Sunday, April 24, 2016

தொடர் 🌎 18 🍓🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷🍓

தொடர் 🌎 18

🍓🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷🍓

🔬ஆதாரபூர்வமானதும் 🔦 பலவீனமானதும் 🔬

📔 பலவீனமான சம்பவம் 📔

🍅உபாதா ( ரழி ) அவர்கள் தனது மரண வேளை நெருங்கிய போது தனக்கு நெருங்கிய அனைவரையும் ஒன்று கூட்டி,

 🌱" இன்றைய நாளை உலகில் நான் வாழப் போகும் கடைசி பகலென்றும் மறுமையின் முதல்  இரவாகவும் நினைக்கிறேன்.

🌿எனது கையாலோ, நாவாலோ ( உங்களுக்கு ) ஏதேனும் தவறு நடந்திருக்கலாம். அதற்காக நான் மறுமையில் பழிவாங்கப்படுவேன்.

🍃எனவே எனது உயிர் பிரிய முன்னர்  என்னால் நடந்த தவறுகளுக்கு பழி தீர்த்துக் கொள்ளுங்கள். என்றார்கள். அப்போது " நீர் நல்லதொரு தந்தையாகவும் வழிகாட்டியாகவும் இருந்தீர். " என்று மக்கள் கூறிய போது,

🌸 " அப்படி ஏதாவது நடந்திருந்தால் மன்னித்து விடுவீர்களா?" என்று கேட்டார். "ஆம்" என்று மக்கள் கூறியதை அடுத்து "யா அல்லாஹ்! நீயே சாட்சியாக இரு" என்று கூறி விட்டு பின்வருமாறு உபதேசித்தார்கள்.

🌻" எனக்காக எவரும் அழக்  கூடாது.எனது உயிர் பிரிந்த பின் நீங்கள் அனைவரும் நல்ல முறையில் வுழூச் செய்து, மஸ்ஜிதுக்குச் சென்று தொழுது விட்டு தமக்காகவும் எனக்காகவும்  பாவமன்னிப்புத் தேடுங்கள்.

🌻ஏனெனில் 🌼பொறுமையைக் கொண்டும் தொழுகையைக்  கொண்டும் உதவி தேடுங்கள்🌼 என்று அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்.
தொழுத பிறகு என்னை அவசரமாக அடக்கம் செய்து விடுங்கள்." என்று கூறினார்கள்.🍅

💡💡💡💡💡

இச்சம்பவத்தை இமாம்களான

🌽ஹன்னாத்  هناد தனது   الزهد 2/405 இலும்,

🌽இப்னு ஸப்ர் அர்ரபஈ ابن زبر الربعي தனது وصايا العلماء عند حضور الموت " மரண வேளையில் அறிஞர்களின் உபதேசங்கள் " (1/48) இலும்,

🌽பைஹகீ தனது شعب الإيمان  ஷுஅபுல் ஈமான் (9234) இலும்,

🌽இப்னு அஸாகிர் தனது தாரீஹிலும் تاريخ دمشق 3071,

🌽மிஸ்ஸீ المزي  தனது  تهذيب الكمال தஹ்தீபுல் கமால் (14/188) இலும்,

விரிவாக பதிந்துள்ளனர்.

💡❌🔴🚫

இச்சம்பவத்தை அறிவிக்கும்  عبادة  بن محمد  بن عبادة بن الصامت உபாதா இப்னு முஹம்மத் என்பவரின் நிலை பற்றிய தகவல்களை எந்த அறிஞரும் கூறவில்லை.💡🚫

💡🔍இவர்  உபாதா  ( ரழி ) உடைய பேரரான  عبادة بن الوليد بن عبادة بن الصامت உபாதா இப்னுல் வலீத் எனும் நம்பகமானவராக இருக்கலாம் என்று அனுமானிக்கப்பட்டாலும், 🔍

💡🔍🚫❌

இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறும் عيسى بن سنان  ஈஸா இப்னு ஸினான் என்பவர் மனனக் கோளாறு உள்ளவர்  என்று அறிஞர்கள் கூறியிருப்பதோடு,🔍💡

🚦🚦🚦

இவரோடு வேறு நம்பகமானவர்கள் அறிப்பவற்றையே ஆதாரமாகக் கொள்கிறார்கள்.

இச்சம்பவத்தை இவர் மாத்திரமே அறிவிப்பதால் இது  பலவீனமானதாகும்.🌱🌼

அல்லாஹு அஃலம்

ஷுஐப் உமரி
24/04/2016 🌼

No comments: