Sunday, April 10, 2016

தொடர் 🌎 10 🍓🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷🍓

தொடர் 🌎 10

🍓🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷🍓

🔬ஆதாரபூர்வமானதும் 🔦 பலவீனமானதும் 🔬

📔 பலவீனமான ஹதீஸ் 📔

🌾 " ஐங்காலத் தொழுகைகள் அவற்றுக்கு இடையிலுள்ள நேரங்களில் நிகழும் பாவங்களுக்குப் பரிகாரமாகும்." 🌾

என்று ரஸூலுல்லாஹி ( ஸல் ) அவர்கள் கூறிவிட்டு, 

🌼" ஒருவர் தொழிற்சாலையில் வேலை செய்யும் போது அவரது உடலில் அழுக்கும் தூசும் படும்.🌼

🌱அவர் வீடு திரும்பும் போது வழியிலுள்ள ஐந்து ஆறுகளிலும் குளித்துக் கொண்டே சென்றால் அவரது உடல் சுத்தமாகி விடுகிறது. தொழுகையும் இவ்வாறு தான். 🌱

🌺ஏதாவது தவறு நடந்தால் தொழுகையில் உள்ள பாவமன்னிப்பு , துஆவின் காரணமாக அல்லாஹ் அதை மன்னித்துவிடுகிறான். 🌺

இது
🌴அபூ ஸயீத் அல்குத்ரி ( ரழி ) அவர்கள் வழியாக அறிவிக்கப்படுகிறது. 🌴

🍃இமாம்களான பஸ்ஸார், தபரானீ ஆகியோர் பதிந்துள்ளனர்.🍃

👇👇👇👇👇

✏ இதை அபூஸயீத் ( ரழி ) வழியாக  யஹ்யா இப்னு ஐயூப் என்பவர் மாத்திரமே அறிவிப்பதாக இவ்விரு இமாம்களும் குறிப்பிடுகின்றனர்.✏ 

✏இவர் அறிப்பவற்றை அறிஞர்கள் கவனமாகக் கையாளுவார்கள்✏
 
(அதாவது இவர் மாத்திரம் அறிவிப்பவற்றைத் தவிர்ப்பார்கள்.) இமாம் புகாரி அவர்கள் இவருடன் இன்னொருவரும் அறிவிப்பதால் இவருடைய இரண்டு அறிவிப்புகளை ஸஹீஹுல் புகாரியில் பதிந்துள்ளார்.
📖 سير أعلام النبلاء 📖

👇👇👇👇👇👇👇

🔴 இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறும் அப்துல்லாஹ் இப்னு குரைழ் என்பவர் யாரென்று அறியப்படாதவர் என்று இமாம் ஹுஸைனீ கூறுகிறார். இவரைப் பற்றிய தகவல்களை எந்த அறிஞரும் கூறவில்லை.🔴
📖 تمام المنة 📖



🚥🚥🚥🚥🚥🚥

எனவே இது பலவீனமான ஒரு அறிவிப்பாகும். 

🍎🍓🍅🍎🍓🍅
தொழுகை பாவங்களை அழிக்கும் என்று வேறு பல ஸஹீஹான ஹதீஸ்களில் கூறப்பட்டிருப்பதால் இதை விட்டு ஆதாரபூர்வமானதை மாத்திரம் மக்கள் முன்வைப்போம்


அல்லாஹு அஃலம் 

ஷுஐப் உமரி

No comments: