Tuesday, May 03, 2016

தொடர் 🌎 21 🍓🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷🍓

தொடர் 🌎 21

🍓🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷🍓

🔬ஆதாரபூர்வமானதும் 🔦 பலவீனமானதும் 🔬

📔 பலவீனமான செய்தி 📔

🍎அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரழி ) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

 ☁நபியவர்களுடைய குடும்பத்தினருக்கு பஞ்சம் ஏற்பட்டால் அவர்களைத் தொழுமாறு கட்டளையிடுவார்கள்.
பிறகு பின்வரும் வசனத்தை ஓதிக் காட்டுவார்கள்.
 وامر أهلك بالصلوة واصطبر عليها، لا نسألك رزقا، نحن نرزقك.
உமது குடும்பத்தினரைத் தொழுமாறு ஏவுவீராக. நீரும் அதைக் கடைபிடித்து வருவீராக. நாம் உம்மிடம் எதையும் கேட்கவில்லை. உமக்கு வேண்டிய எல்லாத் தேவைகளையும் நாமே வழங்குகிறோம். ☁

🚥🚥🚥🚥🚥

இந்த செய்தியை இமாம்களான

🌽தபரானீ தனது  المعجم الأوسط அல் அவ்ஸத் 886 இலும்,

🌽இவர் வழியாக அபூ நுஐம் حلية الأولياء  ஹில்யா 8/176 இலும்,

🌽ழியாஉ الضياء  தனது அல் முக்தாராالأحاديث المختارة  434 இலும்,

🌽மற்றும் பைஹகீ   தனது  شعب الإيمان ஷுஅபுல் ஈமான் 2911, 9255 இலும்,

🌽வாஹிதீ الواحدي  தனது الوسيط அல் வஸீத் 3/228 இலும்,

🌽தஹபீ الذهبي தனது سير أعلام النبلاء ஸியரில் 8/411  பதிந்துள்ளனர்.

💡🔬🔬🔬💡

🌾இதை முஹம்மத் இப்னு ஹம்ஸா محمد بن حمزة بن يوسف بن عبد الله بن سلام என்பவர், தனது பாட்டனாரான அப்துல்லாஹ் இப்னு  ஸலாம் (ரழி ) சொன்னதாக அறிவிக்கிறார்.🌾

🚪இது தொடர்பு அறுந்த செய்தி என்று இமாம் தஹபீ கூறுகிறார்.
📖 سير أعلام النبلاء 8/411 📖

🚪முஹம்மத் என்பவர் தனது பாட்டனாரிடமிருந்து கேட்டிருக்க வாய்ப்பில்லை என்றும்,  தனது தந்தை வழியாகவே பாட்டனாரின் செய்திகளை அறிவிக்கின்றார் என்றும் இமாம் இராகீ  குறிப்பிட்டுள்ளார். 🚪
 📖 المغني 4069 📖

👇👇👇

👓🔭 இமாம் தபரானீ உடைய  الأوسط அல் அவ்ஸத் இன் சில பதிப்புகளில் முஹம்மத் என்பவர் தனது தந்தை ஹம்ஸா حمزة بن يوسف வழியாக பாட்டனார் சொன்னதாகத்  தான் இதை  அறிவித்துள்ளார் என்றும் இடம் பெற்றுள்ளது.🔦
💡( இது பற்றி தனியான ஆய்வுகள் கூட எழுதப்பட்டுள்ளன)💡

🍯 இதை சரிகண்டாலும், இவருடைய தந்தை ஹம்ஸா என்பவருடைய நம்பகத்தன்மை  பற்றிய தகவல்கள் இல்லை. 🍯

🌾இமாம்களான புகாரி, இப்னு அபீஹாதம், தஹபீ போன்றோர் இவரின் பெயரை மாத்திரமே குறிப்பிட்டுள்ளார்கள் என்று இமாம் அல்பானி  அவர்கள் கூறுகின்றார்கள்.👓🔭

📖 الضعيفة 3/516, إرواء الغليل 5/219 📖

 எனவே இது பலவீனமானதாகும்.

அல்லாஹு அஃலம்

ஷுஐப் உமரி
02/05/2016 --- 24/07/1437

No comments: