Wednesday, April 27, 2016

தொடர் 🌎 19 🍓🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷🍓 🔬ஆதாரபூர்வமானதும் 🔦 பலவீனமானதும் 🔬

தொடர் 🌎 19

🍓🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷🍓

🔬ஆதாரபூர்வமானதும் 🔦 பலவீனமானதும் 🔬

📔 ஆதாரபூர்வமான சம்பவம் 📔

🍅அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப் ( ரழி ) அவர்கள் ஒரு சமயம் இறந்து விட்டார்கள் என்று என்னும் அளவிற்கு மயக்கமுற்று இருந்தார்கள். துணியொன்றால்  மூடிவிட்டார்கள்.

🌿அவரது மனைவி உம்மு குல்ஸூம் ( ரழி ) அவர்கள் தொழுகையை கொண்டும் பொறுமையைக் கொண்டும் உதவி தேடவேண்டும்  என்று ஏவப்பட்டுள்ளதன்படி பள்ளிக்குச் சென்றார்கள்.

🌱 மயக்கம் தெளிந்தவுடன் அவர் தக்பீர் சொல்ல மக்களும்  தக்பீர் சொன்னார்கள்.

" நான் மயக்கமுற்று இருந்தேனா? எனக் கேட்க, "ஆம்" என்று கூறினர்.
அப்போது அவர்கள்,

🍃" இரண்டு மலக்குகள் என்னிடம் வந்து " புறப்படுவீராக. நம்பிக்கையான கண்ணியமான அல்லாஹ்விடம் உம்மைப் பற்றி தீர்ப்பளிக்கப்பட வேண்டியிருக்கிறது. எனக் கூறினார்கள்.

🍁அப்போது வேறொரு மலக்கு வந்து " அவரை விட்டு விடுங்கள். தாயின் வயிற்றில் இருந்த போதே பாக்கியசாலி என்று எழுதப்பட்டவர்களில் இவரும் ஒருவர். இவர் மூலம் இவருடைய மக்கள் இன்னும் பயன் பெற வேண்டியுள்ளது" என்று கூறிவிட்டுச் சென்றார்கள்.

🌼அதன் பிறகு ஒரு மாத காலமே உயிர் வாழ்ந்தார்கள். அதன்பிறகு மரணித்து விட்டார்கள்.

 👇👇👇👇👇

இச்சம்பவத்தை இமாம்களான

  🌽அப்துர் ரஸ்ஸாக் عبد الرزاق தனது المصنف  முஸன்னப் 146 இலும்,

🌽இவர் வழியாக இஸ்ஹாக் இப்னு ராஹவைஹி  اسحاق بن راهويه தனது முஸ்னதில் பதிவு செய்துள்ளதாக இப்னு ஹஜர் அஸ்கலானீ المطالب العالية அல் மதாலிப் 3976 இலும்,

🌽அதே வரிசையில் ஹாகிம் தனது  المستدرك முஸ்தத்ரக் 3066 இலும்,

🌽தொடரந்து பைஹகீ தனது ஷுஅபுல் ஈமான் شعب الإيمان  9235 இலும்,

🌽மற்றும் ابو بكر الدينوري அபூபக்ர் அத்தீனூரி தனது  المجالسة முஜாலஸா 378இலும்,

பதிந்துள்ளனர்.

💡💡💡

🍃🍁இதை அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப் (ரழி ) உடைய மனைவி உம்முடைய குல்ஸூம் சொன்னதாக அவர்களின் மகன் ஹுமைத் அறிவிக்கின்றார்.🍁🍃

🔍🔍🔍🌼

இதல்லாமல், அவர்களது மற்றொரு மகனான இப்ராஹீம் என்பவரும்  இதை அறிவித்துள்ளார். 🌼

🔭இந்த அறிவிப்பை இமாம்களான

🌽பிர்யாபீ   الفريابي தனது القدر  அல் கத்ர் 435 இலும்,

🌽இவர் வழியாக الآجري ஆஜுர்ரீ தனது الشريعة ஷரீஆ 436 இலும்,

🌽மற்றும் ابن بطة இப்னு பத்தா தனது الابانة الكبرى இபானா 1587 இலும்,

🌽அபூ நுஐம் ابو نعيم தனது معرفة الصحابة  மஃரிபதுஸ் ஸஹாபா 484 இலும்,

🌽வாஹிதீ  الواحدي தனது தப்ஸீரிலும் 456,

🌽இப்னு அபித்துன்யா தனது "  المحتضرين   மரணத் தருவாயில் இருந்தவர்கள் " 352 இலும்,

🌽இவர் வழியாகவும் வேறு வழிகளிலும் இப்னு அஸாகிர் تاريخ دمشق  35/295  - 298 இலும்,

🌽 இமாம் இப்னு ஸஃத் الطبقات الكبرى  3/99 இலும்,

🌽இப்னு அபீஹாதம் வழியாக  இமாம்  اللالكائي தனது  அஸ்ஸுன்னா 1220 இலும்,
இப்னு கய்யிம் அல் ஜவ்ஸிய்யா  தனது  شفاء العليل ஷிபாஉல் அலீல் 1/27 இலும்,

🌽யஃகூப் தனது  المعرفة والتاريخ அல் மஃரிபா 1/367 இலும்,

இவர் வழியாக பைஹகீ தனது القضاء والقدر  கழா 109 இலும்,

பல வழிகளூடாகப் பதிந்துள்ளனர்.

 💡💡💡💡

🌸இவற்றில் சில அறிவிப்புகளில் பலவீனமானவர்கள் இருந்தாலும் மற்றைய அறிவிப்புகள் சரிகாணப் படுகின்றன.🌸

🌼இமாம் பூஸீரீ البوصيري அவர்கள் இமாம் இஸ்ஹாக் உடைய அறிவிப்பை ஸஹீஹ் என்று إتحاف الخيرة المهرة  இத்ஹாபில் கூறியுள்ளார்.🌼

🌻இமாம் ஹாகிமும் தனது அறிவிப்பை சரிகாண இமாம் தஹபீ الذهبي அதை ஆமோதித்துள்ளார்.🌻

🍇🌴எமது இறுதி முடிவு நல்லதாக அமைய அல்லாஹ்வைப்  பிரார்த்திப்போம்.🍇🌴



அல்லாஹு அஃலம்

ஷுஐப் உமரி

25/04/2016

No comments: