தொடர் 🌎 23
🍓🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷🍓
🔬ஆதாரபூர்வமானதும் 🔦 பலவீனமானதும் 🔬
📔 இட்டுக்கட்டப்பட்ட சம்பவம் 📔
சம்பவத்தின் சுருக்கம்
🏇🏇டமஸ்கஸ் நகரில் இருந்த நம்பிக்கையான ஒரு மனிதர், மக்களையும் மக்களின் பொருட்களையும் ஸபதானீ என்ற ஊருக்கு பாதுகாப்பாக கொண்டு போய்ச் சேர்ப்பதைத் தொழிலாகக் கொண்டிருந்தார்.
🏇ஒரு நாள் ஒருவரின் பொருட்களை எடுத்துச் செல்லும் வழியில், ஒரு மனிதன் கூலிக்கு தன்னையும் கூட்டிச் செல்லுமாறு வேண்ட, அவரும் சம்மதித்தார்.
🚩🔀செல்லும் வழியில் எதிர்ப்பட்ட இரு பாதைகளில், வழமையாகச் செல்லாத பாதையில் அம் மனிதன் அழைத்துச் சென்றான்.
💀💀ஆளரவமற்ற வெருட்சியான ஒரு பயங்கரமான மலையடிவாரத்தை அடைந்ததும், அவன் இறங்கி கொலை செய்யப்போவதாக மிரட்டினான்.
பிணங்களும் இருப்பதாகத் தோன்றியது.
😢😩இருக்கும் பொருட்களை எடுத்துக் கொண்டு தன்னை விட்டு விடுமாறு அழுது கெஞ்சியும், அல்லாஹ்வைப் பற்றியும் அவனது தண்டனைகள் பற்றியும் எச்சரித்தும் பலனளிக்கவில்லை.
🍑🍑இரண்டு ரக்அத்துகள் தொழுவதற்கு அனுமதி கேட்டதற்கு, "அவசரமாகக் தொழுவது முடி" என்றான். தொழ ஆரம்பித்தவருக்கு குர்ஆன் வசனங்கள் ஞாபகம் வராது தடுமாறிக் கொண்டிருக்க அவன் அவசரப்படுத்தினான். அப்போது அல்லாஹ் அவரது நாவிலிருந்து பின் வரும் வசனத்தை ஓத வைத்தான்.
📚أمن يجيب المضطر إذا دعاه ويكشف السوء
திக்கற்றவர் அவனை அழைக்கும் போது பதில் தருபவனும், துன்பத்தை நீக்குபவனும் யார் ? (27/62)📚
🏇🏇அப்போது அங்கு வந்த குதிரை வீரரொருவர் அவனைத் தன்னிடமிருந்த ஆயுதத்தால் குறி பார்த்து அம்மனிதனைக் கொன்று இவரைக் காப்பாற்றினார். தாங்கள் யாரென்று கேட்டதற்கு "திக்கற்றவருக்கு உதவி செய்பவனின் தூதர்" என்று கூறி விட்டு போய்விட்டார். அம்மனிதர் பாதுகாப்பாக டமஸ்கஸை வந்தடைந்தார்.🏇🏇
🚫❌🚫❌🚫❌🚫
இச்சம்பவத்தை சொல்லக்கூடியவர்கள் அதில் சொல்லப்படாதவைகளையும் சேர்த்துக் கூறுவது இது பொய் என்பதற்கு மேலதிக சான்றாகும்.🚫❌
🔬💡💡💡🔬
🌽இதை இமாம் இப்னு அஸாகிர் தனது 📖 (டமஸ்கஸ் நகர வரலாறு) تاريخ دمشق 9271 📖 இல்
🍯 "யாரென்று அறியப்படாதவர்கள்" பற்றிய பாடத்தில் பதிந்துள்ளார். 🍯
🚉 இந்த சம்பவத்தில் இடம் பெறும்
அந்த கூலிக்காரர் யாரென்ற தகவல் இல்லை. 🚉
💡🔭🔭🔭💡
இதை அபூபக்ர் அத்தீநூரி சொன்னதாகக் கூறும்,
❌அலீ இப்னு அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ழம்❌
என்பவர் பற்றி இமாம்கள் குறைகூறியிருக்கிறார்கள் என்று இமாம் இப்னு அஸாகிர் அதே கிதாபில் 📖 4948 تاريخ دمشق 📖 இல் குறிப்பிட்டுள்ளார்.🔋
🔮இவர் நம்பத்தகுந்தவரல்ல. இட்டுக்கட்டுவார் என்று சந்தேகிக்கப்படக் கூடியவர். என்று இமாம் தஹபீ தனது
👉📖 ஸியர் 17/275 سير أعلام النبلاء இலும், 5879 ميزان الاعتدال இலும்,📖
👉இமாம் الزركلي ஸர்கலீ الأعلام 📖 4/304 📖 இலும் கூறியுள்ளார்கள்.
🚥🚥🚥🚥🚥
📓அத்தோடு இட்டுக்கட்டப்பட்ட பல சம்பவங்கள் அடங்கிய 📖 بهجة الاسرار 📖 எனும் புத்தகத்தை எழுதியுள்ளதோடு, 📓
📑ரஜப் மாதத்தின் முதல் வெள்ளியிரவு மஃரிபுக்கும் இஷாவுக்கும் இடையில் 12 ரக்அத்துகள் அடங்கிய صلاة الرغائب என்று புதிய தொழுகை முறை பற்றிய ஹதீஸை இட்டுக்கட்டியவர் இவர் தான் என அறிஞர்கள் சந்தேகிக்கிறார்கள்.
என்று இமாம் தஹபீ தனது 📖تاريخ الاسلام 9/238 📖 இலும்,📖 ميزان الاعتدال 5878 📖 இலும் குறிப்பிடுகிறார்.📑
💡👓🚩💡
இப்னு ஹஜர் அஸ்கலானீ 📖 لسان الميزان 5426 📖 இல் இவர் சொன்ன பொய்யான சில விபரங்களையும் பதிந்துள்ளார்.
👇👇👇
எனவே இது ஒரு இட்டுக்கட்டப்பட்ட சம்பவமாகும்.
🚥🚥🚥
🍑இதுபோன்ற இஸ்லாத்தின் பெயரால் புனையப்பட்டவைகளை ஓரங்கட்டி நமது புனிதமான இஸ்லாத்தை புனிதமானவற்றைக் கொண்டே முன்வைத்து நாமும் அமல் செய்வோம்.🍑
அல்லாஹு அஃலம்
ஷுஐப் உமரி
5/5/2016

No comments:
Post a Comment