Wednesday, April 27, 2016

தொடர் 🌎 20 🍓🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷🍓


தொடர் 🌎 20

🍓🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷🍓

🔬ஆதாரபூர்வமானதும் 🔦 பலவீனமானதும் 🔬

📔 பலவீனமான சம்பவம் 📔

🍅அனஸ்  ( ரழி ) காலத்தில் ஒரு நாள் (பகல் நேரத்தில்) இருள் பரவியது. நான் அனஸ்  (ரழி ) அவர்களிடம் சென்று

🌻" அபூ ஹம்ஸாவே! நபி  (ஸல் ) அவர்களுடைய காலத்திலும் இவ்வாறு நடந்ததுண்டா?" என்று கேட்டதற்கு🌼,

🌸 " அல்லாஹ் பாதுகாப்பானாக! காற்று சற்று வேகமாக வீச ஆரம்பித்தாலும் கூட, மறுமை நாள் வந்து விட்டதோ என்று அஞ்சி பள்ளிக்கு விரைந்து செல்வோம்." என்றார்கள்.🍅

👇👇👇👇👇

💡இந்த சம்பவத்தை நழ்ர்  என்பவரிடமிருந்து அவரது மகன் உபைதுல்லாஹ் கூறியதாக இமாம்களான🔍🔭

🌽அபூதாவூத் தனது ஸுனனிலும் 1196,

🌽இவர் வழியாக الضياء  ழியாஉ தனது  الاحاديث المختارة அல்  முக்தாரா 2705 இலும்,

🌽ஹாகிம் 1241 இலும்,

🌽இவர் வழியாக பைஹகீ தனது  السنن الكبرى அல் குப்ரா  6378 இலும்,

பதிந்துள்ளனர்.💡

🚫❌🔴❌🚫

💡🔍இதை அறிவிக்கும் நழ்ர் இப்னு  உபைதுல்லாஹ் அல்லது அப்துல்லாஹ் النضر بن عبيد الله  என்பவரின் நம்பகத்தன்மை பற்றி அறிஞர்கள் குறிப்பிடாததால்   இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானீ  இவரை  مستور மஸ்தூர் நிலை அறியப்படாதவர் என்று கூறுகின்றார். 🔍
📖 تقريب التهذيب 📖


💡🔍குறிப்பாக இமாம்களான புகாரி தனது التاريخ الكبير இலோ, இப்னு அபீஹாதம்  தனது الجرح والتعديل இலோ இவருடைய நம்பகத்தன்மை பற்றி எதுவுமே கூறவில்லை.🔍

🔍💡💡💡💡🔍

🎓✒இந்த அறிவிப்பில் இடம்பெற்றிருக்கும் நழ்ர் என்பவர் அனஸ்  (ரழி ) உடைய மகன்  நழ்ர் இப்னு அனஸ்  தானென்றும்,   மேற்கூறப்பட்ட நழ்ர் இப்னு உபைதுல்லாஹ் அல்ல என்றும்  கருதி,

🚥இமாம் ஹாகிம் இதை ஸஹீஹானது என்று கூற, இமாம் இப்னு ஹஜரும் தனது إتحاف المهرة  இத்ஹாபில்  ஸஹீஹானது என்று கூறியுள்ளார்.🎓👓

🔦🔮இமாம் தஹபீ அவர்கள் இதை அங்கீகரிக்காமல் அனஸ் (ரழி ) இன் மகனாக இருந்தால்  "தந்தையே" என்று அழைக்காமல் "அபூஹம்ஸாவே !"  என்று விழிப்பதற்கு என்ன அவசியம்? என்றவாறு சூசகமாக  சுட்டிக் காட்டியுள்ளார்.🔮🔦

🚈ஒரு வாதத்திற்கு அனஸ் (ரழி ) இன் மகன் தான் என்று வைத்துக்கொண்டாலும் அவரிடமிருந்து அறிவிக்கும் உபைதுல்லாஹ்  அல்லது அப்துல்லாஹ் என்பவர் யார் என்ற கேள்வி எழும்.🚈

🚫ஏனென்றால் நழ்ர் இப்னு அனஸ் என்பவருக்கு உபைதுல்லாஹ்  அல்லது அப்துல்லாஹ் என்று  ஒரு பிள்ளையோ, அறிவிப்பாளரோ இல்லை. 🚫

📖 இவ்விமர்சனத்தை இமாம் அல்பானி அவர்கள் தனது ضعيف ابي داود இல் பதிந்துள்ளார்.📖

📖  இமாம் ழியாஉ அவர்களும் இதை பதிவு செய்து விட்டு பலவீனம் என்று கூறியுள்ளார். 📖

🚥🚥🚥🚥🚥

சோதனைகளின் போது தொழுகயை நாட வேண்டும் என்று வேறு  ஸஹீஹான ஹதீஸ்களில் கூறப்பட்டிருப்பதால் இதை விட்டு ஆதாரபூர்வமானதை மாத்திரம் முன்வைப்போம்.

அல்லாஹு அஃலம்

ஷுஐப் உமரி

27/04/2016

தொடர் 🌎 19 🍓🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷🍓 🔬ஆதாரபூர்வமானதும் 🔦 பலவீனமானதும் 🔬

தொடர் 🌎 19

🍓🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷🍓

🔬ஆதாரபூர்வமானதும் 🔦 பலவீனமானதும் 🔬

📔 ஆதாரபூர்வமான சம்பவம் 📔

🍅அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப் ( ரழி ) அவர்கள் ஒரு சமயம் இறந்து விட்டார்கள் என்று என்னும் அளவிற்கு மயக்கமுற்று இருந்தார்கள். துணியொன்றால்  மூடிவிட்டார்கள்.

🌿அவரது மனைவி உம்மு குல்ஸூம் ( ரழி ) அவர்கள் தொழுகையை கொண்டும் பொறுமையைக் கொண்டும் உதவி தேடவேண்டும்  என்று ஏவப்பட்டுள்ளதன்படி பள்ளிக்குச் சென்றார்கள்.

🌱 மயக்கம் தெளிந்தவுடன் அவர் தக்பீர் சொல்ல மக்களும்  தக்பீர் சொன்னார்கள்.

" நான் மயக்கமுற்று இருந்தேனா? எனக் கேட்க, "ஆம்" என்று கூறினர்.
அப்போது அவர்கள்,

🍃" இரண்டு மலக்குகள் என்னிடம் வந்து " புறப்படுவீராக. நம்பிக்கையான கண்ணியமான அல்லாஹ்விடம் உம்மைப் பற்றி தீர்ப்பளிக்கப்பட வேண்டியிருக்கிறது. எனக் கூறினார்கள்.

🍁அப்போது வேறொரு மலக்கு வந்து " அவரை விட்டு விடுங்கள். தாயின் வயிற்றில் இருந்த போதே பாக்கியசாலி என்று எழுதப்பட்டவர்களில் இவரும் ஒருவர். இவர் மூலம் இவருடைய மக்கள் இன்னும் பயன் பெற வேண்டியுள்ளது" என்று கூறிவிட்டுச் சென்றார்கள்.

🌼அதன் பிறகு ஒரு மாத காலமே உயிர் வாழ்ந்தார்கள். அதன்பிறகு மரணித்து விட்டார்கள்.

 👇👇👇👇👇

இச்சம்பவத்தை இமாம்களான

  🌽அப்துர் ரஸ்ஸாக் عبد الرزاق தனது المصنف  முஸன்னப் 146 இலும்,

🌽இவர் வழியாக இஸ்ஹாக் இப்னு ராஹவைஹி  اسحاق بن راهويه தனது முஸ்னதில் பதிவு செய்துள்ளதாக இப்னு ஹஜர் அஸ்கலானீ المطالب العالية அல் மதாலிப் 3976 இலும்,

🌽அதே வரிசையில் ஹாகிம் தனது  المستدرك முஸ்தத்ரக் 3066 இலும்,

🌽தொடரந்து பைஹகீ தனது ஷுஅபுல் ஈமான் شعب الإيمان  9235 இலும்,

🌽மற்றும் ابو بكر الدينوري அபூபக்ர் அத்தீனூரி தனது  المجالسة முஜாலஸா 378இலும்,

பதிந்துள்ளனர்.

💡💡💡

🍃🍁இதை அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப் (ரழி ) உடைய மனைவி உம்முடைய குல்ஸூம் சொன்னதாக அவர்களின் மகன் ஹுமைத் அறிவிக்கின்றார்.🍁🍃

🔍🔍🔍🌼

இதல்லாமல், அவர்களது மற்றொரு மகனான இப்ராஹீம் என்பவரும்  இதை அறிவித்துள்ளார். 🌼

🔭இந்த அறிவிப்பை இமாம்களான

🌽பிர்யாபீ   الفريابي தனது القدر  அல் கத்ர் 435 இலும்,

🌽இவர் வழியாக الآجري ஆஜுர்ரீ தனது الشريعة ஷரீஆ 436 இலும்,

🌽மற்றும் ابن بطة இப்னு பத்தா தனது الابانة الكبرى இபானா 1587 இலும்,

🌽அபூ நுஐம் ابو نعيم தனது معرفة الصحابة  மஃரிபதுஸ் ஸஹாபா 484 இலும்,

🌽வாஹிதீ  الواحدي தனது தப்ஸீரிலும் 456,

🌽இப்னு அபித்துன்யா தனது "  المحتضرين   மரணத் தருவாயில் இருந்தவர்கள் " 352 இலும்,

🌽இவர் வழியாகவும் வேறு வழிகளிலும் இப்னு அஸாகிர் تاريخ دمشق  35/295  - 298 இலும்,

🌽 இமாம் இப்னு ஸஃத் الطبقات الكبرى  3/99 இலும்,

🌽இப்னு அபீஹாதம் வழியாக  இமாம்  اللالكائي தனது  அஸ்ஸுன்னா 1220 இலும்,
இப்னு கய்யிம் அல் ஜவ்ஸிய்யா  தனது  شفاء العليل ஷிபாஉல் அலீல் 1/27 இலும்,

🌽யஃகூப் தனது  المعرفة والتاريخ அல் மஃரிபா 1/367 இலும்,

இவர் வழியாக பைஹகீ தனது القضاء والقدر  கழா 109 இலும்,

பல வழிகளூடாகப் பதிந்துள்ளனர்.

 💡💡💡💡

🌸இவற்றில் சில அறிவிப்புகளில் பலவீனமானவர்கள் இருந்தாலும் மற்றைய அறிவிப்புகள் சரிகாணப் படுகின்றன.🌸

🌼இமாம் பூஸீரீ البوصيري அவர்கள் இமாம் இஸ்ஹாக் உடைய அறிவிப்பை ஸஹீஹ் என்று إتحاف الخيرة المهرة  இத்ஹாபில் கூறியுள்ளார்.🌼

🌻இமாம் ஹாகிமும் தனது அறிவிப்பை சரிகாண இமாம் தஹபீ الذهبي அதை ஆமோதித்துள்ளார்.🌻

🍇🌴எமது இறுதி முடிவு நல்லதாக அமைய அல்லாஹ்வைப்  பிரார்த்திப்போம்.🍇🌴



அல்லாஹு அஃலம்

ஷுஐப் உமரி

25/04/2016

Sunday, April 24, 2016

🔍இகாமத் சொல்லப்பட்ட பின்னர் ஸப்பில் நின்று மிஸ்வாக் செய்யலாமா ? 🔍

🔍இகாமத் சொல்லப்பட்ட பின்னர் ஸப்பில் நின்று மிஸ்வாக் செய்யலாமா ? 🔍

💡💡💡💡💡💡

📖" அமல்களின் சிறப்புகள் "📖 என்ற பிரபல நூலின் ஆசிரியர் அஷ்ஷைக் முஹம்மத் ஸகரிய்யா காந்தலவி (ரஹ் ) அவர்கள் 📖 موطأ مالك  முவத்தா மாலிக் 📖 என்ற ஹதீஸ் கிரந்தத்திற்கு தான் எழுதிய விளக்க நூலான 📖 أوجز المسالك  அவ்ஜஸுல் மஸாலிக்📖  இல்,

💐" ஒவ்வொரு வுழூவின்போதும்  மிஸ்வாக் செய்தல் "💐

🌼" ஒவ்வொரு தொழுகையின் போதும் மிஸ்வாக் செய்தல் "🌼

என்று இரு விதமாக வரும் அறிவிப்புகளை ஒன்றாக சேர்த்து

💐🌼" ஒவ்வொரு தொழுகைக்கான வுழூவின் போதும் மிஸ்வாக் செய்தல் " 💐🌼

என்று ஹனபி அறிஞர்கள் சில ஹதீஸ்கலை விதிகளின் படி விளக்குகிறார்கள். என்று கூறி விட்டு பின்வருமாறு கூறுகிறார்கள் :

🔬🔬🔬🔬

🌱🍓இரத்தம் கசிய வாய்ப்பு இருப்பதால், மிஸ்வாக் செய்த பின்னர் வாயைக் கொப்பளித்து, மிஸ்வாக்கையும் கழுவுவார். 🌱🍓

🌳🍉உமிழ்நீர் படிந்தவாறு விட்டு வைக்க மாட்டார்.🌳🍉

🍅ஏனெனில், நபி  (ஸல் ) அவர்களும் மிஸ்வாக் செய்து விட்டு, அதை கழுவுவதற்காக ஆயிஷா  ( ரழி ) அவர்களிடம் கொடுப்பார்கள்.🍅

🍀ஆரம்ப தக்பீரின் போது நபி  ( ஸல் ) அவர்கள் மிஸ்வாக் செய்ததாக எந்த தகவலும் இல்லை. 🍀

🌾மிஸ்வாக்கின் முனையில்  படிவது உமிழ்நீர்  என்பதனால், 🌽

🍇அது படிந்த மிஸ்வாக்குகளை தொழுபவர் தனக்கு முன்பாகவோ ,
அல்லது சட்டைப்பையிலோ,
அல்லது காதிலோ வைப்பது 🍇

🍐கிப்லாவை நோக்கித் துப்புக் கூடாது என்ற பொதுவான தடையின் கீழ் அடங்கும். 🌾


                     🌷முற்றும் 🌷

👇👇👇👇👇

💎💎💎
இறைவனை வணங்கும் போது நாம் சுத்தத்தைப் பேண வேண்டும் என்ற வகையில், நபி ( ஸல் ) அவர்கள் ஹதீஸ்களில்   ஆர்வமூட்டிய இந்த ஸூன்னாவை  வுழூு செய்யும் போது முடிந்தவரை அமுல் படுத்துவோம்.💍💍

🚧🚧 🚧

🌱🌸 இரு அறிவிப்புகளையும் வெவ்வேறாக விளங்குவதை விட இரண்டையும் ஒன்றாக சேர்த்து விளங்குவது தான் மிஸ்வாக் செய்வது  ஸுன்னத்தாக்கப்பட்டதன்  நோக்கத்தை பூரணப்படுத்துவதாக அமையும். 🌱🌸

அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன்

ஷுஐப் உமரி

22/4/2016


🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥

تنبيه هام لكل من ينتسب الى جماعة التبليغ ويستاك عند الصلاة في الصف

💡💡💡💡💡

🌽قال الشيخ محمد زكريا الكاندهلوي في شرحه لموطأ الإمام مالك ( 1/663)🌽

🔍وقد ذكر في بعض الكتب استحباب السواك عند الصلاة أيضا كما قاله ابن الهمام والتتارخانية والشامي وغيرهم.
فانهم اختاروا الندب عند كل صلاة أيضا.🔍

🔮إلى أن قال :
و يتمضمض بعده لمظنة خروج الدم ويغسل السواك ولا يتركه كذا متلطخا بالبزاق.🔮

💐فإن النبي صلى الله عليه وسلم إذا استاك يعطي السواك لعائشة رضي الله عنها لتغسله.
وقد ندبنا إلى النظافة.💐

👈👈 ولم يثبت عنه صلى الله عليه وسلم أنه استاك  ابدا عند التحريمة.💡

🚥🚥 مع أن الاسوكة المتلطخة بالبزاق الملقاة قدام المصلي أو في جيبه أو في أذنه داخل في عموم النهي عن البزاق بينه وبين القبلة. 🎈

💉 فإن ما على رأس السواك لا ينكر عن كونه بزاقا. فتأمل. 💉

📖أوجز المسالك إلى موطأ الإمام مالك 📖

شعيب أبو يحيى 22/4/2016

தொடர் 🌎 18 🍓🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷🍓

தொடர் 🌎 18

🍓🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷🍓

🔬ஆதாரபூர்வமானதும் 🔦 பலவீனமானதும் 🔬

📔 பலவீனமான சம்பவம் 📔

🍅உபாதா ( ரழி ) அவர்கள் தனது மரண வேளை நெருங்கிய போது தனக்கு நெருங்கிய அனைவரையும் ஒன்று கூட்டி,

 🌱" இன்றைய நாளை உலகில் நான் வாழப் போகும் கடைசி பகலென்றும் மறுமையின் முதல்  இரவாகவும் நினைக்கிறேன்.

