Wednesday, April 27, 2016

தொடர் 🌎 20 🍓🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷🍓


தொடர் 🌎 20

🍓🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷🍓

🔬ஆதாரபூர்வமானதும் 🔦 பலவீனமானதும் 🔬

📔 பலவீனமான சம்பவம் 📔

🍅அனஸ்  ( ரழி ) காலத்தில் ஒரு நாள் (பகல் நேரத்தில்) இருள் பரவியது. நான் அனஸ்  (ரழி ) அவர்களிடம் சென்று

🌻" அபூ ஹம்ஸாவே! நபி  (ஸல் ) அவர்களுடைய காலத்திலும் இவ்வாறு நடந்ததுண்டா?" என்று கேட்டதற்கு🌼,

🌸 " அல்லாஹ் பாதுகாப்பானாக! காற்று சற்று வேகமாக வீச ஆரம்பித்தாலும் கூட, மறுமை நாள் வந்து விட்டதோ என்று அஞ்சி பள்ளிக்கு விரைந்து செல்வோம்." என்றார்கள்.🍅

👇👇👇👇👇

💡இந்த சம்பவத்தை நழ்ர்  என்பவரிடமிருந்து அவரது மகன் உபைதுல்லாஹ் கூறியதாக இமாம்களான🔍🔭

🌽அபூதாவூத் தனது ஸுனனிலும் 1196,

🌽இவர் வழியாக الضياء  ழியாஉ தனது  الاحاديث المختارة அல்  முக்தாரா 2705 இலும்,

🌽ஹாகிம் 1241 இலும்,

🌽இவர் வழியாக பைஹகீ தனது  السنن الكبرى அல் குப்ரா  6378 இலும்,

பதிந்துள்ளனர்.💡

🚫❌🔴❌🚫

💡🔍இதை அறிவிக்கும் நழ்ர் இப்னு  உபைதுல்லாஹ் அல்லது அப்துல்லாஹ் النضر بن عبيد الله  என்பவரின் நம்பகத்தன்மை பற்றி அறிஞர்கள் குறிப்பிடாததால்   இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானீ  இவரை  مستور மஸ்தூர் நிலை அறியப்படாதவர் என்று கூறுகின்றார். 🔍
📖 تقريب التهذيب 📖


💡🔍குறிப்பாக இமாம்களான புகாரி தனது التاريخ الكبير இலோ, இப்னு அபீஹாதம்  தனது الجرح والتعديل இலோ இவருடைய நம்பகத்தன்மை பற்றி எதுவுமே கூறவில்லை.🔍

🔍💡💡💡💡🔍

🎓✒இந்த அறிவிப்பில் இடம்பெற்றிருக்கும் நழ்ர் என்பவர் அனஸ்  (ரழி ) உடைய மகன்  நழ்ர் இப்னு அனஸ்  தானென்றும்,   மேற்கூறப்பட்ட நழ்ர் இப்னு உபைதுல்லாஹ் அல்ல என்றும்  கருதி,

🚥இமாம் ஹாகிம் இதை ஸஹீஹானது என்று கூற, இமாம் இப்னு ஹஜரும் தனது إتحاف المهرة  இத்ஹாபில்  ஸஹீஹானது என்று கூறியுள்ளார்.🎓👓

🔦🔮இமாம் தஹபீ அவர்கள் இதை அங்கீகரிக்காமல் அனஸ் (ரழி ) இன் மகனாக இருந்தால்  "தந்தையே" என்று அழைக்காமல் "அபூஹம்ஸாவே !"  என்று விழிப்பதற்கு என்ன அவசியம்? என்றவாறு சூசகமாக  சுட்டிக் காட்டியுள்ளார்.🔮🔦

🚈ஒரு வாதத்திற்கு அனஸ் (ரழி ) இன் மகன் தான் என்று வைத்துக்கொண்டாலும் அவரிடமிருந்து அறிவிக்கும் உபைதுல்லாஹ்  அல்லது அப்துல்லாஹ் என்பவர் யார் என்ற கேள்வி எழும்.🚈

🚫ஏனென்றால் நழ்ர் இப்னு அனஸ் என்பவருக்கு உபைதுல்லாஹ்  அல்லது அப்துல்லாஹ் என்று  ஒரு பிள்ளையோ, அறிவிப்பாளரோ இல்லை. 🚫

📖 இவ்விமர்சனத்தை இமாம் அல்பானி அவர்கள் தனது ضعيف ابي داود இல் பதிந்துள்ளார்.📖

📖  இமாம் ழியாஉ அவர்களும் இதை பதிவு செய்து விட்டு பலவீனம் என்று கூறியுள்ளார். 📖

🚥🚥🚥🚥🚥

சோதனைகளின் போது தொழுகயை நாட வேண்டும் என்று வேறு  ஸஹீஹான ஹதீஸ்களில் கூறப்பட்டிருப்பதால் இதை விட்டு ஆதாரபூர்வமானதை மாத்திரம் முன்வைப்போம்.

அல்லாஹு அஃலம்

ஷுஐப் உமரி

27/04/2016

No comments: