தொடர் 🌎 11
🍓🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷🍓
🔬ஆதாரபூர்வமானதும் 🔦 பலவீனமானதும் 🔬
📔 நபியவர்கள் கூறியிருக்க வாய்ப்புள்ள ஸஹாபியின் ஸஹீஹான கூற்று 📔
🍅 ஒரு மனிதர் தஹஜ்ஜுத் தொழ வேண்டும் என்ற எண்ணத்துடன் தூங்கினார். பிறகு அவர் விழிக்கவில்லை. என்றாலும் அவருக்கு தஹஜ்ஜுத் உடைய நன்மை கிடைக்கிறது. தூங்கியதும் ஸதகாவாகி விடுகிறது.🍅
🔭 இதை
🌴அபூதர் அல்லது
🌴அபூதர்தா ( ரழி )
உடைய கூற்றாக (موقوف) இமாம்களான ஸுப்யானுஸ் ஸவ்ரீ , ஸுப்யான் இப்னு உயைனா ஆகியோர், عبدة بن أبي لبابة என்பவரிடம் இருந்து அறிவிப்பதாக இமாம்களான நஸாயீ, இப்னு ஹுஸைமா ஆகியோர் பதிந்துள்ளனர். 🔭
🔮இதே செய்தியை عبدة என்பவரிடம் இருந்து حبيب بن أبي ثابت என்பவர் அறிவிப்பதாக இமாம்களான இப்னு ஹுஸைமா, மர்வஸீ ஆகியோர் பதிவு செய்துள்ளனர். 🔮
🔬 இவர் ( حبيب ) வழியாக வரும் இரு அறிவிப்புகளில் ஒன்றில் ஜரீர் என்பவரும் இது ஸஹாபியின் கூற்று என்றே குறிப்பிடுகின்றார்.🔬
🔭அதே சமயம் حبيب வழியாக வரும் மற்றைய அறிவிப்பில் வரும் ஸாயிதா இப்னு குதாமா என்பவரிடமிருந்து அறிவிப்பவர்கள் தமக்குள் முரண்படுகின்றனர்.
🔦இவருடைய கிதாபுகளை அறிவிக்கும் முஆவியா இப்னு அம்ரு என்பவர் ஸஹாபியின் கூற்று என்று குறிப்பிடுகின்றார்.🔭
🔬ஆனால் இவரிடமிருந்து அதிகம் அறிவிக்கக் கூடிய ஹுஸைன் இப்னு அலீ என்பவர் நபியவர்கள் கூறியதாக அறிவிக்கிறார்.🔬
📷 இதை அறிவிப்பவர்களில் இவர் மாத்திரமே இவ்வாறு அறிவித்துள்ளதாக இமாம் இப்னு ஹுஸைமா குறிப்பிடுகிறார் 📷
📖 صحيح ابن خزيمة 📖
✏ ✏✏✏✏
ஹுஸைன் என்பவர் நம்பகமானவராக இருந்தாலும், மற்றைய நம்பகமானவர்களுக்கு முரணாக அறிவிப்பதால் இவருடைய செய்தி ஷாத் ( شاذ)எனும் பலவீனமானதாக மாறுகிறது.✏
🌾எனவேதான் இமாம் தாரகுத்னீ அவர்கள் இது ஸஹாபியின் கூற்று என்பதே சரியானது என்று கூறுகிறார். "المحفوظ الموقوف "🌾
📖 جامع العلوم والحكم لابن رجب 📖
🌽இதனால் தான் தமது நிபந்தனைகளுக்கு உட்டபட்டதாக இருந்தும், இதனை இமாம்களான புகாரி, முஸ்லிம் ஆகியோர் தமது கிரந்தங்களில் பதியவில்லை. என்று இமாம் ஹாகிம் கூறுகிறார்.🌽
📖 المستدرك على الصحيحين 📖
💡💡💡
இதே செய்தியை நபியவர்களின் கூற்றாக عبدة இடமிருந்து இமாம் ஷுஃபா வழியாக இமாம் இப்னு ஹிப்பான் பதிந்துள்ளார்.
❌இந்த அறிவிப்பில் வரும் مسكين بن بكير என்பவர் பலவீனமானவர். "யாரும் அறிவிக்காதவற்றை இமாம் ஷுஃபா வழியாக அறிவிப்பவர்" என்று இமாம் அஹ்மத் கூறுகிறார்.❌
💡💡💡
இதே விடயம் ஆயிஷா ( ரழி) சிறு வார்த்தை மாற்றங்களுடன் நபிகளாரிடமிருந்து அறிவிப்பதாக வருகிறது.
❌ஆனால் அதில் பெயர் கூட அறியப்படாத ஒருவர் இருப்பதால் அதுவும் பலவீனமானதாகும்.❌
👇👇👇👇👇
முடிவாக 📌📌📌
💎இது நபியவர்களின்கூற்று அல்ல. ஸஹாபாக்கள் சொன்னதாகும். 💎
🌼 என்றாலும் அறிவிப்பாளர் வரிசை சரியாக இருக்கும் நிலையில், இது அந்த ஸஹாபாக்கள் சுயமாக சொல்ல முடியாத விடயம் என்பதால், நபியவர்கள் சொல்லித்தான் அவர்கள் அதைச் சொல்லியிருப்பார்கள், என்று ஷுஐப் அல் அர்னாவூத் அவர்கள் கூறுகிறார்கள். 🌼
அல்லாஹு அஃலம்
ஷுஐப் உமரி

No comments:
Post a Comment