🌿எனது கையாலோ, நாவாலோ ( உங்களுக்கு ) ஏதேனும் தவறு நடந்திருக்கலாம். அதற்காக நான் மறுமையில் பழிவாங்கப்படுவேன்.

🍃எனவே எனது உயிர் பிரிய முன்னர்  என்னால் நடந்த தவறுகளுக்கு பழி தீர்த்துக் கொள்ளுங்கள். என்றார்கள். அப்போது " நீர் நல்லதொரு தந்தையாகவும் வழிகாட்டியாகவும் இருந்தீர். " என்று மக்கள் கூறிய போது,

🌸 " அப்படி ஏதாவது நடந்திருந்தால் மன்னித்து விடுவீர்களா?" என்று கேட்டார். "ஆம்" என்று மக்கள் கூறியதை அடுத்து "யா அல்லாஹ்! நீயே சாட்சியாக இரு" என்று கூறி விட்டு பின்வருமாறு உபதேசித்தார்கள்.

🌻" எனக்காக எவரும் அழக்  கூடாது.எனது உயிர் பிரிந்த பின் நீங்கள் அனைவரும் நல்ல முறையில் வுழூச் செய்து, மஸ்ஜிதுக்குச் சென்று தொழுது விட்டு தமக்காகவும் எனக்காகவும்  பாவமன்னிப்புத் தேடுங்கள்.

🌻ஏனெனில் 🌼பொறுமையைக் கொண்டும் தொழுகையைக்  கொண்டும் உதவி தேடுங்கள்🌼 என்று அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்.
தொழுத பிறகு என்னை அவசரமாக அடக்கம் செய்து விடுங்கள்." என்று கூறினார்கள்.🍅

💡💡💡💡💡

இச்சம்பவத்தை இமாம்களான

🌽ஹன்னாத்  هناد தனது   الزهد 2/405 இலும்,

🌽இப்னு ஸப்ர் அர்ரபஈ ابن زبر الربعي தனது وصايا العلماء عند حضور الموت " மரண வேளையில் அறிஞர்களின் உபதேசங்கள் " (1/48) இலும்,

🌽பைஹகீ தனது شعب الإيمان  ஷுஅபுல் ஈமான் (9234) இலும்,

🌽இப்னு அஸாகிர் தனது தாரீஹிலும் تاريخ دمشق 3071,

🌽மிஸ்ஸீ المزي  தனது  تهذيب الكمال தஹ்தீபுல் கமால் (14/188) இலும்,

விரிவாக பதிந்துள்ளனர்.

💡❌🔴🚫

இச்சம்பவத்தை அறிவிக்கும்  عبادة  بن محمد  بن عبادة بن الصامت உபாதா இப்னு முஹம்மத் என்பவரின் நிலை பற்றிய தகவல்களை எந்த அறிஞரும் கூறவில்லை.💡🚫

💡🔍இவர்  உபாதா  ( ரழி ) உடைய பேரரான  عبادة بن الوليد بن عبادة بن الصامت உபாதா இப்னுல் வலீத் எனும் நம்பகமானவராக இருக்கலாம் என்று அனுமானிக்கப்பட்டாலும், 🔍

💡🔍🚫❌

இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறும் عيسى بن سنان  ஈஸா இப்னு ஸினான் என்பவர் மனனக் கோளாறு உள்ளவர்  என்று அறிஞர்கள் கூறியிருப்பதோடு,🔍💡

🚦🚦🚦

இவரோடு வேறு நம்பகமானவர்கள் அறிப்பவற்றையே ஆதாரமாகக் கொள்கிறார்கள்.

இச்சம்பவத்தை இவர் மாத்திரமே அறிவிப்பதால் இது  பலவீனமானதாகும்.🌱🌼

அல்லாஹு அஃலம்

ஷுஐப் உமரி
24/04/2016 🌼

தொடர் 🌎 17 🍓🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷🍓

தொடர் 🌎 17

🍓🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷🍓

🔬ஆதாரபூர்வமானதும் 🔦 பலவீனமானதும் 🔬

📔 ஆதாரபூர்வமான சம்பவம் 📔

🌻🌼ஒரு நாள் ஸுப்ஹுத் தொழுகையின் பின் நபி ( ஸல் ) அவர்களின் மனைவியரில் ஒருவர் இறந்த செய்தி இப்னு அப்பாஸ்  ( ரழி ) அவர்களுக்கு கிடைத்த போது உடனே ஸஜ்தா செய்தார்கள். 🍂🍃

" இந்த நேரத்தில் ஸஜ்தா செய்கிறீர்களே " என்று கேட்கப்பட்டதற்கு🍂🍃

" ஏதாவது ( பயங்கரமான )அடையாளத்தை நீங்கள் கண்டால் ஸஜ்தா செய்யுங்கள் "🌿🍁

என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் எங்களுக்கு உபதேசித்துள்ளார்கள். 🌱🍅

நாம் இருக்கும் போதே நபியவர்களின் மனைவியர்கள்  மரணிப்பதை விட பெரிய  அடையாளம் எதுவாக இருக்க முடியும் " என்றார்கள்.🌼🌻

🚦🚦🚦🚦🚦

🍅இச்சம்பவத்தை இமாம்களான

🌽அபூதாவூத் தனது ஸுனனிலும் 1197,

🌽இவர் வழியாக பைஹகீ தனது அஸ் ஸுனனுல் குப்ராالسنن الكبرى  6379 இலும்,

🌽அழ்ழியாஉ الضياء  தனது الأحاديث المختارة  அல் முக்தாரா 323, 324 இலும்,

🌽மேலும் திர்மிதீ தனது ஸுனனிலும் 3891,

🌽இவர் வழியாக المزي மிஸ்ஸீ  தனது   تهذيب الكمال தஹ்தீபுல் கமாலிலும் 11/215,

பதிந்துள்ளனர்.🍅

🚧🚧🚧🚧🚧

🌻இவ்வறிவிப்பில் இடம் பெறும் ஹகம் இப்னு அபான் الحكم بن أبان  என்பவருடைய மனன சக்தி பற்றி சிறு  விமர்சனம் இருப்பதால் ஹதீஸ்கலை அறிஞர்கள் இந்த செய்தியை حسن  ஹஸன் எனப்படும் ஆதாரபூர்வமானவைகளில் சேர்க்கிறார்கள்.🌻

💡🔍🔴🚫❌

இதே செய்தியை ஹகம் உடைய மகன் இப்ராஹீம் என்பவரும் அறிவிக்கின்றார்.

இமாம்களான
🌽 பைஹகீ அல் குப்ரா  6379 இலும்,

🌽பகவீ  البغوي ஷரஹுஸ் ஸுன்னா شرح السنة  1156 இலும்,

🌽மிஸ்ஸீ المزي தஹ்தீபுல் கமால் تهذيب الكمال  11/216 இலும்,

🌽இப்னு ஹிப்பான் அல்மஜ்ரூஹீன் المجروحين 1/114 இலும்  பதிவு செய்துள்ளார்கள்.

👇👇👇

❌🚫
இவர் மிகவும் பலவீனமானவர் என்று அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.❌🚫

💡💡💡💡💡

இவர் இடம் பெறும் வரிசை பலவீனமாக இருந்தாலும் முன்னர் கூறப்பட்ட அறிவிப்பில், அவருடைய தந்தையிடமிருந்து வேறு நம்பகமானவர்கள் அறிவித்துள்ளனர்.

🌼🌼🌼
எமக்கு கஷ்டங்கள் ஏற்படும் போது அல்லாஹ்விடமே உதவி தேடுவோம்.முன்னைய தொடர்களிலும் இது பற்றிய தகவல்கள் கூறப்பட்டுள்ளன.🌼🌼

அல்லாஹு அஃலம்

ஷுஐப் உமரி

தொடர் 🌎 16 🍓🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷🍓

தொடர் 🌎 16

🍓🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷🍓

🔬ஆதாரபூர்வமானதும் 🔦 பலவீனமானதும் 🔬

📔 ஸஹீஹான சம்பவம் 📔

🍅 இப்னு அப்பாஸ்  ( ரழி ) அவர்கள் ஒரு பயணம் சென்றிருந்த போது,  அவருடைய சகோதரர் குஸம் இறந்து விட்டதாக செய்தி கிடைத்தது.                                           إنا لله وإنا إليه راجعون  என்று கூறினார்கள், பிறகு பாதையோரத்தில் இரண்டு ரக்அத்துகள் தொழுதபின்னர்
பின்வரும் வசனத்தை ஓதியவராக வாகனத்திற்குச் சென்றார்.

📚واستعينوا بالصبر والصلوة ( البقرة 45)📚
தொழுகையைக் கொண்டும் பொறுமையைக் கொண்டும்  உதவி தேடுங்கள். 🍅

🔦🔦🔦

இச்சம்பவத்தை இமாம்களான

🌽 தபரீ தனது தப்ஸீரிலும் 852,

🌽இப்னு அபீஆஸிம் الآحاد والمثاني  398 இலும்,

🌽ஸஈத் இப்னு மன்ஸூர் தனது தப்ஸீரிலும் 331,

🌽இவர் வழியாக பைஹகீ شعب الإيمان இலும் 9233,

🌽மற்றும் இப்னு அஸாகிர்  تعزية المسلم இலும் 1/27,

🌽 மேலும்البلاذري தனது   أنساب الأشراف  4/35 இலும் பதிந்துள்ளனர்.

🔬🔬🔬

இந்த சம்பவத்தின் அறிவிப்பாளர்களை  நம்பகமானவர்கள் என்று ஹதீஸ்கலை  அறிஞர்கள் கூறுகிறார்கள்.

🔮🔮இமாம் தபரீ உடைய அறிவிப்பாளர் வரிசையை  ஹஸன் எனும் நம்பகமான அறிவிப்பு என்று இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானீ தனது ஸஹீஹுல் புகாரியின் விளக்க நூலான  فتح الباري பத்ஹுல்பாரியில் கூற,

💐🌼
 அதை இமாம் ஐனீ ஸஹீஹுல் புகாரிக்கு விரிவுரையாக  தான் எழுதிய عمدة القاري உம்ததுல்காரி எனும் நூலில் பதிவு செய்துள்ளார்.🔮🔮


அல்லாஹு அஃலம்

ஷுஐப் உமரி

21/04/2016 -- 1437/7/13

தொடர் 🌎 15 🍓🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷🍓

தொடர் 🌎 15

🍓🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷🍓

🔬ஆதாரபூர்வமானதும் 🔦 பலவீனமானதும் 🔬

📔 பலவீனமான சம்பவம் 📔

🍅 இப்னு அப்பாஸ்  ( ரழி ) அவர்கள் ஒரு பயணம் சென்றிருந்த போது, தம் மகன் இறந்து விட்டதாக செய்தி கிடைத்தது. உடனே இறங்கி இரண்டு ரக்அத்துகள் தொழுது விட்டு, إنا لله وإنا إليه راجعون  என்று கூறினார்கள்.
பிறகு அல்லாஹ் எதை ஏவினானோ அதையே நான் செய்தேன். என்று கூறி பின்வரும் வசனத்தை ஓதினார்கள்.
📚واستعينوا بالصبر والصلوة ( البقرة 45)📚
தொழுகையைக் கொண்டும் பொறுமையைக் கொண்டும்  உதவி தேடுங்கள். 🍅

🔦🔦🔦🔦🔦

இந்த சம்பவத்தை இமாம்களான

 🌽ஸயீத் இப்னு மன்ஸூர் தனது தப்ஸீரிலும் (189),

🌽மர்வஸீ தனது تعظيم قدر الصلاة  201இலும்,

🌽புகாரி தனது  التاريخ الكبير  3/156இலும்,

🌽ஹாகிம் தனது   المستدرك على الصحيحين 3067இலும் ,

🌽பைஹகீ தனது  شعب الإيمان 9232இலும் பதிந்துள்ளனர்.

🔬🔬🔬🔬🔬

இந்த அறிவிப்பில் வரும்  📌காலித் இப்னு ஸப்வான்📌 என்பவரை
இமாம்களான புகாரி  التاريخ الكبير இலும் , இப்னு அபீஹாதம் الجرح والتعديل இலும் குறிப்பிட்டிருந்தாலும் அவரது நம்பகத் தன்மை பற்றிய தகவல்கள் எதையும் கூறவில்லை.
 📖 التاريخ الكبير ، الجرح والتعديل 📖

📚📖📚

எனவே இந்த செய்தி பலவீனமாகும். ஆனால், இப்னு அப்பாஸ்  ( ரழி ) சகோதரர் குஸம் மரணித்த வேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றதாக வேறு அறிவிப்புகளில் இடம்பெற்றுள்ளது. அது ஸஹீஹானதாகும். அதை அடுத்த தொடரில் பார்ப்போம்.📚📖📚

அல்லாஹு அஃலம்

ஷுஐப் உமரி

Sunday, April 17, 2016

தொடர் 🌎 14 🍓🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷🍓

தொடர் 🌎 14

🍓🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷🍓

🔬ஆதாரபூர்வமானதும் 🔦 பலவீனமானதும் 🔬

📔 பலவீனமான ஹதீஸ் 📔

🍅 எப்போதாவது புயல் வீசினால் உடனே நபி  ( ஸல் ) அவர்கள் பள்ளிக்குச் சென்று விடுவார்கள். புயல் நிற்காத வரை வெளியே வர மாட்டார்கள்.
சூரிய, சந்திர கிரகணம் ஏற்பட்டாலும் இவ்வாறே தொழுகைக்கு விரைந்து செல்வார்கள். 🍅

✏✏✏✏✏

இந்த ஹதீஸை
🌴அபூதர்தா  (ரழி ) அவர்கள் வழியாக
🌽இமாம் தபரானீ தனது  مسند الشاميين 568 இலும்,

🌽அபுஷ் ஷைக் அல் இஸ்பஹானீ தனது العظمة  இல் காற்றுகள்  பற்றிய பாடத்திலும்,

🌽இப்னு அபித்துன்யா தனது  المطر والرعد والبرق   132 இலும்,

🌽இப்னு அஸாகிர் தனது تاريخ دمشق இலும் பதிந்துள்ளனர்.

💡💡💡💡💡

🔬இமாம் தபரானீ தனது المعجم الكبير இலும்  இதை பதிவு செய்திருப்பதாக கூறும் இமாம் ஹைஸமீ இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறும் 📍ஸியாத் இப்னு ஸஹ்ர் 📍என்பவர் பற்றிய தகவல்களை யாரும் கூறியதாகத் தெரியவில்லை என்கிறார்.🔬
📖 مجمع الزوائد ومنبع الفوائد 📖

💡💡💡

மேலதிகமாக, இமாம் தபரானீ உடைய அறிவிப்பில் இடம் பெறும் 📌பக்ர் இப்னு ஸஹ்ல் 📌 என்பவர் பலவீனமானவர் என்று இமாம் நஸாயீ கூறுவதாக இமாம் இப்னு ஹஜர் கூறிவிட்டு அவரது பலவீனத்துக்கு சான்றாக அவர் கூறிய பின்வரும் நிகழ்வை பதிவு செய்துள்ளார்.

❌❌ நான் ஜும்ஆ நாளில் நேர காலத்தோடு சென்று, அஸர் நேரத்திற்குள் எட்டு முறை குர்ஆனை ஓதி முடித்தேன் என்று கூறியுள்ளார். ❌❌
📖 لسان الميزان 📖

💐🌼💐🌼💐

இந்த ஹதீஸின் கருத்து வேறு ஸஹீஹான ஹதீஸ்களில் கூறப்படுவதால் இதை விட்டு ஆதாரபூர்வமானதை மாத்திரம் முன்வைப்போம்.🌏

அல்லாஹு அஃலம்

ஷுஐப் உமரி

தொடர் 🌎 13 🍓🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷🍓

தொடர் 🌎 13

🍓🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷🍓

🔬ஆதாரபூர்வமானதும் 🔦 பலவீனமானதும் 🔬

📔 ஸஹீஹான ஹதீஸ் 📔

🍅நபிமார்களுக்கு ஏதாவது  சோதனைகள் ஏற்பட்டால், உடனே தொழுகையின் பக்கம் விரைவார்கள்.🍅

இவ்வார்த்தை ஸாபித் அல்புனானீ ( ரஹ்) அவர்கள் ஸுஹைப் ( ரழி ) அவர்கள் வழியாகத் தாம் அறிவித்த ஹதீஸொன்றின் கருத்தை கூறியுள்ளார்.

🌽ஹதீஸ்🌽

🌼ஸுஹைப் (ரழி)  அவர்கள் வழியாக இமாம்களான இப்னு அபீஷைபா, மர்வஸீ, ஸர்ராஜ், அஹ்மத்,இஸ்மாயீலீ, ழியாஉ, நஸாயீ, இப்னு ஹிப்பான், பைஹகீ, ஆகியோர் ஒரு சம்பவத்துடன் பதிவு செய்துள்ளனர்.🌼

🌾சம்பவத்தின் சுருக்கம் 🌾

✏ஹுனைன் யுத்தத்திற்கு சென்ற போது பஜ்ர் தொழுதபின்னர் நபியவர்கள் எதையோ மெதுவாக கூறினார்கள்.  ✏

💎அப்போது " மெதுவாக எதையோ கூறுகிறீர்களே" என்று கேட்டோம். அப்போது அவர்கள்💎

🌏 " பெரும்படை பட்டாளம் வழங்கப்பட்ட ஒரு நபி தனது சமூகத்தைப் பார்த்து " இவர்களுக்கு நிகராக யார் இருப்பர் " என்று கூறினார்கள்.🌏

🔮அப்போது அவருக்கு " மூன்று விடயங்களில் ஒன்றை உமது மக்களுக்கு தெரிவு செய்யுங்கள். 1. விரோதிகளைச் சாட்டி விடுவது. 2.பசி
3. மரணம்
என்று (அல்லாஹ்வினால்) கூறப்பட்டது.🔮

💐" தனது மக்களுடன் ஆலோசித்து விட்டு தொழ ஆரம்பித்தார்.
நபிமார்களுக்கு ஏதாவது  அதிர்ச்சி ஏற்பட்டால்,  தொழுகையின் பக்கம் விரைவார்கள்.💐

💡இறுதியாக மரணத்தை தெரிவு செய்கிறார். மூன்று நாட்களில் எழுபதாயிரம் பேர் மரணமடைந்தார்கள். என்று நபியவர்கள் கூறிவிட்டு (அதனால்தான்) மெதுவாக பின்வரும் துஆவை ஓதினேன். என்றார்கள்.

اللهم بك أحاول وبك اصاول ولا حول ولا قوة الا بك.💡

🌴வேறு அறிஞர்கள் இதை சுருக்கமாகவும், விரிவாகவும், மற்றும் சிலர் கிடங்கு வாசிகளின் சம்பவத்துடனும் அறிவித்துள்ளனர். ஆனால் மேற்கூறிய வார்த்தை  இடம்பெறவில்லை.🌴

👇👇👇👇👇

💡ஒரு நபி இப்படி சொன்னதற்கே இந்த சோதனை என்றால் தம்முடைய கொஞ்ச அமல்களை , அறிவை வைத்து பெருமூச்சு விடுவோரின் நிலை என்னவாகும்???😩😩😩.

பெருமையடித்தல், மற்றவர்களை இழிவாக கருதுதல் போன்றவற்றுக்கு இது ஒரு சிறந்த
உதாரணமாகும்.💡

அல்லாஹு அஃலம்

ஷுஐப் உமரி

தொடர் 🌎 12 🍓🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷🍓

தொடர் 🌎 12

🍓🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷🍓

🔬ஆதாரபூர்வமானதும் 🔦 பலவீனமானதும் 🔬

📔 பலவீனமான ஹதீஸ் 📔

🍅நபி ( ஸல் ) அவர்களுக்கு ஏதாவது  சிரமம் ஏற்பட்டால், உடனே தொழுகையின் பக்கம் விரைவார்கள்.🍅

💡 இதை
🌴ஹுதைபா  ( ரழி ) அவர்கள் வழியாக இமாம்களான தபரீ, இப்னு கானிஃ, பைஹகீ , அஹ்மத், அபூ அவானா, அபூதாவூத், மர்வஸீ, அபூநுஐம் ஆகியோர் தமது கிரந்தங்களில் பதிந்துள்ளனர்.

🔦🔦🔦
இவ்வறிவிப்பில் ஹுதைபா  ( ரழி ) இடமிருந்து அறிவிக்கும் அவரது உறவினரான அப்துல் அஸீஸ் என்பவர் யாரென்று அறியப்படாதவர் என்று  இமாம் தஹபீ கூறுகிறார்.🔦🔦
📖 ميزان الاعتدال 📖

🔭இவரிடமிருந்து அறிவிக்கும் முஹம்மத் என்பவரும் யாரென்று அறியப்படாதவராவார். 🔭
📖 مسند أحمد بتحقيق الشيخ شعيب الارنؤوط 📖

👇👇👇👇👇

எனவே இது பலவீனமானதாகும். என்றாலும் இந்தக் கருத்து குர்ஆன் மற்றும் வேறு ஸஹீஹான ஹதீஸ்களில் கூறப்படுவதால் இதை விட்டு ஆதாரபூர்வமானதை மாத்திரம் முன்வைப்போம்.

அல்லாஹு அஃலம்

ஷுஐப் உமரி

தொடர் 🌎 11 🍓🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷🍓

தொடர் 🌎 11

🍓🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷🍓

🔬ஆதாரபூர்வமானதும் 🔦 பலவீனமானதும் 🔬

📔 நபியவர்கள் கூறியிருக்க வாய்ப்புள்ள ஸஹாபியின் ஸஹீஹான கூற்று 📔


🍅 ஒரு மனிதர் தஹஜ்ஜுத் தொழ வேண்டும் என்ற எண்ணத்துடன் தூங்கினார். பிறகு அவர் விழிக்கவில்லை. என்றாலும் அவருக்கு தஹஜ்ஜுத் உடைய நன்மை கிடைக்கிறது. தூங்கியதும் ஸதகாவாகி  விடுகிறது.🍅


 🔭 இதை
🌴அபூதர் அல்லது
🌴அபூதர்தா  ( ரழி )
உடைய கூற்றாக (موقوف) இமாம்களான ஸுப்யானுஸ் ஸவ்ரீ , ஸுப்யான் இப்னு உயைனா ஆகியோர், عبدة بن أبي لبابة  என்பவரிடம் இருந்து அறிவிப்பதாக இமாம்களான நஸாயீ, இப்னு ஹுஸைமா ஆகியோர் பதிந்துள்ளனர். 🔭

🔮இதே செய்தியை عبدة  என்பவரிடம் இருந்து حبيب   بن أبي ثابت என்பவர் அறிவிப்பதாக இமாம்களான இப்னு ஹுஸைமா,  மர்வஸீ ஆகியோர் பதிவு செய்துள்ளனர். 🔮

🔬 இவர் ( حبيب ) வழியாக வரும் இரு அறிவிப்புகளில் ஒன்றில்  ஜரீர் என்பவரும் இது ஸஹாபியின் கூற்று என்றே குறிப்பிடுகின்றார்.🔬

🔭அதே சமயம்  حبيب வழியாக வரும் மற்றைய அறிவிப்பில் வரும் ஸாயிதா இப்னு குதாமா என்பவரிடமிருந்து அறிவிப்பவர்கள் தமக்குள்  முரண்படுகின்றனர்.

🔦இவருடைய கிதாபுகளை அறிவிக்கும்  முஆவியா இப்னு அம்ரு என்பவர் ஸஹாபியின் கூற்று என்று குறிப்பிடுகின்றார்.🔭

🔬ஆனால் இவரிடமிருந்து அதிகம் அறிவிக்கக் கூடிய ஹுஸைன் இப்னு அலீ என்பவர் நபியவர்கள் கூறியதாக அறிவிக்கிறார்.🔬

📷 இதை அறிவிப்பவர்களில் இவர் மாத்திரமே இவ்வாறு அறிவித்துள்ளதாக இமாம் இப்னு ஹுஸைமா குறிப்பிடுகிறார் 📷
📖 صحيح ابن خزيمة 📖


✏ ✏✏✏✏
ஹுஸைன் என்பவர் நம்பகமானவராக இருந்தாலும், மற்றைய நம்பகமானவர்களுக்கு முரணாக அறிவிப்பதால் இவருடைய செய்தி ஷாத் ( شاذ)எனும் பலவீனமானதாக மாறுகிறது.✏

🌾எனவேதான் இமாம் தாரகுத்னீ அவர்கள் இது ஸஹாபியின் கூற்று என்பதே சரியானது என்று கூறுகிறார். "المحفوظ الموقوف "🌾
📖 جامع العلوم والحكم لابن رجب 📖


🌽இதனால் தான் தமது நிபந்தனைகளுக்கு உட்டபட்டதாக இருந்தும், இதனை இமாம்களான புகாரி, முஸ்லிம் ஆகியோர் தமது கிரந்தங்களில் பதியவில்லை. என்று இமாம் ஹாகிம் கூறுகிறார்.🌽
📖 المستدرك على الصحيحين 📖

💡💡💡
இதே செய்தியை நபியவர்களின்  கூற்றாக عبدة இடமிருந்து இமாம் ஷுஃபா  வழியாக இமாம் இப்னு ஹிப்பான் பதிந்துள்ளார்.

❌இந்த அறிவிப்பில் வரும்  مسكين بن بكير  என்பவர் பலவீனமானவர். "யாரும் அறிவிக்காதவற்றை  இமாம் ஷுஃபா வழியாக அறிவிப்பவர்" என்று இமாம் அஹ்மத் கூறுகிறார்.❌

💡💡💡
இதே விடயம் ஆயிஷா  ( ரழி) சிறு வார்த்தை மாற்றங்களுடன்  நபிகளாரிடமிருந்து அறிவிப்பதாக வருகிறது.
❌ஆனால் அதில் பெயர் கூட அறியப்படாத ஒருவர் இருப்பதால் அதுவும் பலவீனமானதாகும்.❌

👇👇👇👇👇
முடிவாக 📌📌📌
💎இது நபியவர்களின்கூற்று அல்ல. ஸஹாபாக்கள் சொன்னதாகும். 💎

🌼 என்றாலும் அறிவிப்பாளர் வரிசை சரியாக இருக்கும் நிலையில்,  இது அந்த ஸஹாபாக்கள் சுயமாக சொல்ல முடியாத விடயம் என்பதால்,  நபியவர்கள் சொல்லித்தான்  அவர்கள் அதைச் சொல்லியிருப்பார்கள்,  என்று ஷுஐப் அல் அர்னாவூத் அவர்கள் கூறுகிறார்கள். 🌼

அல்லாஹு அஃலம்

ஷுஐப் உமரி

Sunday, April 10, 2016

தொடர் 🌎 10 🍓🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷🍓

தொடர் 🌎 10

🍓🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷🍓

🔬ஆதாரபூர்வமானதும் 🔦 பலவீனமானதும் 🔬

📔 பலவீனமான ஹதீஸ் 📔

🌾 " ஐங்காலத் தொழுகைகள் அவற்றுக்கு இடையிலுள்ள நேரங்களில் நிகழும் பாவங்களுக்குப் பரிகாரமாகும்." 🌾

என்று ரஸூலுல்லாஹி ( ஸல் ) அவர்கள் கூறிவிட்டு, 

🌼" ஒருவர் தொழிற்சாலையில் வேலை செய்யும் போது அவரது உடலில் அழுக்கும் தூசும் படும்.🌼

🌱அவர் வீடு திரும்பும் போது வழியிலுள்ள ஐந்து ஆறுகளிலும் குளித்துக் கொண்டே சென்றால் அவரது உடல் சுத்தமாகி விடுகிறது. தொழுகையும் இவ்வாறு தான். 🌱

🌺ஏதாவது தவறு நடந்தால் தொழுகையில் உள்ள பாவமன்னிப்பு , துஆவின் காரணமாக அல்லாஹ் அதை மன்னித்துவிடுகிறான். 🌺

இது
🌴அபூ ஸயீத் அல்குத்ரி ( ரழி ) அவர்கள் வழியாக அறிவிக்கப்படுகிறது. 🌴

🍃இமாம்களான பஸ்ஸார், தபரானீ ஆகியோர் பதிந்துள்ளனர்.🍃

👇👇👇👇👇

✏ இதை அபூஸயீத் ( ரழி ) வழியாக  யஹ்யா இப்னு ஐயூப் என்பவர் மாத்திரமே அறிவிப்பதாக இவ்விரு இமாம்களும் குறிப்பிடுகின்றனர்.✏ 

✏இவர் அறிப்பவற்றை அறிஞர்கள் கவனமாகக் கையாளுவார்கள்✏
 
(அதாவது இவர் மாத்திரம் அறிவிப்பவற்றைத் தவிர்ப்பார்கள்.) இமாம் புகாரி அவர்கள் இவருடன் இன்னொருவரும் அறிவிப்பதால் இவருடைய இரண்டு அறிவிப்புகளை ஸஹீஹுல் புகாரியில் பதிந்துள்ளார்.
📖 سير أعلام النبلاء 📖

👇👇👇👇👇👇👇

🔴 இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறும் அப்துல்லாஹ் இப்னு குரைழ் என்பவர் யாரென்று அறியப்படாதவர் என்று இமாம் ஹுஸைனீ கூறுகிறார். இவரைப் பற்றிய தகவல்களை எந்த அறிஞரும் கூறவில்லை.🔴
📖 تمام المنة 📖



🚥🚥🚥🚥🚥🚥

எனவே இது பலவீனமான ஒரு அறிவிப்பாகும். 

🍎🍓🍅🍎🍓🍅
தொழுகை பாவங்களை அழிக்கும் என்று வேறு பல ஸஹீஹான ஹதீஸ்களில் கூறப்பட்டிருப்பதால் இதை விட்டு ஆதாரபூர்வமானதை மாத்திரம் மக்கள் முன்வைப்போம்


அல்லாஹு அஃலம் 

ஷுஐப் உமரி

🍓🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷🍓 தொடர் 🌏 01

🍓🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷🍓

🔬ஆதாரபூர்வமானதும் 🔦 பலவீனமானதும் 🔬

தொடர் 🌎 01

📔ஸஹீஹான ஹதீஸ்📔


நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள்.
இஸ்லாம் ஐந்து  விடயங்கள் மீது அமைக்கப்பட்டுள்ளது.

💡வணங்கப்படுவதற்குத் தகுதியானவன் அல்லாஹ்
வைத் தவிர வேறு யாருமில்லை என்றும் முஹம்மத் ( ஸல் ) அல்லாஹ்வின் அடியாரும் தூதரும் ஆவார்  என்றும் சாட்சி கூறி ஏற்றுக் கொள்ளல்.

💡 தொழுகையை நிறைவேற்றுதல்

💡 ஸகாத் கொடுத்தல்

💡 ரமழானில் நோன்பிருத்தல்

💡 பைத்துல்லாஹ்வை ஹஜ் செய்தல்.

இந்த ஹதீஸை
🌴 இப்னு உமர்,
🌴 இப்னு அப்பாஸ் ,
🌴 அப்துல்லாஹ் இப்னு ஜரீர் ( ரழி )ஆகிய ஸஹாபிகள்  அறிவிக்கின்றனர்.

புகாரி, முஸ்லிம் உட்பட அதிகமான கிரந்தங்களில் சிறிய வார்த்தை மாற்றங்களுடன் பதியப்பட்டுள்ளது.

மூலநூற்களிலிருந்து எடுத்தெழுதும் சில நூலாசிரியர்கள்  ஒன்றுக்கு மேற்பட்ட அறிவிப்புகளை ஒரே அறிவிப்பாகவும் பதிவு  செய்துள்ளனர்.

அல்லாஹு அஃலம்

சுஐப் உமரி

🍓🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷🍓 தொடர் 🌏 02

🍓🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷🍓

🔬ஆதாரபூர்வமானதும் 🔦 பலவீனமானதும் 🔬

தொடர் 🌎 02

📔பலவீனமான ஹதீஸ்📔


நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள்.
மனிதர்கள் மீது கடமையாக்கப்பட்டவைகளில் மிகச் சிறந்தது  தொழுகையாகும்.


இதை
🌴அபூதர்,
🌴அபூஉமாமா,
🌴அபூஹுரைரா ( ரழி )
ஆகியோர் அறிவிக்கின்றனர்.

🍀🌺அபூதர்  ( ரழி ) அவர்களிடமிருந்து நீண்ட சம்பவம் ஒன்றுடன் நான்கு அறிவிப்பாளர் வரிசைகளில் பதியப்பட்டுள்ளது.🍀🌺

👉ஒரு அறிவிப்பில் அபூஅம்ர் உபைத் இப்னு ஹஷ்ஹாஷ் என்ற
ஹதீஸ் கலையில் ஓரம் கட்டப்பட்டவரும்

👉இரண்டாவதில் இப்ராஹீம் இப்னு ஹிஷாம் இப்னு யஹ்யா என்ற ஒரு பொய்யரும்

👉மூன்றாவதில் யஹ்யா இப்னு ஸஃத்  என்ற பலவீனமானவரும் இடம்பெற்றுள்ளனர்.

👉நான்காவதில் அறிவிப்பாளர் வரிசையில் தடுமாற்றம் காணப்படுகிறது.

🍀🌺அபூ உமாமா ( ரழி ) அவர்களுடைய அறிவிப்பில்🍀🌺
 மஆன், அலீ இப்னு யஸீத் போன்ற மிகவும் பலவீனமான  அறிவிப்பாளர்கள் இடம்பெறுகின்றனர்.


🍀🌺அபூஹுரைரா  ( ரழி ) அவர்களுடைய அறிவிப்பில்🍀🌺 அப்துல் முன்இம் இப்னு பஷீர் என்ற பலவீனமானவர் இடம்பெறுகிறார்.

🚫❌எனவே இது ழயீப் எனப்படும் பலவீனமான ஹதீஸ் ஆகும்.🚫❌

🚥🚥🚥 🚥🚥🚥🚥👇👇👇

இமாம் அல்பானி அவர்கள்  இதற்கு  பல அறிப்பாளர் வரிசைகள் இருப்பதால் (ஹஸன்)  ஆதாரபூர்வமானது என்று கூறுவதை வேறு ஹதீஸ் கலை அறிஞர்கள் விமர்சித்துள்ளனர்.

அறிவிப்பாளர் வரிசை பலவீனமாக இருந்தாலும் கூறப்படும் விடயம் இஸ்லாத்தில்
அறியப்பட்ட ஒன்றாகும். எனவே இதை விடுத்து வேறு ஸஹீஹான  ஹதீஸ்களை, ஆயத்துகளை கூறலாம்.

விரிவான விபரங்களுக்கு

البدر المنير لابن الملقن
مسند أحمد بتحقيق الارنؤوط
كتاب الأربعون للآجري
و جزء فيه أحاديث أبي حيان بتحقيق الشيخ بدر
والمطالب العالية بتحقيق د. الشثري

 http://www.ahlalhdeeth.com/vb/showthread.php?t=363824

அல்லாஹு அஃலம்

சுஐப் உமரி

🍓🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷🍓 தொடர் 🌏 03

🍓🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷🍓

🔬ஆதாரபூர்வமானதும் 🔦 பலவீனமானதும் 🔬

தொடர் 🌎 03

📔ஸஹீஹான ஹதீஸ்📔


இப்னு மஸ்ஊத் ( ரழி ) அவர்கள்  கூறுகிறார்கள். நான்
நபி ( ஸல் ) அவர்களிடம் " அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான அமல் எது? என்று கேட்டேன்.

🍓" குறித்த நேரத்தில் தொழுவது " என்றார்கள்.
பின்பு எது? என்றேன்.

🍓 "பெற்றோருடன் நல்ல முறையில் நடத்தல்" என்றார்கள். " பின்னர் எது?" என்ற போது

🍓 "அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவது" என்றார்கள்.


🚥🚥🚥🚥🚥

இந்த ஹதீஸ் புஹாரி, முஸ்லிம் உட்பட பல கிரந்தங்களில்
🌴இப்னு உமர் ,
🌴தவ்பான்,
🌴அனஸ் ( ரழி ) போன்ற ஸஹாபிகள் வழியாக  பதியப்பட்டுள்ளது.

👇👇👇👇👇👇

சில அறிவிப்புகளில்  "தொழுகையை அவற்றின் ஆரம்ப நேரத்தில் நிறைவேற்றுதல் " என்று இடம் பெற்றுள்ளது.

ஹதீஸ்கலை அறிஞர்கள் இதை சரி கொண்டுள்ளார்கள்.

அல்லாஹு அஃலம்

சுஐப் உமரி

Saturday, April 09, 2016

🍓🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷🍓 தொடர் 🌎 04

🍓🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷🍓

🔬ஆதாரபூர்வமானதும் 🔦 பலவீனமானதும் 🔬

தொடர் 🌎 04

📔பலவீனமான ஹதீஸ்📔

அபூதர் ( ரழி ) அவர்கள் கூறுகிறார்கள்.

நபி  ( ஸல்) அவர்கள் மழைக்காலத்தில் ஒருநாள் வெளியே சென்றார்கள். மரங்களிலிருந்து இலைகள் உதிர்ந்து கொண்டிருந்தன.  நபியவர்கள் ஒரு கிளையை அசைத்த போது இன்னும் இலைகள் உதிர்ந்தன.

" அபூதர்ரே! " என்று என்னை அழைத்தார்கள். " லப்பைக்  (இதோ இருக்கிறேன்) யாரஸூலல்லாஹ்" என்றேன்.
அப்போது அவர்கள்  " ஒரு முஸ்லிமான அடியான் அல்லாஹ்வுக்காக தொழுதால் இம்மரத்திலிருந்து இலைகள் உதிர்வது போல் அவரது பாவங்கள் உதிர்ந்து விடுகின்றன என்று கூறினார்கள் "

👇👇👇👇👇👇

முஸ்னத் அஹ்மதில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் முஸாஹிம் இப்னு முஆவியா என்பவர் இடம் பெற்றுள்ளார்.

இவர் யார் என்று அறியப்படாதவர்களில் ஒருவர்.

எனவே இந்த செய்தி பலவீனமாகும்.

📌📌📌📌📌📌📌📌
என்றாலும் கூறப்படும் விடயம் வேறு ஹதீஸ்கள் மூலம் நிறுவப்பட்டுள்ளதால் இதை தவிர்த்து ஏனையவற்றை ஆதாரமாகக் கொள்ளலாம்.

அல்லாஹு அஃலம்

சுஐப் உமரி

🍓🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷🍓 தொடர் 🌎 05

🍓🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷🍓

🔬ஆதாரபூர்வமானதும் 🔦 பலவீனமானதும் 🔬

தொடர் 🌎 05

📔பலவீனமான ஹதீஸ்📔

அபூ உஸ்மான் என்பவர் கூறுகிறார் " ஸல்மான் ( ரழி ) அவர்களுடன் ஒரு மரத்தடியில் இருந்தேன். அப்போது அவர் காய்ந்த மரக்கிளை ஒன்றைப் பிடித்து அசைத்த போது அதன் இலைகள் உதிர்ந்தன.

என்னை நோக்கி "அபூ உஸ்மானே ! நான் ஏன் இப்படி செய்தேன் என்று கேட்கவில்லையே?
என்றார் .

ஏன் அவ்வாறு செய்தீர்? என்று கேட்டதற்கு

" ஒருதடவை நானும் நபியவர்களுடன் ஒரு மரத்தடியில் இருந்த போது நான் செய்தது போன்று செய்து இதேபோன்றே கேட்டார்கள்.

நானும் " சரி. ஏன்  இவ்வாறு செய்தீர்கள்". என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள் " ஒரு முஸ்லிம் ஒழுங்காக வுழூ செய்து, ஐந்து நேரமும் தொழுதால் இந்த இலைகள் உதிர்ந்தது போல் அவரின் பாவங்களும்  உதிர்ந்து விடுகின்றன என்று கூறி பின்வரும் குர்ஆன் வசனத்தை ஓதினார்கள்.

📚பகலின் இருந்து ஓரங்களிலும் இரவின் சில பகுதிகளிலும்தொழுவீராக.
நிச்சயமாக நன்மைகள் பாவங்களைப்  போக்கிவிடுகின்றன.📚

அல்குர்ஆன் 21:114

இந்த ஹதீஸை அஹ்மத், நஸாயீ, தபரானி, தாரமி, தபரி, மர்வஸீ, ஸஹ்மீ, இப்னு ஷாஹீன், தயாலஸீ, இப்னு அபீ ஷைபா
, இப்னு ஸல்லாம், அபூ தாஹிர்

ஆகிய இமாம்கள் தமது கிரந்தங்களில் அலீ இப்னு ஸைத்  என்பவர் ஊடாக பதிவு செய்துள்ளனர்.


இந்த அலீ என்பவர்  பலவீனமானவர் என்று இமாம்  இப்னு ஹஜர், இமாம் இப்னு ஹிப்பான் ஆகியோர் கூறுகிறார்கள் .

எனவே இந்த செய்தி பலவீனமாகும்.

📌📌📌📌📌📌📌📌
என்றாலும் கூறப்படும் விடயம் வேறு ஹதீஸ்கள் மூலம் நிறுவப்பட்டுள்ளதால் இதை தவிர்த்து ஏனையவற்றை ஆதாரமாகக் கொள்ளலாம்.

அல்லாஹு அஃலம்

சுஐப் உமரி

🍓🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷🍓 தொடர் 🌎 06

🍓🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷🍓

🔬ஆதாரபூர்வமானதும் 🔦 பலவீனமானதும் 🔬

தொடர் 🌎 06

📔பலவீனமான ஹதீஸ்📔

" மிஸ்வாக் செய்து தொழுவது , மிஸ்வாக் செய்யாமல் தொழுவதை விட எழுபது மடங்கு சிறந்தது"
என்று நபி  ( ஸல் ) அவர்கள் கூறினார்கள்.

👉 இது
🌴 ஆயிஷா,
🌴 இப்னு உமர்,
🌴 இப்னு அப்பாஸ், ஜாபிர் ( ரழி ) ஆகியோர் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறும்  இமாம் இப்னு ஹஜர் அல் அஸ்கலானீ அதன் அனைத்து அறிவிப்புகளும்
பலவீனமானவை என்கிறார்.

👉 அத்தோடு இமாம் இப்னு மயீன் இது ஒரு باطل பாதிலான ஹதீஸ் என்று சொல்வதையும் பதிந்துள்ளார்.
📖 (التخليص الحبير) 📖

👉 இமாம் நவவீயும் இதை பலவீனமானது என்று கூறுகிறார்கள்.
📖 (الخلاصةللنووي) 📖

🚦🚦🚦🚦🚦🚦🚦

தொழுகைக்குத் தயாராகும் போது பல் துலக்குவது ஸுன்னா என்று வேறு ஹதீஸ்களில் கூறப்பட்டாலும், இவ்வளவு சிறப்பானது என்பதற்கு ஸஹீஹான ஹதீஸ்களில் கூறப்படவில்லை.

🚧🚧🚧🚧🚧

எனவே இதைச் சொல்லி ஆர்வமூட்டுவதை விட்டு ஆதாரபூர்வமானதை மாத்திரம் முன்வைத்து, அதன்படியே அமல் செய்து மற்றவர்களுக்கும் எத்தி வைப்போம்.

அல்லாஹு அஃலம்

ஷுஐப் உமரி

🍓🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷🍓 தொடர் 🌎07

🍓🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷🍓

🔬ஆதாரபூர்வமானதும் 🔦 பலவீனமானதும் 🔬

தொடர் 🌎 07

📔பலவீனமான ஹதீஸ்📔

மிஸ்வாக் செய்வதால் பத்து பலன்கள் கிடைக்கின்றன.

1. வாயை சுத்தப்படுத்தும்.
2. அல்லாஹ்வின் திருப்தியைப்    பெற்றுத்தரும்.
3. ஷைத்தானுக்கு கோபத்தை உண்டாக்கும்.
4. மிஸ்வாக் செய்பவரை அல்லாஹ் தன் நேசராக்குகிறான்.
5. மலக்குகளும் நேசராக்குகின்றனர்
6. பல் ஈறுகளுக்கு சக்தி அளிக்கிறது.
7. சளியை நீக்குகிறது.
8. வாயை நறுமணமாக்குகிறது.
9. பித்தத்தைப் போக்குகிறது.
10. பார்வையைக் கூர்மையாக்குகிறது.

என்று நபி  ( ஸல் ) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ்  ( ரழி ) அவர்கள் அறிவிக்கிறார்கள் என்று

📌இமாம்களான பைஹகீ, அபூநுஐம் ஆகியோர்  பதிந்துள்ளனர்.📌

🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥

👉 இதனுடைய அறிவிப்பாளர் வரிசையில் الخليل بن مرة எனும் மிக பலவீனமான அறிவிப்பாளர் இடம்பெற்றிருப்பதோடு,

📖 البدر المنير 📖

👉 இருட்டடிப்பு செய்பவர் என்று பிரபலமான بقية என்பவர் தான் முன்னையவரிடமிருந்து கேட்டதை உறுதிப்படுத்தவில்லை.

📖 سلسلة الأحاديث الضعيفة 📖

💡💡💡💡💡💡💡💡💡💡💡💡

இதே விடயம் இப்னு அப்பாஸ் அவர்களுடைய கூற்றாக  இமாம் தாரகுத்னீ பதிவு செய்துள்ளார்கள்.

🚥🚥🚥
👉 இதிலே معلى بن ميمون என்ற மிக பலவீனமான அறிவிப்பாளர் இடம் பெற்றுள்ளார்.

📖 البدر المنير 📖

💡💡💡💡💡💡

இதே விடயம் நபியவர்கள் கூறியதாக அனஸ்  ( ரழி ) அவர்கள் அறிவித்திருப்பதாக

இமாம்களான தைலமீ, அல் க்ஹவ்லானீ ஆகியோர் பதிந்துள்ளனர்.

🚦🚦🚦🚦

👉 முதலாமவருடைய ஒரு அறிவிப்பில் بكر بن خنيس மற்றும் كنانة بن جبلة ஆகிய மிகவும் பலவீனமான அறிவிப்பார்கள் இடம்பெற்றிருப்பதோடு,

👉 இரண்டாவது அறிவிப்பில் عمرو بن جميع என்று பொய்யர் இடம்பெற்ற பெறுகின்றார்.

👉 இமாம் கௌலானி உடைய அறிவிப்பில் ابو محمد الحكمي என்ற யாரென்று அறியப்படாத ஒருவர் இடம் பெற்றுள்ளார்.

🚫🚫 எனவே இந்த செய்தி மிகவும் பலவீனமானதாகும்.🚫🚫

والله أعلم.

شعيب بن فائز العمري

🍓🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷🍓 தொடர் 🌎 08

🍓🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷🍓

🔬ஆதாரபூர்வமானதும் 🔦 பலவீனமானதும் 🔬

📔 ஸஹீஹான ஹதீஸ் 📔


🌊வுழூ செய்வதின் சிறப்பு 🌊

அல்லாஹ்வின் தூதரே! அன்றைய தினம் (உங்கள் சமூகத்தாராகிய) எங்களை நீங்கள் அடையாளம் கண்டுகொள்வீர்களா? என்று மக்கள் கேட்டார்கள்.

அதற்கு அவர்கள், ஆம். வேறெந்தச் சமுதாயத்தாருக்கும் இல்லாத ஓர் அடையாளம் உங்களுக்கு இருக்கும். வுழூ செய்ததன் அடையாளமாக  அதன் அங்கங்கள் பிரகாசிப்பவர்களாய் என்னிடம் நீங்கள் வருவீர்கள். (அதை வைத்து உங்களை நான் அடையாளம் கண்டு கொள்வேன்)என்று கூறினார்கள்.

👇👇👇👇👇👇👇

இந்த ஹதீஸை இமாம் புகாரி, இமாம் முஸ்லிம் உட்பட பலர்  வார்த்தைகளில் சில கூடுதல் குறைத்தலுடன் பதிந்துள்ளனர்.

இது
🌴அபூஹுரைரா,
🌴ஹுதைபா,
🌴அப்துல்லாஹ் இப்னு புஸ்ர் ,
🌴அபூதர்தா,
🌴அபூதர்,
🌴அபூ உமாமா,
🌴இப்னு அப்பாஸ்,
🌴ஜாபிர்
 போன்ற ஸஹாபாக்கள் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 📖 سلسلة الأحاديث الصحيحة 📖

📖 مسند أحمد بتحقيق الشيخ شعيب الارنؤوط 📖

الله أعلم

شعيب بن فائز العمري

🍓🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷🍓 தொடர்🌎 09

தொடர் 🌎 09

🍓🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷🍓

🔬ஆதாரபூர்வமானதும் 🔦 பலவீனமானதும் 🔬

📔 ஸஹீஹான ஹதீஸ் 📔


🌊 ஐந்து நேரமும் தொழுவதன் சிறப்பு 🌊

🌴அபூஹுைரரா (ரலி) அவர்கள் கூறினார்கள். 🌴

🌺அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்களில் ஒருவருைடய (வீட்டு ) வாசலில் ஒரு ஆறு இருந்து , அதில் அவர் தினமும் ஐந்து முறை குளிக்கின்றார் என்றால், அவரது உடலில் அழுக்கேதும் இருக்குமா?'' என்று கேட்டார்கள். 🌺

🌳அதற்கு மக்கள் "அவரது உடலில் அழுக்கேதும் இருக்காது'' என்று பதிலளித்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இது தான் ஐவேளத் தொழுகைகளுக்கு  உதாரணமாகும் . அ(வற்றை
நிறைவேற்றுவ)தன் மூலம் அல்லாஹ் தவறுகைள அழிக்கிறான்'' என்று கூறினார்கள். 🌳

🌼புகாரி, முஸ்லிம் உட்பட பல கிரந்தங்களில் இது பதியப்பட்டுள்ளது.🌼


🌴ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்.🌴

🌺அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஐவேளையும் தொழுவது , உங்கள் வீட்டு வாசலில் ஓடும் ஆழமான நதி இருந்து , அதில் அவர் நாள்தோறும் ஐந்து முறை குளித்துவருவதற்கு ஒப்பானதாகும்.🌺


🌾ஹசன் அல்பஸ்ரி (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "(அவ்வாறு ஐந்து முறை குளித்தால்) அவரது உடலில் அழுக்கெதையும் அது விட்டுைவக்குமா?'' என்று (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டதாக) இடம் பெற்றுள்ளது .🌾

🌼இது முஸ்லிம், அஹ்மத் போன்ற கிதாபுகளில் பதிவாகியுள்ளது.🌼

அல்லாஹு அஃலம்

ஷுஐப் உமரி