள்ளனர்.🌾

         🚥🚥🚥🚥🚥

🌳இந்த அறிவிப்பில் இடம் பெறும் அபுல் வர்கா ابو الورقاء فائد بن عبد الرحمن என்பவர் பலவீனமானவர் என்று இமாம்களான  அஹ்மத், இப்னு மஈன், அபூ ஹாதம், அபூ ஸுர்ஆ, அபூதாவூத், திர்மிதீ, நஸாயீ, இப்னு ஹிப்பான், ஸாஜீ, உகைலீ, தாரகுத்னீ ஆகியோர் கூறுகின்றார்கள்.🌳

🌱இவர் عبد الله بن أبي أوفى  இப்னு அபீஅவ்பா (ரழி ) சொன்னதாக இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை அறிவித்துள்ளார். என்று இமாம்களான இப்னு அபீஹாதம், ஹாகிம் ஆகியோர் கூறுகின்றார்கள்.🌱

📖 تهذيب الكمال 34/390 📖

🍑இவர் பலவீனமானவராக இருந்தாலும் இவர்  மாத்திரமே இதை அறிவிப்பதால் தான் இந்த செய்தியை பதிவு செய்தேன் என்று இமாம் பஸ்ஸார் கூறுகிறார்கள்.🍑

❌🚫
எனவே இது பலவீனமானதாகும்.❌🚫

அல்லாஹு அஃலம்

ஷுஐப் உமரி

03/05/2016

Tuesday, May 03, 2016

தொடர் 🌎 21 🍓🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷🍓

தொடர் 🌎 21

🍓🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷🍓

🔬ஆதாரபூர்வமானதும் 🔦 பலவீனமானதும் 🔬

📔 பலவீனமான செய்தி 📔

🍎அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரழி ) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

 ☁நபியவர்களுடைய குடும்பத்தினருக்கு பஞ்சம் ஏற்பட்டால் அவர்களைத் தொழுமாறு கட்டளையிடுவார்கள்.
பிறகு பின்வரும் வசனத்தை ஓதிக் காட்டுவார்கள்.
 وامر أهلك بالصلوة واصطبر عليها، لا نسألك رزقا، نحن نرزقك.
உமது குடும்பத்தினரைத் தொழுமாறு ஏவுவீராக. நீரும் அதைக் கடைபிடித்து வருவீராக. நாம் உம்மிடம் எதையும் கேட்கவில்லை. உமக்கு வேண்டிய எல்லாத் தேவைகளையும் நாமே வழங்குகிறோம். ☁

🚥🚥🚥🚥🚥

இந்த செய்தியை இமாம்களான

🌽தபரானீ தனது  المعجم الأوسط அல் அவ்ஸத் 886 இலும்,

🌽இவர் வழியாக அபூ நுஐம் حلية الأولياء  ஹில்யா 8/176 இலும்,

🌽ழியாஉ الضياء  தனது அல் முக்தாராالأحاديث المختارة  434 இலும்,

🌽மற்றும் பைஹகீ   தனது  شعب الإيمان ஷுஅபுல் ஈமான் 2911, 9255 இலும்,

🌽வாஹிதீ الواحدي  தனது الوسيط அல் வஸீத் 3/228 இலும்,

🌽தஹபீ الذهبي தனது سير أعلام النبلاء ஸியரில் 8/411  பதிந்துள்ளனர்.

💡🔬🔬🔬💡

🌾இதை முஹம்மத் இப்னு ஹம்ஸா محمد بن حمزة بن يوسف بن عبد الله بن سلام என்பவர், தனது பாட்டனாரான அப்துல்லாஹ் இப்னு  ஸலாம் (ரழி ) சொன்னதாக அறிவிக்கிறார்.🌾

🚪இது தொடர்பு அறுந்த செய்தி என்று இமாம் தஹபீ கூறுகிறார்.
📖 سير أعلام النبلاء 8/411 📖

🚪முஹம்மத் என்பவர் தனது பாட்டனாரிடமிருந்து கேட்டிருக்க வாய்ப்பில்லை என்றும்,  தனது தந்தை வழியாகவே பாட்டனாரின் செய்திகளை அறிவிக்கின்றார் என்றும் இமாம் இராகீ  குறிப்பிட்டுள்ளார். 🚪
 📖 المغني 4069 📖

👇👇👇

👓🔭 இமாம் தபரானீ உடைய  الأوسط அல் அவ்ஸத் இன் சில பதிப்புகளில் முஹம்மத் என்பவர் தனது தந்தை ஹம்ஸா حمزة بن يوسف வழியாக பாட்டனார் சொன்னதாகத்  தான் இதை  அறிவித்துள்ளார் என்றும் இடம் பெற்றுள்ளது.🔦
💡( இது பற்றி தனியான ஆய்வுகள் கூட எழுதப்பட்டுள்ளன)💡

🍯 இதை சரிகண்டாலும், இவருடைய தந்தை ஹம்ஸா என்பவருடைய நம்பகத்தன்மை  பற்றிய தகவல்கள் இல்லை. 🍯

🌾இமாம்களான புகாரி, இப்னு அபீஹாதம், தஹபீ போன்றோர் இவரின் பெயரை மாத்திரமே குறிப்பிட்டுள்ளார்கள் என்று இமாம் அல்பானி  அவர்கள் கூறுகின்றார்கள்.👓🔭

📖 الضعيفة 3/516, إرواء الغليل 5/219 📖

 எனவே இது பலவீனமானதாகும்.

அல்லாஹு அஃலம்

ஷுஐப் உமரி
02/05/2016 --- 24/07/1437