Sunday, April 24, 2016

தொடர் 🌎 15 🍓🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷🍓

தொடர் 🌎 15

🍓🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷🍓

🔬ஆதாரபூர்வமானதும் 🔦 பலவீனமானதும் 🔬

📔 பலவீனமான சம்பவம் 📔

🍅 இப்னு அப்பாஸ்  ( ரழி ) அவர்கள் ஒரு பயணம் சென்றிருந்த போது, தம் மகன் இறந்து விட்டதாக செய்தி கிடைத்தது. உடனே இறங்கி இரண்டு ரக்அத்துகள் தொழுது விட்டு, إنا لله وإنا إليه راجعون  என்று கூறினார்கள்.
பிறகு அல்லாஹ் எதை ஏவினானோ அதையே நான் செய்தேன். என்று கூறி பின்வரும் வசனத்தை ஓதினார்கள்.
📚واستعينوا بالصبر والصلوة ( البقرة 45)📚
தொழுகையைக் கொண்டும் பொறுமையைக் கொண்டும்  உதவி தேடுங்கள். 🍅

🔦🔦🔦🔦🔦

இந்த சம்பவத்தை இமாம்களான

 🌽ஸயீத் இப்னு மன்ஸூர் தனது தப்ஸீரிலும் (189),

🌽மர்வஸீ தனது تعظيم قدر الصلاة  201இலும்,

🌽புகாரி தனது  التاريخ الكبير  3/156இலும்,

🌽ஹாகிம் தனது   المستدرك على الصحيحين 3067இலும் ,

🌽பைஹகீ தனது  شعب الإيمان 9232இலும் பதிந்துள்ளனர்.

🔬🔬🔬🔬🔬

இந்த அறிவிப்பில் வரும்  📌காலித் இப்னு ஸப்வான்📌 என்பவரை
இமாம்களான புகாரி  التاريخ الكبير இலும் , இப்னு அபீஹாதம் الجرح والتعديل இலும் குறிப்பிட்டிருந்தாலும் அவரது நம்பகத் தன்மை பற்றிய தகவல்கள் எதையும் கூறவில்லை.
 📖 التاريخ الكبير ، الجرح والتعديل 📖

📚📖📚

எனவே இந்த செய்தி பலவீனமாகும். ஆனால், இப்னு அப்பாஸ்  ( ரழி ) சகோதரர் குஸம் மரணித்த வேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றதாக வேறு அறிவிப்புகளில் இடம்பெற்றுள்ளது. அது ஸஹீஹானதாகும். அதை அடுத்த தொடரில் பார்ப்போம்.📚📖📚

அல்லாஹு அஃலம்

ஷுஐப் உமரி

No comments: