Sunday, April 17, 2016

தொடர் 🌎 12 🍓🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷🍓

தொடர் 🌎 12

🍓🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷🍓

🔬ஆதாரபூர்வமானதும் 🔦 பலவீனமானதும் 🔬

📔 பலவீனமான ஹதீஸ் 📔

🍅நபி ( ஸல் ) அவர்களுக்கு ஏதாவது  சிரமம் ஏற்பட்டால், உடனே தொழுகையின் பக்கம் விரைவார்கள்.🍅

💡 இதை
🌴ஹுதைபா  ( ரழி ) அவர்கள் வழியாக இமாம்களான தபரீ, இப்னு கானிஃ, பைஹகீ , அஹ்மத், அபூ அவானா, அபூதாவூத், மர்வஸீ, அபூநுஐம் ஆகியோர் தமது கிரந்தங்களில் பதிந்துள்ளனர்.

🔦🔦🔦
இவ்வறிவிப்பில் ஹுதைபா  ( ரழி ) இடமிருந்து அறிவிக்கும் அவரது உறவினரான அப்துல் அஸீஸ் என்பவர் யாரென்று அறியப்படாதவர் என்று  இமாம் தஹபீ கூறுகிறார்.🔦🔦
📖 ميزان الاعتدال 📖

🔭இவரிடமிருந்து அறிவிக்கும் முஹம்மத் என்பவரும் யாரென்று அறியப்படாதவராவார். 🔭
📖 مسند أحمد بتحقيق الشيخ شعيب الارنؤوط 📖

👇👇👇👇👇

எனவே இது பலவீனமானதாகும். என்றாலும் இந்தக் கருத்து குர்ஆன் மற்றும் வேறு ஸஹீஹான ஹதீஸ்களில் கூறப்படுவதால் இதை விட்டு ஆதாரபூர்வமானதை மாத்திரம் முன்வைப்போம்.

அல்லாஹு அஃலம்

ஷுஐப் உமரி

No comments: