Sunday, April 24, 2016

தொடர் 🌎 17 🍓🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷🍓

தொடர் 🌎 17

🍓🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷🍓

🔬ஆதாரபூர்வமானதும் 🔦 பலவீனமானதும் 🔬

📔 ஆதாரபூர்வமான சம்பவம் 📔

🌻🌼ஒரு நாள் ஸுப்ஹுத் தொழுகையின் பின் நபி ( ஸல் ) அவர்களின் மனைவியரில் ஒருவர் இறந்த செய்தி இப்னு அப்பாஸ்  ( ரழி ) அவர்களுக்கு கிடைத்த போது உடனே ஸஜ்தா செய்தார்கள். 🍂🍃

" இந்த நேரத்தில் ஸஜ்தா செய்கிறீர்களே " என்று கேட்கப்பட்டதற்கு🍂🍃

" ஏதாவது ( பயங்கரமான )அடையாளத்தை நீங்கள் கண்டால் ஸஜ்தா செய்யுங்கள் "🌿🍁

என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் எங்களுக்கு உபதேசித்துள்ளார்கள். 🌱🍅

நாம் இருக்கும் போதே நபியவர்களின் மனைவியர்கள்  மரணிப்பதை விட பெரிய  அடையாளம் எதுவாக இருக்க முடியும் " என்றார்கள்.🌼🌻

🚦🚦🚦🚦🚦

🍅இச்சம்பவத்தை இமாம்களான

🌽அபூதாவூத் தனது ஸுனனிலும் 1197,

🌽இவர் வழியாக பைஹகீ தனது அஸ் ஸுனனுல் குப்ராالسنن الكبرى  6379 இலும்,

🌽அழ்ழியாஉ الضياء  தனது الأحاديث المختارة  அல் முக்தாரா 323, 324 இலும்,

🌽மேலும் திர்மிதீ தனது ஸுனனிலும் 3891,

🌽இவர் வழியாக المزي மிஸ்ஸீ  தனது   تهذيب الكمال தஹ்தீபுல் கமாலிலும் 11/215,

பதிந்துள்ளனர்.🍅

🚧🚧🚧🚧🚧

🌻இவ்வறிவிப்பில் இடம் பெறும் ஹகம் இப்னு அபான் الحكم بن أبان  என்பவருடைய மனன சக்தி பற்றி சிறு  விமர்சனம் இருப்பதால் ஹதீஸ்கலை அறிஞர்கள் இந்த செய்தியை حسن  ஹஸன் எனப்படும் ஆதாரபூர்வமானவைகளில் சேர்க்கிறார்கள்.🌻

💡🔍🔴🚫❌

இதே செய்தியை ஹகம் உடைய மகன் இப்ராஹீம் என்பவரும் அறிவிக்கின்றார்.

இமாம்களான
🌽 பைஹகீ அல் குப்ரா  6379 இலும்,

🌽பகவீ  البغوي ஷரஹுஸ் ஸுன்னா شرح السنة  1156 இலும்,

🌽மிஸ்ஸீ المزي தஹ்தீபுல் கமால் تهذيب الكمال  11/216 இலும்,

🌽இப்னு ஹிப்பான் அல்மஜ்ரூஹீன் المجروحين 1/114 இலும்  பதிவு செய்துள்ளார்கள்.

👇👇👇

❌🚫
இவர் மிகவும் பலவீனமானவர் என்று அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.❌🚫

💡💡💡💡💡

இவர் இடம் பெறும் வரிசை பலவீனமாக இருந்தாலும் முன்னர் கூறப்பட்ட அறிவிப்பில், அவருடைய தந்தையிடமிருந்து வேறு நம்பகமானவர்கள் அறிவித்துள்ளனர்.

🌼🌼🌼
எமக்கு கஷ்டங்கள் ஏற்படும் போது அல்லாஹ்விடமே உதவி தேடுவோம்.முன்னைய தொடர்களிலும் இது பற்றிய தகவல்கள் கூறப்பட்டுள்ளன.🌼🌼

அல்லாஹு அஃலம்

ஷுஐப் உமரி

No comments: