Saturday, April 09, 2016

🍓🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷🍓 தொடர் 🌎 05

🍓🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷🍓

🔬ஆதாரபூர்வமானதும் 🔦 பலவீனமானதும் 🔬

தொடர் 🌎 05

📔பலவீனமான ஹதீஸ்📔

அபூ உஸ்மான் என்பவர் கூறுகிறார் " ஸல்மான் ( ரழி ) அவர்களுடன் ஒரு மரத்தடியில் இருந்தேன். அப்போது அவர் காய்ந்த மரக்கிளை ஒன்றைப் பிடித்து அசைத்த போது அதன் இலைகள் உதிர்ந்தன.

என்னை நோக்கி "அபூ உஸ்மானே ! நான் ஏன் இப்படி செய்தேன் என்று கேட்கவில்லையே?
என்றார் .

ஏன் அவ்வாறு செய்தீர்? என்று கேட்டதற்கு

" ஒருதடவை நானும் நபியவர்களுடன் ஒரு மரத்தடியில் இருந்த போது நான் செய்தது போன்று செய்து இதேபோன்றே கேட்டார்கள்.

நானும் " சரி. ஏன்  இவ்வாறு செய்தீர்கள்". என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள் " ஒரு முஸ்லிம் ஒழுங்காக வுழூ செய்து, ஐந்து நேரமும் தொழுதால் இந்த இலைகள் உதிர்ந்தது போல் அவரின் பாவங்களும்  உதிர்ந்து விடுகின்றன என்று கூறி பின்வரும் குர்ஆன் வசனத்தை ஓதினார்கள்.

📚பகலின் இருந்து ஓரங்களிலும் இரவின் சில பகுதிகளிலும்தொழுவீராக.
நிச்சயமாக நன்மைகள் பாவங்களைப்  போக்கிவிடுகின்றன.📚

அல்குர்ஆன் 21:114

இந்த ஹதீஸை அஹ்மத், நஸாயீ, தபரானி, தாரமி, தபரி, மர்வஸீ, ஸஹ்மீ, இப்னு ஷாஹீன், தயாலஸீ, இப்னு அபீ ஷைபா
, இப்னு ஸல்லாம், அபூ தாஹிர்

ஆகிய இமாம்கள் தமது கிரந்தங்களில் அலீ இப்னு ஸைத்  என்பவர் ஊடாக பதிவு செய்துள்ளனர்.


இந்த அலீ என்பவர்  பலவீனமானவர் என்று இமாம்  இப்னு ஹஜர், இமாம் இப்னு ஹிப்பான் ஆகியோர் கூறுகிறார்கள் .

எனவே இந்த செய்தி பலவீனமாகும்.

📌📌📌📌📌📌📌📌
என்றாலும் கூறப்படும் விடயம் வேறு ஹதீஸ்கள் மூலம் நிறுவப்பட்டுள்ளதால் இதை தவிர்த்து ஏனையவற்றை ஆதாரமாகக் கொள்ளலாம்.

அல்லாஹு அஃலம்

சுஐப் உமரி

No comments: