Monday, May 09, 2016

தொடர் 🌎 22 🍓🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷🍓

தொடர் 🌎 22

🍓🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷🍓

🔬ஆதாரபூர்வமானதும் 🔦 பலவீனமானதும் 🔬

📔 பலவீனமான செய்தி 📔

🍎ஒருவருக்கு ஏதாவது தேவை ஏற்பட்டால், அது இம்மை மறுமையின் எந்தத் தேவையாக இருந்தாலும், அவர் நல்ல முறையில் வுழூச் செய்து இரண்டு ரக்அத்துகள் தொழுதபின்னர்,
 அல்லாஹ்வைப் புகழ்ந்து நபி  (ஸல் ) அவர்கள் மீது ஸலவாத் சொல்லி பின்வரும் துஆவை ஓத வேண்டும். இன்ஷா அல்லாஹ் அவருடைய தேவை நிச்சயம் நிறைவேறும்.🍎

🍎 لا إله إلا الله الحليم الكريم،  سبحان الله رب العرش العظيم، الحمد لله رب العالمين. أسألك موجبات رحمتك، وعزائم مغفرتك، والعزيمة من كل بر، والسلامة من كل إثم، لا تدع لنا ذنبا إلا غفرته، ولا هما إلا فرجته،  ولا حاجة هي لك رضا إلا قضيتها، يا أرحم الراحمين.🍎

🔭💡💡💡💡🔭

🌾இதனை இமாம்களான

🌽திர்மிதீ தனது ஸுனனிலும் 479,

 🌽இவர் வழியாக السبكي ஸுப்கீ தனது முஃஜம் 1/360 இலும்,

🌽மற்றும் இப்னுல் அஃராபீ தனது முஃஜம் 2360 இலும் ,

🌽அப்துல் கனீ அல்மக்திஸீ  عبد الغني المقدسي தனது الترغيب في الدعاء அத்தர்கீப் 60 இலும்,

🌽இவர் வழியாக الضياء ழியாஉ தனது العدة للكرب அல்உத்தா 28 இலும்,

 🌽மற்றும் ابن قدامة இப்னு குதாமா தனது فضل يوم التروية  யௌமுத் தர்வியா 35 இலும்,

🌽பைஹகீ தனது ஷுஅபுல் ஈமான் 9225 இலும்,

பதிந்துள்ளனர்.🌾

🍯🔦👓🍯

🌾இதே விடயத்தை சில வார்த்தை மாற்றங்களுடன் இமாம்களான

🌽இப்னு மாஜா தனது ஸுனன் 1384 இலும்,

🌽இவர் வழியாக عبد الغني المقدسي  அல்மக்திஸீ தனது   أخبار الصلاة ஸலாத் 56 இலும்,

🌽இப்னுன் நகூர் ابن النقور தனது அல்பவாஇத் الفوائد الحسان 14 இலும்,


🌽பஸ்ஸார் தனது முஸ்னதிலும் 3374,

🌽அபுல் காஸிம் தனது المستغيثين بالله அல் முஸ்தகீஸீன் 32 இலும்,

🌽அபூ இஸ்ஹாக் தனது المنتخب முன்தகப் 336 இலும்,

பதிந்துள்ளனர்.🌾

         🚥🚥🚥🚥🚥

🌳இந்த அறிவிப்பில் இடம் பெறும் அபுல் வர்கா ابو الورقاء فائد بن عبد الرحمن என்பவர் பலவீனமானவர் என்று இமாம்களான  அஹ்மத், இப்னு மஈன், அபூ ஹாதம், அபூ ஸுர்ஆ, அபூதாவூத், திர்மிதீ, நஸாயீ, இப்னு ஹிப்பான், ஸாஜீ, உகைலீ, தாரகுத்னீ ஆகியோர் கூறுகின்றார்கள்.🌳

🌱இவர் عبد الله بن أبي أوفى  இப்னு அபீஅவ்பா (ரழி ) சொன்னதாக இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை அறிவித்துள்ளார். என்று இமாம்களான இப்னு அபீஹாதம், ஹாகிம் ஆகியோர் கூறுகின்றார்கள்.🌱

📖 تهذيب الكمال 34/390 📖

🍑இவர் பலவீனமானவராக இருந்தாலும் இவர்  மாத்திரமே இதை அறிவிப்பதால் தான் இந்த செய்தியை பதிவு செய்தேன் என்று இமாம் பஸ்ஸார் கூறுகிறார்கள்.🍑

❌🚫
எனவே இது பலவீனமானதாகும்.❌🚫

அல்லாஹு அஃலம்

ஷுஐப் உமரி

03/05/2016

No comments: