Monday, May 09, 2016

தொடர் 🌎 24 🍓🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷🍓

தொடர் 🌎 24

🍓🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷🍓

🔬ஆதாரபூர்வமானதும் 🔦 பலவீனமானதும் 🔬

📔 பலவீனமானது📔

🍯குடும்பப் பாரம் அதிகமில்லாத, அதிகம் தொழக்கூடிய ஒரு முஃமின் இருக்கிறார். தேவைக்குப் போதுமான உணவைக் கொண்டு பொறுமையாக வாழ்ந்து வருகிறார். நல்லவிதமாக வணக்கங்கள் செய்கிறார். பிரபல்யமின்றி அடக்கத்தோடு வாழ்கிறார். சீக்கிரமாகவே இவ்வுலகை விட்டுப் பிரிந்து செல்கிறார். வாரிசுகளுக்கு அதிகம் சொத்து சேர்த்து வைக்கவில்லை. அவரது மரணத்தின் போது அழுபவர்களும் அதிகமில்லை. இப்படிப்பட்ட முஸ்லிம் உண்மையில் பொறாமைப் படத்தக்கவராவார்.🍯

🍓இந்த செய்தி நபியவர்கள் சொன்னதாக ابو امامة அபூஉமாமா (ரழி ) அவர்கள் மூலம் மூன்று அறிவிப்பாளர் வரிசைகளில் சில வார்த்தை மாற்றங்களுடன் அறிவிக்கப்பட்டுள்ளது.🍓


(1)

இமாம்களான

🌷இப்னு மாஜா தனது ஸுனன் 4117 இலும்,

🌷அபுல் காஸிம் அல்அஸ்பஹானீ தனது தர்கீப்  الترغيب والترهيب  12 இலும்,

❌பதிவு செய்துள்ள அறிவிப்பில்
ஐயூப் இப்னு ஸுலைமான் ايوب بن سليمان எனும் இனந்தெரியாதவரும், ❌

❌ஸதகா இப்னு அப்தில்லா  صدقة بن عبد الله என்ற பலவீனமான அறிவிப்பாளரும்❌ இடம்பெற்றுள்ளதாக இமாம் பூஸீரீ  البوصيري தனது مصباح الزجاجة ஸவாஇத்  (4/215) இல் கூறுகிறார்.⏬


(2 )

இமாம்களான

🌷இப்னு அதீ தனது  الكامل அல்காமில் (6/383) இலும்,

🌷இப்னுல் அஃராபீ தனது الزهد والمتزهدين ஸுஹ்த் 104 இலும்,

🌷இவர் வழியாக பைஹகீ தனது ஷுஅபுல் ஈமான் 9867 இலும்,

❌பதிந்துள்ள அறிவிப்பில் ஹிலால் இப்னு உமர் هلال بن عمر الرقي என்பவர் இடம்பெற்றுள்ளார்❌

 🚫இவர் பலவீனமானவர் என்று இமாம் அபூ ஹாதம் கூறியதாக இப்னு ஹஜர் அல் அஸ்கலானீ தனது லிஸான் لسان الميزان  8288 இல் குறிப்பிட்டுள்ளார்.🚫

✏இவ் அறிவிப்பில் பலவீனமானவர்களும் இனந்தெரியாதவர்களும் இருக்கின்றனர் என்று ஷுஐப் அல் அர்னவூத் கூறுகிறார்.✏

📖22167 مسند أحمد بتحقيقه 📖

(3 )

இமாம்களான

🌷ஹுமைதீ தனது முஸ்னத் 933 இலும்,

🌷அஹ்மத் தனது முஸ்னத் 22197, 22198, 22167 இலும்,

🌷இப்னுல் அஃராபீ தனது ஸுஹ்த் 102, 105 இலும்,

🌷கத்தாபீ தனது  العزلة உஸ்லா 1/36 இலும்,

🌷இப்னுல் ஜௌஸீ தனது العلل المتناهية அல் இலல் 1053 இலும்,

🌷இப்னுல் முபாரக் தனது ஸுஹ்த் 2/54 இலும்,

🌷இவர் வழியாக திர்மிதீ தனது ஸுனன் 2347 இலும்,

🌷இப்னு அபித்துன்யா தனது التواضع والخمول  தவாழுஃ 13 இலும்,

🌷தபரானீ தனது அல் கபீர் 7829, 786 இலும்,

🌷ஹாகிம் 7148 இலும்,

🌷மேலும் الروياني  தனது முஸ்னத்
1219 இலும்,

🌷ஷஜரீ தனது அமாலீ 2429 , 2439 இலும்,

🌷பகவீ  البغوي தனது شرح السنة ஷரஹுஸ் ஸுன்னா 4044 இலும்,

🌷 மேலும் الخلعي  தனது الفوائد المنتقاة பவாஇத் 820 இலும்,

🌷அபுல் காஸிம் தனது தர்கீப் 135 இலும்,

🌷தயாலஸீ  தனது முஸ்னத் 1229 இலும்,

🌷இவர் வழியாக பைஹகீ தனது ஸுஹ்த் 196 இலும்,

🌷தனது ஷுஅபுல் ஈமான்  9873 இலும்,

🌷அபூ நுஐம் தனது حلية الأولياء  ஹில்யா 1/25 இலும்

🌷 ஆஜுர்ரீ தனது الغرباء 35 இலும்,

🌷இவர் வழியாக நக்காஷ் தனது فوائد العراقيين  20 இலும்,

🌷 தொடர்ந்து அப்துல் கனீ அல் மக்திஸீ أخبار الصلاة  10 இலும்,

பதிந்துள்ளனர்.

🚥🚥🚥🚥🚥

✒இவ்வறிவிப்பில் வரும் அலீ இப்னு யஸீத் علي بن يزيد الألهاني என்பவர் பலவீனமானவர் என்று ஹதீஸ் துறை அறிஞர்கள் கூறுகிறார்கள்


✒இவர் அபூ உமாமா வழியாக அறிவிக்கும் அனைத்து ஹதீஸ்களும் பலவீனமானவை என்றும் ஹதீஸ் கலை அறிஞர்கள் கூறுகிறார்கள்
📖 4154 تهذيب الكمال 📖

💡🚧🚧🚧💡

🔬இமாம்களான

 🌹ஸுபைதீ ,  இராகீ சொன்னதாக تخريج أحاديث الإحياء  5/1966 இலும்,

🌹இப்னுல் ஜௌஸிالعلل المتناهية  1053 இலும்,

🌹முல்லா அலீ காரீ தனது الموضوعات الكبرى அல் மௌழூஆத் 1/484 இலும்,

இதை பலவீனமானதென்று கூறியுள்ளார்கள்.🔬

👇👇👇

இதே செய்தியை அனஸ் (ரழி ) அறிவித்ததாக பிஷ்ர் இப்னுல் ஹுஸைன் என்பவரிடம் இருந்த ஸுபைர் இப்னு அதீ என்பவர் சொன்னதாக இட்டுக்கட்டப்பட்ட ஒரு பிரதியிலும் காணப்படுகிறது.
📖 لسان الميزان 1468 / تاريخ الإسلام 5/39 📖

🌹🌴🌳🌱🌹

🍓உலகப் பற்றின்மை பற்றி ஸஹீஹான ஹதீஸ்களில் கூறப்படுவதால் இதை விட்டு ஆதாரபூர்வமானதை மாத்திரம் முன்வைத்து நாமும் அமல் செய்வோம் 🍓

அல்லாஹு அஃலம்

ஷுஐப் உமரி

09/05/2016

No comments: