Saturday, April 09, 2016

🍓🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷🍓 தொடர் 🌎07

🍓🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷🍓

🔬ஆதாரபூர்வமானதும் 🔦 பலவீனமானதும் 🔬

தொடர் 🌎 07

📔பலவீனமான ஹதீஸ்📔

மிஸ்வாக் செய்வதால் பத்து பலன்கள் கிடைக்கின்றன.

1. வாயை சுத்தப்படுத்தும்.
2. அல்லாஹ்வின் திருப்தியைப்    பெற்றுத்தரும்.
3. ஷைத்தானுக்கு கோபத்தை உண்டாக்கும்.
4. மிஸ்வாக் செய்பவரை அல்லாஹ் தன் நேசராக்குகிறான்.
5. மலக்குகளும் நேசராக்குகின்றனர்
6. பல் ஈறுகளுக்கு சக்தி அளிக்கிறது.
7. சளியை நீக்குகிறது.
8. வாயை நறுமணமாக்குகிறது.
9. பித்தத்தைப் போக்குகிறது.
10. பார்வையைக் கூர்மையாக்குகிறது.

என்று நபி  ( ஸல் ) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ்  ( ரழி ) அவர்கள் அறிவிக்கிறார்கள் என்று

📌இமாம்களான பைஹகீ, அபூநுஐம் ஆகியோர்  பதிந்துள்ளனர்.📌

🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥

👉 இதனுடைய அறிவிப்பாளர் வரிசையில் الخليل بن مرة எனும் மிக பலவீனமான அறிவிப்பாளர் இடம்பெற்றிருப்பதோடு,

📖 البدر المنير 📖

👉 இருட்டடிப்பு செய்பவர் என்று பிரபலமான بقية என்பவர் தான் முன்னையவரிடமிருந்து கேட்டதை உறுதிப்படுத்தவில்லை.

📖 سلسلة الأحاديث الضعيفة 📖

💡💡💡💡💡💡💡💡💡💡💡💡

இதே விடயம் இப்னு அப்பாஸ் அவர்களுடைய கூற்றாக  இமாம் தாரகுத்னீ பதிவு செய்துள்ளார்கள்.

🚥🚥🚥
👉 இதிலே معلى بن ميمون என்ற மிக பலவீனமான அறிவிப்பாளர் இடம் பெற்றுள்ளார்.

📖 البدر المنير 📖

💡💡💡💡💡💡

இதே விடயம் நபியவர்கள் கூறியதாக அனஸ்  ( ரழி ) அவர்கள் அறிவித்திருப்பதாக

இமாம்களான தைலமீ, அல் க்ஹவ்லானீ ஆகியோர் பதிந்துள்ளனர்.

🚦🚦🚦🚦

👉 முதலாமவருடைய ஒரு அறிவிப்பில் بكر بن خنيس மற்றும் كنانة بن جبلة ஆகிய மிகவும் பலவீனமான அறிவிப்பார்கள் இடம்பெற்றிருப்பதோடு,

👉 இரண்டாவது அறிவிப்பில் عمرو بن جميع என்று பொய்யர் இடம்பெற்ற பெறுகின்றார்.

👉 இமாம் கௌலானி உடைய அறிவிப்பில் ابو محمد الحكمي என்ற யாரென்று அறியப்படாத ஒருவர் இடம் பெற்றுள்ளார்.

🚫🚫 எனவே இந்த செய்தி மிகவும் பலவீனமானதாகும்.🚫🚫

والله أعلم.

شعيب بن فائز العمري

No comments: